SHARE

பிறந்தநாள் பரிசு 

 

“ஹலோ ஷானு குட்டியா பேசுறது ….?”

“நோ ப்பா  .. நீங்க பேசாதீங்க என் கூட, உங்க கூட டூ”

“ஹேய் ஷானுக் குட்டி , நில்லு நில்லு …

 

“செல்லமான குரலில் கெளதம் தன் குழந்தையை கூப்பிட்டுக்கொண்டு இருந்தான்.

“அவ அப்போவே ஓடிப் போயிட்டா”, நேற்றிரவு கெளதம் திட்டியதால் கண்மணியின் குரல், சற்றே வாட்டத்துடன் காணப்பட்டது.

“ஹே என்னாச்சு அம்மாவும் பொண்ணும் ஓவரா பண்றீங்க….ஒ நேத்து நைட் நடந்த மேட்டர்க்கா.. உனக்குமா கண்மணி புரிய மாட்டிக்கு, இங்க எனக்கிருக்குற டென்சன் வொர்க் லோட்ல , நீ கால் பண்ணிட்டு விளையாண்டுட்டு இருந்தா , கோபம் வருமா வராதா?”

“ஹ்ம்ம்”

“என்ன இன்னும் போகலையாக்கும், கோவம்….”

“இப்போ வரைக்கும், நேத்து எதுக்கு கால் பண்ணேன்… ஷானு எதுக்கு கோவிச்சுட்டு போறான்னு நீங்க கேக்கவும் இல்ல யோசிக்கவும் இல்ல ,

வேல வேலைன்னு அதையே கட்டி அழுவுறீங்க, இங்க வீட்ல உங்கள நெனைக்குற இந்த ஜீவன்கள கண்டுக்கிட்றதே இல்ல”

ஒய் , நிப்பாட்டு… நான் என்னமோ எனக்காக உழைச்சு தேஞ்சு போற மாதிரி பேசிட்டு போற, எல்லாம் நமக்கு தானே டா .. நீயும் இப்பிடி அடிக்கடி பேசிக் காட்ற “

“அதாங்க உண்மை… நீங்க சொல்றது ரைட்தான் .. எல்லாரும் உழைக்கிறது குடும்பத்துக்கு தான் .. ஆனா அந்த உழைக்கிற டைம்ல குடும்பத்த மொத்தமா கழட்டிவிட்டு போய் உழைச்சுட்டு மட்டுமே இருந்தா, நீங்க எல்லாம் கொண்டு வரும் போது , உங்களை பணம் சம்பாதிக்குற மெஷினா தான் பாக்க தோணும்.

நீங்க அங்க இருக்கிறது சரி.. ஆனா குழந்தை பிறந்த நாள மறந்து , கால் பண்ணி ஞாபக படுத்தலாம் நெனெச்ச என்னையும் ரெம்ப திட்டி ..

இப்போ அந்த பிஞ்சு மனசுல எவ்ளோ ஏமாற்றங்கள்…

அவ “அப்பா கிப்ட் எப்போ அம்மா அனுப்புவாங்க ன்னு கேட்டுட்டே இருந்தா நேத்து புல் லா … நான் நீங்க முதல்ல விஷ் பண்ணிட்டு அப்புறம் அனுபிடுவாங்க சொல்லி வச்சேன் பட் நீங்க எல்லாத்தையும் சொதப்பிட்டீங்க “

மனதில் இருந்த அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள் கண்மணி.

உள்ளுக்குள் சுர்ரென்று உரைத்தது கௌதமுக்கு.

“அம்மா அம்மா .. அப்பா பாரும்மா, எனக்கு விஷ் பண்ணாட்டியும் கிப்ட் அனுப்பி இருகாங்க .. சூப்பரா இருக்கு.. உன்ட்ட சொல்லி வச்சேன்ல பார்பி டாய் .. அதான் அனுப்பிருக்காங்க… இருந்தாலும் நான் அப்பா கூட பேச மாட்டேன் ,பட் லவ் யூ டாட் ன்னு நான் சொன்னேன் மட்டும் சொல்லிடு.

போன் லைனில் இருந்த கௌதமுக்கு இதை கேட்க முடிந்தது. அவனும் மிகவும் கோபக்காரன் அல்ல .. கண்மணியிடமும் ஷன்மதியிடமும் பல மடங்கு பாசத்தை பொழிபவன் தான் , ஆனால் வேலை என்று அதிலே மூழ்கிப் போன ஆரம்பித்ததில் இருந்து முழுதும் மாறி இருந்தான்.

“நான் தான் அவள ஏமாத்த வேண்டாம்னு உங்க பேர் போட்டு கிப்ட் ஆர்டர் பண்ணிருந்தேன். ஓகே எனக்கு வேல இருக்கு நான் அப்புறம் உங்களுக்கு கால் பண்றேன் கெளதம்.

இவன் பேசும் முன்பாகவே அழைப்பு துண்டிக்கப்பட்டது. கோபம் கொஞ்சமும் குறையவில்லை என்பது நன்றாக தெரிந்தது கௌதமுக்கு.

கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தவன். வேகமாக தங்கும் அறைக்கு கிளம்பி வந்தான்.

“அம்மா இங்க பாரும்மா, என்னோட பார்பி செம க்யூட்டா இருக்குல்ல, அப்பா எனக்கு பிடிச்ச மாதிரி வாங்கிக் கொடுத்து இருக்காரு”

“ஆமாமா கரெக்ட்டா பாத்து வாங்கிக் கொடுத்துட்டாரு உங்க அப்பா தான், கோபத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டே பேச்சுக்கு சொல்லிக்கொண்டு இருந்தாள் கண்மணி.

“இரு யாரோ வந்துருக்காங்க .. யார்ன்னு பாத்துட்டு வரேன்”

கதவைத் திறந்தவள். விழிகள் பெரிதாக ஆச்சர்யத்துடன் பார்த்து வியந்து நின்றாள் . வந்திருந்தது கெளதம்.

“எப்பிடிங்க அதுக்குள்ளே .. இவ்ளோ சீக்கிரம்.. லீவ் கொடுக்கவே மாட்டாங்க சொல்வீங்க?”

அத்தனை கோபமும் எங்கே சென்றது தெரியவில்லை அவளுக்கு , சட்டென நாக்கை கடித்தாள் ,

“மலேசியால இருந்து வர அஞ்சு மணி நேரம் போதுமே,  ஐ சூப்பர் . மை கண்மணி என்னிடம் கோபம் இல்லாமல் பேசி விட்டாள்….சிரித்துக்கொண்டே கிண்டலுடன் அவளை சீண்டினான்.

“யார் இப்போ கோபம் போச்சுன்னு சொன்னா.. அதெல்லாம் அப்பிடியே இருக்கு… வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு ..இப்போ என்ன கொஞ்சல்ஸ்

போங்க உங்க செல்ல புத்ரி நீங்க வாங்கின கிப்ட் வச்சு கொஞ்சிட்டு இருக்குறா நீங்களும் போங்க … அவன் முதுகை பிடித்து தள்ளிய வண்ணம் உள்ளே சென்றனர் இருவரும்.

“ஷானுக் குட்டிடி……””

“ஹாய் அப்ப்பா அதுக்குள்ள எப்பிடி…. சொல்லவே இல்ல…வந்துட்டு இருந்தீங்களா . அதான் எனக்கு விஷ் பண்ணலையா.. “

“ஒரு மாதிரி சமாளித்த வண்ணம் , ‘ஆமாடா அதே அதே … அதான் நேர்லே வந்து என் செல்லத்த பாக்க போறேன்னு பண்ணல ..

இந்தா கிப்ட் உனக்கு”

“அப்போ இது யார் கொடுத்தது….கையில் இருந்த பார்பி பொம்மையை ஷன்மதி நீட்ட “

“ஹஹா அது உங்க அம்மா வாங்கினது … சும்மா நான் தான் வாங்கி தர  சொன்னேன் … நல்லாவே இருக்காதே ..

இங்க பாரு என்ன வாங்கிட்டு வந்துருக்கேன்ன்னு “

 

“‘ஐயோ போங்கப்பா .. இது என்ன கிப்ட், நான் விளையாடற போல இல்லையே …”

கண்மணி அசட்டு சிரிப்புடன் மேலே பார்க்க குதூகலமாய் காணப்பட்டது கொஞ்ச நேரத்தில் அந்த வீடு.

“எல்லாம் சரி … எப்பிடி லீவ் உடனே கேட்டு வந்தீங்க..கொடுக்கவே மாட்டாங்கன்னு சொல்லிட்டு இருப்பீங்க..” கண்மணி கேட்டாள்.

ஹஹா அதுவா .. ஏற்கனவே காலமாகி இருக்கும் என் பாட்டியை மறுபடி காலமாக வைத்து விட்டேன்… அப்பிடியே இங்க இந்தியாக்கு மாறவும் ரெகுஸ்ட் போட்ருக்கேன் டார்லிங்”

“ம்க்கும் இத தான் காலம் காலமா சொல்லிட்டு இருந்தேன்… இப்போதான் புத்தி வந்துருக்கு மர மண்ட “

சொல்லி விட்டு வேகமாக மாடிக்கு ஷன்மதியை கூட்டிக்கொண்டு  ஓட கெளதம் அவளை விரட்டிய படி ஓடினான்.

 

LEAVE A REPLY