SHARE
Image result for south indian temple festivals
ஆறு மாதங்களுக்குப் பின்….
குணாவின் விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு, குணாவிற்கு மூன்று வழக்கிலும் ஆயுள் தண்டனையும், ஊர் பொதுச் சொத்தை அபகரித்தான் என்று போடப்பட்ட வழக்கில் மேலும் ஒரு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் பீஷ்மாவின் தந்தை அவனுக்கு பெற்றுக் கொடுத்தார்.
போலீஸ் கைது செய்த நாட்களில் இருந்தே குணாவை நிற்க வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும், செய்தித்தாளில் அவனைக் குறித்து வந்த செய்திகளும், மாதர் சங்கங்கள் அவனுக்கு எதிராக நடத்திய போராட்டங்களும் குணாவை அவமானத்திற்கு உள்ளாக்க, அவன் பாதி உயிராகிப் போனான்.
இத்தனை நாட்கள் அவன் இருந்த சொகுசு வாழ்க்கையும், அவன் இருந்த கம்பீரமும் எதுவும் இல்லாமல், அதற்கு இடமே இல்லாமல் போனதும் அவனைத் தன்னுள்ளே சுருட்டிக் கொள்ளச் செய்தது. 
அவன் கெத்தாக திரிந்து, அடிமையாக நடத்திய மக்கள் அனைவரும் அவன் கையில் காவல்துறை அதிகாரி விளங்கை மாட்டவும், ஊரே அவனைப் பார்த்து காரி உமிழ்ந்து, அவனை தரக்குறைவாக பேச, குணா உயிரை விட முடியாமல் தவித்துப் போனான்.
இத்தனைக்கும் பெற்ற தாயே அவனை தனது கணவரின் மரணத்திற்கு இவன் தான் காரணம் என்று போலீசிடம் தெரிவிக்கவும், இத்தனை நாட்கள் பாராட்டி சீராட்டி வளர்த்த தாயின் வாக்கும் தனக்கு எதிராக இருக்கவும், அனைத்தும் சேர்ந்து குணா மனதளவில் நொந்தே போனான். இப்படி ஒரு நிலை தனக்கு நேர்ந்து விட்டதே என்ற எண்ணமே அவனை ஊமையாக்கியது.   
இந்த இடைப்பட்ட மாதங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கிளம்பி ஊருக்குச் செல்லும் பீஷ்மா, திங்கள் அன்று காலையில் மனமே இல்லாமல் மீண்டும் கிராமத்திற்கு வந்து சேர்ந்த உடன், அடுத்த வாரம் எப்பொழுது வரும் என்று காத்திருக்கத் துவங்கி விடுவான்.
பீஷ்மாவின் வீட்டிற்குச் சென்ற கொடிக்கும் அந்த வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் உபசரித்த விதத்தில், விரைவிலேயே அவளும் அந்த வீட்டில் ஒருத்தியாகிப் போனாள். அவளது இறுதித் தேர்வும் முடிவடைய, கொடி தனது ரிசல்ட்டிற்காக காத்திருந்தாள்.
“நாளைக்கு ரிசல்ட் வருது.. எனக்கு பயமா இருக்கு.. நீங்க கொஞ்சம் வாங்களேன்..” பீஷ்மாவிடம் கொடி கெஞ்சிக் கொண்டிருக்க,
“ஹ்ம்ம்.. நீ ஒழுங்கா எக்ஸாம் எழுதி இருந்தா எதுக்கு நீ பயப்படணும்? அதுக்கு தான் சும்மா கனவு காணாம ஒழுங்கா படின்னு சொன்னேன்.. எப்போப் பாரு பீஷ்மா தவம் செய்தா.. அந்த பீஷ்மாவா வந்து உனக்கு மார்க் போடுவான்..” பீஷ்மா அடித்த கேலியில், கொடியின் முகம் சிவந்தது.
“என்ன வெட்கப்படறியா?” மெல்லிய குரலில் பீஷ்மா கேட்க,
“ஹ்ம்ம்… இல்ல.. சும்மா…” என்ற கொடி,
“கண்டிப்பா நாளைக்கு வர முடியாதா?” கெஞ்சிக் கேட்க,
“எனக்கு வரவே முடியாதும்மா.. சாரி செல்லம்… நான் போன் வைக்கிறேன்… இங்க எனக்கு வேலை வந்தாச்சு…” என்ற பீஷ்மா சிரிப்புடன் போனை வைக்க, கொடிக்கு ஏமாற்றமாக இருந்தது.
“கொடி கிட்ட பேசிட்டு இருக்கீங்களா டாக்டர் சார்…” கொடியின் தந்தை வேலு கேட்க,
“ஹ்ம்ம்… ஆமா மாமா.. நாளைக்கு அவளுக்கு ரிசல்ட் வருது… அதான் என்னை வரச் சொல்லிக்கிட்டு இருக்கா.. அதான்… பீஷ்மா சொல்லவும், வேலு தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
“என்ன மாமா… என்னாச்சு?” ஏமாற்றமாக உணர்ந்த வேலுவின் முகத்தைப் பார்த்த பீஷ்மா கேட்கவும்,
“என்னைப் பத்தி அவ எதுவுமே கேட்கலையா? எனக்கு அவளைப் பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு… ஆனா… நான் எந்த முகத்தை வச்சிக்கிட்டு அவளைப் பார்க்கறது? நான் அவளுக்கு செய்த கொடுமை எல்லாம் கொஞ்சமா நஞ்சமா? என்னோட ஒரு பொண்ணை இழந்து, அவளுக்கு காரியம் கூட செய்யாம நான் பேயா அலையை விட்டு இருக்கேன்…” தான் செய்த காரியத்தை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்து நொந்துக் கொண்டே சொன்னவரின் தோளை அழுத்திய பீஷ்மா,
“வேண்டாம்.. நீங்க திருந்தினதே போதும்.. நாளைக்கு நீங்களும் என் கூட வாங்க…” பீஷ்மா அவரை ஆறுதல் படுத்த, வேலு மறுப்பாக தலையசைத்தார்.
“வேண்டாம் டாக்டர் சார்… நீங்க போயிட்டு வாங்க.. அவளைப் பார்க்கற தகுதி எனக்கு இல்ல.. என் மனைவிக்கும், மகளுக்கும் செய்த துரோகத்துக்கு இதான் தண்டனை… இப்போ என்ன சொல்ல வந்தேன்னா… ஆஸ்பத்திரி தோட்டத்தை நான் சரி பண்ணிட்டேங்க… புதுசா நாலு செடி கூட வச்சிருக்கேன்.. வந்து பாருங்க… நாளைக்கு முன் பக்கம் சுத்தம் செய்து வச்சிடறேன்..” என்ற வேலு, பீஷ்மாவின் பதிலுக்காக நிற்க, ஒரு பெருமூச்சுடன் பீஷ்மா அவருடன் சென்றான்.
மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு, தனது குடிப் பழக்கத்தை விட்டொழித்த வேலு, தனது நிலையை நினைத்து வருந்தி, அருகில் இருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக் கொள்ள முயற்சிக்க, அதைத் தடுத்த பீஷ்மா, அவருக்கு அறிவுரை வழங்கி, அவரது பிழைப்பிற்கு, மருத்துவமனையிலேயே வேலையைக் கொடுக்க, காலையிலும் மாலையிலும் தனக்கு சொந்தமான நிலத்திலும், இடைப்பட்ட நேரத்தில் மருத்துவமனையிலும் வேலு வேலை செய்துக் கொண்டு, தனது பிழைப்பை தானே பார்த்துக் கொள்ளத் துவங்கி இருந்தார்.
கொடி மலர் சொன்னதை பீஷ்மாவிடம் சொல்லவும், வேலுவின் மூலமாகவே மலருக்கு காரியம் செய்ய, மலர் இந்த பூவுலகத்தை முழுமையான திருப்தியுடன் நீத்தாள்.  
மறுநாள் காலை கொடி பயத்துடன் அமர்ந்திருக்க, அவள் முன்பு காபியை நீட்டிய பீஷ்மா, “மேடம் பாஸ் ஆகிட்டீங்க… அதுவும் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல…” என்று சாதாரணமாகச் சொல்லவும், அவனை அங்கு எதிர்பார்க்காத அதிர்ச்சியும், அவன் சொன்ன செய்தியையும் கேட்ட அதிர்ச்சியும் ஒன்றாக சேர, துள்ளிக் குதிக்காத குறையாக குதித்த கொடி,
“என்ன சொல்றீங்க? என்ன சொல்றீங்க? நீங்க எப்போ இங்க வந்தீங்க?” திகைப்புடன் அவள் கேட்க,
“என்ன மேடம்.. என்னைப் பார்த்ததும் நான் சொன்னது உங்களுக்கு புரியலையா என்ன? அதுசரி… அய்யாவோட பெர்சனாலிட்டி அப்படி.. அதுக்கு ஒண்ணும் பண்ண முடியாது.. அதுக்காக, திரும்பத் திரும்ப ஒரே வார்த்தையையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க?” பீஷ்மா கிண்டல் அடிக்கவும்,
“ஹையோ… உங்களுக்கு எல்லாத்துலயும் விளையாட்டு தானா? நிஜமா சொல்லிக்கிட்டு இருக்கீங்களா? இல்ல என்னை கிண்டல் செய்துக்கிட்டு இருக்கீங்களா?” பீஷ்மாவிடம் அவள் பொரிந்துத் தள்ள,
“வர வர உனக்கு என் மேல பயமே இல்லாம போச்சு… சரி… கொடுக்க வேண்டியது கொடுத்தா.. உனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும்…” கண்களை உருட்டி புருவத்தை உயர்த்தி தலை ஆட்டிக் கொண்டே சொல்ல,
“உங்களுக்கு நேரம் காலமே கிடையாது..” முணுமுணுப்புடன் சொன்னவள், அவனது உயரத்திற்கு எம்பி அவனது கன்னத்தில் தனது இதழைப் பதிக்க, அவளை அணைத்துக் கொண்ட பீஷ்மா, அவளது இதழுக்கு தனது பரிசைத் தர, கொடி அவனது அணைப்பில் திணறிப் போனாள்.
அவனைப் பிடித்துத் தள்ளியவள், “நான் எவ்வளவு டென்ஷனா இருக்கேன்.. நீங்க என்னடான்னா… இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” அவனது மார்பில் வாகாக சாய்ந்துக் கொண்டு கேட்டவளிடம், தனது இதயத்தை அவன் தொட்டுக் காட்ட,
“வர வர உங்க தொல்லை தாங்கவே இல்ல..” சலித்துக் கொண்டவள், மீண்டும் பீஷ்மா அவனது நெஞ்சைத் தொட்டுக் காட்டவும்,
“டாக்டர் சார்… நீங்க என்னை எவ்வளவு லவ் பண்றீங்கன்னு எனக்குத் தெரியும்… ப்ளீஸ் டாக்டர் சார்… டென்ஷன் பண்ணாம உண்மையை சொல்லுங்க…” என்ற கொடியிடம், தனது பாக்கெட்டை பீஷ்மா காட்ட, வேகமாக அவனது பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்துப் பார்த்த கொடி, அதில் இருந்த அவளது மதிப்பெண்களைப் பார்த்து, சந்தோசத்துடன் எம்பி அவனது கன்னத்தில் இதழ் பதித்து,
“நான் போய் அத்தை மாமாகிட்ட காட்டிட்டு வரேன்…” என்று வெளியில் ஓட, இருவரும் வெகு தீவிரமாக எதையோ பேசிக் கொண்டிருந்தனர்.
“அத்தை… மாமா… நான் பாஸ் பண்ணிட்டேன்…” கொடி சொல்லவும்,
“அதான் எங்களுக்கு தெரியுமே…” கங்கா கேலி பேச,
“அத்தை…” என்று சிணுங்கியவள்,
“என்னைத் தவிர உங்களுக்கு எல்லாம் விஷயம் தெரிஞ்சிருக்கு…” கொடி சிணுங்க, அதைப் பார்த்த கங்கா அவளது கன்னத்தை வழித்து,
“நீ பாஸ் பண்ணிடுவன்னு எனக்குத் தெரியும்டி ராஜாத்தி.. அதைத் தான் சொன்னேன்.. காலையில வந்ததுல இருந்தே பீஷ்மாவோட முகமும் ரொம்ப சந்தோஷமா இருந்ததா… அதனால நீ நல்ல மார்க்ல பாஸ் பண்ணி இருப்பன்னு என்னோட கெஸ்… எப்படி?” என்ற கங்கா, தனது கணவரைப் பார்க்க,
“இந்தாம்மா… எங்களோட கிஃப்ட்..” பீஷ்மாவின் தந்தை ஒரு பெட்டியை அவளிடம் நீட்ட,
“கொடிம்மா.. இதோ நான் தரதை தான் நீ மொதல்ல பார்க்கணும்…” அவனது பெரியப்பா ஒரு பெரிய பெட்டியை நீட்ட, கொடி அவர்களது அன்பைக் கண்டு மகிழ்ந்து, பூரித்து அவர்களின் காலில் பணிந்தாள்.
“நீங்க எல்லாம் இல்லன்னா இது எதுவுமே நடந்து இருக்காது…” கண்கள் கலங்க அவள் சொல்ல, அங்கு வந்த பீஷ்மா,
“ஆரம்பிச்சிட்டாய்யா… ஆரம்பிச்சிட்டா…” என்று கேலி செய்ய, கொடி கங்காவின் அருகே சென்று அமர்ந்தாள்.
“ஒண்ணு ஒண்ணா பிரிச்சுப் பாரு…” அவள் அமர்ந்திருந்த சோபாவின் கைப் பிடியில் அமர்ந்தவன், அவளது தோளைச் சுற்றி கைப் போட்டுக் கொண்டு சொல்லவும், ஆவலாக கொடி அதைப் பிரித்துப் பார்க்க, அவர்களது திருமண பத்திரிக்கையும், அதற்கான உடை நகைகளும் இருக்க, திகைப்புடன் அவர்களைப் பார்த்தாள்.
“என்னடாம்மா… என்ன திடீர்ன்னு யோசிக்கறியா?” கங்கா கேட்கவும், பீஷ்மாவை நிமிர்ந்துப் பார்த்தவள், பீஷ்மா அவளை சிரிப்புடன் பார்க்கவும், அவளது உதடுகள் அழுகையில் துடித்தது.
“ஏம்மா இப்படி அழற? என்னை கல்யாணம் செய்துக்கறது உனக்கு அவ்வளவு கஷ்டமான செயலா?” பீஷ்மா கிண்டலடிக்கவும், மறுப்பாக தலையசைத்த கொடி, அவர்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட, அதைத் தட்டிவிட்ட பீஷ்மா, கங்காவைப் பார்க்க,
“நான் முழுசா சொல்லிடறேன் கொடி.. உன்னோட சம்மதத்தை தெரிஞ்சிக்காம கல்யாணத்தை நாங்க உடனே ஏற்பாடு செய்தது தப்புத் தான்..” கங்கா சொல்லவும்,
“என்னத்தை நீங்க இப்படி எல்லாம் சொல்றீங்க? உங்க முடிவு தான் என் முடிவு.. எங்க அம்மாவைப் போல பார்த்துக்கற நீங்க எனக்கு எப்பவும் நல்லது தானே செய்வீங்க?” கங்காவிடம் கேட்டவள், பீஷ்மாவின் முகத்தைப் பார்க்க, எதுவும் பேசாமல் பீஷ்மா அவளைப் பார்த்து கண்ணடித்தான்.
“கொடி.. நீ மேல படிக்கிற படிப்பை கல்யாணம் செய்துக்கிட்ட அப்பறம் படிக்கலாம்மா.. ரொம்ப வருஷத்துக்கு ஒரு பெண்ணை இந்த வீட்ல வச்சுக்க முடியாதுல்லம்மா… அது தான் நாங்க பேசி இப்படி முடிவெடுத்திருக்கோம். பீஷ்மாவும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பான் சொல்லு.. அவன்கிட்ட கேட்ட உடனே… ‘’உங்க இஷ்டம்’ன்னு சொல்லிட்டான்… அவனுக்கு சம்மதம்…  உனக்கு சம்மதமா?” கங்கா காரண காரியத்தை விளக்கிக் கேட்கவும், கொடி நாணத்துடன் சம்மதம் என்று தலையசைக்க, பீஷ்மா அவளை அணைத்துக் கொள்ள, அந்த வீட்டில் கல்யாணக் களைகட்டியது.
பீஷ்மா கொடியின் திருமணம் பீஷ்மா வாக்கு கொடுத்தது போலவே, கொடியின் கிராமத்தில் தான் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஊரின் திருமண ஏற்பாடுகளை மாரியே ஏற்று நடத்த, வேலு சந்தோஷத்துடன் அந்த ஏற்பாடுகளில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார்.
திருமண நாளும் விடிய, மெரூன் நிற பட்டுப்புடவையில், மலர் தனக்காக வைத்திருந்த நகைகளை அணிந்துக்கொண்டு வர, பீஷ்மா அவளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஊரே அவர்களது திருமணத்தைப் பார்க்க கூடி இருக்க, மாப்பிள்ளைக் கோலத்தில் இருந்த பீஷ்மாவை கங்கா கண்குளிரப் பார்த்துக் கொண்டிருக்க, மெல்ல நடந்து கொடி பீஷ்மாவின் அருகே அமர்ந்தாள்.
“ஃபிளவர்… சூப்பர்.. அப்படியே உன்னை இறுக்கி அணைச்சு உம்மா தரணும் போல இருக்கு.. இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்கியே… டூ பேட்…” பீஷ்மா கொடி பக்கம் சாய்ந்துக் கொண்டு அவளுக்கு மட்டும் கேட்கும்படியாக மெல்ல முணுமுணுக்க, கொடியின் முகம் நாணத்தில் சிவந்தது.
“பேசாம இருங்க..” தலையை குனிந்துக் கொண்டபடி அவள் முணுமுணுக்க,
“பேசாம இருந்தா கல்யாணம் பண்ணிக்கிட்டு சும்மா இருந்தா… நான் என்னம்மா செய்யறது?” பதிலுக்கு அவளிடம் கேட்டு வைத்து கொடியின் முகத்தை மேலும் சிவக்க வைக்க, மாரி இருவரையும் ரசித்துக் கொண்டிருந்தார்.
“டாக்டர் சாரும் குழப்பத்துல இருந்து ஒரு வழியா வெளிய வந்து, கொடியை தான் அவர் விரும்பறதா முடிவு செய்திருக்கார். அதுவும் ஒரு வகையில நல்லது தானே.. கொடியோட வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்.. இவரும் குழம்பிக்கிட்டே இருக்காம சட்டுன்னு முடிவெடுத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மாரியக்கா.. அவளோட கல்யாணத்துக்கு நம்ம தோட்டத்து மல்லிகையாலயே மாலைக் கட்டிக் கொடுங்க.. எனக்கு ரொம்ப பிடிச்ச மல்லிகைப் பூ… எப்பவும் நான் அவளுக்கு துணையா அவ கூட இருப்பேன்…” இறுதியாக மலர் பிரிந்துச் செல்லும் பொழுது, மலரை நினைத்து அழுத மாரிக்கு ஆறுதல் சொன்ன மலரின் வார்த்தைகள் மாரியின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.
‘மலரோட ஆசை..’ என்று சொன்ன மாரி, கொடியின் திருமணத்திற்கு மல்லிகை மாலையை தொடுத்துக் கொடுக்க, கொடி சந்தோஷமாக அதைச் சூடிக் கொள்ள, பீஷ்மா கொடியைப் பார்த்துக் கொண்டே அதை அணிந்துக் கொண்டான்.
அம்மன் பாதத்தில் வைத்து, அனைவரின் ஆசிர்வாதத்தோடு பீஷ்மாவின் கைக்கு வந்த மாங்கல்யத்தை கையில் எடுத்துக் கொண்டு, கொடியைப் பார்த்தவன், அவனை ஓர விழிப் பார்வையால் பார்த்துக் கொண்டிருந்த கொடியைப் பார்த்து புருவத்தை உயர்த்த, கொடி நாணத்துடன் மேலும் தலையை குனிந்துக் கொள்ள, புன்சிரிப்புடன், மலரை தெய்வமாக நினைத்து இந்த பந்தம் இறுதி வரை நிலைக்க பிரார்த்தித்துக் கொண்டே கொடியின் கழுத்தில் வைத்து மூன்று மூடிச்சிட, கொடியும் அதே வேண்டுதலுடன் பீஷ்மாவின் சரிபாதியானாள்.
அனைவரும் பூவைப் போட்டு முடிக்கவும், அழகிய மல்லிகை மலர்கள், இறுதியாக மணமக்களின் மீது விழ, கொடி பட்டென்று நிமிர்ந்துப் பார்க்க, தூரத்தில் மகிழ்ச்சியோடு நடந்து செல்லும் மலர் அவளது கண்களுக்குத் தென்பட, கொடி அவசரமாக பீஷ்மாவைப் பார்க்க, பீஷ்மாவும் கொடி பார்த்த இடத்திலேயே பார்த்துக் கொண்டிருக்க, அங்கிருந்த குளத்தில் இறங்கி மலர் காணாமல் போக, கொடியின் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது.
“ச்சே.. சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல கண்ணைக் கசக்கிட்டு இருக்க? எழுந்திரு கொடி.. எல்லார்கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிட்டு வரலாம்… அதே போல நம்ம பெரியப்பா கிட்டயும் வாங்கணும்…” பீஷ்மா கொடியின் கையைப் பிடித்து இழுக்க, கொடி அவனது கையை விடாமல் பிடித்துக் கொள்ள, இருவரையும் பார்த்தவர்கள் மனம் நிறைந்து வாழ்த்தினர்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு…
“கொடி… கொடி…” மருத்துவமனையில் இருந்து திரும்பி இருந்த பீஷ்மா கொடியைத் தேடிக் கொண்டிருக்க,
“எதுக்குடா இப்போ அவளை ஏலம் விட்டுட்டு இருக்க? அவ நீ வந்தும் வெளிய வராம இருக்கான்னா வேற எங்க இருக்கப் போறா? அப்பா கூட தான் ஏதாவது கேஸ் விஷயமா பேசிக்கிட்டு இருப்பா.. இன்னைக்கு கூட யாரோ ரெண்டு பொண்ணுங்க அவளைத் தேடி வந்திருந்தாங்க… பொண்ணுங்களுக்கு வாதாடற வக்கீல்ன்னா சும்மாவா… ஆபீஸ் ரூம்ல போய் பாரு…” கங்கா சொல்லவும்,
“ஏம்மா… டெலிவரிக்கு டேட் நெருங்கிடுச்சு.. இப்போ அவளுக்கு அந்த கேஸ் கட்டோட என்ன வேலை? பேசாம ரெஸ்ட் எடுக்கச் சொல்ல வேண்டியது தானே.. நீங்க அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கீங்க…” பீஷ்மா கங்காவிடம் பொரிந்து தள்ளிக் கொண்டிருக்க,
“ஏண்டா ராஜா… அம்மா என்ன அவ கையை காலை கட்டியா ரெஸ்ட் எடுக்கச் சொல்ல முடியும்? வந்ததும் வராததுமா தைய்யா தக்கான்னு குத்திச்சிக்கிட்டு இருக்க?” அவனது பெரியப்பா அவனிடம் கேட்கவும், பீஷ்மா அமைதியாக,
“இந்த டீச்சரம்மாவை ஏதாவது சொன்னா உங்களுக்கு எல்லாம் ஆகாதே.. இருங்க.. அவ வெளிய வரட்டும் அப்பறம் இருக்கு…” கோபமாக சொல்லிக் கொண்டே தனது அறைக்குள் நுழைய, கங்கா அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.
அவன் மருத்துவனாக இருந்தாலும், கொடி கருவுற்றதில் இருந்தே அவள் அந்த வலியை எப்படித் தாங்கப் போகிறாள்.. என்ன செய்யப் போகிறாள் என்ற கவலை மிகவும் அதிகமாகவே இருந்தது. வீட்டிற்கு அவன் வந்த பிறகு கொடி எழுந்து நடந்தாலே பீஷ்மா சத்தம் போடத் துவங்கி விடுவான்.. அன்றும் அது போல ஒரு தினம் தான்…
வெளியில் வந்த கொடியைப் பார்த்த கங்கா, “பீஷ்மா வந்தாச்சு… ரொம்ப ஹாட்டா இருக்கான்… இந்த ஜூசைக் கொடுத்து சரி பண்ணு..” என்று வழி வகையைச் சொல்ல,
“ஹையோ.. இவர் வரதுக்குள்ள நான் வெளிய வந்துடலாம்ன்னு நினைச்சேன்… இப்படி மாட்டிக்கிட்டேனே… ஹ்ம்ம்… போய் நல்லா மந்திரிச்சு விடறேன்…” என்ற கொடி இரண்டடி நகர்வதற்குள் இடுப்பில் சாட்டையென வலி சுழற்ற… ‘அம்மா…’ என்று கத்த, அந்த மெல்லிய சத்தத்திற்கே தலை தெறிக்க வெளியில் வந்த பீஷ்மா,
“என்ன கொடி… பெயின் எடுத்திடுச்சா?” பயத்துடன் கேட்க,
“ஹ்ம்ம்… ஆமா… வலி தான் வந்துடுச்சு போல.. நீங்க சொன்ன மாதிரி தான் இருக்கு..” அடுத்த வலி வரவும் துடித்துக் கொண்டே அவள் சொல்லவும், நொடியும் தாமதிக்காமல் அவளை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு சென்றான்.
வலியில் கொடி உள்ளே தவிக்க, அவளது தவிப்பைப் பார்த்த பீஷ்மாவிற்கு கண்களில் கண்ணீர் சுரந்தது. அவனை தவிக்கவிட்ட மூன்று மணி நேரத்திற்கு பின்பு, இருவரின் காதலில் உதயமான அவர்களது செல்ல மகள் பிறக்க, பீஷ்மாவின் மகிழ்ச்சி ரெட்டிப்பானது.
“கொடி… நமக்கு பொண்ணு பிறந்திருக்கா…” அழகிய பூங்கொத்தை போன்ற பெண்ணை கைகளில் ஏந்திக் கொண்டு அவன் சொல்ல, குழந்தையின் முகத்தைப் பார்த்தவள், அதை வருடிக் கொடுத்து,
“எங்க அக்காவே எனக்கு மகளா வந்திருக்கா… நீ மலர் தானே..” கண்ணீருடன் கொடி கேட்க, பீஷ்மாவின் கையில் இருந்த அந்த சின்னச் சிட்டு தனது அழகிய இதழ்களை விரித்து புன்னகைக்க, பீஷ்மாவும் கொடியும் கண்ணீரில் நனைந்தனர்.            
“சொன்ன மாதிரியே அவ தான்…” என்ற பீஷ்மா, கொடியின் கையில் குழந்தையைக் கொடுத்து, அவளை அணைத்து முகம் முழுவதும் முத்தம் பதிக்க, கொடி அவனது மார்பினில் தஞ்சம் புக, அந்த இனிமையான தருணத்தை கண்ட அவனது பெற்றோர்கள் மனம் கனிந்து நின்றனர்.
அவர்கள் இல்லறம் நல்லறமாக சிறந்து சீரோடும் சிறப்போடும் சிரிப்போடும் இனிக்க வாழ்த்தி விடைப்பெறுவோம்…
Image result for vanakkam images    

32 COMMENTS

 1. Hai ramya dalu
  Ennada continue va ud potu tied ayyiteenga la
  Eppidiyo azhaga alava storyku end kuduthuteenga
  Congratulation baby
  Konjam rest eduthutu next storyku line podunga
  Congrats damma

 2. Super end, nice story, waiting for ur next story, apdiye pavai ne venbavai ku vera link anupna adhayum full a padichiduven. Konjam en request a analise pannunga pa. waiting for long days

 3. Hei Ramya chellam, arumaiyana novel paa
  naan rombave rasithu padithen paa
  oru mahiri twin sisters=yai kondu vanthu athil oruthiyai mudithu avalai pei aakki, aduthavalai oru nall manithan-udan serthu oru nalla life koduthu, death aanavale sister=kku daughter ah vanthu piranthu,
  wow, ethani twist paa
  semaiyana story paa
  I liked and loved this story very much paa
  first you take rest
  and come soon with another one superb novel paa
  my heartiest wishes to you Ramya

 4. Hei Ramya chellam, there can be some typing misteks in my comment paa
  please adjust paa
  waiting for your lovely next super novel announcement, early paa

 5. hi dr express vegathula mudichutingle nice story beeshma kodi malar ganga durai elarum miss panven 😃 malar tha manasa oru mari barama paniduchu…… ending arumaiya ud potu kalakitinga vazhthukal dr keep rocking…….

 6. comedy, sogam, kaathal, paasam ippadi ellathayum kalandadichu oru lovely story…sooper novel…
  Eagerly waiting for your next novel…..

 7. Hei Ramya chellam, naan ud 26 and ud 27-kku separate-aga comment pottu irukken paa
  do you see it?
  and vizhiyora kavithaigal story ennoda e-mail-kku anuppa mudiyuma paa? please

LEAVE A REPLY