SHARE
பீஷ்மா கோவிலில் இருந்து கிளம்ப, அவனிடம் வேகமாக ஓடிச் சென்ற கொடி, “டாக்டர் சார்… நான் நாளைக்கு மார்க்கெட்ல பூவைப் போட்டுட்டு உங்களுக்காக வெயிட் பண்ணவா? நல்லா யோசிச்சுப் பாருங்க டாக்டர் சார்… நான் உங்க கூட கார்ல கிளம்பினா.. கண்டிப்பா யாராவது அந்த குணாகிட்ட சொல்லிக் கொடுப்பாங்க… அப்பறம் நம்ம போற காரியம் எப்படி சரியா நடக்கும்? 
எப்படியும் காலையில ஏழு எழரைக்கா.. மாரியக்காவோட வீட்டுக்காரர் பூவைப் போட கிளம்புவார்.. நான் மாரியக்கா கிட்ட பேசி நாளைக்கு எப்படியாவது அந்த பூவை எல்லாம் வாங்கிக்கிட்டு கிளம்பறேன்.. பூவைப் போட்டுட்டு நான் எங்க நிக்கணும்ன்னு சொல்லுங்க.. நான் அங்க உங்களுக்காக வெயிட் பண்றேன்…” மனப்பாடம் செய்தவள் போல கொடி சொல்லிக் கொண்டே போக, பீஷ்மா யோசனையுடன் அவளைப் பார்த்தான்.
“ஹ்ம்ம்… நீ சொல்றதும் சரியா தான் இருக்கு. நீ கிளம்பி பஸ் பிடிச்ச உடனே நான் கிளம்பறேன்… நீ தனியா எங்கயும் போக வேண்டாம். அதுவும் தஞ்சாவூருக்கு வேண்டவே வேண்டாம்.. என்னால முடியாது…” ஒருமாதிரி சொல்லிக் கொண்டே அவன் செல்ல, அவனது குரலைக் கேட்ட கொடிக்கு ஒரு மாதிரி ஆகியது.
பெருமூச்சொன்றை வெளியிட்டவள், “ஹ்ம்ம்… சரி… நான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கேன்..” கொடியின் பதிலுக்கு,
“சரி… நான் உன் பின்னால ஃபாலோ பண்ணிக்கிட்டு மார்கெட்டுக்கே வரேன்… அங்க இருந்து கார்லயே போயிடலாம்…” பீஷ்மா சொல்லவும், அதைக் கேட்ட கங்கா,
“பத்திரம்டா பீஷ்மா.. உன்னை நம்பித் தான் அவளை நான் அனுப்பறேன்.. அவளுக்கு எந்த ஆபத்தும் வர விட்டுடாதே…” என்று சொல்லவும், அவரது அன்பை நினைத்து கொடிக்கு கண்கள் கலங்கியது.
“நான் பார்த்துக்கறேன்ம்மா…” கொடி முணுமுணுக்கவும்,
“சரி… நீயும் ரொம்ப நேரம் இங்க இருக்க வேண்டாம்… வீட்டுக்கு போ..” கொடியிடம் கூறிய கங்கா,
“வாடா… ஏதோ வேலை இருக்குன்னு சொன்னயே..” பீஷ்மாவிற்கு நினைவுப்படுத்த,
“ஆமாம்மா.. போகலாம்… நீ நாளைக்கு ரெடியா இரு…” என்ற பீஷ்மா, நடக்கத் தொடங்க, கங்கா ஒரு தலையசைப்புடன் கொடியிடம் விடைப்பெற்றார்.
வீட்டிற்கு வந்தவர்கள் அவரவர் சிந்தனையில் உழன்றுக் கொண்டிருக்க, மறுநாளைய பொழுதும் யாருக்கும் நிற்காமல் விடிந்தது.
காலையில் மாரி பால் கொண்டு வந்து கொடுக்கும் பொழுதே விழித்திருந்த பீஷ்மா, அவரிடம் ‘கொடி ஏதாவது கூறினாளா?’ என்று கேட்க,
“சொன்னா தம்பி… நானும் எங்க வீட்டுக்காரர் கிட்ட சொல்லி.. அவர் எடுத்துட்டு போக வேண்டிய பூவையும் அவகிட்ட கொடுத்துட்டேன்… அவளை ஜாக்கிரதையா கூட்டிட்டு போங்க.. பத்திரம்…” மாரி சிறிது பதட்டத்துடன் சொல்ல,
“கண்டிப்பா.. அவ என் பொறுப்பு.. எப்படி கூட்டுட்டு போறேனோ அப்படியே கூட்டிட்டு வரேன்… பயப்படாம இருங்க..” என்றவன், சிறிது தயக்கத்துடன்,
“எனக்கு ஒரே ஒரு உதவி செய்வீங்களா? கொடி உங்க வீட்ல இருந்து கிளம்பின உடனே எனக்கு வந்து தகவல் சொல்றீங்களா? அப்போ தான் நானும் சரியான நேரத்துக்கு கிளம்ப முடியும்…” அவரிடம் வேண்டுதலாக அவன் கேட்க,
“இதைச் செய்யுன்னு சொல்லுங்க தம்பி நான் செய்யறேன்.. ஏன் இப்படி எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கீங்க?” என்ற மாரி, அதே போலவே தயாராக இருந்த பீஷ்மாவைப் பார்த்து,
“அவ கிளம்பிட்டா… எங்க வீட்டுக்காரர் பஸ் ஸ்டாப் வரை கொண்டு விடறேன்னு சொல்லி கூட்டிட்டு போயிருக்கார்.. நீங்க கிளம்பினா சரியா இருக்கும்…” படப்படப்பாக மாரி சொல்லவும்,
“சூப்பர்… ரொம்ப நல்லதுங்க.. நான் உடனே கிளம்பறேன்…” என்ற பீஷ்மா, தேவையானவைகளை எடுத்துக் கொண்டு வெளியில் வர, அவனது வரவுக்காக காத்திருந்த சதாசிவம்,
“வண்டியை எடுக்கலாமா தம்பி… நான் ரெடியா இருக்கேன்..” அவரது பதிலில், அவன் அருகே நின்றிருந்த கங்காவைப் பார்த்த பீஷ்மா,
“நான் போயிட்டு வரேன்ம்மா…” என்று விடைப்பெற, கங்காவும் அவனுக்கு விடைக் கொடுத்தார்.
அவன் சொன்னது போலவே கொடி ஏறிய பஸ்சை பின்தொடர்ந்து அந்த கிராமத்து சாலையில் ஊர்ந்து செல்ல, பீஷ்மா வருகிறானா என்று அடிக்கடி கொடி திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள்.
அவளது மனதில் இருந்த பதட்டத்தை சொல்லால் வரிக்க முடியாது. பீஷ்மா கூறியதும் அவள் சரியென்று சொல்லி விட்டாள் தான்… இருந்தாலும், அவளது மனதில் பயம் இருக்கத் தான் செய்தது. தனது உயிரை குணா பறித்துவிடுவான் என்பதற்கு அல்ல.. பீஷ்மாவின் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடும் என்ற அச்சம் தான் அவளுக்கு மிதமிஞ்சி இருந்தது.
பீஷ்மா மெல்லமாக வந்துக் கொண்டிருந்தாலும், முன்புறம் பார்வையை திருப்பி லாரி ஏதாவது வருகிறதா என்பதை ஆராயாந்துக் கொண்டே சென்றாள். கடவுளிடம் இடைவிடாது அவளது மனது பீஷ்மாவிற்காக வேண்டிக் கொள்ளவும் செய்தது.
மார்கெட் வந்ததும், பஸ்சில் இருந்து இறங்கிய கொடி, பீஷ்மா வருகிறானா என்று பார்க்க, காரில் இருந்தபடியே பீஷ்மா கையசைத்தான். அதைப் பார்த்தவள் மார்கெட்டின் உள்ளே சென்று அவளது வேலையை விரைவில் முடித்துக் கொண்டு வர பரபரத்தாள். அவளது பதட்டமும், கண்களில் இருந்த மிரட்சியைப் புரிந்து கொண்டவன் போல, கீழே இறங்கி அவளுடன் சென்றான்.
“நீங்க என்ன டாக்டர் இங்க எல்லாம் வந்துக்கிட்டு?” கொடி கேட்க,
“ஹ்ம்ம்… நான் உன்னை ஏமாத்தி விட்டுட்டு போறவன் போலவே பார்த்துக்கிட்டு இருந்தியா? அதான் நான் போக மாட்டேன்னு சொல்லாம சொல்ல உள்ளே வந்தேன்…” அவளிடம் வெடுக்கென்று பேசியவன், அவள் அதிர்ந்து நிற்கும் போதே,
“சீக்கிரம் பூவைக் கொடுத்துட்டு வா… உங்க ஊர்க்காரங்க யாராவது பார்த்துடப்போறாங்க…” அவன் தொடர,
“இதோங்க… இதோ… நான் சீக்கிரம் வந்துடறேன்…” தத்தி, திக்கி அவள் சொல்லிவிட்டு, வேகமாக வேலையை முடித்துக் கொண்டு வந்தாள்.
“ஹ்ம்ம்… குட்.. சீக்கிரம் கார்ல ஏறு… காலையிலேயே போனா தான் வேலை முடியும்…” என்ற பீஷ்மா அவளுக்காக காரைக் கதவைத் திறந்துவிட, கொடி உள்ளே ஏறிக் கொண்டாள்.
அவனது முகம் சீரியசாக இருப்பதைப் பார்த்தவள், வேகமாக வண்டியில் ஏறும் பொழுது தலையில் இடித்துக் கொள்ளவும், மேலும் கோபம் கொண்ட பீஷ்மா, “அப்படி என்ன பயம். நான் தான் உன் கூடவே வரேன்னு சொல்லி வந்துட்டு தானே இருக்கேன்… என்னவோ உன்னை நடுத்தெருவுல நிறுத்திட்டு போற மாதிரி மிரண்டுப் பார்க்கற?” கார் கிளம்பியதும், அவளது தலையை நன்றாக தேய்த்து விட்டுக் கொண்டே அவளை வருக்கத் தொடங்க, அவனை ஆச்சரியமாகப் பார்த்த சதாசிவம்,
“சின்னவரே… அந்தப் பொண்ணுக்கும் அவங்க அக்கா போல தனக்கும் ஏதாவது ஆகிடுமோன்னு பயம் இருக்கத் தானே செய்யும்.. அதை ஏன் நீங்க புரிஞ்சிக்காம திட்டறீங்க?” கொடிக்கு வக்காலத்து வாங்க,
“அதெல்லாம் இல்லைங்க சதாத்தா… என் மேல நம்பிக்கை இல்லாம தான் அவ திரும்பிப் பார்த்தா? நான் என்ன சொல்லிட்டு மாறி நடக்கற ஆளா” பேச்சோடு பேச்சாக பீஷ்மா கேட்க, கொடி பட்டென்று அவனை நிமிர்ந்துப் பார்க்க, அவளது கண்களில் அந்த ஒரு சில வினாடிகள் தோன்றிய ஆச்சரியத்தில், தான் சொன்னவற்றை பீஷ்மா யோசிக்கத் தொடங்கினான்.
தான் சொன்ன வார்த்தைகள் அப்பொழுது தான் நினைவு வந்தவனாக பீஷ்மா தன்னையே நொந்துக் கொண்டிருந்த வேளையில் காவல் நிலையம் வந்து சேர்ந்தது. கொடியின் பார்வையில் இருந்து தப்பிப்பவன் போல கீழே இறங்கி உள்ளே ஓடிச் சென்றவனை சதாசிவம் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.           
அவனைப் பார்த்துக் கொண்டே கொடி கீழே இறங்க, “அம்மா… கொடி.. நீ மனசுல ஒண்ணும் வச்சுக்காதேம்மா… சின்னவர் ரொம்ப நல்ல மாதிரி தான்.. கோபமே வராது.. அப்படி இருக்க.. இப்போ கோபப்படறாருன்னா அவரு மனசுல அவ்வளவு அழுத்தம் இருக்கும்மா.. தயவு செய்து அவரையும் புரிஞ்சிக்கோம்மா..” சதாசிவம் கொடியை சமாதானப்படுத்த,
“ஹ்ம்ம்.. அவரோட மனசு எனக்கு புரியுது.. நான் அவரு திட்டறதுக்காக வருத்தப்படல…” கொடி மெல்ல சொல்லிக் கொண்டே காவல் நிலையத்தின் உள்ளே செல்ல காலை எடுத்து வைக்க, பீஷ்மா வேகமாக வெளியில் வந்தான்.
“என்ன ஆச்சு?” கொடி மெல்லக் கேட்க,
“இல்ல… நீ ஆடி அசைஞ்சு வரதுக்குள்ள இன்ஸ்பெக்டர் எங்கயோ மீட்டிங்குக்கு போயிட்டாராம்… இப்போ ஒண்ணும் செய்யறதுக்கு இல்ல… அவர் வர எப்படியும் ரெண்டு மூணு மணி நேரம் ஆகும் போல..” பீஷ்மா கடுகடுவென்று சொல்ல, கொடியின் கண்கள் கண்ணீர்த் துளிர்க்கச் செய்தது.
“இப்படி அழுது விடுஞ்சிக்கிட்டே இருந்தா எந்த காரியம் உருப்படும்? வா.. எங்கயாவது போயிட்டு ரெண்டு மணி நேரம் கழிச்சு போன் பண்ணிட்டு வரலாம்…” பீஷ்மா சொல்லிக் கொண்டே காரின் அருகே செல்ல, கொடி எதுவும் பேசாமல் அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.
“கொஞ்சமாவது இதைச் செய்து முடிக்கணும்ன்னு ஒரு இது வேணும்… என்னவோ கூப்பிட்டுட்டானேன்னு வந்தா இப்படித் தான் இருக்கும்..” பொருமிக்கொண்டே வந்தவன்,
“சதாத்தா… பெரிய கோவிலுக்கு போங்க…” சொன்னவனைக் கொடி திகைப்புடன் பார்க்க, அந்தப் பார்வையை கண்டு கொள்ளும் நிலையில் இல்லாத பீஷ்மா, கண்களை மூடி, சீட்டில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.
“சின்னவரே கோவில் வந்துடுச்சு…” சதாசிவம் சொன்னது தான் தாமதம், விடுவிடுவென்று கீழே இறங்கிய பீஷ்மா, கோவிலினுள் வேகமாகச் செல்ல, கொடி பரிதாபமாக சதாசிவத்தைப் பார்த்தாள்.
“நான் என்ன தப்பு செய்தேன்? என்னை இப்படி கண்டுக்காம போறார்?” மனதில் கேட்பதாக நினைத்துக் கொண்டு வெளியில் அவள்s முணுமுணுக்க, அது சதாசிவத்தின் காதில் தெளிவாக விழுந்தது.  
“நான் வண்டியை நிறுத்திட்டு வரேன்ம்மா… நாம உள்ள போகலாம்… தம்பி அங்க தான் நின்னுட்டு இருப்பாரு…” கொடிக்கு ஆறுதலாக அவர் சொல்லவும், அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறிய கொடிக்கு, பீஷ்மா தன் மேல் இவ்வளவு கோபமாக இருப்பது வலியைக் கொடுத்தது.
சதாசிவம் வண்டியை நிறுத்திவிட்டு வரவும், இருவரும் கோவிலின் உள்ளே சென்றனர். “என்ன ஒவ்வொரு இடத்துக்கும் உன்னை வா… வான்னு வெத்தலை வச்சா கூப்பிடணும்?” சென்ற காரியம் உடனே நடக்காத கடுப்பில் பீஷ்மா கொடியைப் பார்த்து மேலும் பொரிய,
“தம்பி… கொஞ்சம் கோபப்படாம பேசுங்க… பாவம் பொண்ணு.. அவளை பத்திரமா கூட்டிட்டு வரத் தான் உள்ள வந்தேன்… நீங்க பேசிட்டு சாமி கும்பிட்டு வாங்க.. நான் வண்டிக் கிட்ட இருக்கேன்.. என்னால இந்த வெயில்ல அவ்வளவு தூரம் எல்லாம் நடக்க முடியாது…” அவர்கள் இருவரையும் தனிமையில் விட்ட சதாசிவம் விடைப்பெற்று செல்ல, பீஷ்மா ஏதோ பேச வாயைத் திறப்பதற்குள், 
“இங்கப் பாருங்க… நான் நீங்க என்னை நடுரோடுல விட்டுட்டு வந்துடுவீங்கன்னு பயந்து உங்களைப் பார்க்கல… நாம பேசினது எல்லாம் காத்து வாக்குல அந்த குணா காதுல எட்டி, அவனால எங்க உங்க உயிருக்கு ஆபத்து வந்துடுமோன்னு பயந்துட்டு தான் வந்தேன்.. நான் திரும்பி திரும்பிப் பார்த்ததும் அதனால தான்.. அந்த குணாவை பழி வாங்கறதுல எனக்கும் சந்தோஷம் தானே… இதைக் கூட உங்களால புரிஞ்சிக்க முடியலையா?” என்றவள்,
“நீங்க திட்டிக்கிட்டே இருந்தா… நான் அழக்கூட இல்லாம அப்படியே கல்லு மாதிரி நிக்க… நான் ஒண்ணும் கல்லு கிடையாது… எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு.. அதுல அழறதும் ஒண்ணு…” படபடவென்று பேசியவள், அவனைத் தாண்டிக் கொண்டு வேகமாக கோவிலைச் சுற்றத் தொடங்கினாள்.
கொடி சொன்னதைக் கேட்ட பீஷ்மா அதிர்ந்து நின்றான். “எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு…” மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகள் அவனின் காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
அந்த வார்த்தைகள் பலவித கோணங்களில் அவனது மனதை வாட்டத் தொடங்கி இருக்க, பீஷ்மா சிலை போல நின்றுக் கொண்டிருந்தான்.
“அவ ஏன் இந்த வார்த்தையை சொல்லணும்? அவளுக்கும் உணர்ச்சி இருக்குன்னா… நான் அவளோட உணர்வுகளோட விளையாடறேனா? நான் ஏதாவது தப்பு செய்யறேனா? எனக்கு ஏன் இந்த நிலைமை?” அந்த வார்த்தைகள் அவனை இம்சித்துக் கொண்டிருக்க, சிறிது தூரம் சென்று அவர்களைத் திரும்பிப் பார்த்த சதாசிவம், பீஷ்மா திகைத்து நிற்பதைப் பார்த்து அவனது அருகே வந்து, அவனது தோளைத் தட்டினார்.
பதட்டத்துடன் பீஷ்மா திரும்பிப் பார்க்க, “என்ன தம்பி? எதுக்கு இப்போ மனசுல எதையோ வச்சுக்கிட்டு இப்படி அந்தப் பெண்ணை போட்டு திட்டிக்கிட்டு இருக்கீங்க? மனசுல அப்படி என்ன குழப்பம்? தயவு செய்து இப்படி எல்லாம் இருக்காதீங்க தம்பி… நீங்க போய் சாமி கும்பிட்டு வாங்க.. அந்த பொண்ணு ஏதோ கோவிச்சுக்கிட்டு தனியா போகுது. போய் சமாதானப்படுத்துங்க.” அவனை சமாதானம் செய்து கோவிலுக்குள் அனுப்பி வைக்க, மலரின் நினைவுகள் அவனை ஆட்க்கொள்ளத் துவங்கியது.
அன்று மலரைப் பார்த்த நினைவுகள், அவளுடன் பேசிய வார்த்தைகள், இறுதியாக அவள் கிளம்பிச் சென்றது அனைத்தும் அவனது நினைவுகளில் வந்து அலை மோதியது. அந்த நொடிகளை ரசித்துக் கொண்டே மெல்ல கோவிலுக்குள் நடந்து சென்றான். சிவன் சன்னதிக்குள் சென்றவனது விழிகள், கண்களை மூடி அமர்ந்திருந்த கொடியின் மீது பதிந்தது.
கண்களில் கண்ணீர்த் துளிகள் வழிய சிலையென அமர்ந்திருந்த கொடியின் நிலை ஏனோ மனதைப் பிசைய, மெல்ல அவளது அருகே சென்றவன், அவள் அருகே அமர்ந்தான்.
அருகில் அசைவு தெரியவும், கண்களைத் திறந்துப் பார்த்த கொடி, “சாரி.. நான் உங்ககிட்ட அப்படி பேசி இருக்கக் கூடாது..” மெல்ல முணுமுணுக்க,
“இல்ல கொடி.. நான் உன்கிட்ட.. உன் மனசை புரிஞ்சிக்காம பேசி இருக்கக் கூடாது… என்னவோ மனசுல ஒரு மாதிரி பாரம்… அதை எனக்கு சொல்லத் தெரியல.. அப்படி உன்னைப் பேசினதுக்கு சாரி… உன்னை ரொம்ப ஹர்ட் பண்றேன்..” அவளது கையைப் பற்றிய பீஷ்மா அவளிடம் மன்னிப்பு வேண்ட, பூஜை முடிந்து கற்பூரம் காட்டுவதற்காக அடித்த மணியில், இருவரும் பேச்சை நிறுத்தி இறைவனைப் பார்த்தனர்.
அன்ன அலங்காரத்தில் சிவன் அருள் பாலிக்க, இருவரின் மனதிலும் பாரம் குறைவது போல இருந்தது.
வெளியே வந்த இருவரும் அமைதியாகவே நடக்க, மலருடன் தான் அமர்ந்த அதே படிக்கட்டுகளில் அமர்ந்த பீஷ்மா, அந்த நினைவுகளில் கண்களை மூடிக் கொள்ள, “மலர் கூட இங்க உட்கார்ந்து பேசினீங்களா?” கொடி மெல்லக் கேட்க,
“ஹ்ம்ம்.. ஆமா… இந்த புறாவை எல்லாம் அவ இங்க உட்கார்ந்து தான் ரசிச்சுக்கிட்டு இருந்தா… நானும் இங்க உட்கார்ந்து போட்டோ எடுத்தேன்.. அப்போ அவ என்னைத் திரும்பிப் பார்த்தா…” பீஷ்மா அந்த நினைவுகளில் மூழ்கிச் சொல்லவும், கொடி அங்கிருந்த புறாக்களை அண்ணாந்துப் பார்க்க, அவளைப் பார்த்து புன்னகைத்த பீஷ்மா,
“ரொம்ப அழகா இருக்கு இல்ல கொடி..” அவளிடம் பகிர,
“ஹ்ம்ம்… எந்த கவலையும் இல்லாம ரொம்ப சந்தோஷமா இருக்குங்க இல்ல… மனுஷங்களுக்கு தான் கவலை எல்லாம்…” என்றவள்,
“கோவிலைச் சுத்திட்டு வரலாமா? என்னவோ சுத்தணும் போல இருக்கு…” கேட்டுக் கொண்டே, ஆவலாக பீஷ்மாவைப் பார்க்க,
“சரி வா… நானும் உன் கூட சுத்தறேன்.. அப்படியே நாம கிளம்பலாம்… நேரம் சரியா இருக்கும்…” பீஷ்மா சொல்லவும், கொடி மண்டையை உருட்ட, அவளைப் பார்த்த அவனது புன்னகை மேலும் விரிந்தது.
தரையில் பதித்திருக்கும் ஓடுகளில் கால் வைத்து விளையாடிக் கொண்டு வந்த கொடியைப் பார்த்த பீஷ்மாவிற்கு அவளது சிறு பிள்ளைத்தனம் சிரிப்பை வரவழைக்க, இயற்கையான அவனது குறும்புக் குணம் தலை தூக்க,
“கோவில்ல எத்தனை கல்லு போட்டு இருக்காங்கன்னு அளந்து முடிச்சிட்டியா?” கிண்டல் செய்யவும், கொடி விழிக்கத் தொடங்க, அதைப் பார்த்து கடகடவென சிரித்தவன்,
“விட்டா… இங்க கோடு கிழிச்சு நொண்டி விளையாடுவ போலயே.. நாம அப்பறம் ஒருநாள் வந்து விளையாடலாம்… இப்போ கொஞ்சம் வேகமா நட தாயே…” பீஷ்மா சிரித்துக் கொண்டே கை எடுத்து கும்பிட, அவனது கேலியைப் புரிந்தவள் அழகாக வெட்கப்பட, அவர்கள் இருவரும் பேசி சிரிப்பதைப் பார்த்து அங்கிருந்த ஒரு ஆங்கிலேயர், பீஷ்மாவிடம் வந்து ஏதோ சொல்லவும், பீஷ்மா யோசனையுடன் கொடியைப் பார்த்தான்.
“என்ன கேட்கறாங்க?” அவர் கேட்பது புரியாமல் அவள் பீஷ்மாவைக் கேட்கவும்,
“ஒண்ணும் இல்லை…” என்றவன், ஏதோ சைகை செய்துவிட்டு,
“அவருக்கு நம்ம போட்டோ வேணுமாம்.. நம்ம ஜோடி ரொம்ப பொருத்தமா இருக்காம்… அது தான் போஸ் கொடுக்கச் சொல்றார்… கொஞ்சம் அசையாம நில்லு…” என்றவன் கொடியை நெருங்கி நிற்க, கொடி சுதாரித்து விலகுவதற்குள், அவரும் பட்டென்று அவர்களது உருவத்தை தனது கமெராவில் பதிவு செய்து கொண்டார்.
“வெரி க்யூட் கப்பிள்… ஹாப்பி மேரீட் லைஃப்…” அவர் வாழ்த்திவிட்டு நகர்ந்து சென்றுவிட, அவர் சொன்னதைக் கேட்ட கொடி அதிர்ந்து நிற்க, அதை கண்டு கொள்ளாத பீஷ்மாவோ, அவருக்கு நன்றி கூறி விடைக் கொடுத்து,
“என்ன அப்படியே நின்னுட்ட… வா.. நேரமாச்சு நாம கிளம்பலாம்…” என்றவன், முன்னே நடக்கத் தொடங்கினான்.
“இவரு மனசுல என்ன நினைச்சிட்டு இருக்காரு.. சில நேரம் காயறவர், அவங்க கல்யாணம்ன்னு சொன்ன உடனே அவனை புரட்டி எடுக்காம இப்படி பேசாம போறாரே.. ஹையோ கொடி… மண்டை இவ்வளவு தான் காய முடியுமா? இன்னும் ஏதாவது பாக்கி இருக்கான்னு தெரியலையே” தனக்குத் தானே புலம்பிக் கொண்டு வந்தவள், கோவிலின் வெளியே பீஷ்மா நிற்கவும், அவனிடம் வேகமாக சென்று நின்றாள்.
“பார்த்து மெல்ல வாம்மா… இப்போ நாம போனா நேரம் சரியா இருக்கும்… சதாத்தா எங்க?” கொடியிடம் சொல்லிக் கொண்டே பீஷ்மா கண்களைச் சுற்றித் துழாவத் தொடங்க, கோவிலின் எதிர்ப்புறம் அவர்களது கார் இருப்பதைப் பார்த்தவன்,
“கார் அங்க நின்னுட்டு இருக்கு… வா போகலாம்… பார்த்து ஜாக்கிரதையா வா..” கொடியின் கையைப் பிடித்துக் கொண்டு சாலையைக் கடக்க, பீஷ்மாவின் பின்னால் வந்தவளிடம்,
“கொஞ்சம் சீக்கிரம் வா..” என்றபடி அவன் நடக்க, அப்பொழுது வேகமாக வந்த ஒரு கார் கொடியின் மீது மோதுவது போல் இருக்கவும், கடைசி நிமிடத்தில், அந்தக் கார் கட்டுப்பாட்டை மீறிய வேகத்தில் வருவதை கவனித்த பீஷ்மா அவளைத் தன்னோடு இழுத்துக் கொள்ள, அந்த விபத்தில் இருந்து கொடி தப்பினாள்.
கட்டுப்பாட்டை மீறிச் சென்ற கார், சாலையின் நடுவே போடப்பட்டிருக்கும் கம்பிகளில் முட்டிக் கொண்டு நிற்க, விபத்து நடக்கவிருப்பதை கவனித்திருந்த சதாசிவம், கொடியின் அருகே வேகமாக ஓடி வந்தார்.
“அம்மா… உனக்கு ஒண்ணும் அடி படலையே.. பயப்படாதேம்மா…” அவளை சதாசிவம் சமாதானப்படுத்திக் கொண்டிருக்க, ஆத்திரம் கண்ணை மறைக்க, அந்த காரின் அருகே வேகமாக ஓடிச் சென்ற பீஷ்மா, அந்த காரின் ஏர் பலூனின் உதவியுடன் தப்பிப் பிழைத்து இருந்தவனை வெளியில் இழுத்து அடிக்கத் தொடங்கினான்.
“ஏண்டா… கார்ல ஏறினா கண்ணு மண்ணு தெரியாதா? எப்படிடா இப்படி வண்டியை ஓட்டறீங்க? அந்த பொண்ணுக்கு அடி பட்டு இருந்தா என்னடா செய்வ?” கோபமாக பேசிக் கொண்டே பீஷ்மா அவனை பிடித்து இழுக்க,
“கார்ல பிரேக் திடீர்னு வேலை செய்யல சார்… நான் அவங்க மேல இடிக்காம இருக்க முயற்சி செய்தேன்… இந்தப் பக்கம் வந்த பஸ்சைப் பார்த்து கொஞ்சம் பயந்துட்டேன்.. அதான்…” பீஷ்மாவின் அடிகளுக்கு இடையே அவன் சொல்லி முடிக்க, அங்கிருந்த ட்ராபிக் போலீஸ் பீஷ்மாவிடம் இருந்து அந்தக் கார்க்காரனை பிரித்து விலக்கிவிட்டு, தன்னுடைய கடமையை செய்யத் தொடங்க, கோபமாக பீஷ்மா கொடியின் அருகே வந்தான்.
மயிரிழையில் உயிர் பிழைத்திருந்தவளது உடல், நடக்கவிருந்த நிகழ்வினை நினைத்து பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. அவளது நிலையைக் கண்ட சதாசிவம், அவளை மெல்ல காருக்கு அழைத்துச் சென்று அமர வைத்து தண்ணீரைக் கொடுத்தாலும், அவளது உடலின் நடுக்கம் குறையாமல் இருக்கவும், அவர் செய்வதறியாது திகைத்து நின்றுக் கொண்டிருக்க, அவள் அருகே வந்த பீஷ்மா, அவளது நிலையைக் கண்டு, அதை விட பதட்டத்துடன்,
“ஒரு நிமிஷம் செத்தே போயிட்டேன்டி…” கண்களை மூடிச் சொன்னவன், அவளை இழுத்து தனது மார்போடு அணைத்துக் கொண்டான்.

10 COMMENTS

 1. Hei Ramya chellam, superb ud paa
  Hei Gangamma-vukkum Kodi mela akkarai irukke paa, I am happy
  oru vazhiyaga namma Bishma thannoda manasai thirunthu kaattittan paa
  yaaroda car paa athu? Guna ithil involve agiyirukkana or naturallana accident-ah?
  waiting for your next super ana ud paa

 2. Hai ramya dalu
  Sorry for late comment da
  Ayyo ayyo haiyyo beeshu paiyan vasama matikinan hai hai hai
  Oru nimisham sethe poitendi – kalakitta machi super da
  Dalu azhga beeshu paiyan manasa sollitenga
  Keep going da

 3. Rams superb ma,
  naan ninaichaen maa, intha mathiri ethaavathu avalukku aabaththu vanthaal thaan Beeshma manam avan , ivalai yaetrukkondathai velippaduththum nu..

  Nice Update…

 4. semma superr dr 😍 oru valiya beeshma ku ipotha bulb erinjiruku pola ha ha…..
  ivlothan mandai kaaya mudyuma innum iruka 😂 malaroda intha dialogh a rmpa rasichu siriche awsome ud dr….

LEAVE A REPLY