SHARE

பீஷ்மா தள்ளிச் சென்றதும், தனது கையில் இருந்த செல்போனை எடுத்த கங்கா, தனது கணவருக்கு அழைக்க, அதைப் பார்த்த பீஷ்மாவிற்கு, அவனது பெற்றவர்களை நினைத்து மனம் வலித்தது.

எதையும் யோசிக்க முடியாமல், கங்காவின் மீதே அவன் பார்வையை பதித்திருக்க, கங்கா தனது கணவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அவரது முகத்தில் தெரிந்த மாற்றங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பீஷ்மா, ஒரு பெருமூச்சுடன் குணாவை என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினான்.

துரையை இதில் இழுக்கலாமா வேண்டாமா? என்று சிறிது நேரம் யோசித்தவன், குணாவை கைது செய்ய, அவனுடைய சாட்சியம் மிகவும் முக்கியம் என்பதையும் யோசித்து குழம்பிக் கொண்டிருந்தான். அவனிடம் தான் கேட்டு, ஒரு முடிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அவன் நின்று கொண்டிருக்க, கங்கா பேசி முடித்ததைப் பார்த்து அவரது அருகில் சென்றான்.

“அம்மா.. அப்பா என்ன சொன்னாங்க?” பீஷ்மா கேட்க,

“ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.. அவனை ஊருக்கு கிளம்பி வரச் சொல்லுன்னு சொல்றார்… உங்க பெரியப்பா அதை விட சத்தம் போடறார்.. நான் என்ன செய்யட்டும்?” கேட்டுக் கொண்டே கங்கா நடக்கத் தொடங்க, தலையில் கை வைத்துக் கொண்டவன்,

“அம்மா.. நீங்க என்ன சொல்றீங்க?” கெஞ்சலுடன் பீஷ்மா கேட்க,

“எனக்கும் யோசிக்க கொஞ்சம் டைம் கொடு பீஷ்மா.. அதுவரை இந்த விஷயத்தை பத்தி நீ யோசிக்காம அந்த இவனைப் பத்தி யோசிச்சு ஒரு முடிவு பண்ணு.. அது தான் மொதல்ல இப்போ நமக்கு முக்கியம்.. இந்த இடத்தை விட்டு போகலாம்..” என்று சொன்னவர், பீஷ்மாவின் முகத்தைப் பார்க்க, அதில் பலவித யோசனைகள் போய்க் கொண்டே இருந்தது.

“ஹ்ம்ம்… இப்போ கல்யாணத்துக்கோ, காதலுக்கோ இடம் இல்லாம, அதுல மனசை செலுத்தாம, அதைப் போட்டுக் குழப்பிக்காம உன் வேலையைப் பாரு.. உன்னோட வேலை கரணம் தப்பினா மரணம்ங்கற மாதிரியானது. அதனால அதுல கவனம் குறையாம இரு. அப்பறம்.. அந்த குணாவை என்ன செய்யலாம்ன்னு முடிவு செய்திருக்க?” கங்கா கேள்வி எழுப்ப,

“அது வந்து.. கொஞ்சம் பொறுமையா துரை கிட்ட பேசிட்டு ஆரம்பிக்கணும்மா.. மொதல்ல நான் நாளைக்கு காலையில தஞ்சாவூர் போயிட்டு வரேன்… எனக்கு அப்பா, பெரியப்பாவோட ஹெல்ப் ரொம்ப முக்கியம்மா… நான் நாளைக்கு போய் அவங்க கிட்ட பேசிட்டு  வந்து மேல என்ன செய்யலாம்ன்னு பார்க்கறேன்ம்மா…” என்று சொன்னவன், ஒரு முடிவுக்கு வந்தவனாய், கங்காவைப் பார்த்து மெல்லிதாக புன்னகைத்து,

“உங்களுக்கு துணையா மலர் இருப்பா.. வருவா… பேசிப் பாருங்க…” என்று சொல்லிவிட்டு அமைதியாக நடக்க, கங்கா அவனது பேச்சைக் கேட்டு திகைத்துப் போனார்.

“என்னடா சொல்ற? மலர் வருவாளா?” கங்கா சிறிது பதட்டத்துடன் கேட்க,

“ஹ்ம்ம்… ஆமா.. அவளுக்கு அவளோட காரியம் நடக்கணும் இல்ல.. உங்க மனசை மாத்தனும் இல்ல.. அதனால வருவா.. பேசிப் பாருங்க..” ஒரு வித கேலியுடன் அவன் சொன்னாலும், அவனது மனதில் இருந்த விரக்தி குரலில் ஒளிரவே செய்தது.

“ம்.. அதெல்லாம் வர மாட்டா.. என்னைப் பார்த்தா அவளுக்கு பயமா இருக்கும்.. நீ போய் உன் வேலையைப் பார்த்துட்டு இருட்டறதுக்குள்ள வந்து சேறு.. அது தான் நல்லது. ஊர்ல காப்பு கட்டி இருக்காங்க.. வெளிய ராத்தங்கக் கூடாது…” கங்கா எச்சரிக்க, பீஷ்மா தலையசைத்துவிட்டு, வீட்டை நோக்கி நடந்தான்.

வீட்டின் வெளியே அவர்களுக்காக காத்திருந்த மாரி, அவர்களைப் பார்த்ததும் எழுந்து நின்று, “உங்களுக்காகத் தான் காத்திருக்கேன் தம்பி..” என்று சொல்லவும், பீஷ்மா குழப்பத்துடன் அவரைப் பார்த்தான்.

“கொடிக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல.. அவ வீட்ல உட்கார்ந்துக் கிட்டு இருக்கா.. அவளைப் போய் பார்த்துட்டு தான் வரேன்..” அவசரமாக சொன்ன மாரி,

“அம்மாவுக்கு ராத்திரி ஏதாவது வேணுமான்னு கேட்டுட்டு போக வந்தேன்.. அம்மா ஊருக்கு புதுசு இல்லயா?” தான் வந்ததன் காரணத்தைச் சொன்னவர், கங்காவைத் தயக்கத்துடன் பார்க்க, கங்கா அவரை கூர்மையுடன் பார்த்தார்.

“அம்மா… ராத்திரிக்கு காய்கறி ஏதாவது வேணுமா?” மாரி கேட்க,

“இல்ல.. ராத்திரிக்கு நான் எப்பவுமே சப்பாத்தி தான் சாப்பிடறது. அது டாக்டர் சாரோட கட்டளை.. அதனால மாவு இருக்கு மாரி.. மதியம் வாங்கின தக்காளி இருக்கு. அதை வச்சு நான் செய்துக்கறேன்.. உங்களுக்கு தான் நிறைய வேலை இருக்குமே..” கங்கா அவர் பேச்சின் பாதியில் விட்டுச் சென்றதை சுட்டிக் காட்ட,

“இப்போ எல்லா வேலையும் முடிச்சு வச்சிட்டு தான் வந்திருக்கேன்மா.. உங்களுக்கு கூட மாட உதவி செய்யறேன்..” என்ற மாரி தலை குனிந்து நிற்க, கங்காவை பீஷ்மா வித்தியாசமாகப் பார்க்க, மாரியைப் பார்த்துக் கொண்டிருந்த கங்காவோ,

“உள்ள வாங்க மாரி.. நாளைக்கு நேரத்துலேயே பீஷ்மா தஞ்சாவூருக்கு போகப் போறான்.. எனக்குத் துணையா நீங்க தான் இருக்கணும்ன்னு சொன்னா… இவன் அந்த மலர் பொண்ணு வருவான்னு சொல்றான்.. வருவாளா?” இயல்பாகக் கேட்க, மாரியின் கண்கள் கலங்கியது.

‘இனிமேல் நீ ஓடி ஒளிய வேண்டாம்’ என்பதற்காகவே இயல்பு போல காட்டி கங்கா மாரியிடம் சொன்னாலும், பீஷ்மா சொன்ன விஷயங்களைக் கேட்டவரின் நெஞ்சம் தவித்துக் கொண்டு தான் இருந்தது.

மலர் என்று நினைத்து கொடியிடம் பழகி இருந்தாலும், கொடியின் மனதில் ஆசையை விதைத்தது பீஷ்மா தானே. அவளும் பீஷ்மா தன்னை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறான் என்று நம்பித் தானே அவனிடம் தன்னுடைய மனதை பகிர்ந்திருக்கிறாள் என்பதும் கங்காவின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

பலவித குழப்பங்களுடன் அன்றைய இரவு கழிய, தூக்க மாத்திரையின் உதவியால் பீஷ்மா நன்றாக உறங்கி எழுந்தான். காலை செய்ய வேண்டிய வேலைகளை மனதினில் திட்டமிட்டுக் கொண்டே தயாராகத் தொடங்கியவன், துரையை அழைத்து சில நிமிடங்கள் பேசிவிட்டு கிளம்பித் தயாராகி வெளியே வந்தான்.

“என்ன சதாத்தா.. தஞ்சாவூர் போகலாமா? எனக்கு நிறைய அலையணும்.. உங்களால முடியுமா?” பீஷ்மா வழக்கம் போல அவரை வம்பிற்கு இழுக்க,

“நான் ரெடி.. நீங்க ரெடியா?” பீஷ்மா அந்த ஒரு வார்த்தை பேசியதற்கே உற்சாகம் பெற்றவராய் சதாசிவம் கேட்கவும்,

“நான் ரெடி.. பார்ப்போம் யார் மொதல்ல டயர்ட் ஆகறாங்கன்னு…” சவால் விட்டவனாய் துரையைப் பார்த்து,

“துரை.. நான் எவ்வளவு சீக்கிரம் வேலை முடியுதோ வரேன்.. அதுவரை எப்பவும் போல நீங்க பார்த்துக்கோங்க..” கண்ணடித்து விட்டு அவன் வண்டியில் ஏற, துரை மெல்லிதான புன்னகையுடன் தலையசைக்க,

“அம்மா… நான் போயிட்டு வரேன்…” உறுதியுடன் சொன்னவனைப் பார்த்த கங்கா பெருமூச்சுடன் அவனுக்கு கையசைத்து விடைக் கொடுத்தார்.

தஞ்சையை நெருங்க, நெருங்க பீஷ்மாவின் மனம் மலரை நினைத்து துடித்தது. ‘எந்த இடத்துல ஆக்ஸிடென்ட் நடந்ததுன்னு மலர்கிட்ட கேட்காம விட்டுட்டோமே… இப்போ எந்த ஸ்டேஷன்ல போய் சம்பந்தப்பட்ட விஷயத்தை கேட்கறது? அப்பா பெரியப்பா பேரை யூஸ் பண்ணி கமிஷனர் கிட்ட கேட்கலாம் தான்.. இருந்தாலும் இடம் எங்கன்னு தெரிஞ்சா நல்லா இருக்குமே..’ பீஷ்மா யோசித்துக் கொண்டே திரும்பினான். அப்பொழுது ‘விபத்தில் இளம் பெண்’ என்று கொட்டை எழுத்தில் இருந்த வாசகம் கண்ணில் பட, பீஷ்மாவின் கை அதை எடுக்க பரபரத்தது.

“சதா தாத்தா.. இது எப்போத்து நியூஸ் பேப்பர்?” பீஷ்மா மனம் படபடக்க, சதாசிவத்தைப் பார்க்க,

“தெரியலயே சின்னவரே.. நம்ம வீட்ல இருந்த பழைய பேப்பர்ல இருந்து எடுத்து வச்சிருந்தேன்.. கண்ணாடி துடைச்சா பலபலப்பா இருக்குமே…” வண்டியை நிதானப்படுத்தி அவர் பீஷ்மாவிடம் பார்வையைத் திருப்பிச்  சொல்லவும், அவனை அறியாமலே கைகள் நடுங்க பீஷ்மா, அதை எடுத்தான்.    

பீஷ்மாவின் இந்த பதட்டம் சதாசிவத்திற்கு புதிதாக இருந்தது. அதைப் பார்த்தவர், அவனை நம்ப முடியாமல், “தம்பி.. என்ன ஆச்சு? இந்த பேப்பர்ல ஏதாவது முக்கியமான விஷயம் இருக்கா?” என்று கேட்க,

“இல்ல…” மண்டையை ஆட்டிச் சொன்னவன், அந்த பேப்பரில் கவனம் பதித்தான்.

அவனது மனம் சொன்னது போல, அது மலர் இறந்த செய்தி தான். அன்றைய தினம் நடந்த விபத்தை குறித்தும், மலரின் ரத்தக்கரை படிந்த முகமும் அதில் பதிவாகி இருக்க, அதைப் பார்த்தவனின் கண்கள் கலங்கியது.

“உன்னை நான் அன்னைக்கு தனியா விட்டு இருக்க கூடாது..” மெல்ல முணுமுணுத்தவன்,

“இந்த நியூஸ் பேப்பர் நம்ம வீட்ல தான் இருந்ததா?” தொண்டையை செருமிக் கொண்டே சதாசிவத்திடம் கேட்க,

“ஹ்ம்ம்.. ஆமா சின்னவரே… நம்ம வீட்ல இருந்து தான் நான் பேப்பர் எடுத்து வைப்பேன்.. வேற எப்படி வந்திருக்கப் போகுது?” அவர் யோசனையாகச் சொல்லவும், அந்த செய்தியில் மீண்டும் அவன் கவனத்தைப் பதிக்க, அதில் அவன் மனதினில் நினைத்த கேள்விக்கான விடை இருந்தது.

“ஹ்ம்ம்… அந்த இடத்துல போய் கேட்டுத் தான் ஆகணும்.. நேர்ல பார்த்தவங்க ஒருத்தர் கூடவா இருக்க மாட்டாங்க…” அவனது மனம் சொல்ல, அதனை ஒப்புக் கொண்டவன்,

“ஒருவேளை இந்த பேப்பர் எனக்கு யூஸ் ஆகும்ன்னு மலர் கொண்டு வந்து வச்சிருப்பாளோ? இல்லைன்னா இது எதுக்கு இப்போ கண்ல படுது?” யோசித்தவன், அந்த பேப்பரை நெஞ்சில் பதித்துக் கொண்டு, கண்களை மூடினான்.

“சின்னவர் ஏன் அந்த பேப்பரைப் பார்த்து இப்படி செய்யறாரு? என்ன விஷயமா இருக்கும்?” சதாசிவத்தின் மனதில் ஆயிரம் கேள்விகள் முளைத்தது.

காலையில் பீஷ்மா காரில் ஏறி கிளம்புவதை பார்த்த குணா, “இந்த டாக்டர் ஊரை விட்டே போயிட்டானா என்ன?” மனம் குத்தாட்டம் போட, இன்று கொடியை ஓரு வழி செய்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் கொடியின் வீட்டை நோக்கி நடந்தான்.

காலையில் எழுந்தவள், வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு தோட்டத்தில் பூவைப் பறித்துக் கொண்டிருக்க, அங்கு வந்து நின்றவன், “நம்ம கல்யாணத்துக்கு இப்போ இருந்தே பூ பரிக்கரியா கொடி? நீ அழகா… இல்ல அந்த பூ அழகான்னு நம்ம திருவிழாவுல ஒரு பட்டிமன்றம் வைச்சுடலாமா?” குணா கேட்க, கொடி பதில் எதுவும் பேசாமல் பூவைப் பறிக்கும் வேலையை மட்டும் செய்துக் கொண்டிருக்க,

“என் கிட்ட பேச உனக்கு வெட்கமா கொடி? உன் வெட்கத்தை எல்லாம் நான் போக்க உனக்கு ஒரு வழி சொல்லவா?” மேலும் பேச்சுக் கொடுக்க, அவனை அப்படியே கீழே தள்ளி கல்லை போட்டு கொன்று விடலாமா என்ற எண்ணம் எழ, கைகளை மடக்கி கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள்,

“எதுவுமே வேண்டாம்.. எனக்கு வேலை இருக்கு…” பொறுமையாகவே அவனுக்கு பதில் சொன்னாள்.

“இந்த தடவையும் திருவிழாவுக்கு, அந்த திருவாரூர் மர்மதாவைத் தான் ஆட்டத்துக்கு அழைச்சு இருக்கேன்.. ரொம்ப நல்லா ஆடுவா இல்ல..” கொடியின் பொறுமையை மிகவும் சோதித்தவன், அவளைப் பார்த்து இளிக்க,

“ஹ்ம்ம்… அவளைத் தான் நீ கூப்பிடுவன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. ஏன்னா அவ தானே உனக்கும் தனியா வந்து ஆட்டம் காட்டுவா…” நக்கலாக கேட்ட கொடி,

“எனக்கு வேலை இருக்கு… இங்க இருந்து போன்னு சொல்லிட்டேன்..” என்று சொல்லவும், குணா வெகுண்டெழுந்தான்.

“ஏய்… என்னடி? நானும் என்னவோ பேச்சு கொடுத்து பார்த்துட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க? என்ன அந்த டாக்டர் கொடுக்கற தைரியமா? அவனை ஒண்ணும் இல்லாம ஆக்கறேன் பாரு…” குணா நக்கல் பேச, கொடி அவனை விட நக்கலாக அவனைப் பார்த்து சிரித்தாள்.

“நல்லா இருக்கே உன்னோட இந்த பேச்சு… இன்னும் கொஞ்சம் பேசேன்.. எனக்கு காது குளிர கேட்கணும் போல இருக்கு…” கொடி சொல்லவும், குணா ஒரு சில வினாடிகள் அயர்ந்து நின்றான். உடனே தன்னை சுதாரித்துக் கொண்டவன்,

“உனக்கு ரொம்ப திமிரா போச்சுடி.. உன்னை என்ன செய்யறேன் பாரு…” குணா அவளது தலை முடியைப் பிடிக்க, கீழே அவள் வைத்திருந்த கத்தியை எடுத்து அவனது கையைக் கிழித்தவள்,

“கையை எடுடா.. என் முடியில இருந்து கையை எடுடா…” மலர் இறந்த விதம் தெரிந்தது, தனது காதல் உடைந்தது, பீஷ்மா சொன்னது அனைத்தும் அவளது மனதில் கொதிப்பை ஏற்படுத்தி இருக்க, அந்த கொதிப்பு மொத்தத்தையும் குணாவிடம் காட்டினாள்.

கத்தி கூர்மை அவனது கையை பதம் பார்த்திருக்க, “இதோட உன்னை விட்டேனேன்னு சந்தோஷப்படு.. எனக்கு இருக்கற ஆத்திரத்துக்கு உன்னை இந்த கத்தியை வச்சு கூரு போட்டு இருப்பேன்.. போயிடு.. பக்கம் வந்த… உன்னை என்ன செய்வேன்னே தெரியாது…” அவள் போட்ட சத்தத்தில் அங்கிருந்த அனைவருமே கூடி இருந்தனர்.

அவர்களைப் பார்த்த குணாவிற்கு அவமானமாக இருக்க, “எங்கடி உங்க அப்பன்? அவனை வரச் சொல்லு… அவன் பொண்ணு செய்து வச்சிருக்கற லட்சணம் பாருன்னு அவன் முகத்துல துப்பறேன்..” கொக்கரிக்க,

“நல்லா துப்பு.. அப்போவாவது எங்க அப்பனுக்கு சூடு சுரணை வருதான்னு நான் பார்க்கறேன்..” கொடி சொல்லவும்,

“வேலு… ஏய் வேலு…” குணா சத்தமிட்டான்.

“அவரு நல்லா மூக்கு முட்ட குடிச்சிட்டு படுத்து இருக்காரு.. இப்போ அவரு எழுந்து வந்து ஏதாவது பேசினாருன்னா அவரு மண்டையில கல்லைப் போட்டுடுவேன்னு சொல்லி இருக்கேன்.. ஒழுங்கா மரியாதையா இடத்தை காலி செய்யற வழியைப் பாரு.. இல்ல.. உனக்கு கத்தி.. அந்தாளுக்கு கல்லு.. ரெண்டு பேரையும் கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போயிடுவேன்..” கொடி ஆவேசமாக கத்த, குணா அதிர்ந்து போனான்.

“உன்னை பிறகு பார்த்துகறேன்…” குணா அங்கிருந்து வேகமாக நகர்ந்து செல்ல, கீழே தொப்பென்று அமர்ந்த கொடி, அத்தனை நேரம் தடதடத்த இதயத்தை கையால் அழுத்தி சமாதானம் செய்துக் கொள்பவள் போல தரையில் மடிந்து அமர்ந்தவள், முட்டியில் தலை வைத்து அழத் தொடங்கினாள்.

“அழுவாத கொடி… அது தான் அந்த இவனை விரட்டி அடிச்சியே… அழுவாத துணிஞ்சு நில்லு.. நம்ம ஊரு ஆத்தா இந்த பண்டிகைக்குள்ள கண்ணைத் திறந்து பார்த்து உனக்கு ஒரு நல்லது நடக்கட்டும்…” பெண்கள் ஆளுக்கு ஒரு வகையில் அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அவள் அருகே நிற்க, அதைக் கேட்ட கொடி,

“நான் உள்ள போறேன்…” முணுமுணுத்துவிட்டு அவள் நகர்ந்து செல்ல,

“உள்ளேயே இரு கண்ணு.. அது தான் உனக்கு நல்லது..” என்ற பெண்மணிகள், அவள் வீட்டின் உள்ளே செல்லவும், அனைவரும் புலம்பிக் கொண்டே களைந்து சென்றனர்.

வீட்டின் உள்ளே நுழைந்து, ஹாலைக் கடந்து செல்ல நகர்ந்தவள், மலர் எப்பொழுதும் படுத்திருக்கும் பாய் விரிந்திருக்கவும், அதைக் கண்டு திகைத்து நின்றாள்.

“மலரோட பாய் விரிஞ்சிருக்கே..” கொடி மனதினில் நினைக்க,

“உனக்குத் துணையா நான் இருக்கும் போது எனக்கும் சோர்வு வரும் இல்ல.. அப்போ நான் படுக்க மாட்டேனா? அதுக்கு போட்ட பாய்.. இன்னைக்கு எடுத்து வைக்க மறந்துட்டேன்…” கேட்ட குரலை அடையாளம் கண்டு கொண்டவள், பட்டென்று குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தாள்.

புன்சிரிப்புடன் மலர் அங்கு நின்றுக் கொண்டிருக்க, அவளைப் பார்த்த கொடி வளவளத்து போனாள். “மலர்…” அவள் தேம்ப,

“இப்போ எதுக்கு அழற? நான் தினமும் உனக்குத் துணையா இங்க தான் இருக்கேன். உன்னை விட்டுட்டு போகல கொடி.. அதுசரி… இப்போ அந்த ஆளை போட்டு அந்த பிரட்டு பிரட்டின? உள்ள வந்து அழுதுட்டு இருக்க? மனசுல தைரியம் வேணும் கொடி..” மலர் அறிவுரை சொல்ல, வார்த்தை வராமல் கொடி தடுமாறினாள்.

“நீ ஒண்ணும் தப்பு செய்யல கொடி.. சின்னப் பொண்ணு உன் முன்னால வந்தா உனக்கு ஒரு மாதிரி இருக்கும்ன்னு தான் வரல..” தன்னிலை விளக்கம் சொன்ன மலர்,

“மனசை எதுக்கும் தளர விடாதே… அக்கா நான் இருக்கேன்.. உனக்கு ஒரு நல்லது செய்யாம நான் எப்படி உன்னை தனியா விடுவேன்.. டாக்டர் சார் ரொம்ப நல்லவரு…” மலர் தொடங்க,

“அவரு பாவம் மலர்.. நீன்னு நினைச்சு என் கூட பழகிட்டு தவிக்கிறார்…” சொன்ன கொடியைப் பார்த்தவள்,

“ஹ்ம்ம்.. உன் மேல அவருக்கு நிறைய அன்பிருக்கு… உன்னை அவர் பத்திரமா பார்த்துப்பார்.. நீ எதுக்கும் கவலைப்படாதே…” கொடியைத் தேற்றியவள், எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, கொடி அவள் அருகே வந்தாள்.

“என்னால தானே…” கொடி தொடங்க,

“திரும்பத் திரும்ப இதையே சொல்லாதே கொடி.. நடப்பது எல்லாம் நன்மைக்கே .. நல்லதே நடக்கும்.. வருத்தப்படாம போய் வேலையைப் பாரு.. டாக்டர் சார் இங்க இருந்து ஒரு முடிவோட தான் கிளம்பி இருக்கார்.. அந்த முடிவு கண்டிப்பா நல்லதா தான் இருக்கும்ன்னு நம்புவோம்.. அந்த தெய்வம் நமக்கு துணை இருக்கும்…” மலர் சொல்லவும், கொடி அவளையே பார்த்துக் கொண்டு நிற்க,

“எனக்கு வேலை இருக்கு கொடி.. நான் அப்பறம் உன்னை வந்து பார்க்கறேன்…” என்ற மலர் அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

19 COMMENTS

 1. Hai ramya dalu
  Haiyaaa naan than first comment kudukuratha
  Super
  Appuram this ud niraya twistuku way kuduka poguthu pola
  Eppidiyo kodi terror ayitta guna daru than kodi appidiye soruga vendiyathu thana antha gunava ess ayitane
  Gangammava malar papanu ninaithen but kodiya pathirukka next udlayavathu gangamma malar meeting varuma dalu ungalukke velicham

 2. Super Ramya unga story oda new reader. Your stories are simply super. I really like ur stories. Thanks for giving me a nice leasiure time

 3. Hi mam how r u? Nice update today dha net pack poten adha last update ku comment panna mudiyala really ganga paavam mam paiyam pei ah love panni nondhu poi irukan thavara oru ponnuku promise panni irukan ivanga enna decision edupanga

 4. Hei Ramya, superb ud pa
  hayyo, innum 6-7 ud thana pa?
  Rams, Rams, innum konjam ud serthu kodunga pa
  story mudiya poguthu endra ninaichale worry aga irukku pa
  kodi=yin courage ha ha
  malar sister kannukkum theriyaraale pa
  waiting for next ud pa

  • thanks banu… thank u so much ma… 😀 hahah … enna seyyarathu kathai mudikkanume … 😀 next kathai super jolly kathaiya thanthudalam ma… 😀

 5. Hi ramya ungaloda yella story m ipa dhan one, one a padchikite iruken paavai ne venpavai password send pannunga plz. I verymuch eager to read

LEAVE A REPLY