SHARE

“வாவ் பீஷ்மா… நீ இந்த ஊர்ல டாக்டர் வேலை பார்க்க வந்தியா இல்ல போட்டோகிராஃபர் வேலை பார்க்க வந்தியா?” கங்கா கிண்டலாகத் தொடங்க, அவரது கிண்டலில் பீஷ்மா முறைக்க,

“இல்ல லொகேஷன் லொகேஷனா பார்த்து வச்சிருக்க? இந்த இடம் எவ்வளவு அழகா இருக்குத் தெரியுமா? இந்த தண்ணியோட சலசலப்பு அவ்வளவு ரம்மியமா இருக்கு..” கங்கா அந்த இடத்தை ஸ்லாகித்துக் கொண்டே வர,

“அதனால தான் இந்த இடம் மோகினியோட இடம்ன்னு இந்த ஊர்ல சொல்றாங்க…” பீஷ்மா சொல்லவும், கங்காவின் பேச்சு பாதியிலேயே நின்றுப் போனது.

“டேய்… என்னடா சொல்ற? பீஷ்மா… இது விளையாடறதுக்கு நேரம் இல்ல.. உண்மையைச் சொல்லு… மோகினிக்கு உன்னைப் மாதிரி பசங்கன்னா ரொம்ப பிடிக்குமாம்.. விளையாடாதே..” கங்காவின் முகம் சீரியசாக,

“இனிமே ஆகறதுக்கு ஒண்ணும் இல்லம்மா…  இதுல விளையாடறதுக்கு எதுவுமே இல்ல…” பீஷ்மாவின் குரலில் அப்படி ஒரு சோர்வு. அதைக் கேட்ட கங்கா, திகைப்பின் உச்சத்தில் எழுந்து நின்றார்.

“இனிமே நடக்கப் போறது ஒண்ணும் இல்லன்னா.. பீஷ்மா என்ன சொல்ற? என்ன தான் நடந்துச்சு?” கங்காவின் மனம் நிலையில்லாமல் தவிக்க, பீஷ்மாவோ எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவன் இத்தனை நேரம் கிண்டலாகப் பேசியது பொய்யோ எண்ணும் அளவிற்கு அவனது முகம் பாறை போல இருந்தது.

அவனது முகத்தைப் பார்த்தவரின் மனம் துடிக்க, “கண்ணா… என்னடா ஆச்சு? நீ எப்பவும் இப்படி பேசினது இல்லையே..” அவனது அருகில் அமர்ந்து பரிவாக அவர் கேட்க, அவரது தோளில் சாய்ந்தவனின் விழிகள் யாரையோ தேடிக் கொண்டிருந்தது.

“இங்க வந்து யாரைடா தேடிக்கிட்டு இருக்க? மோகினி பேயையா?” அவனது மனநிலையை மாற்றுவது போல பீஷ்மாவை கிண்டல் செய்ய,

“ஆமாம்மா… அவளைத் தான் காலையில இருந்து தேடிக்கிட்டு இருக்கேன். கண்ல சிக்க மாட்டேங்கிறா? மோகினி பேய்க்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசே இருக்காதாம்மா…” பீஷ்மா கேட்கவும்,

“அவங்களுக்கு மனசு இருந்து என்னடா செய்யறது? நீ என்ன லவ்வா பண்ணப் போற?” பேச்சு போகும் திசையை புரிந்துக் கொண்டவர் திகைப்பை விலக்கி, விளையாட்டாக கேட்க,

“ஆமாம்மா…” பீஷ்மா சொன்ன பதிலில் கங்கா வாயடைத்துப் போய், அதிர்ந்து விழித்துக் கொண்டு அவனைப் பார்க்க, இப்பொழுதும் பீஷ்மாவின் கண்கள் யாரையோ தேடுவது போல் இருப்பதை உணர்ந்து, சுதாரித்துக் கொண்டவராக,

“சும்மா சொல்லாதேடா…” கங்கா அவனது தோளை இடித்தார்.

“சும்மா எல்லாம் இல்லம்மா… அவ தான்.. அந்த மலர்…” பீஷ்மா வலியுடன் சொல்ல, கங்காவின் தொண்டை வரளத் தொடங்கியது.

“என்னடா சொல்ற? மலரா? மலர்… மலர்… யாரு?” கங்கா திணற,

“அம்மா.. அவ தான் கொடியோட அக்கா..” பீஷ்மா சொல்லவும், கங்காவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

“பீஷ்மா… அவர் அதிர்ந்து அழைக்க, பீஷ்மா அமைதியாகிப் போனான். தொடர்ந்து அவனது கண்கள் அவளைத் தேடிக் கொண்டிருக்க, அவனது தேடலில் இருந்த வலியை கண்டுக் கொண்டவர் போல,

“கொடின்னு நினைச்சு அவ கூட பழகிட்டயா கண்ணா.. அவ பேயா அலைஞ்சிட்டு இருக்காளா? அவ இறந்தது தெரியாம அந்த பேய் கிட்ட பேசி பழகினயா? இல்ல கொடி உன் கூட விளையாட அப்படி நடிச்சாளா? அது தான் உனக்கு அவ மேல கோபமா?” கங்கா கேட்க,

“அவளை பேய்ன்னு சொல்லாதீங்கம்மா.. அவ பேய் இல்ல.. மலர்.. எனக்கு மனைவியா வர வேண்டியவ..” அவசரமாக பீஷ்மா மறுக்க, கங்காவின் அதிர்ச்சி அதிகமாகியது.

“என்னடா சொல்ற? நிஜமாவே அவ பேயா இருக்காளா? என்ன உளறிக்கிட்டு இருக்க?” பைத்தியம் போல பீஷ்மா பேசுவதைப் பொறுக்க முடியாமல், அவனை அதட்ட, கண்ணீருடன் அவரது தோளில் மீண்டும் சாய்ந்தவன்,

“நான் சொல்றதைக் கேட்டா பைத்தியம் போல தான் இருக்கும். அதுக்காக நான் என்னம்மா பண்ணட்டும்.. என்னால முடியலைம்மா. மலர் இறந்தது கூட தெரியாம நான் அவளை என் மனசுல சுமந்துட்டு இருக்கேன். அவ இறந்தது தெரிஞ்ச இந்த ரெண்டு நாளா என் மண்டை வெடிக்கிற அளவு பாரமா இருக்கும்மா..” பீஷ்மா சொல்ல, கங்காவின் இதயம் பல மடங்கு வேகத்திற்கு துடித்தது.

அவரது செல்ல மகன் கண்ணீருடன் புலம்புவதைப் பொறுக்க முடியாமல், “கண்ணா… பீஷ்மா… ஏதாவது கனவு கினவு கண்டியா? இல்ல.. இந்த இடத்துக்கு வரக்கூடாதுன்னு ஊர் கட்டுப்பாட்டையும் மீறி உனக்கு ஏதாவது ஆகிடுச்சா? என்ன ஆச்சுன்னு சொல்லுடா.. போய் பூசாரிகிட்ட மந்திரிச்சிட்டு வரலாம்..” பதட்டமாக அவர் பேசிக் கொண்டே போக,

“எனக்கு பூசாரி எல்லாம் வேண்டாம்மா.. எனக்கு பேய் எல்லாம் பிடிக்கல.. நான் சொல்றதை முழுசா கேளுங்க… எனக்கும் என் மனசுல இருக்கறதை மனசு விட்டு சொல்லியே ஆகணும்… எனக்கும் என்ன செய்யறதுன்னே தெரியல..” சோர்ந்த குரலில் பீஷ்மா சொல்லவும், கங்கா திணறிப் போனார்.

பீஷ்மாவிற்கு அவன் கூறிய பெண்ணின் மேல் அன்பு இருக்கிறது என்று தெரியும் தான்.. ஆனால், அவன் கூறுவது பேயை அல்லவா? எப்பொழுதும் பிரித்தறிந்து, நன்கு யோசித்து செயல்படும் பீஷ்மா இப்பொழுது இப்படி இருப்பது அவருக்கு பெரும் கவலையை அளித்தது.

“சொல்லுடா… மொதல்ல நீ என்ன சொல்லணுமோ சொல்லு. நான் கேட்கறேன்..” குரலே எழும்பாமல் கேட்ட கங்காவைப் பார்த்தவன்,

“கேட்டுட்டு நீங்க தான் எனக்கு உதவி செய்யணும்..” பீடிகைப் போட, கங்கா எதுவும் பேசாமல் தலையை அசைக்க,

“நான் கொஞ்ச நாளைக்கு முன்னால தஞ்சாவூர் போயிருந்தேன் இல்ல… அப்போ ஒரு பெண்ணைப் பார்த்தேன்… அந்தப் பெண் தான் மலர்.. கொடியோட அக்கா…” தன்னைத் தேற்றிக் கொண்ட பீஷ்மா, அவருக்கு புரியும்படியாக சொல்லத் தொடங்க, கங்கா நெஞ்சம் பதைபதைக்க பீஷ்மா சொல்வதைக் கேட்கத் தொடங்கினார்.

“அவளை பார்த்த உடனே எனக்கு பிடிச்சு போச்சு. மனசுல அவ மேல சின்னதா காதல்.. அவளோட போட்டோவை பார்க்கப் பார்க்க எனக்கு அவ மேல இருந்த காதல் அதிகமானதே தவிர, குறையல.. அவளை எப்படியாவது தேடிக் கண்டு பிடிச்சுடனும்ன்னு நான் ரொம்ப நாளா ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தேன்… நேரம் கிடைச்ச போது பெரிய கோவிலுக்கு போய் அவ வருவாளான்னு காத்து இருந்துட்டு வந்திருக்கேன். அப்படி இருக்கும் போது தான் எனக்கு இந்த ஊர்ல போஸ்டிங் வரவும் நான் இங்க வந்தேன்..

வந்த இடத்துல நான் பஸ்சை விட்டு ஊருக்குள்ள நுழைஞ்ச உடனே மலர் வந்து என்னை பார்த்து பேசினா.. எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா? மறுநாள் காலையிலேயே கொடியைப் பார்த்தேன். மலர் போலவே இருக்கற கொடியோட நிலையை தான் நான் உங்களுக்கு சொல்லி இருக்கேனே…

மலரும் கொடியும் ஒண்ணு தான்னு நினைச்சு நான் பழகினேன். அவங்க பேர்லயும் விதி விளையாடிடுச்சு.. மலர்கொடின்னு அவ சொன்ன பேரை நான் வெறும் கொடின்னு புரிஞ்சிக்கிட்டேன்.. அதுவே நான் இன்னும் அதிகமா கொடி கூட பழக வச்சது…” நொந்துக் கொண்டே சொன்ன மகனைப் பார்த்தவர், அவனது தலையை கோதிக் கொடுத்தார். 

“நான் கொடிக்கு சொன்னது போல எல்லா கஷ்டத்தையும் மலர் அனுபவிச்சு இருக்காம்மா.. அவ இறந்த பின்னால இப்போ அந்த இதுல கொடி மாட்டி இருக்கா… அந்த துரை மொதல்ல கண்ணு வச்சது மலரைத் தான்.. அவளை கொன்னுட்டு இப்போ கொடியை பாடாபடுத்தறான்.” கடகடவென்று பீஷ்மா சொல்லவும்,

“அப்போ மலரும் இவளும் ஒரே போல இருப்பாங்களா?” கங்கா அதிர்ச்சியுடன் கேட்க,

“ஹ்ம்ம்…” மண்டையை மேலும் கீழும் ஆட்டியவன்,

“மலர் எப்பவுமே சிரிச்சிட்டே தான் இருப்பா.. அன்னைக்கு அவளை நான் கோவில்ல பார்த்த போது கூட, அவ முகத்துல அழுததற்கான தடையமோ, சோகமோ எதுவுமே இல்ல.. அந்த நிமிடத்தை ரசிச்சுகிட்டு இருந்தா.. என்னவோ மலரை எனக்கு பிடிச்சு இருக்கும்மா…” மீண்டும் மீண்டும் மலரைக் குறித்தே அவன் பேசவும், கங்காவிற்கு ‘ஹோ’வென்று இருந்தது.

“கொடிகிட்ட மலர்ன்னு நினைச்சு நீ காதலைச் சொன்னயா? இல்ல காதல் கல்யாணம்ன்னு ஏதாவது ஜாடை காட்டி பேசி இருக்கியா?” கங்கா மகனின் மீது பச்சாதாபம் கொண்டு கேட்க,

அதற்கு நேரிடையாக பதில் சொல்லாமல், “நான் கொடியும் மலரும் ஒண்ணு தான்னு நினைச்சு தான் பழகினேன்ம்மா.. மலரும் அடிக்கடி வந்து என்னை பார்த்து பேசிட்டு போவா.. ஆனா.. அவ கொடி போல தான் வந்து பேசுவா.. அவ தான் எனக்கு மாரியக்காவை சாப்பாடு கொண்டு தர சொல்லி, எனக்கு ஒண்ணு ஒண்ணையும் பார்த்து செய்துட்டு வந்தா..” பீஷ்மா சொல்ல, அவன் சொல்லி முடிக்கட்டும் என்பது போல கங்கா அமர்ந்திருந்தார்.

“நேத்து கொடி கிட்ட பேசிட்டு இருக்கும் போது தான் மலர் அவ அக்கான்னும்… அவ தஞ்சாவூர்ல ஒரு ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டான்னும் தெரிஞ்சது..” என்றவன், அந்த வலியை அனுபவித்துக் கொண்டே கண்களை மூடி அமர்ந்திருக்க, அவனது கன்னத்தை மெல்ல அவர் வருடிக் கொடுக்க,   

“அம்மா… எனக்கு எப்படி இருந்திருக்கும்ன்னு உங்களுக்குப் புரியுதா? அந்த விஷயத்தை சொல்லும் போது, கொடியை நான் ஆறுதலா தோள்ள நான் சாய்ச்சுக்கிட்டு இருந்தேன்.. அந்த விஷயம் கேள்விப்பட்டு… நான்.. அம்மா.. என்னால மலர் இறந்த விஷயத்தை ஜீரணிக்க முடியலம்மா..” பீஷ்மா கண்களை துடைத்துக் கொள்ள, தனது கைக்குட்டையை எடுத்து அவனது முகத்தை துடைத்தவர்,

“அழாம சொல்லு கண்ணா.. அம்மா நீ சொல்றது எல்லாத்தையும் கேட்கறேன்…” என்று சொல்லவும், அவரை நன்றிப் பார்வை பார்த்தவன்,   

“உயிருக்கு உயிரா நேசிச்ச ஒருத்தி… அவ உயிரோட இருக்காளா இல்லையான்னே தெரியாம இத்தனை மாசம் இருந்திருக்கேன்.. அதை விட அவளா இல்ல அவ கூடப் பிறந்தவளான்னு கண்டுபிடிக்கத் தெரியாம, கொடி கூடையும் பழகி இருக்கேன்.. நான்… நான்.. கொடியை..” அதற்கு மேல் சொல்ல முடியாமல், பீஷ்மா தலையைப் பிடித்துக் கொண்டு அமர, கங்கா மீண்டும் அவனைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டார்.

தனது மகனின் நிலை இப்பொழுது கங்காவிற்கு தெளிவாக புரிந்தது. மலர் என்று நினைத்து கொடியுடன் பழகி இருப்பது அவனுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்பதை அவர் நன்றாகவே புரிந்துக் கொண்டார். அதை விட, கொடியின் மனதிலும் தன்னுடய காதலினால் ஆசை விதை விதைத்து விட்டோம் என்ற குற்ற உணர்வும் அவனைத் தாக்குகிறது என்பதை அறிந்துக் கொண்டவர்,

“அந்த கொடியும் நல்லா பெண்ணா தான் இருக்கா.. பாவம் அவளக்கு எவ்வளவு கஷ்டம்? உடம்பை வருத்திக்கிற அளவுக்கு மனசுல அவ்வளவு கஷ்டம்..” கங்கா வருந்த, அவரது வருத்தம் எதையும் மாற்றி விடப் போவதில்லை என்பது போல பீஷ்மா தொடர்ந்தான்.   

“அன்னைக்கு கொடி கஷ்டப்படும் போது, நான் அவளை பத்திரமா பார்த்துக்கறேன்.. அந்த குணாவோட கொட்டத்தை அழிச்சு.. அவளை அந்த கோவில் முன்னால கல்யாணம் செய்துக்கறேன்னு..”

“செய்துக்கறேன்னு…” கங்கா அவசரமாக இடையிட, சில வினாடிகள் அமைதியாக இருந்தவன்,

“அவளை நான் கல்யாணம் செய்துக்கறேன்னு சத்தியம் செய்து கொடுத்திருக்கேன்மா.. அதுவும் உங்க கையாள தாலி எடுத்துக்கொடுத்து…” மீண்டும் சில வினாடிகள் நிறுத்தியவன்,

“அம்மா.. எல்லாமே நான் மலரும் கொடியும் ஒண்ணுன்னு நினைச்சு செய்து கொடுத்ததும்மா… நேத்து கொடி சொன்னதும் தான் மலர் வேற கொடி வேறன்னு புரிஞ்சிக்கிட்டேன்.. என்னோட மலர் உயிரோட இல்லம்மா.. அந்த குணா அவளை கொன்னுட்டான். இப்போ அவளோட தங்கையை காப்பாத்தி ஒரு பாதுகாப்பான இடத்துல அவளை சேர்க்க, அவ ஆவியா சுத்திக்கிட்டு இருக்காம்மா…” என்றவன், மலர் தன்னிடம் சொன்னவற்றை சொல்லி முடிக்க, கங்காவிற்கு இப்பொழுது தலை வலிக்கத் தொடங்கியது.

எதற்கும் கலங்காத தனது மகன், நேற்றில் இருந்து தவியாய் தவித்துக் கரைந்துக் கொண்டிருக்கும் காரணமும் புரிய, கங்கா நொந்து போனார்.

‘தனது அன்பு மகனுக்கா இந்த நிலை..’ அவரது தாயுள்ளம் கதற, பீஷ்மாவின் முடிகளில், அவரது விரல்கள் ஆதரவாக வருடத் துவங்கியது.

“அவ சொன்னதை நான் கேட்கலைன்னு உங்களை அவ இங்க வர வழைச்சு இருக்காம்மா.. பண்டிகைக்கு காப்பு கட்டிட்டா வரக் கூடாதாமே.. அதான் உங்களை குழப்பி, காப்பு கட்டறதுகுள்ள ஊருக்குள்ள வர வச்சி இருக்கா. என்னோட போட்டோவைத் தள்ளிவிட்டது வேற யாராவும் இருக்காது.. மலரா தான் இருக்கும்.. இதுலயே தெரியலையா.. அவ என் மேல எவ்வளவு அன்பு வச்சிருகான்னு.. நான் கஷ்டப்படறது அவளுக்கு பொறுக்கலைம்மா… அதான் எனக்குத் துணையா அவ இந்த வேலை செய்திருக்கா..” பீஷ்மா தனது யூகத்தைச் சொல்ல, கங்காவின் நெஞ்சம் பதறியது.

“என்னடா சொல்ற? மலர் நம்ம வீட்டுக்கு வந்தாளா?” கங்கா அதிர்ச்சியுடன் கேட்க,

“ஹ்ம்ம்… அவ ரொம்ப நாளா என்கிட்டே பேச முயற்சி பண்ணி இருக்கா.. இப்போ தான் அவளால அது முடிஞ்சிருக்கு. அதான்..” என்றவன்,

“நான் இந்த பேருக்கே களங்கம் வர வைக்கப் போறேன்ம்மா.. சொன்ன சொல் மாறாம இருக்கணும்ன்னு அப்பாவும், பெரியப்பாவும் வச்ச பெயரை நான் கெடுக்கப் போறேன்…” பீஷ்மா தன்னையே நொந்து கலங்கிக் கொண்டிருக்க,

“என்னடா சொல்ற பீஷ்மா? நீ என்ன முடிவெடுத்திருக்க?” கங்கா பதற,

“எனக்கு கொடியைப் பார்க்கும்போது எல்லாம் மலர் தானேம்மா நியாபகம் வரும்.. நான் என்னம்மா தப்பு செய்தேன்.. எனக்கு ஏன்ம்மா கடவுள் இப்படி ஒரு தண்டனை கொடுத்திருக்கார்? ஒருத்தியைப் பார்த்த உடனே காதலிச்சது தப்பாம்மா? இப்போ அவளே வந்து என் தங்கையை நீ கல்யாணம் செய்துக்கணும்ன்னு சொல்றதைக் கேட்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் இல்ல..

நான் அவளோட தங்கையை தான் கல்யாணம் செய்துக்கணும்ங்கற எண்ணத்துல அவளோட மொத்த அடையாளத்தையும் மறந்து, கொடியைப் போலவே வந்து போனதை நான் என்னம்மா சொல்வேன்?” பீஷ்மா தாயிடம் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக் கொண்டே போக, மலரின் மனம் புரிந்தவர் போல, கங்காவின் கண்கள் நிறைந்தது.

“ரொம்ப நல்ல பொண்ணு தான்.. பாவம் அவளுக்கு வாழ கொடுத்து வைக்கலையே…” மனதினில் நினைத்துக் கொண்டவரின் விழிகளும், மலர் அங்கு இருப்பாள் என்ற எண்ணம் உந்த, தேடத் துவங்கியது.

“அவ உங்க கண்ணு முன்னால வர மாட்டாம்மா… ஏன் நான் இருக்கற கொலைவெறிக்கு என் முன்னால கூட வர மாட்டா..” அவரது விழிகள் தேடுவதை உணர்ந்து பீஷ்மா சொல்ல,

“ஹ்ம்ம்.. அவளை நல்லா புரிஞ்சு வச்சிருக்கான்.. இதுக்கு இப்போ என்ன வழி…” மௌனமாகவே கங்காவின் மனம் யோசிக்கத் தொடங்கி இருந்தது.

“என்னம்மா? எதுவுமே பேச மாட்டேங்கறீங்க? என் மேல என்னம்மா தப்பு? நான் என்னம்மா செய்யட்டும்?” பீஷ்மா கலக்கத்துடன் கேட்க,

“மொதல்ல அந்த குணாவோட குற்றத்தை நிரூபிக்கணும்.. அவனுக்கு தகுந்த தண்டனை வாங்கித் தரணும்ங்கறது தானே மலரோட ஆசை.. அதை நீ மொதல்ல செய்யற வழியைப் பாரு… மீதி எல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்…” பீஷ்மாவை தேற்ற கங்கா கூறினாலும், அவருக்கு ஏற்பட்ட கலக்கத்தில், தனது கணவரிடம் பேச வேண்டும் போல இருந்தது.

“பீஷ்மா நீ வீட்டுக்குப் போ.. எனக்கு உங்க அப்பா கிட்ட பேசணும் போல இருக்கு..” கங்கா சொல்லவும், அவரது முகத்தைப் பார்த்தவன், ‘இப்பொழுது எதுவும் சொல்ல வேண்டாம் என்பது போல யாசிக்க…’ அதை கண்டுகொள்ளாமல்,

“எனக்கு பேசணும் பீஷ்மா… எனக்கு கொஞ்சம் தனிமை கொடுத்துட்டு நீ கொஞ்சம் தள்ளிப் போ.. நான் பேசணும். எனக்கு இங்க ஒண்ணும் ஆகாது…” ஏதோ நம்பிக்கையில் கங்கா சொல்ல, பீஷ்மா, எதுவும் பேசாமல் நகர்ந்து சென்றான்.       

8 COMMENTS

 1. pawam dr beeshma…. avanala malar marakavum mudila kodi a yethukavum mudiyama rmpa kasta padran papom avn amma enna solranganu nalla mudiva irukuma ilayanu….. valakam pola niraiya twist ooda iruku ud vry nice…….

 2. Hei Ramya, very nice ud pa
  Bishma pavam pa
  malar endru ninaithu kodiyidam pazhagi vittathu thavara?
  ini enna seiya poran”
  Gangamma avanga husband-yidam enna pesa porar?
  waiting for next ud pa

 3. Rams
  Ennappa ippadi , Paavam Beeshma!. Paartha udanae love pannittu, aval nu ninaichi aval sister oda pazhagittu, love Koodi marriage aagidum nu happy yaa irukkira pothu , unmai therinchi, …hmmm ippadi pannitteengalae maa!?,?, ennamaa ippadi panreengalaemaa???.

  Ganga madam nice mother…

 4. Hai ramya dalu
  Nice to read and nice update
  Ithukku thaiyya amma venumnu sollurathu
  amma na summava atulayum friendly motherkita kedaikira relaxe engayum chanceles
  Beeshu amma clever women correcta pointa pudichutanga pola
  Beeshu paiyan than pavam

LEAVE A REPLY