SHARE

அன்று முழுவதும் பீஷ்மாவின் மனதில் எந்த சிந்தனைக்கும் இடம் இல்லாமல் கொடியின் அருகிலேயே அமர்ந்திருந்தான். ஓரிருவர் உடல் நிலை சரியில்லாமல் வந்த போது அவர்களைப் பார்த்து விட்டு, கொடி கண் விழிக்க அவளது அருகிலேயே காத்திருந்தான்.

முதலில் அவள் தவறான முடிவை எடுத்திருப்பாளோ என்று தான் பீஷ்மா அஞ்சினான். அவளது நாடித் துடிப்பு சரியாக இருப்பது, அவனது மனதுக்கு பெரிதும் நிம்மதியை அளித்தது. அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, அவளது பலகீனத்தைப் போக்குவதற்கான மருந்துகளைக் கொடுத்தான்.  

அவளை விட்டு நகர்ந்து சென்றால், அவள் இங்கிருந்து எழுந்து சென்று விடுவாளோ என்ற எண்ணம் தோன்ற, தலைவலிக்கு ஒரு மாத்திரையை விழுங்கி விட்டு, கண்களை மூடி காதை அவளது அசைவுக்கு கொடுத்து வெகு நேரம் அமர்ந்திருந்தான்.

அவன் சோர்ந்து தெரிவதைப் பார்த்த துரை, “சார்… ஏதாவது வேணுமா? நான் வேண்ணா அவ பக்கத்துல இருக்கவா? நீங்க ரொம்ப டயர்ட்டா இருக்கீங்களே..” அடிக்கடி வந்து கேட்க,

“இல்ல துரை நீங்க போய் வேலையைப் பாருங்க. நான் பார்த்துக்கறேன்.. அவ நான் இங்க இல்லைன்னா எழுந்து வெளிய போயிடுவா…” என்று சொன்னவன், துரையை அங்கிருந்து அனுப்பிவிட, துரைக்கோ  அனுமதி இன்றியே அவனது மனைவியின் நினைவு வந்தது. தனது தாயிடம் அவள் இறந்த விஷயத்தை சொல்லி விடலாமா? என்ற குழப்பம் அடிக்கடி எட்டிப்பார்க்க, அதை விரட்டுவது போல, ஒரு முடிவெடுத்தவனாக துரை அமர்ந்திருந்தான். தான் செய்யப் போகும் காரியம், இந்த ஊருக்கு நன்மையை கொடுக்கும்… கொடுக்க வைக்க வேண்டும் என்ற உறுதி அவனை திடப்படுத்தி இருந்தது.

“ஊர்த் திருவிழா முடியட்டும்.. அவனுக்கு நான் கட்டறேன் பாடையை…” துரை தனக்குள் சூளுரைத்துக் கொண்டான்.

மாலை நெருங்கும் வேளையில் நன்றாக உறங்கி கண் விழித்திருந்த கங்கா, பீஷ்மா அப்பொழுதும் வராததை உணர்ந்து அவனைத் தேடி வீட்டின் வெளியே வர, அவரை வெளியில் பார்த்ததும் ஓடி வந்த சதாசிவம்,

“என்னம்மா? ஏதாவது வேணுமா?” என்று கேட்க,

“பீஷ்மா வந்த மாதிரியே இல்லையே!! வந்துட்டு போனானா என்ன? சாயந்திரம் ஆகிடுச்சு. இன்னும் காணோமே..” கவலையுடன் அவர் சொல்லவும்,

“சின்னவரு இன்னும் ஹாஸ்பிடல்ல தான் இருக்காங்கம்மா. மதியம் அங்க வந்த நர்ஸ் அம்மா கூட வீட்டுக்கு போயிட்டாங்க. நம்ம சின்னவரு அந்த பொண்ணு பக்கத்துலையே உட்கார்ந்து இருக்காங்க.. நானும் போய் பார்த்தேன்… நல்லா தூங்கிட்டு இருக்கார். வேலை நேரத்துல அவர் தூங்கி நான் இப்போ தான் முதல் முறை பார்க்கறேன்” என்ற சதாசிவம், கங்காவை கவலையுடன் பார்த்து தடுமாறினார்.

“என்கிட்டே ஏதாவது சொல்லணுமா?” கங்கா கேட்க,

“காலையில அந்த ஆளு ஒருத்தன் வந்து சத்தம் போட்டது உங்களுக்கு தெரியும் தானேம்மா.. அவன் தான் இந்த பொண்ணைக் கட்டிக்கப் போறவன் போல. அடிக்கடி இந்த பொண்ணுகிட்ட அத்து மீறி நடப்பானாம். நம்ம சின்னவரு இந்த ஊருக்கு வந்ததுல இருந்தே அந்த பொண்ணை காப்பாத்திட்டு வர்றதா ஊர்ல சொல்றாங்க. அந்த ஆளை சின்னவர் அடிச்சிருப்பார் போல… இப்போவும் பிரச்சனை ஏதோ பெருசா தான் இருக்கும்ன்னு எனக்குத் தோணுது.

அந்த பொண்ணு முகமும் சரியே இல்லம்மா. சின்னவர் முகமும் சரியில்ல.. என்னவோ பெருசா நடந்திருக்கு போலம்மா..” தனது மனதில் பட்டதை சதாசிவம் சொல்லவும், கங்கா ஆமோதிப்பாக தலையசைத்தார்.

“தலைவலியே வராத பையன் தலைவலின்னு சொல்றான்.. சாயந்திரம் வந்து என்கிட்டே எல்லாம் சொல்றதா சொல்லி இருக்கான். பார்ப்போம். நம்மால தீர்க்க முடியலைன்னா அவங்க அப்பாவை வரச் சொல்லிட வேண்டியது தான்…” பெருமூச்சுடன் சொன்ன கங்காவை நோக்கி மாரி வருவதைப் பார்த்தவர் புன்னகைத்தார்.

“வணக்கம்மா.. உங்களுக்கு சாயந்திரம் டீ குடிக்கிற பழக்கம் இருக்கான்னு தெரியல… டாக்டர் சார்க்கு சாயந்திரம் டீ வேணும். அதனால தான் டீத் தூள் பாக்கெட்டும், பாலும் எடுத்துட்டு வந்தேன்…” தயக்கத்துடன் சொன்னவரைப் பார்த்த கங்கா,

“உள்ள வாங்க மாரி… நானே காபிக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். நல்லவேளை நீங்களே வந்துட்டீங்க… ரொம்ப தேங்க்ஸ்..” என்று அவரை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றவர்,

“உங்களுக்கும் சேர்த்து டீ போடறேன்… கொஞ்சம் பேசிக்கிட்டு இருக்கலாம்… உங்க ஊர் ரொம்ப அருமையா இருக்குங்க…” என்று சொல்லிவிட்டு டீயை போடத் துவங்க, சதாசிவம் திண்ணையில் அமர்ந்தார்.

“மாரி… நீங்க மறுபடியும் அந்த பொண்ணை போய் பார்த்தீங்களா? எப்படி இருக்கா? நான் மதியம் ரெஸ்ட் எடுக்க இங்க வந்துட்டேன்..” கங்கா அக்கறையாக கேட்க,

“இல்லைங்கம்மா.. நானும் உங்க கூட வந்துட்டேனே.. அதோட போய் பார்க்கவே இல்ல. அதான் டாக்டர் சார் பக்கத்துலையே இருக்காரே. அவரு பார்த்துப்பாரு.. இன்னும் கண்ணு முழிக்கலன்னு நினைக்கிறேன்.. இல்லன்னா என்னை கூப்பிட்டு அனுப்பி இருப்பாரே…” மாரி சொல்லவும், கங்கா அவரை ஒரு மாதிரிப் பார்த்தார்.   

“ஹ்ம்ம்… பீஷ்மாவும் இன்னும் வீட்டுக்கு வரல… அங்கேயே இருக்கானாம்…” என்றவர், ஏதோ யோசனையுடன்,

“நீங்க இந்த ஊர்ல என்ன செய்துட்டு இருக்கீங்க மாரி..” கங்காவின் கேள்விக்கு,

“நான் தோட்டத்து பூவை எல்லாம் பறிச்சு தஞ்சாவூர் கடைவீதியில கொடுத்துட்டு வருவேன். மதியமா வந்து இங்க வயல் வேலை செய்வேன்மா.. இப்போ எல்லாம் என்னோட வீட்டுக்காரர் தான் பூ கொண்டு போய் போட்டுட்டு வராக…” மாரி சொல்லவும்,

“இங்க இருந்து தினமும் போறது ரொம்ப கஷ்டம் தான் இல்ல..” கங்கா அவரது கஷ்டத்தை உணர்ந்து சொல்ல,

“கஷ்டம் எல்லாம் இல்லம்மா.. அந்த மலர் பொண்ணு இறந்ததுல இருந்தே எனக்கு பூ எடுத்துட்டு போகப் பிடிக்கலை… அந்தப் பக்கம் போகும் போது எல்லாம் எனக்கு அது இறந்தது தான் நியாபகம் வருது. மலர் யாருன்னு தெரியும் தானேங்க.. நம்ம கொடியோட கூடப் பிறந்தவ… ரெட்டைப் பிள்ளைங்க…” மாரி தன் பாட்டிருக்கு சொல்லிக் கொண்டே போக, கங்கா குழப்பமாகப் பார்த்தார்.

“கொடியோட அக்கா இறந்துட்டாளா!? பாவம்.. சின்ன வயசுல இந்த கதி அந்த பொண்ணுக்கு வந்திருக்க வேண்டாம். அதான் எல்லாத்தையும் போட்டு மனசுல குழப்பிக்கிட்டு இருக்கா போல… அது சரி… உங்க டாக்டர் சார் எப்படி? ஊர்ல ஒழுங்கா வைத்தியம் பார்க்கறாரா…. இல்ல கேமராவும் கையுமா அலையறாங்களா?” கங்கா பீஷ்மாவைப் பற்றி விசாரிக்க,

“அவரு எங்க ஊர் காவல் தெய்வம் போல ஆகிட்டாருங்க.. ரொம்ப நல்லவரு. அவங்களைப் பெத்த புண்ணியவதியை நாங்க பார்க்க கொடுத்து வச்சிருக்கணும். ஆனா.. பாவம் அவர்.. எல்லாருக்கும் நல்லதே செய்யறவருக்கு ஒரு நல்லது நடக்க பாடுபட வேண்டி இருக்கு…” மாரி சொல்லிக் கொண்டே போக, கங்காவின் பார்வை கூர்மையாகி,

“என்ன ஆச்சு அவனுக்கு?” என்ற கேள்வியை எழுப்ப,

“அவரு பாவம் மனசு ஒடிஞ்சு போயிருக்கார். நல்லவேளை நீங்க வந்தீங்க?” என்று சொல்லிக் கொண்டே போனவர், எங்கோ பார்த்துக் கொண்டு அமைதியானார்.

“மனசு ஒடியற அளவுக்கு என்ன ஆச்சுங்க?” கங்கா பதைபதைக்க,

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கும்மா… நான் அப்பறம் வரேன்… வயிறு ஒரு மாதிரியா இருக்கு… எனக்கு டீ வேண்டாம்…” என்றவர், கங்கா கூப்பிடக் கூப்பிட அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

“அடராமா.. என்னடா நடக்குது இங்க? இந்த அம்மா வந்தாங்க.. என்னை நல்லா குழப்பி விட்டுட்டு போயிட்டாங்களே. நான் என்ன செய்யறது? பீஷ்மா உண்மையை சொல்லுவானா? இந்த அம்மா ஏதோ சொல்ல வந்தாங்க… இப்படி பாதியில கிளம்பிப் போய் என் மண்டையை உடைக்கிறாங்களே.. கடவுளே என் மகனுக்கு எதுவுமே இருக்கக் கூடாது… அவனை நல்லபடியா பார்த்துக்கோ” கங்காவின் மனம் பதைபதைப்புடன் வேண்டிக் கொண்டது.

மெல்ல டீயை தான் கொண்டு வந்திருந்த ப்ளாஸ்க்கில் ஊற்றிக் கொண்டு ஹாஸ்பிடலை நோக்கி கங்கா செல்ல, தனது சேரிலேயே அமர்ந்து பீஷ்மா உறங்குவதைப் பார்த்தவருக்கு மனம் வலித்தது. அவனது தலையை மெல்ல கோதிக் கொடுத்தவர், அவனது முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றார்.

“வந்து ஒரு மாசத்துக்குள்ள இப்படி ஆகிட்டயே பீஷ்மா.. இதுக்குத் தான் சண்டைப் போட்டுக்கிட்டு அங்க இருந்து இந்த கிராமத்துக்கு கிளம்பி வந்தியா?” கங்கா அவனிடம் மனதினில் கேட்டுக் கொண்டே, கொடியை நோக்கி பார்வையைத் திருப்பினார்.

கண்களில் கண்ணீருடன் உறங்கும் பீஷ்மாவைப் பார்த்துக் கொண்டிருக்க, அந்த கண்களில் எல்லையில்லாத சோகம் குடி கொண்டிருப்பதை உணர்ந்தார்.

அவளைப் பார்த்தவர், “கொடி… எப்படிம்மா இருக்க?” என்று கேட்க, அப்பொழுது தான் அவர் வந்ததை கவனித்தவள், மண்டையை உருட்டி,

“நான் வீட்டுக்கு போகணும்.. இதை எல்லாம் எடுத்து விடுங்க… மாரியக்கா எங்க? அவங்க இருந்தா கொஞ்சம் வரச் சொல்லுங்களேன் ப்ளீஸ்…” அவரிடம் பரிதாபமாக பேசிக்கொண்டே போகவும், அவளது அருகே அமர்ந்த கங்கா,

“நான் டாக்டர் சாரோட அம்மா தான்மா. நான் டாக்டர் இல்ல.. டீச்சர்.. என்கிட்டே போய் இதையெல்லாம் எடுக்கச் சொன்னா நான் எங்க போவேன்? அதுவும் தவிர டாக்டரோட பேஷன்ட்டை நான் தொட்டேன்னா அவருக்கு ரொம்ப கோபம் வரும்..” என்றவர்,

“ரொம்ப களைப்பா இருக்க… கொஞ்சம் டீ குடிக்கறியா? இதோ பீஷ்மாவுக்கு கொண்டு வந்த டீ இருக்கு…” யதார்த்தமாக கங்கா கேட்கவும்,

“அவருக்கு கொண்டு வந்த டீயை எனக்கு கொடுத்தா அவருக்கு கோபம் வந்துடும். அப்பறம் சத்தம் போடுவார். எனக்கு வேண்டாம்.. அவருக்கே கொடுங்க. எனக்கு மாரியக்கா எடுத்துட்டு வருவாங்க…” கொடியின் பதிலைக் கேட்ட கங்காவிற்கு குழப்பமே மேலோங்கியது.

“இவன் என்னடான்னா மதியம் சாப்பிடறதை மறந்து இங்க உட்கார்ந்துக்கிட்டு இருக்கான்.. இப்போ கூட எவ்வளவு அசதி இருந்திருந்தா உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி இருப்பான். அவன் அப்படி இருக்கும் போது, இந்த பொண்ணு என்னடான்னா டீ கொடுத்தா கோபம் வரும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கா?” கங்கா யோசனையுடன் அவளைப் பார்க்க,

“என்னை அவருக்கு பிடிக்காது. எங்க அக்காவ தான் அவருக்கு பிடிக்கும். அதான் சொன்னேன்.. வேண்டாங்கம்மா.. அவர் கோவிச்சுக்கப் போறார்” சோர்ந்த குரலில் அவள் சொல்ல, கங்காவிற்கு தலை சுற்றியது.

‘பீஷ்மா அன்று பேசும்போது இரட்டைப் பிறவிகளைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே. இன்று மாரி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாரே… இவளும் ஏதோ சொல்கிறாளே.. என்ன தான் நடந்துக் கொண்டிருக்கிறது? இவள் என்ன சொல்கிறாள்?’ கங்கா திகைப்பாய் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பீஷ்மா மெல்ல கண் விழித்தான்.

கண்களைத் திறந்தவன் அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டு கொடியைப் பார்க்க, அவள் கண் விழித்து பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு நிம்மதியைக் கொடுத்தது.

“உனக்கு உடம்பு இப்போ எப்படி இருக்கு? கொஞ்சமாவது பரவால்லையா?” பீஷ்மா கேட்டுக் கொண்டே அவளை பரிசோதிக்க,

“எனக்கு எதுவுமே இல்ல.. எனக்கு வீட்டுக்குப் போகணும்.. இதை எல்லாம் எடுத்து விடுங்க..” கொடி சொல்லவும், அதை கண்டுகொள்ளாமல், அவளுக்கு அருகே இருந்த கங்காவைப் பார்த்து,

“நீங்க எப்போம்மா வந்தீங்க? கொடிக்கு குடிக்க ஏதாவது கொண்டு வந்தீங்களா? டீயா? டீ இப்போ வேண்டாம்மா… ஏதாவது ஜூஸ் போல இருந்தா நல்லா இருக்கும். சுத்தமா அவளுக்கு சக்தியே இல்ல.. இப்படியே போனா உடம்பு என்னத்துக்கு ஆகறது?” பீஷ்மா பேசிக் கொண்டே போக, அவனது கூற்றைக் கேட்ட கங்கா கொடியை கேள்வியாகப் பார்க்க, அவளோ திகைப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன ரெண்டு பேரும் லுக் விட்டுகிட்டு இருக்கீங்க? அம்மா… அந்த டீயை இப்படி வைங்க.. நான் குடிக்கறேன். நீங்க அவளுக்கு ஜூஸ் எடுத்துட்டு வாங்க. எப்படியும் ஆப்பிள் இல்லாம வந்திருக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். அதையே ஜூஸ் போட்டு கொண்டு வாங்க… சீக்கிரம் சீக்கிரம்” அவன் விரட்ட,

“என்னை வேணா இந்த ஹாஸ்பிடல்ல நர்சா சேர்த்துக்கறிங்களா சார்.. வந்த நர்ஸ் கூட ட்யுட்டி முடிஞ்சு போயிட்டாங்க போல.. ஒரே நர்ஸ்சை வச்சிட்டு என்னடா செய்யறது?” கங்கா கேலி பேசவும்,

“ஹ்ம்ம்.. அதுக்கு எல்லாம் நிறைய இண்டர்வ்யூ நடத்துவேன். அதுக்கு முன்னால போய் ஜூசை மட்டும் எடுத்துட்டு வாங்க. நீங்க போடற ஜூசை குடிச்சு இவளுக்கு எதுவும் ஆகலைன்னா உங்களை நான் சேர்த்துக்கறேன்.. சீக்கிரம்…” அவனும் பதிலுக்கு கேலி பேச, இருவரையும் பார்த்த கொடியின் கண்கள் மீண்டும் நிரம்பியது.

கண்களின் ஓரம் கண்ணீர் வழிய, கண்களால் அவளைக் காட்டிய கங்கா, “எல்லாம் என் நேரம்டா… உனக்கு கையைப் பிடிச்சு இப்படித் தான் ஊசி போடணும்ன்னு சொல்லித் தந்த என்னையே கலாய்க்கிற இல்ல… வந்து கவனிச்சுக்கிறேன். இப்போ ஏதோ சுமாரா டீ போட்டு எடுத்துட்டு வந்திருக்கேன். அதை குடிச்சிட்டு அந்த பொண்ணை கவனி. பாவம் உன்னைப் பார்த்து பயந்து போயிருக்கா. என்னை காப்பாத்துங்கன்னு என்னைப் பார்த்து கதறினா…” என்ற கேலியுடன் அங்கிருந்து நகர, அவரைப் பார்த்து புன்னகைத்தவன், கொடியின் மீது பார்வையை திருப்பினான்.

“என்னைப் பார்த்து பயப்பட நான் என்ன சிங்கமா?” அவளிடம் கேட்டவன்,

“நீ இப்போதைக்கு எதுவுமே பதில் சொல்ல வேண்டாம்… பேசாம படு..” என்றவன், அவளை முறைக்க முயன்றான்.

“அவ என்னவோ இவனுக்கு எடுத்துட்டு வந்த டீயை குடிச்சாலே இவன் திட்டுவான்னு சொல்லிட்டு இருக்கா… இவன் என்னடான்னா ஜூஸ் கொண்டு வான்னு என்னை விரட்டறான்.. என்னடா நடக்குது இங்க? இங்க வந்து பீஷ்மா ஏன் இப்படி ஆகிட்டான்?” கங்கா குழம்பிக் கொண்டே பீஷ்மா சொன்னதை செய்யச் சென்றார்.

அவன் பார்த்ததும் வேகமாக பார்வையை திருப்பிக் கொண்டவள், கண்களை மூடிக் கொள்ள, “இப்போ திரும்ப தலை சுத்தற மாதிரி ஏதாவது இருக்கா?” அவள் கண்களை மூடிக் கொள்ளவும், அவளிடம் கேட்டுக் கொண்டே அவளது கண்களை ஆராய,

“இல்ல… அதெல்லாம் எதுவும் இல்ல.. நான் எப்போ வீட்டுக்கு போகலாம்?” கொடி கேட்கவும்,

“எங்க அம்மாவ ஜூஸ் எடுத்துட்டு வர சொல்லி இருக்கேன்… ஜூஸ் குடிச்சிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு கிளம்பு. நான் மாரியக்காவ வரச் சொல்றேன்.. இல்ல துரையை உன் வீட்ல வந்து விடச் சொல்றேன்…” என்ற பீஷ்மா, சிறிது யோசனையுடன்,

“வேண்டாம்… நானே வந்து விடறேன்… அப்போ தான் சரியா இருக்கும்..” என்று கூறிவிட்டு, அவளது கையில் இருந்த ட்ரிப்சை அகற்றி விட்டு,

“கொஞ்சம் எழுந்து உட்காரு..” என்று சொல்ல, கையை ஊன்றி எழ முயன்றவள், ட்ரிப்ஸ் குத்தி இருந்த இடம் வலிக்கவும், ‘ஸ்ஸ்’ என்று முகம் சுளிக்க,

“வலிக்குதா? இரு நான் ஹெல்ப் பண்றேன்…” என்று கூறி, அவளது தோள்களைப் பற்றித் தூக்க, அவனது அருகாமை கொடியை இம்சித்தது.

அவனது மார்பில் புதைந்து, ‘என்னை பிடிக்கலையா? மலரின் சாவிற்கு ஏதோ ஒரு வகையில் காரணமான எனக்கு தரும் தண்டனையா?’ என்று கேட்டு கதற வேண்டும் போல இருக்க, அதை அடக்கிக் கொண்டு, அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டே எழுந்து அமர்ந்தவளிடம்,

“கண்டதையும் போட்டு மனசுல குழப்பிக்காதே. உனக்கு துணையா நான் இருக்கேன்.. என்னைக்கும் இருப்பேன்.. ஆனா.. இப்போ ஒரு ரெண்டு நிமிஷம் டைம் கொடு. நான் போய் முகத்தை கழுவிட்டு டீ குடிக்கறேன்.. மதியம் சரியா சாப்பிடல.. இப்போ பசிக்குது” கேலியாக பேசிக் கொண்டே பீஷ்மா நகர்ந்து செல்ல, கொடிக்கு தான் ‘ஓ’ என்று இருந்தது.

“இந்த நல்ல மனிதனுடன் வாழ மலருக்கு கொடுத்து வைக்க வில்லையே.. மலருக்கு எப்பவுமே இப்படி கேலியும் கிண்டலுமா இருந்தா ரொம்ப பிடிக்கும். ஏன் ஆண்டவா அவளுக்கு இப்படி ஒரு சோதனை. என்னோட ஆயுளையும் அவளுக்கு கொடுத்திருக்கலாம் இல்ல. என்னைப் போல சுயநல பிறவி எல்லாம் இந்த உலகத்துல வாழவே கூடாது..” தனது தமக்கைக்காக அவள் இறைவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்க, முகத்தை கழுவிக் கொண்டு வந்த பீஷ்மா, கங்கா கொண்டு வந்திருந்த டீயை எடுத்து பருகினான்.

அதே நேரம் கங்காவும் ஒரு ஜாடியில் அவளுக்கான பழச்சாறுடன் வர, “அவகிட்ட கொடுங்கம்மா… அதை குடிச்சிட்டு கொஞ்ச நேரம் அவ இங்க இருக்கட்டும். நாம அவளை வீட்ல விட்டுட்டு கொஞ்சம் வெளிய சுத்திட்டு வரலாம். எனக்கு உங்க கூட கொஞ்சம் பேசணும்.” முடிவாக பீஷ்மா சொல்லவும், தனது குழப்பம் தீரப் போவதை எண்ணி மகிழ்ந்த கங்கா,

“சரிடா” மேலும் தனது குழப்பங்கள் அதிகரிக்கப் போவதை அறியாமலே கங்கா ஒப்புக்கொண்டார்.                   

“எங்க அம்மா போட்ட ஜூஸ்.. நல்லா இருக்கும்.. குடி. ஒரு அரை மணி நேரம் கழிச்சு உங்க வீட்டுக்கு கிளம்பலாம்… அப்போ தான் நடக்க தெம்பிருக்கும்.. உங்க சந்துக்குள்ள கார் போகாதே… இல்லன்னா அதுலயே உன்னை கொண்டு விட்டுடுவேன்” சொன்ன பீஷ்மா, மாரியிடம் கூறி துரை வாங்கிக் கொண்டு வந்து வைத்திருந்த ஒரு பையை எடுத்து கங்காவிடம் கொடுத்து,

“அம்மா… அவளை இந்த சாரீயக் கட்டிக்கச் சொல்லுங்க. இத்தனை நேரம் அவ இந்த பட்டுப்புடவையில இருந்ததே அதிகம்…” என்று சொல்லிவிட்டு நாகரீகமாக அவன் நகர்ந்து செல்ல, கங்கா அவனைப் பார்த்து தலையசைத்துவிட்டு, பீஷ்மா அந்தப் பக்கம் நகர்ந்ததும்,

“நிஜமாவே என்னை நர்ஸ்சா நினைச்சிட்டானோ? உங்க டாக்டர் சார் எனக்கு வேலை கொடுப்பாரா? கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும். ஏதோ என்னோட வயித்துப் பாட்டுக்கு நான் சம்பாதிப்பேன்…” கேலி பேசினாலும், அவர் கொண்டு வந்த ஆப்பிள் ஜூசை எடுத்து அவளுக்கு கொடுக்க, தயக்கத்துடன் கொடி அதனை வாங்கிக் கொண்டாள்.

எங்காவது தான் வாங்க மாட்டேன் என்று சொல்லி, தன்னிடம் அன்பு காட்டும் இவரும் கோபப்பட்டு விடுவாரோ என்று பயந்தே கொடி அதனை வாங்கிக் கொண்டாள்.

அவள் குடித்து முடித்ததும், பீஷ்மா சொன்ன கவரில் இருந்து மெல்லிய பருத்தியிலான புடவையை அவர் எடுத்துக் கொடுக்க, தனது உடையை மாற்றிக் கொண்டவள், கவனமாக அந்த புடவைகளையும், நகைகளையும் எடுத்து வைத்து விட்டு,

“வீட்டுக்கு போகலாமான்னு கேளுங்கம்மா. அங்க எங்க அப்பா வேற பிரச்சனை பண்ணுவார். அதனால இருட்டறதுகுள்ள போகணும்…” கொடி சொல்லவும், அதுவும் நியாமாகப் பட,

“இரும்மா… நானும் அவனுமே வந்து விட்டுட்டு போறோம். நீ இங்க கொஞ்சம் ரெஸ்ட்டா உட்காரு. அவன் ஏதாவது மருந்து தரானான்னு கேட்டுட்டு உன்னை கூட்டுட்டு போறேன்..” இதமாக சொன்ன கங்கா பீஷ்மாவைத் தேடித் போனார்.

தனது இருக்கையில் அமர்ந்திருந்தவனின் பார்வை தனது செல்போனில் இருந்த மலரின் முகத்திலேயே நிலைத்திருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் இரண்டொரு சொட்டு கண்ணீர்த் துளிகள்… அதைப் பார்த்த கங்காவின் மனது பதறியது.

“இவளோட போட்டோவை வச்சிட்டு பீஷ்மா இவ்வளவு வருத்தப்படறான்னா.. அந்த குணா பீஷ்மாவை மிரட்டினானா? அப்படி இருந்தா பீஷ்மா இப்படி இருக்க மாட்டானே. அவன் தைரியமா இல்ல நின்னு இருப்பான்? அவகிட்ட எதுவுமே பேசாம இங்க வந்து இடிஞ்சு போனா மாதிரி உட்கார்ந்து இருக்கான்!! ஒருவேளை கொடிக்கு ஏதாவது பெரிய வியாதியோ?” ஒரு நிமிடத்தில் பலவாறு எண்ணங்கள் சுழன்றுக் கொண்டு வர, அதை அனைத்தையும் புறம் தள்ளிவிட்ட கங்கா,

அப்பொழுது தான் வந்தவர் போல, “பீஷ்மா…” என்று அழைக்க,

“அம்மா…” பதட்டத்துடன் தனது செல்போனை கீழே வைத்தவன்,

“என்னாச்சும்மா?” அவரது கண்களைப் பார்க்காமல் கேட்க, அவனது மனதின் வலியை புரிந்தவர் போல,

“இல்லடா… கொடி ஜூஸ் குடிச்சிட்டா.. நீ சொன்னது போல டிரஸ் மாத்திட்டா.. இப்போ இருட்டறதுகுள்ள அவளை கொண்டு போய் விடணும். இல்ல நல்லா இருக்காது..” கங்கா சொல்லவும்,

“ஆமா இல்ல…” என்றவன், கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டு,

“இருங்கம்மா…” என்றவன், ‘துரை’ என்று குரல் கொடுத்தான்.

துரை வந்து நிற்கவும், “துரை… நானும் அம்மாவும் கொடியை அவங்க வீட்ல விட்டுட்டு வரோம்…” பீஷ்மா தொடங்கும் போதே,

“சார்… காலையில இங்க நடந்ததை மறந்துட்டீங்களா? அவளை வீட்ல விட்டா என்ன ஆகும் தெரியுமா?” துரை கேட்க,

“அதுக்காக நம்ம வீட்லயே அவளை வச்சிக்க முடியாது தானே.. அவளை அவங்க வீட்ல தான் விடணும். அங்க அவளே தான் எதிர் நீச்சல் போட்டு அவங்களை சமாளிக்கணும். வேற வழி இல்ல. அவளுக்கு துணையா நான் இருப்பேன். அதுக்காக எல்லா நேரமும் நான் காவல் இருக்க முடியாது இல்லையா? அவ தான் அதுக்கு தகுந்த வழியைப் பார்த்துக்கணும்..” துரைக்கு விளக்கம் சொன்னவன்,

“போய் கூட்டிட்டு வாங்க” என்று முடிக்க, துரை கொடியை நோக்கி நகர, அதற்கு அவசியமின்றி, அவர்கள் பின்னாலேயே கொடி நின்றுக் கொண்டிருந்தாள்.

“வா.. உன்னை டாக்டர் சார் வீட்ல கொண்டு விடறாராம்… கண்ணைத் துடைச்சிக்கிட்டு கிளம்பு.. கடவுள் மேல பாரத்தைப் போடு.. எல்லாம் சரியா போகும்” அவளைத் தேற்றிய துரை,  

“அவ வீட்டுக்குப் போக துடிச்சிட்டு இருக்கா டாக்டர் சார்… கொண்டு போய் பத்திரமா விட்டுட்டு வாங்க. நான் இன்னும் கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிடல மூடிட்டு வீட்டுக்கு வரேன்…” என்றவன், தனது வேலையை கவனிக்கச் சென்றான்.

“இந்த மருந்தை எல்லாம் ஒழுங்கா சாப்பிடு. தினமும் வேளாவேளைக்கு தவறாம சாப்பிடணும்… அப்பறம் தினமும் ராத்திரி இந்த மருந்தை குடி. நீ ரொம்ப பலகீனமா இருக்க…” என்று ஒரு டானிக்கை அவளிடம் கொடுத்த பீஷ்மா,

“இதை நீ குடிச்சே ஆகணும்… இல்ல…” ஒரு மாதிரி அவளைப் பார்த்து விட்டு அந்த வாக்கியத்தை முடிக்காமலேயே,

“வா… கிளம்பலாம்…” என்றபடி அவன் வாயிலுக்கு நடக்க,  

“வாம்மா…” கங்கா அழைக்கவும், பதுமை போல கொடி அவரைப் பின்தொடர்ந்து சென்றாள்.

பீஷ்மாவும் கங்காவும் கொடியுடன் அவளது வீட்டை நெருங்கிய வேளையில், வீட்டு வாயிலில் அவளுக்காக அவளது தந்தை காத்திருப்பதைப் பார்த்தவள், அதுவும் குடிக்காமல் காத்திருப்பதைப் பார்த்தவளுக்கு, அங்கு ஏதோ பிரச்சனை வெடிக்கப் போவது உறுதியாகப் பட்டது. பீஷ்மா சொன்னது போல தன்னை தான் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.. என்று எண்ணியவள், மனதை அதற்கு தயார் செய்து கொண்டு வீட்டின் அருகே சென்றாள்.

“ஒழுங்கா சாப்பிடும்மா. சாப்பிட்டா தான் பிரச்சனைகளை எதிர்கொள்ற சக்தி உனக்கு கிடைக்கும். பசியும் மயக்கமும் இருந்தா, எதுவுமே நம்ம மனசுல தோணாது..” கங்கா அறிவுரை சொல்ல,

“ரொம்ப நன்றிங்கம்மா…” என்ற கொடியிடம் வேகமாக வந்த அவளது தந்தை வேலு,

“எங்கடி போய் ஊரைச் சுத்திட்டு வர? ஊர் சுத்திக் கழுதைக்கு எல்லாம் என் வீட்ல இடம் இல்ல… போடி வெளிய…” என்று சத்தமிட,

“நான் ஹாஸ்பிடல்ல இருந்து தான் வந்துட்டு இருக்கேன். அனாவசியமா பேசாதீங்க…” கொடி அவரை கண்டிக்க,

“என்னடி வாய் ரொம்ப நீளுது? அப்படியே அறைஞ்சேன்னு வை.. இந்த வீட்டு பொம்பளைங்க போன இடத்துக்கே போயிடுவ…” வேலு உறும,

“இது எங்க அம்மா அவங்க உழைப்புல கட்டின வீடு. இதுக்குள்ள வர உனக்கே உரிமை இல்ல.. நீ என்னை உள்ள போகக் கூடாதுன்னு சொல்றியா? இங்கப் பாரு.. இதுக்கும் மேல ஏதாவது பேசின… குடிச்சிட்டு விழுந்து கிடக்குற அப்போ தலையில கல்லைப் போட்டு, அம்மாவுக்கு துணையா உன்னை அனுப்பி வச்சிடுவேன். ஜெயிலுக்கு போறதைப் பத்தி எனக்கு கவலை இல்ல.. உனக்கு தான் நாள் பொழுதும் ஊத்திக்க சாராயம் கிடைக்காது. என்ன சம்மதமா?” பீஷ்மா பேசியது, முன்தினம் இருந்து நடந்தது என்று அனைத்தும் சேர்ந்து கொடி பொங்கி ஏழ, வேலு திகைத்துப் போனார்.

“போ…. போய் அந்த ஆளு கொடுக்கற எச்சி சாராயத்தை குடிச்சிட்டு வந்து படு.. இனிமே உனக்கு சோறு வேணும்ன்னா நீ சம்பாதிச்சு பைசா கொண்டு வந்தா தான்…” சொல்லிவிட்டு,

“நான் பார்த்துக்கறேன் டாக்டர் சார்… நீங்க போயிட்டு வாங்க.. எனக்காக காலையில இருந்து சாப்பிடாம பார்த்துக்கிட்டு இருந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். நீங்க சொன்னீங்களே ரொம்ப சரி டாக்டர் சார்.. என்னை நானே தான் பார்த்துக்கணும்.. அவங்க பார்த்துப்பாங்க இவங்க பார்த்துப்பாங்கன்னு நான் என் தலை மேல விழற கல்லை பார்த்துட்டு நிக்க முடியுமா? நான் தானே அதைப் பார்த்து விலகி நிக்கணும்.. இனிமே அப்படியே நடந்துக்கறேன் டாக்டர் சார்..” என்ற கொடி, அதற்கு மேல் நிற்க முடியாமல் வேகமாக வீட்டிற்குள் செல்ல, திகைப்பில் இருந்து விலகிய வேலு, பீஷ்மா அவரைப் பார்த்துக் கொண்டு நிற்கவும்,

“வணக்கம் டாக்டர் சார்… பாருங்க… நான் குடிக்கவே இல்ல..” என்று சொல்லிவிட்டு பதவிசாக திண்ணையில் அமர்ந்துக் கொள்ள, அவரை முறைத்துவிட்டு,

“உன்னால அவளுக்கு ஏதாவது வந்துச்சு… அப்பறம் சும்மா இருக்க மாட்டேன்.. ஏற்கனவே உனக்கு அந்த ஆஸ்பத்திரியில இடம் போட்டு வச்சிருக்கேன் ஜாக்கிரதை..” என்று மிரட்டிவிட்டு,

“வாங்கம்மா போகலாம்…” என்ற பீஷ்மா, கங்காவை ஆற்றங்கரையோரம் அழைத்துச் சென்றான்.

12 COMMENTS

 1. hai dalu
  nice update dalu keep going
  hahahahaha mudiyala pavam gangamma va nurse vela pakka vechathumillama mari,beeshu,kodinnu next to next mathi mathi confuse panni durrrrrrr ayyitanga konjam kastam than irukura moolaya vechi think panni melt ayyida poguthu
  ippo thana theriyithu beeshu voda nayyandi nakkalu ellam enga irunthu vanthathunnu
  hmmm paravalla kodi theeri terror ayyita pola inime thana gunavuku trowser daaaru aga poguthu

 2. hey dr sry pa konjam odampu sarila athan varala…… bt super aana update potrukinga ethana thitupam enna aagumnu aarvamu sernthu namake naalu bottle juice venum pola 😂 aanalum malar a ipdi sagadichu enna feel pana vechuta dr papom beeshma ennatha mudivu panranu……. 😊

 3. Hei Ramya, superb aga poguthu
  viruviruppagavum irukku pa
  Bishma kodi-yai yetru kolvana?
  avanal malar-yai marakka mudiyuma?

 4. hai ramya this is sakthi …….ungaluku mail panni romantic ah stroy write panna sonenae………..neyapagam vanthuducha….hm ok ok enna thitathinga…
  recently i read ur 3rd story friend “chinna poovae mella pesu” awe some story pa……summa nachunu irunthathu . ipdi oru love ah chance ae illa friend…i love u somuch pa………mugilan, sunantha what a character … oru ponnuku entha vayasulaium thanoda thunaiya thedikalam…valkai nrathu valrathuku than.. palasa nenachu waste panna illa nratha proove pannitenga friend…really kalakitinga.valthugal friend……..semma story pa.

  • thanks janani … thank u so much ma… 🙂 🙂 ahah nala niyabagam iruku … ungal karuthu mindla odite iruku 🙂 🙂

 5. hi miya.very nice update.kathai superra iruku.ella charactarum arumaiya manasula nachunnu pathiuthu.waiting for next update.

LEAVE A REPLY