SHARE

கோவிலை நோக்கி நடந்த பீஷ்மாவைப் பார்த்துக் கொண்டே உடன் நடந்த கங்கா, “பீஷ்மா ஊர் நல்லா இருக்கு இல்ல?” என்று கேட்கவும்,

“ஆமாம்மா…” என்றவன், அதற்கு மேல் பேசாமல் நடந்தாலும், அவனது தேடல் கங்காவின் கண்களில் தவறாமல் பட்டது.

“ஒருவேளை அந்தப் பெண் வராளான்னு தேடிக்கிட்டு வரானோ? அந்த பெண்ணால ஏதாவது பிரச்சனை வந்திருக்குமோ? அதை சொல்ல முடியாம தான் தடுமாறிக்கிட்டு இருக்கானோ?” கங்காவின் எண்ணம் பலவாறு பீஷ்மாவின் மாற்றத்திற்கான காரணத்தை யூகிக்கத் தொடங்கி இருந்தது.

“சதா தாத்தா… உங்களால நடக்க முடியுது இல்ல?” அக்கறையாக பீஷ்மா வினவ,

“என்னால நடக்க முடியாதா? நான் வருஷா வருஷம் பழனிக்கே நடந்து போறவனாக்கும்…” சதாசிவம் பெருமை பேச, சாதாரணமாக இருக்கும் பீஷ்மாவாக இருந்தால், அவரை இந்த நேரத்திற்கு கிண்டல் செய்திருப்பான்.. மன உளைச்சலில் இருக்கும் பீஷ்மாவோ அதைக் கேட்டு அமைதியாக பெயருக்கு புன்னகைத்து விட்டு அவர்களுடன் நடந்தான்.

மீண்டும் சதாசிவத்தின் பார்வை கங்காவை நோக்கிச் செல்ல, கங்காவோ பெருமூச்சொன்றை வெளியிட்டு பீஷ்மாவைப் பார்த்தார். சிறிது தூரத்தில் கோவில் இருப்பதை பறைச்சாற்றுவது போல, ஆங்காங்கே பட்டு புடவை கட்டிய பெண்களும்,  சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருக்க,

“அதோ அங்க தான்ம்மா கோவில்..” என்று பீஷ்மா சுட்டிக் காட்டவும், அதைப் பார்த்த கங்காவின் கண்கள் விரிந்தது.

“நிஜமாவே இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு பீஷ்மா..” கங்கா சொன்னதற்கு எந்த பதிலையும் சொல்லாமல் அவன் எங்கோ பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து, அவனது பார்வை சென்ற இடத்தைப் பார்த்தவர், யோசனையுடன் புருவத்தை சுருக்கினார்.

“ஓ… இது தான் பீஷ்மா அன்னைக்கு சொன்ன பெண்ணோ?” மாரியின் அருகே அமைதியாக நின்றுக் கொண்டிருந்த கொடியைப் பார்த்து கங்கா யோசனையுடன் நடந்தார்.

கோவிலை நெருங்கியதும், பீஷ்மாவின் கண்கள் கொடியைப் பார்த்து தானாகவே குற்ற உணர்வில் தழைய, அவனைப் பார்த்ததும் கொடியின் கண்கள் மீண்டும் கண்ணீரை சுரக்கத் தொடங்கியது.

இருவரின் நிலையையும் புரிந்துக் கொண்டவர் போல, “ஏய் புள்ள.. இப்போ எதுக்கு அழற? எல்லாம் நல்லபடியா நடக்கும். கடவுள் மேல பாரத்தைப் போட்டு அழாம தைரியமா எல்லாத்தையும் எப்படி சமாளிக்கிறதுன்னு யோசிக்கப் பழகு. கண்ணீர் சும்மா வருதுன்னு எப்போப் பாரு அழுதுட்டு இருக்கக் கூடாது.” என்று அதட்டியவர், 

“அங்கப் பாரு… டாக்டர் சார் கூட வரவங்க தான் அவங்க அம்மா. ரொம்ப நல்லவங்களா இருக்காங்க. முதல்முறை அவங்க உன்னை பார்க்கும் போதே அழுதா நல்லா இருக்காது..” மாரி முணுமுணுப்புடன் கங்காவை கொடிக்கு காட்ட, கண்களைத் துடைத்துக் கொண்டு அவரைத் பார்த்தவளுக்கு அவரது கம்பீரத்தில், அவர் மேல் மரியாதை பெருகியது.

புதிய பட்டுப்புடவை, நகை சகிதம் கோவிலின் அருகே நின்றிருந்தவளைப் பார்த்த பீஷ்மாவிற்கு கோபம் பொங்கியது. இத்தனை விலை உயர்ந்தவைகளை கண்டிப்பாக அவளுக்கு அந்த குணா தான் தந்திருப்பான் என்று சரியாக யூகித்தவன், அதை அவள் தூக்கி எறியாமல் உடுத்தி இருப்பதை கண்டு எரிச்சல் பொங்கியது.

அவளை முறைத்துக் கொண்டே கங்காவுடன் கோவிலுக்குள் சென்றவனின் மனம் கொடியை வறுத்தெடுக்கும் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கத் தொடங்கியது. “அவன் கொடுத்தா இவ போட்டுட்டு நின்னுடுவாளா?” மனம் கோபமாக கேள்வியை எழுப்ப,

“இப்போ எதுக்கு உனக்கு இவ்வளவு கோபம் வருது? அவ தான் மலர் இல்லையே…” இன்னொரு மனம் இடிந்துரைக்க,

“அவ மலர் இல்ல தான். அப்போ இத்தனை நாளா நான் அவன்கிட்ட இருந்து இவளை காப்பாத்தி இருக்கறது எல்லாம் சும்மாவா.. அவன் என்னவோ கர்ண பரம்பரை போல இவளுக்கு பட்டுப்புடவையை கொடுத்தா.. இவ பாட்டுக்கு அவன் கொடுக்கற புடவையை கட்டிக்கிட்டு வந்து நிக்கறதா…” அதற்கு கோபமாக பதிலை திருப்பி சொல்லிவிட்டு, கொடியின் முகத்தை ஆராய, வாழ்க்கையின் எல்லைக்கே ஓடிய களைப்பு மொத்தமும் தெரிய, பீஷ்மாவிற்கு குற்ற உணர்வு அதிகரித்தது.

மனதின் வாத விவாதங்களில் அவனது கவனம் மொத்தமும் ஈடுபட்டிருக்க, தாரை, தப்பட்டை, மேள தாளங்களுடன் திருவிழாவிற்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி தொடங்கியது.

மேள தாளம் இசைக்கத் தொடங்கியவுடன் உள்ளே நுழைந்த குணா, உரிமையுடன் கொடியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சன்னதியின் அருகே சென்று நிற்க, அதைப் பார்த்த பீஷ்மாவிற்கோ அந்த குணாவை அடித்து துவைக்கும் எண்ணம் எழுந்தது.

தன்னிடம் இருந்து மலரைப் பிரித்து, அவளது அன்னை, துரையின் மனைவி, இப்பொழுது கொடியின் துன்பத்திற்கும் காரணமாக இருக்கும் அந்த குணாவின் வாயைப் பிளந்து, வயிற்றை கிழித்து குடலை உருவி எடுக்கும் ஆவேசம் அவனுள் எழுந்தது. அம்மனுக்கு அடிக்கப்பட்ட உடுக்கையின் ஒலி மேலும் தன்னை நிலையிழக்கச் செய்வதை உணர்ந்தவன் போல, அந்த ஆவேசத்தை கட்டுப்படுத்த, வேகமாக கோவிலை விட்டு வெளியில் வந்தவன், வேப்ப மரத்தின் அடியில் நின்றான்.

“கண்ணா… ராஜா… உனக்கு என்ன ஆச்சுடா?” கங்கா கேட்கவும், கண்ணீரை மறைக்க முயன்றவாறே அவரை நிமிர்ந்துப் பார்த்தவன்,

“ஒண்ணும் இல்லம்மா… அந்த சத்தம் எல்லாம் சேர்ந்து என் மண்டையை உடைக்கிற மாதிரி இருக்கு. ரொம்ப தாங்காம தான் வெளிய வந்துட்டேன்… நான் இங்க வெயிட் பண்றேன். நீங்க சாமி கும்பிட்டு வாங்க. வீட்டுக்கு போகலாம். என்னால இங்க இருக்க முடியல…” இருள் விலகத் தொடங்கி இருந்த வேளையில், தன் மனதை இருள் வேகமாக மூடுவதைப் போல இருந்தது பீஷ்மாவிற்கு.

“இப்போ தாண்டா கோவில்ல பூஜை தொடங்கி இருக்காங்க. ரொம்ப அழகா இருக்கு. மனசுக்கு சொல்ல முடியாத நிம்மதியை தருது..” மனநிறைவுடன் கங்கா சொல்லிக் கொண்டிருக்கும் போது, கொடி தயங்கித் தயங்கி அவன் அருகே வந்து நின்றாள்.

எதுவுமே பேசத் தோன்றாமல் பீஷ்மா “என்ன?” என்பது போல பார்க்க,

அதற்குள், “இவ தான் நீ சொன்ன பெண்ணா பீஷ்மா?” கங்கா பட்டென்று கேட்கவும், கொடி அவரைத் திகைப்புடன் பார்க்க, பீஷ்மா ‘ஆம்’ என்று தலையசைத்தான்.

“ஓ..” என்ற கங்காவின் கண்களில் கொடியின் கண்களும் அழுது வீங்கி இருப்பது தவறாமல் பட்டது. கங்கா அவளை கூர்மையுடன் ஆராய்ந்துக் கொண்டிருக்க, கொடியோ தயக்கத்துடன் நின்றுக் கொண்டிருந்தாள்.  

“என்னம்மா?” அவள் தயங்கி நிற்பதை புரிந்துக் கொண்டு கங்கா கேட்கவும்,

“இல்ல.. டாக்டர் சார்கிட்ட… ஒரு ரெண்டு நிமிஷம் பேசிக்கலமா?” கொடி அனுமதி கேட்க,

“ஓ.. தனியா பேசணுமா?” கங்கா கிண்டல் குரலில் கேட்க,

“இல்ல… நீங்க இங்கயே இருங்க.. நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு போயிடறேன்…” கங்காவிற்கு பதில் சொல்லிவிட்டு, பீஷ்மாவைப் பார்த்தவள், அவன் எதுவும் பேசாமல் இருக்கவும், மீண்டும் கங்காவைப் பார்க்க, அவளைப் பார்த்து புன்னகைத்த கங்கா,

“உங்க ஊர் டாக்டர் கிட்ட பேச என்கிட்டே என்னம்மா அனுமதி கேட்டுட்டு இருக்க? நீ பேசு.. நான் போய் பூஜையை பார்க்கறேன்…” என்று சொல்லிவிட்டு, நாகரீகமாக அவர் நகர்ந்துச் செல்ல, பீஷ்மா தன்னையே நொந்துக் கொண்டு நின்றிருந்தான்.  

“சொல்லு கொடி.. என் கிட்ட என்ன பேசணும்?” பீஷ்மா கேட்கவும்,

“ஹ்ம்ம்.. அது வந்து…” எப்படி சொல்வதென்று புரியாமல் அவள் இழுக்க,

“சொல்லணும்ன்னு வந்துட்டு இப்படி இழுத்தா என்ன செய்யறது?” பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு அவன் கேட்கவும், ஒரு பெருமூச்சொன்றை வெளியிட்டவள்,

“இல்ல… நான் சில விஷயங்களை பேசத் தான் வந்தேன். மொதல்ல நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். என்னால தான் உங்களுக்கு இப்போ இவ்வளவு கஷ்டமும். நான் அடம் பிடிச்சு படிக்க போகாம இருந்திருந்தா உங்க மலர் உங்க கூட இருந்திருப்பா இல்ல..” தொண்டையடைக்க கேட்டவள், பீஷ்மா அமைதியாக நிற்கவும்,

“மலரை படுத்தினது இல்லாம இப்போ உங்களையும் படுத்திக்கிட்டு இருக்கேன் இல்ல.. தெரிஞ்சோ தெரியாமலோ நான் உங்களுக்கும் கஷ்டத்தைக் கொடுக்கறேன்.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல…” மீண்டும் தொண்டையடைக்க அவள் நிற்கவும், பீஷ்மா அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“எதுவுமே பேச மாட்டேங்கறீங்களே…” கொடி மீண்டும் கேட்க,

“நடந்தது நடந்து முடிஞ்சு போச்சு.. நீ படிக்க போகணும்ன்னு அடம் செய்ததை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன். இதுல விதியை குத்தம் சொல்றதா… இல்லை யாரன்னு எனக்கு புரியல. உன் மேல தப்பு ஒண்ணும் இல்ல. ஆனா.. அந்த குணாவை நான் சும்மா விட மாட்டேன். மலரை நாசம் பண்ண முயற்சி பண்ணி கொலை செய்தவனை மலர் ஆசைப்படற மாதிரி அணு அணுவா சித்ரவதை செய்யணும். அவன் செய்த தப்புக்களை நினைச்சு நினைச்சு வருந்தணும்…” கோபமாக அவன் சொல்லிக் கொண்டே போக, மலரின் மரணம் எப்படி நடந்தது என்பதை அறிந்த கொடி அதிர்ந்து போனாள்.

“என்ன சொல்றீங்க? மலரை அவன் நாசம் பண்ண முயற்சி செய்தானா?” கொடி அதிர்ச்சியுடன் கேட்கவும், ஆமோதிப்பாக தலையசைத்த பீஷ்மா, 

“இன்னும் ஒரு வாரதுக்குள்ள அவனை நான் என்ன செய்யறேன்னு பாரு…” சூளுரைக்க, கொடி தலை கவிழ்ந்து நின்றாள். ஊமையாய் தனது சகோதரியின் நிலைக்காக அழுதவள், தான் பேச வந்தது நினைவு வந்தவளாக, கண்ணீருடன் பீஷ்மாவைப் பார்த்தவள்,   

“பேச வந்ததை பேசிட்டு போயிடறேன் டாக்டர் சார். நீங்க இந்த கோவில் முன்ன செய்த சத்தியத்தை நான் திரும்பத் தந்துடறேன்..” சொல்லிவிட்டு கொடி நிறுத்த, பீஷ்மா அதிர்ந்து அவளைப் பார்த்தான்.

கொடியின் நெஞ்சம் வலியால் விம்மித் தணிந்தது. தொடர்ந்து பேச முடியாமல் தொண்டையடைக்க, தொடர்ந்து நடக்கும் சம்பவங்களினால் உடல் வலிமை இழந்தது போல தோன்றியது. தன்னை மனதளவில் தேற்றிக் கொண்டவள், “அது நீங்க என்னை மலர்ன்னு நினைச்சு செய்து கொடுத்ததுன்னு நினைக்கிறேன். சரி தானே…” கொடி கேட்கவும், பீஷ்மா பதில் சொல்ல முடியாமல் தடுமாற, தனது இந்த நிலையை வெறுத்தவளாக,

“அது செல்லாது டாக்டர் சார்.. நீங்க எனக்கு வாக்கு கொடுத்துட்டோமேன்னு குழம்பித் தவிக்க வேண்டாம். எனக்கு உங்க சத்தியத்தை திருப்பித் தரதுல எந்த பிரச்சனையும் இல்ல… ஏன்னா அது எனக்கான சத்தியமே இல்ல தானே..” ஒருவழியாக அவள் சொல்லி முடித்தாலும், அவளது குரலில் ஏற்பட்ட பிசிறில், அவள் அதை மிகவும் வருத்ததுடன் தான் சொல்கிறாள் என்பது புரிய, பீஷ்மா தன்னை நினைத்தே வருந்தினான்.

“என்னடா இதுன்னு நீங்க நினைக்க வேண்டாம் சார்.. நான் நல்லா யோசிச்சு தான் சொல்றேன்.. எனக்கு இதுல கஷ்டம் எல்லாம் இல்ல. நீங்க என்னை நினைச்சு கவலைப்பட வேண்டாம். அந்த ஆளை மட்டும் விட்டுடாதீங்க. அவன் கண்டிப்பா கஷ்டப்பட்டுத் தான் ஆகணும். நான் என் பொழப்பை பார்த்துக்கிட்டு இந்த ஊர்லயே காலத்தை ஓட்டிடுவேன்.” என்றவள் பீஷ்மாவிடம் இருந்து எந்த அசைவும் இன்றி இருக்கவும், அவனது முகத்தைப் பார்க்க, அவனோ திகைப்பின் உச்சத்தில் இருந்தான்.  

“கோவில் முன்பு தான் செய்த சத்தியத்தை திரும்பப் பெறுவதா? அதுவும் வாக்கு கொடுத்தால் மீறாதவர் என்று பெயர் பெற்ற பீஷ்மரின் பெயரை வைத்துக் கொண்டு, சொன்ன சொல் மாறுவது தர்மமா?” மனம் ஒருபக்கம் தனது கேள்விகளைத் தொடங்க, அதை அடக்கி,

“ஓ.. உனக்கு எந்த பிரச்சனையும் இல்லைங்கறது எனக்கு முன்னயே புரிஞ்சு போச்சு…” அவளை மேல் இருந்து கீழ் வரை அளக்க, கொடியின் உடல் கூனிக் குறுகியது.

“ஹ்ம்ம்… என் தலை எழுத்து இப்படி தான்னு ஆண்டவன் எழுதி வச்சிருக்கான் போல.. காலையில எங்க அப்பா என்னை அடிச்சு எழுப்பி இந்த புடவை நகை எல்லாம் போட்டுட்டு கோவிலுக்கு போக சொன்னாரு. நான் வர வேண்டாம்ன்னு தான் நினைச்சேன். மாரியக்கா தான் வந்து என்னை இங்க இழுத்துட்டு வந்தாங்க. இந்த புடவை நகைக்கு எல்லாம் ஆசைப்பட்டு இருந்தா… எனக்கு இந்த கஷ்டம் எதுவுமே இருந்திருக்காதே…” அவன் கொடியை மறைமுகமாக சாடுவதைப் புரிந்தவள், தன்னிலை விளக்கம் சொல்லிவிட்டு,

“உங்க அம்மாவைப் பார்த்தாலே கையெடுத்து கும்பிடனும் போல இருக்கு. அவங்க முகத்துல அவ்வளவு தேஜசு….” பீஷ்மாவிடம் சொன்னவள்,

“நான் கேட்ட ரெண்டு நிமிஷம் முடிஞ்சு போச்சு. நான் கிளம்பறேன்.. உங்க எல்லா உதவிக்கும் நன்றி…” அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு நகர்ந்து சென்றவளை பீஷ்மா வெறித்துக் கொண்டிருந்தான்.

“என்ன கொடுமை கடவுளே? நான் என்ன தப்பு செய்தேன்னு இப்படி ஒரு நிலையில என்னை நிறுத்தி இருக்க?” போகும் கொடியையே பார்த்துக் கொண்டிருந்த பீஷ்மாவின் மனம் சுழலில் சிக்கியது போல சிக்கித் தவித்தது.

முந்தய தினத்தில் இருந்து நடந்த நிகழ்வுகளின் சோர்வில் பீஷ்மா தொய்ந்து போய் கோவிலின் உள்ளே மீண்டும் செல்ல, அவனுக்கு முன் மெல்ல நடந்துச் சென்றவளோ, தலை சுற்றி கீழே சரிய, அவள் கீழே விழுவதற்கு முன்பே உணர்ந்து கொண்ட பீஷ்மா, அவள் முழுவதுமாக சரிவதற்குள் அவளை தாங்கிப் பிடித்தான்.

அனைவரின் கவனமும் கோவிலில் நடந்துக் கொண்டிருந்த பூஜையில் நிலைத்திருக்க, கொடி சரியவும், பீஷ்மா தாங்கிப் பிடிப்பதை கவனித்த கங்கா, அவர்கள் அருகே ஓடி வந்தார்.

“பீஷ்மா… என்னடா ஆச்சு?” கங்கா கேட்க,

“தெரியலையேம்மா.. டாக்டர் கிட்ட தான் காட்டணும்” பீஷ்மா சொன்ன பதிலில் தூக்கி வாரிப் போட்டு அவனைப் பார்த்தவர்,

“நீ ஒரு டாக்டர்டா பீஷ்மா… அது உனக்கு நினைவிருக்கா இல்லையா?” மிகவும் கஷ்டப்பட்டு, விருப்பப்பட்டு படித்த படிப்பையே மறந்திருக்கும் அளவிற்கு அவனது மனம் குழம்பி இருப்பதை நன்கு உணர்ந்தவராக, கங்கா அவனைக் கடிய, அப்பொழுது தான் சுயவுணர்வு பெற்றவனாக பீஷ்மா அவளை ஆராயத் துவங்கினான்.

அதற்குள் கொடியைக் காணாது தேடிக் கொண்டு வந்த மாரியும், கோவிலில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சிலரும், அவர்களைச் சுற்றி கூடி இருக்க, “யாராவது கொஞ்சம் தண்ணிய எடுத்துட்டு வாங்க..” பீஷ்மா சொல்லவும், துரை கிடைத்த தென்னம்மட்டையில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வர, அதை அவளது முகத்தில் தெளித்து துடைத்து விட, கொடி கண் விழிக்காமல் அசைவின்றி கிடந்தாள்.

“கொடி.. கொடி…” பீஷ்மா அவளது கன்னத்தைத் தட்ட, அதற்கும் எந்த பலனும் இல்லாமல் போகவும், அவளது நாடித் துடிப்பை ஆராய்ந்தான். அது சரியாக இயங்கிக் கொண்டிருக்கவும்,

“துரை.. நீங்க வேகமா போய் ஹாஸ்பிடல்ல ஒரு பெட்டை ஏற்பாடு செய்ங்க. நான் இவளைத் தூக்கிட்டு வரேன்… ரொம்ப வீக்கா இருக்கா.. ட்ரிப்ஸ் போட்டாத் தான் கண் திறப்பா போல இருக்கு” பீஷ்மா சொல்லவும், துரை வேகமாக மருத்துவமனை நோக்கி ஓட, தனது தாயையும் மறந்து, கொடியை தூக்கிக்கொண்டு பீஷ்மா விரைந்து மருத்துவமனைக்கு சென்று அவளுக்கு ட்ரிப்சும், நன்றாக உறங்குவதற்கான ஊசியும் போட்டு, அவளது அருகில் அமர்ந்தான்.

“நேத்து ராத்திரி தூங்காம அழுதுட்டே இருந்துச்சு போல சார். சரியாவும் சாப்பிடல போல…” அருகில் நின்றிருந்த துரை சொல்லவும்,

“ஹ்ம்ம்… ரொம்ப வீக்கா இருக்கா பாவம். இந்த வயசுல இவளுக்கு இத்தனை கஷ்டம் வேண்டாம்…” பீஷ்மா அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே வருத்தமாகச் சொல்லவும், துரையின் மனதில் சிறிது நிம்மதி எட்டிப் பார்த்தது.

மலர் இறந்த பிறகு கொடி படும் கஷ்டங்களை துரையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். பீஷ்மா அவளை விரும்புவதில் இருந்தே அவளது துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து விடும் என்று அவன் நினைத்திருக்க, முன் தினம் நடந்த பேச்சுக்களில் இருந்து, பீஷ்மா மலரைத் தான் விரும்புகிறான் என்று தெரியவும், துரைக்கு கொடியை நினைத்து கவலை அதிகரிக்கவே செய்தது.

இப்பொழுதோ பீஷ்மா பதறிய பதறலும், அவளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கும் கோலமும் அவனுக்கு மிகுந்த நிம்மதியை அளித்தது. எப்படியும் கொடியை காப்பாற்றி விடுவான் என்ற நம்பிக்கையில் சிறிது நிம்மதி பிறந்தது.

“ட்ரிப்ஸ் இறங்கட்டும் துரை.. நான் அவ கூட இருக்கேன். நீங்க போய் சாப்பிட்டு வாங்க…” பீஷ்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பாட்டில் உடைபடும் சத்தம் கேட்டு, கொடி இருந்த அறையில் இருந்து அவன் எட்டிப் பார்த்தான். 

“ஏய் டாக்டர்… இங்க என் பொண்ணை கொண்டு வந்து என்ன செய்துட்டு இருக்க? அவளுக்கு அடுத்த வாரம் கல்யாணம் வச்சிருக்கேன்.. அவளை நாசம் பண்ணிராதே…” வேலுவின் சத்தத்தை தொடர்ந்து,

“டேய் டாக்டர்.. டாக்டர்… எங்கடா இருக்க?” குணாவின் சத்தமும், அந்த மருத்துவமனையை எதிரொலிக்கச் செய்திருந்தது.

குணாவின் சத்தம் கேட்டதும் கோபத்துடன் வெளியில் வந்த பீஷ்மா, “துரை… இங்க யாராவது அனாவசியமா சத்தம் போட்டுட்டு இருந்தா எனக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன். இங்க சத்தம் போடாம வெளிய போகச் சொல்லுங்க.. இந்த ஹாஸ்பிடல்ல இருக்கறவங்களுக்கு சம்பந்தம் இல்லாதவங்க யாரும் அனாவசியமா உள்ள வரக்கூடாது..” அடிக்குரலில் பீஷ்மா சீற,

“நான் அந்த பேச்சிய… ச்சே… இல்ல… ஹான்… அந்த கொடியை கல்யாணம் செய்துக்கப் போறவன்…” குணா பதிலுக்கு எகிற,

“நீ என்னவா வேணா இருந்துட்டு போ.. ஆனா… தாலி கட்டறதுக்கு முன்ன, யாரும் யாருக்கும் சம்பந்தம் ஆகிட முடியாது. வெளிய போன்னு சொன்னேன்…” பீஷ்மா உறும,

“யாரைப் பார்த்து வெளிய போன்னு சொல்ற?” குணாவின் பதிலுக்கு,

“உன்னைத் தான். இப்போ நீ போகல.. போலீஸ் இந்த ஊருக்குள்ள வரும். போலீஸ் வந்தா அப்பறம் இந்த ஊர்ல இருந்து உன்னை கூட்டிட்டு போகாம போக மாட்டாங்க…” பீஷ்மா சொல்லவும், எள்ளலாக சிரித்தவன்,

“என் கிட்ட இந்த போலீஸ் பப்பு எல்லாம் வேகாது தம்பி… நீ வேணா முயற்சி செய்து பாரு…” குணா மார்தட்ட, பீஷ்மா அவனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே மருத்துவமனையில் இருந்த போனை எடுத்தான். அது ஏற்கனவே பழுதாகி இருந்தது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் குணாவை மிரட்ட அதை எடுத்து சுழற்றியவன், சில வினாடிகளுக்குப் பிறகு,

“பெரியப்பா… நான் பீஷ்மா பேசறேன். நம்ம வீட்ல நிக்கற நாலு எஸ்கார்ட் போலீசோட, தஞ்சாவூர் கமிஷனர் கிட்ட பேசி அவரை உடனே நான் இருக்கற ஊருக்கு வரச் சொல்லுங்க. கூடவே ரெண்டு பிரஸ் ஆளுங்க. முடிஞ்சா நீங்களும் வாங்க. உங்க சாட்சி இங்க ரொம்ப முக்கியமா இருக்கும்…” பீஷ்மா பேசப் பேச, குணாவிற்கு வியர்த்து வடியத் துவங்கியது.

“என்ன? யார்கிட்ட பேசிட்டு இருக்க?” குணா திக்கித் திணறிக் கேட்க,

“ஹ்ம்ம்.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ… அவ்வளவு சீக்கிரம் வாங்க…” என்றவன், போனை வைத்துவிட்டு,

“யாருன்னா கேட்கற? எங்க பெரியப்பா.. அவரு யாருன்னு உனக்கு காட்டவா?” நக்கலாக குணாவிடம் கேட்டவன்,

“துரை… வீட்ல டேபிள் மேல என்னோட செல்போன் இருக்கும். அதை கொஞ்சம் எடுத்துட்டு வாங்க…” எனவும், துரையும் வேகமாக எடுத்துக் கொண்டு வர, அதில் இருந்த புகைப்படத்தை எடுத்து பீஷ்மா காட்ட, குணாவிற்கு சப்த நாடியும் அடங்கியது.

“நம்ம பிரதமமந்திரி கூட நெருக்கமா நின்னு பேசிட்டு இருக்காங்களே… அது தான் எங்க பெரியப்பா.. அவருக்கு கமிஷனர் எல்லாம் ரொம்ப பிரெண்ட்.. சும்மா வாங்க போயிட்டு வரலாம்ன்னா கண்டிப்பா கமிஷனர் வருவார். என்ன…. போலீஸ் வந்தா உன் பப்பு தான் வேகாம போயிடும் போல..” பீஷ்மா சொல்லவும், அவமானமாக உணர்ந்த குணா,

“நான் தானே இருக்கக் கூடாது. அவளோட அப்பா இருக்கலாம் இல்ல…” விடாமல் பீஷ்மாவிடம் மல்லுக்கு நிற்க,

“ஓ… தாராளமா இருக்கலாமே… எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல… நானும் அவரு எப்போ சிக்குவாறுன்னு காத்துக்கிட்டு இல்ல இருக்கேன்…” நக்கலாகக் கூறிய பீஷ்மா,

“துரை… கொடிக்கு பக்கத்துக்கு பெட்டை ரெடி பண்ணுங்க. அவரும் ரெஸ்ட் எடுக்க வேண்டாமா? பாவம் அவரு நாயா உழைச்சு ஓடா தேஞ்சு போயிருக்காரு இல்ல… அவரை தேத்தி அனுப்ப வேண்டாமா? துரை.. நான் சொல்ற மெடிசின்ஸ் எல்லாம் கொஞ்சம் ரெடியா வைங்க.. அவரை சரி பண்ணிடலாம்…” அருகில் நின்றிருந்த பீஷ்மாவிடம் குரல் கொடுக்கவும், அங்கு அதற்கு மேல் நின்றுக் கொண்டிருக்க வேலு பைத்தியமா என்ன?

“ச்சே..” தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல், விறு விறுவென்று அங்கிருந்து நகர்ந்து குணா செல்ல, சோர்ந்து போனவனாய் பீஷ்மா கொடியின் அருகே அமர்ந்தான்.

“மலர்.. இவ்வளவு பலகீனமான தங்கையை விட்டுட்டு உன்னால எப்படி போக முடிஞ்சது. நான் இவளை இப்படி எத்தனை நாளைக்கு காப்பாத்த முடியும்?” மானசீகமாய் கேட்டுக் கொண்டிருக்க,

“ஏன் முடியாது? அதுக்கு ஒரே வழி தான் இருக்கு…” அவனது மனதின் பதிலில் பீஷ்மா ஆடிப் போனான்.

“ச்சே.. கொஞ்ச நேரம் சும்மா இரு..” பீஷ்மா மனதை அடக்கிவிட்டு, கொடி கண் விழிக்கிறாளா என்பதை பரிசோதிக்க, கங்கா அவனைத் தேடி உள்ளே வந்தார்.

“இந்த பொண்ணு எப்படி பீஷ்மா இருக்கா? பயப்படும்படி ஒண்ணும் இல்லையே…” அவர் கவலையாகக் கேட்க,

“இல்லம்மா… சோர்வு தான். அதோட மன உளைச்சல் வேற… பாவம்…” அவளுக்கு சார்ந்து பேசியவன், தான் அவரை விட்டுவிட்டு வந்தது நினைவு வந்தவனாக,

“சாரிம்மா… சாரிம்மா… இவ மயங்கி விழுத்தும், நீங்க அங்க இருக்கங்கறதை மறந்து வந்துட்டேன்.. ரொம்ப சாரிம்மா…” என்று சொல்லவும், அவனைப் பார்த்து மெல்லிய புன்னகையை சிந்தியவர்,

“ஹ்ம்ம்… புரிஞ்சது பீஷ்மா. அவ கண் விழிக்கட்டும்.. நாம அப்பறம் பேசிக்கலாம்..” என்றபடி கங்காவும், கொடிக்கு துணையாக அமர்ந்தார்.

எப்பொழுதும் கங்காவிடம் வளவளவென்று பேசும் பீஷ்மா அமைதியாக இருப்பது கங்காவிற்கு கவலையைக் கொடுக்க,

“உன் மனசுல எதையாவது போட்டுக்கிட்டு குழப்பிக்கிட்டு இருக்கியா பீஷ்மா? எதா இருந்தாலும் உன் அம்மா என் கிட்ட சொல்லு. உன்னை புரிஞ்சிக்க முடியாத அளவு பத்தாம் பசலி நான் இல்லடா.. உங்க அப்பாவும் உன்னை ஒரு மகனா பார்க்காம பிரெண்டா தான் பழகறார்ன்னு உனக்குத் தெரியும். அப்படி இருக்க எங்ககிட்ட சொல்ல முடியாத விஷயம் என்னடா?” தன்மையாக எடுத்துச் சொல்ல, இரவில் இருந்தே தொடர்ந்துக் கொண்டிருந்த தலை வலி மேலும் வலிக்க, அவரது மடியில் சாய்ந்தவன்,

“ரொம்ப தலைவலிக்குதும்மா.. எனக்கும் உன்கிட்ட பேசினா நல்லா இருக்கும்ன்னு தோணுது. ஆனா… நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு ஒரு மாதிரி இருக்கு…” மெல்ல பீஷ்மா சொல்லவும், கங்கா அவனை புதிதாய் பார்க்க, அதை கவனிக்காமல்,

“இங்க வேண்டாம்மா.. சாயந்திரம் நான் ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போய் சொல்றேன். என்ன செய்யறதுன்னு நானும் சில விஷயங்களை யோசனை செய்யத் தான் வேண்டி இருக்கு.” என்றவன், மீண்டும் கொடி கண் விழிக்கிறாளா என்பதை பார்த்து விட்டு,

“நீங்க போய் வீட்ல படுத்து ரெஸ்ட் எடுங்க. சதாத்தாவும் திருவிழா முடியற வரை ஊரை விட்டு போக முடியாது. அதனால ஒரு வாரம் இங்க இருக்கறதை தான் நீங்க அனுபவிக்க முடியும். நோ ஏ.சி. நோ பெட்…” அவன் மெதுவாக கிண்டலுக்குத் தாவ, அவன் சிறிது இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சிக்கிறான் என்பதை உணர்ந்த கங்காவும், அவனே சொல்லும் பொழுது சொல்லட்டும் என்று நினைத்துக் கொண்டு,

“அதெல்லாம் இல்லாமையும் நாங்க இருந்துப்போம். உனக்கு தான் எல்லாம் வேணும்..” என்று கிண்டல் செய்துவிட்டு, அவருடன் வந்திருந்த மாரியைப் பார்த்து,

“என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க. கொஞ்சம் சமையலுக்கு கூட மாட உதவ முடியுமா? இன்னைக்கு ஒரு நாள்… நாளையில இருந்து நானே செய்துக்குவேன். காய்கறி எல்லாம் எங்க வாங்கினா நல்லா இருக்கும்ன்னு சொல்லுங்க…” இயல்பாக பேசிக் கொண்டே கங்கா நடக்க, அவரை பின்தொடர்ந்த மாரியோ,

“என்னங்கம்மா… நானே கூட செய்து கொண்டு வந்து கொடுப்பேன். நீங்க சமைக்கணும்ன்னு சொல்லிட்டு இருக்கீங்க?” குறைப்பட்டுக் கொண்டவர்,

“என்ன காய் வேணும்ன்னு சொல்லுங்க.. நான் வாங்கிட்டு வந்து தரேன்..” என்று பரபரக்க, அவரைப் பார்த்து புன்னகைத்த கங்காவும் பதிலுக்கு,

“உங்க ஊரை எனக்கு சுத்திக் காட்ட மாட்டேன்னு சொல்றீங்க… ஹ்ம்ம்.. உங்களுக்கு எல்லாம் அந்த டாக்டர் சார் தான் முக்கியம். அவரோட அம்மா இல்ல…” போலியாக அவர் பெருமூச்சு விட, மாரி பதறிப் போனார்.

“ஐயோ… வாங்கம்மா… நான் கூட்டிட்டு போறேன்..” என்றவர், அந்த ஊரில் விளையும் பொருட்களை காட்ட, கங்கா தேவையானவற்றை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து, பீஷ்மாவிற்கு பிடித்த உணவுகளை சமைக்கத் தொடங்கினார்.

மதியம் வீட்டிற்கு வந்தவன், நெடுநாட்கள் கழித்து உண்ட தனது சமையலை பாராட்டுவான் என்று அவர் எதிர்பார்க்க, பெயருக்கு ஏனோ தானோவென்று உண்டவன், அவசரமாக எழுந்து மருத்துவமனை நோக்கி செல்ல,

“பீஷ்மா ஏதோ பெரிய சிக்கல்ல இருக்கான். என்ன ஏதுன்னு பேசி சரி பண்ணியே ஆகணும்..” என்று தீர்மானித்துக் கொண்டவர், உண்டு முடித்து, களைப்பு நீங்க ஓய்வெடுத்தார்.

11 COMMENTS

 1. Hai dalu
  Enna second time comment panrena athu shumma ullulai
  Apuram eppudi eppudi dai beeshu nee than malara love panra illa appuram guna kudutha sareeya kodi wear panna enna pannalanna unnaku ennadi raja mmmmm stomach burn mmmmmm nadathu raja nadathu
  Nee sikkita so you can’t escape from kodi da paiya enna sariya

 2. Rams

  Ippo thaan ithuvarai padichaen..

  Ippadi pannitteengalae maa???? …ayyo malar iranthuttaal nu solli , Malar mathiri irukkira Kodi , Beeshma nilai oru pakkam paavam , Malar nilai oru pakkam paavam, Kodi nilai innoru pakkam paavam, yaaraiyum thappu solla mudiyaathu….

  Aavigalil Enakku nambikkai illai, aanaalum interesting aa irukku,

  Eppadiyo Beeshma manasil kodikku idamirukku…

  BMK ( Beeshma manasil Kodi) ..
  Ini???…

  • thanks salma. .. thank u so much ma… 🙂 🙂 hmm enna seyyalam … avi oru pakkam iruko illayo kathaigal interest thane … :p :p

LEAVE A REPLY