SHARE

மாரி ஒரு மாதிரி சிரிக்கவும், அதை கண்டுகொண்ட பீஷ்மா, “ஏன் மாரியக்கா ஒரு மாதிரி சிரிக்கறீங்க?” எனக் கேட்க,

“இல்லையே… நான் சந்தோஷத்துல தானே சிரிச்சேன்…” மாரி சாதிப்பது போல அழுத்தமாகச் சொல்லவும், தோள்களை குலுக்கிக்கொண்டு கொண்ட பீஷ்மா, அதோடு அந்தப் பேச்சை விடுத்தாலும், அவனது மனதினில் பல நெருடல்கள் எழவே செய்தது.

மாரியின் முகத்தை அவன் சிறிது நேரம் கூர்ந்து நோக்கி அவரது மனநிலையை படிக்க முயல, அவரோ அதற்கு இடமளிக்காதது போல முகத்தை எங்கோ திருப்பிக் கொண்டு வெறித்துக் கொண்டிருந்தார்.

அந்த முகத்தில் கடுகளவிற்கும் சந்தோசம் இல்லை என்பதை மட்டும் பீஷ்மாவால் உணர முடிந்தது. மாரி தனது மனதினில் எதையோ வைத்துக் கொண்டு தவிக்கிறார் என்றும் அவனால் உணர முடிந்தது.

“மாரியக்கா.. காலையில உங்க கிட்ட கொடியா சமையல் செய்து கொடுத்து அனுப்பினா?” பீஷ்மா கேட்டது தான் தாமதம், அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழியத் துவங்கியது.

எங்கேயோ பார்வையை பதித்துக் கொண்டே இருந்தவர் அவனுக்கு மறுப்பாக மட்டும் தலையசைத்து, “நான் கோவில் உள்ள போறேன்…” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து செல்ல, யோசனையுடன் பீஷ்மா மாரியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏன் கொடி… நீ இன்னைக்கு பூ வைக்கலையா?” பீஷ்மா கேட்கவும்,

“எனக்கு பூ வைக்க பிடிக்கல…” விரக்தியாகச் சொன்னவள்,

“நான் இங்க ரொம்ப நேரம் இருந்து பேச முடியாது. தனியாவும் நிக்க முடியாது. உள்ள போய் மாரியக்கா கூட உட்கார்ந்துக்கறேன்…” என்று சொன்ன கொடி, பீஷ்மாவின் கையில் இருந்து தனது கையை பிரித்துக் கொண்டு செல்ல, பீஷ்மா தான் திகைத்து நின்றான்.

‘என்ன தான் வாழ்வில் சில கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்தாலும் ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும், ஒரு பெண், தனது மனதிற்கு பிடித்தவனின் கை முதன்முதலில் தீண்டும் போது, அதுவும் கிராமத்து பெண்… சிறிது கூட முகம் சிவக்காமல் இருப்பாளா?’ அந்த எண்ணம் வந்த உடனேயே பீஷ்மாவிற்கு சிறிது சலிப்பு உண்டானது.

“ஹ்ம்ம்… நானும் கதையில எல்லாம் சொல்ற இந்த முகம் சிவக்கறது எப்படி இருக்கும்ன்னு பார்க்கணும்ன்னு தான் ஆசைப்படறேன்… நமக்கு அதுக்கு கொடுத்து வைக்கல போல…” என்று கிண்டலுடன் நினைத்துக் கொண்டு துரையைத் தேட, ‘திருவிழா என்று?’ என்ற தேதியை அறிந்துக் கொள்ள, கூட்டத்தோடு கூட்டமாக அவனும் மெய் மறந்து நின்றுக் கொண்டிருக்க, அவனை தொல்லை செய்யாமல், பீஷ்மா தனது மருத்துவமனைக்கு திரும்பத் துவங்கினான்.

சில அடிகள் நடந்த பிறகு தன்னை யாரோ தொடர்ந்து வருவது போல இருக்கவும், பீஷ்மா திரும்பிப் பார்க்க, அந்த இடம் வெற்றிடமாக இருக்கவும், “எல்லாம் பிரமை…” மேலும் கிண்டலாக நினைத்துக் கொண்டவன், மருத்துவமனையை அடையும் போதே, அவனுக்காக மலர் காத்திருந்தாள்.

“கொடி… நீ எப்படி இங்க வந்த? அதுவும் எனக்கு முன்னால?” பீஷ்மா ஆச்சரியமாகக் கேட்க,

“நான் உங்க பின்னாலேயே தான் வந்தேன்.. நீங்க திரும்பிப் பார்க்கும்போது நான் தான் ஒளிஞ்சிக்கிட்டேனே… சும்மா கண்ணாமூச்சி ஆடத் தான்…” சொல்லிவிட்டு சிரித்தவளை பீஷ்மா கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீ இப்படி இருக்கறது தான் கொடி ரொம்ப நல்லா இருக்கு…” அவளை ரசித்துக் கொண்டே பீஷ்மா சொல்ல,

“எது?” இதழில் புன்னகையுடன் கேட்டவள், பீஷ்மாவைப் பார்க்காமல் தலைகுனிந்தபடி தனது தாவணியை விரல்களில் சுற்றிக் கொண்டிருந்தாள்.

“நான் பூ வைக்கலையான்னு கேட்ட உடனே வச்சிக்கிட்டு கை நிறைய வளையல் போட்டுக்கிட்டு வந்திருக்கயே கொடி… இது தான் உனக்கு நல்லா இருக்கு… ரொம்ப அழகா இருக்கு. அதோட உன்னோட முகத்துல இப்படி அபூர்வமா வர சிரிப்பு தான் எல்லாத்தையும் விட ஃபென்டாஸ்டிக்…” அவன் ரசித்து சொல்லிக் கொண்டே வர, அவளது கன்னங்களில் நாணப் பூ பூக்க, பீஷ்மா ஆசைப்பட்டது போலவே அவளது கன்னங்கள் செந்நிறம் கொண்டது.

“வாவ்… வாவ்..” பீஷ்மாவின் இதழ்கள் முணுமுணுக்க, புருவத்தை மட்டும் உயர்த்தி ‘என்ன’ என்பது போல மலர் கேட்க,

“இல்ல கொடி… இப்போத் தான் நான் இந்த வெட்கச் சிவப்புன்னு கதைல எல்லாம் சொல்லுவாங்களே… அதைப் பார்க்க முடியலையேன்னு வருத்தப்பட்டுக்கிட்டு வந்தேன்… பார்த்தா.. நீ லைவ்வா காட்டற… அதான்… செம ஃபீல் கொடி…” பீஷ்மா கண்ணடித்துக் கொண்டே கிண்டலாகச் சொல்ல, அவளின் முகம் மாறியது.

அவளது முக மாற்றத்தைக் கண்டு தனது சிரிப்பை நிறுத்திக் கொண்ட பீஷ்மா, “கொடி… என்னாச்சு?” என்று கேட்கவும்,

“அந்த குணாவை நீங்க என்ன செய்யப் போறீங்க? இந்த திருவிழா முடிஞ்ச உடனே அவங்க அப்பா தவறி விழுந்து அகாலமா செத்ததுக்கு ஏதோ சடங்கு செஞ்சிட்டு அடுத்தநாளே கொடிய கல்யாணம் பண்ணிக்க போறானாம்…” ஒருமாதிரிச் சொன்னவள், தான் உணர்தாளோ இல்லையோ, பீஷ்மா சந்தேகத்துடன் அவளைப் பார்த்தான்.

தான் எதையோ மிகவும் தீவிரமாக சொல்லிக் கொண்டிருக்க, பீஷ்மா அமைதியாக இருப்பதைப் பார்த்தவள், “என்ன யோசிக்கறீங்க? அப்படியே விட்டுட்டு போயிடலாம்ன்னு முடிவு செய்திருக்கீங்களா என்ன?” அவளது முகத்தில் இப்பொழுது கோபச் சிவப்பு குடிப்புகத் தொடங்க, பீஷ்மாவிற்கும் கோபம் தலைகேறியது.

“என்ன கொடி? என்ன நினைச்சிட்டு இருக்க? விட்டுட்டு போறதுன்னா… நீ அவன் கையில சிக்கி கஷ்டப்படறத நான் வேடிக்கைப் பார்த்துட்டு போயிருப்பேன்… என்னவோ வாய்க்கு வந்தபடி பேசிட்டு இருக்க? அவனை என்ன செய்யறதுன்னு இன்னும் நான் முடிவெடுக்கல.. கொஞ்சம் நானும் யோசிக்கணும்… வேணா சொல்லு… இப்போவே உன்னை கல்யாணம் செய்து இங்க இருந்து கூட்டிட்டு போயிடறேன்… அதை தான் என்னால உடனே செய்ய முடியும். நான் என்ன சினிமாவுல வர ஹீரோவா.. அடிதடின்னு இறங்கி உடனே அவனோட பல்லை கழட்ட…” பீஷ்மா கோபமாக கொதிக்க,

“அப்போ என்ன தான் செய்யப் போறீங்க? நான் பேசிக்கிட்டே இருக்கற அப்போ எதுக்கு யோசிச்சீங்க? என்ன யோசிச்சீங்க?” கேள்வி மேல் கேள்வியாக அவள் கேட்டுக் கொண்டே போக, அவளை நெருங்கி வந்தவன் அவளைப் பிடிக்கப் போக, கொடி வேகமாக பின்னால் நகர்ந்தாள்.

“இங்கப் பாரு.. உன்னை இங்க நான் ஒண்ணும் ரொமான்ஸ் பண்ணிடப் போறது இல்ல.. இது ஹாஸ்பிடல்… எனக்கு கோவில் மாதிரி…” கோபமாக அவளைப் பார்த்து சொன்னவன்,

“அந்த குணாவைப் பத்தி சொன்னபோது, ‘என்னை’ன்னு சொல்லாம, ‘கொடி’ன்னு சொல்லவும், என்னடா இவ இப்படி சொல்றான்னு கொஞ்சம் யோசிச்சிட்டேன்… அப்பப்பா… இந்த பொண்ணுங்க கேட்ட உடனே நாம பதில் சொல்லிடணும்… இல்ல முகம் சிவக்கற அளவுக்கு கோபம் மட்டும் வந்திடும்…” படபடப்பாக பொரிந்தவன், தனது இருக்கையில் சென்று அமர்ந்தான்.

“சரி… என்ன செய்யலாம்ன்னு யோசிங்க… நல்லா யோசிச்சிக்கிட்டே இருங்க.. ஆனா… காலம் கடத்தி ரொம்ப டைம் வீணா பண்ணிடாதீங்க…” என்று கூறியவள், பட்டென்று எழுந்து அங்கிருந்து செல்ல, வழக்கம் போல பீஷ்மாவிற்கு பெருமூச்சை தான் விட முடிந்தது.

அனைவருமே திருவிழா உற்சாகத்தில் இருக்க, அடுத்த வாரமே திருவிழா என்ற அறிவிப்பு.. ஊர் மக்கள் கோவிலிலேயே குடி இருந்தாலும், தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டது.

“ஏன் துரை… திருவிழாவுக்கு இந்த ஊர்ல ஸ்பெஷலா என்ன செய்வீங்க?” பீஷ்மா கேட்கவும்,

“எல்லார் வீட்லயும் விருந்து படு அமர்க்களப்படும் டாக்டர் சார்… எல்லார் வீட்லயும் எல்லாருக்குமே விருந்து வைப்பாங்க. ஒவ்வொரு நாள் ஒரு ஒரு வீடுன்னு செய்வாங்க. அதுவும் தவிர, எல்லாம் விருந்து சாப்பிடறேன்னு மூக்கு முட்ட தின்னுட்டு, ஜீரணம் ஆகாம வாந்தி பேதின்னு இங்க வந்து படுத்துடுவாங்க. சில பெருசுங்க உயிர் போற நிலை கூட வரும்.. வெளிய இருந்து வேற கடை போடுவாங்க.. அது இதுக்கும் மேல… அப்படி செய்யாதீங்கன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்திருக்கேன்… ஹும்… ஹும்… கேட்டாத் தானே…” துரை சலித்துக் கொள்ள, பீஷ்மா முதல் வேலையாக அதற்கு தயாராக நினைத்தான்.

“சரி துரை… அப்போ வெளிய இருந்து வந்த திண்பண்டங்கள் வாங்காதீங்கன்னு எதுக்கும் ஒரு தடவ சொல்லிப் பார்த்துடலாமா?” யோசனையுடன் சொன்ன பீஷ்மா,

“எப்படியும் கேட்க மாட்டாங்க தான். வேற வழி இல்ல.. நம்ம எதுக்கும் அதுக்கான மருந்துகளை இங்க ஸ்டாக் வச்சிக்கலாம்… அப்பறம் இங்க இருக்கற தண்ணியில எல்லாம் க்ளோரின் போட்டு சுத்தப்படுத்தச் சொல்லலாம்… நல்ல தண்ணிக்கு ஒரு சின்ன சுத்திகரிப்பு நிலையம் போல வச்சிட்டா, இந்த தண்ணி வழியா பரவர நோய்கள்ல இருந்து பாதிப்பு இருக்காது தானே…” அதைத் தடுக்க தன்னாலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை யோசித்தவன், அதை செயல்படுத்தவும், தகுந்த அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியும், தொலைபேசியில் அழைத்தும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

இரண்டு நாட்கள் வரை இப்படியே செல்ல, கோபித்துக் கொண்டு போன கொடியின் தரிசனம் மட்டும் பீஷ்மாவிற்கு கிடைக்காமல் போனது. தனது அன்னையையும் இந்த திருவிழாவிற்கு வரச் சொல்லலாம் என்று எண்ணியவன், அவருக்கு அழைப்பதற்காக தனது மொபைலுடன் நடக்கத் தொடங்கினான். வழக்கமாக மலரை சந்திக்கும் அதே ஆற்றங்கரையோரம்… அதன் கரையில் அமர்ந்திருந்த கொடி, கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அசையாமல் அமர்ந்திருக்க, அவளது பின்னோடு நின்றவன், “ஹலோ…” சத்தமாக அழைக்க, அதற்கும் அவளிடம் சிறு அசைவு கூட இல்லாமல் அமர்ந்திருந்தாள்.

அதற்குள் அவனது தாயார் லைனில் மீண்டும் ‘ஹலோ’ என்று கத்த,

“ஏண்டா பீஷ்மா… உன்னோட ஹாஸ்பிடல் லேண்ட்லைன்க்கு எத்தனை தடவ போன் செய்யறது? நீ எடுக்க மாட்டியா? அதை எடுக்காம நீ எங்க சுத்திட்டு இருக்க?” சற்று காட்டமாகவே கேட்க,

“இல்லம்மா… இன்னைக்கு காலையில இருந்து அது என்னவோ வொர்க் பண்ணவே இல்ல.. வயர் அறுந்து கிடந்தது. சரி பண்ண சொல்லி இருக்கேன்…” என்று பதில் சொன்னவன், திருவிழா விஷயத்தைக் கூறினான்.

“அப்படியா… ரொம்ப சந்தோசம்டா… எனக்கும் எக்ஸாம் நாளையோட முடியுது.. இப்போ வந்தா ஊர்த் திருவிழாவைப் பார்த்தா மாதிரி இருக்கும்… நான் இன்னும் ரெண்டு நாள்ல நம்ம கார்ல வரேன்…” பீஷ்மாவிடம் சொன்னவர்,

“இங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ உன் வேலையைப் பாரு. வெளிய ரொம்ப சுத்தாதே…” என்று கூறி போனை வைத்தவரை நினைத்துச் சிரித்தவன், கொடியின் அருகே சென்று அமர்ந்தான்.

பீஷ்மா அமர்ந்தும் அவனைத் திரும்பிப் பார்க்காமல் இருந்தவளை சீண்ட ஆவல் பொங்க, அருகில் இருந்த ஒரு கிளையை எடுத்து அவளது கன்னங்களில் மென்மையாக வருடினான்.

“ம்ப்ச்…” கொடி சலித்துக் கொள்ள, அவளது முகத்தருகே மெல்ல நெருங்கியவன், உதடுகளைக் குவித்து ஊதி, அவளது கவனத்தை திருப்ப முயல, அதுவும் பயனற்றுப் போக,

‘அடுத்து வேற மாதிரி ட்ரை பண்ணலாம்…’ என்று நினைத்துக் கொண்டவன், அவளது கன்னத்தின் அருகே செல்ல, அதே நேரம் பட்டென்று திரும்பிய கொடி, உதடு குவித்து தனதருகே நெருங்குபவனைப் விழி விரிய அதிர்ந்து பார்த்தாள்.  

“இப்போ என்ன செய்யப் போறீங்க?” கொடி பதட்டமாகக் கேட்க,

“இல்ல… சும்மா ஊதலாம்ன்னு தான்…” பதில் சொல்ல முடியாமல் பீஷ்மா தனது கண்களைத் தாழ்த்திக் கொள்ள, கொடியின் இதழில் மெல்லிய புன்னகை வந்து போனது.    

“ஹப்பா… கோபப்படாம இருக்கா..” என்று மனதினில் நிம்மதி கொண்டவன்,  

“என்ன மேடம் ரொம்ப கோபமா இருக்கீங்க போல இருக்கு?” பீஷ்மா பேச்சுக்கொடுக்க,

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல… நான் உங்களைப் பார்க்க வந்தேன்… ரொம்ப பிஸியா இருந்தது போல இருந்தது. அது தான் பேசாம போயிட்டேன்…” எதையோ யோசித்துக் கொண்டே சொன்னவளைக் கூர்ந்தவன்,

“என்ன ஆச்சு கொடி?” என்று கேட்க,

“ஒண்ணும் இல்லங்க.. என்னவோ உங்களை பார்க்கணும் போல இருந்துச்சு.. அதான்..” சொன்னவளின் கையை அழுத்தியவன்,

“என்னாச்சு என்ன பிரச்சனைன்னு என் கிட்ட சொல்லு…” பீஷ்மா வற்புறுத்தவும்,

“நான் செய்ததை எல்லாம் நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கேன்…” கண்ணீருடன் சொன்னவளைப் பார்த்தவனை பார்க்க முடியாமல்,  தனது முகத்தை மூடிக் கொண்டு,

“நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒண்ணும் ரொம்ப நல்ல பொண்ணு இல்லைங்க…” என்று கூறி குலுங்கி அழத் தொடங்கினாள்.                                              

“கொடி…” திகைப்புடன் அழைத்த பீஷ்மா, அவளை தனது மார்பில் புதைத்துக் கொள்ள,

“நீங்க பட்டுன்னு என்னை கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்ற அளவுக்கு எல்லாம் நான் நல்ல பொண்ணு இல்லைங்க.. நான் சொல்றதை எல்லாம் கேட்டுட்டு அப்பறம் என்னைப் பத்தி புரிஞ்சிக்கிட்டு நீங்க முடிவு பண்ணுங்க…” பீஷ்மாவைப் பிடித்திருந்தும், தனது மனசாட்சியை ஒதுக்கிவிட்டு அவனைத் திருமணம் செய்துக் கொள்ள விரும்பாத கொடி இப்படி சொல்ல, அவளைப் பற்றி மேலும் அவள் வாயாலேயே தெரிந்துக் கொள்ள நினைத்தான்.

“சரி சொல்லு… கேட்டுட்டு நான் என்னோட முடிவை சொல்றேன்…” என்றவன், அவளது முகத்தை நிமிர்த்தி,

“மொதல்ல கண்ணைச் துடைச்சிக்கிட்டு உன்னை நீயே ஆசுவாசப்படுத்திக்கோ.. மனசுல ஏகப்பட்ட உணர்ச்சி போராட்டம் இருக்கும் போது எதுவுமே தெளிவா செய்ய முடியாது…” அவளை சமாதானம் செய்ய, அவனது சட்டையிலேயே முகத்தைத் துடைத்துக் கொண்டவள், ‘ம்ம்.. ம்ம்…’ என்ற தலையசைப்புடன் தன்னை கட்டுக்கு கொண்டு வர முயன்றாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், தன் மனம் சிறிது சமாதானம் அடைந்ததும், பீஷ்மாவின் முகத்தைப் பார்த்தாள்.

“என்ன ஓகே வா இப்போ?” என்று அவன் கேட்கவும், அதற்கும் ‘ம்ம்’ என்று மண்டையை உருட்டியவள், அப்பொழுது தான், தான் அவனது அணைப்பில் இருக்கிறோம் என்பதை உணர்ந்தாள்.

“ஹையோ… சாரி…” என்றபடி விலகியவளைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தவன்,

“அது பரவால்ல… நீ சொல்லு… எதுக்கு இப்போ இப்படி ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்க? சொல்லு…” என்று அவன் மென்மையாகக் கேட்க,

“நான் ரொம்ப சுயநலவாதி…” அவள் சொல்லவும், எதுவுமே சொல்லாமல், புருவத்தை மட்டும் கேள்வியாக ஏற்றி இறக்கி அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

“என்ன ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க?” கொடி கேட்க,

“இன்னும் நீ ஒண்ணுமே சொல்லவே இல்லையே… அதுக்குள்ள நான் என்ன சொல்லணும்ன்னு நீ சொல்லு…” என்று கேட்டவன், ‘ஓ.. உம் கொட்டணுமா?’ என்று அவளிடமே பதில் கேள்வி கேட்டு, ‘சரி ம்ம்…’ என்று சொல்லவும், கொடி அவனை முறைத்தாள்.

“அம்மா தாயே… நீ சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லு. என்னன்னா… நீ டக்குடக்குன்னு ஓடி வேற போயிடுவ… சஸ்பென்ஸ் வச்சிட்டு போனா என்னால தாங்க முடியாது…” பீஷ்மா சொல்லவும், கொடி தலைகுனிந்தாள்.

அவள் வருத்தப்படுகிறாளோ என்று நினைத்தவன், “சரி சொல்லு… சும்மா உன்னை கிண்டல் பண்ணி கூல் பண்ண நினைச்சேன்…” என்றவன்,  அவளது கையை அழுத்த, மறுபடியும் அவள் ‘நான் ரொம்ப சுயநலவாதி…’ என்றே தொடங்க,

“மேல சொல்லு…” பீஷ்மா ஊக்க,

“நானும் எங்க அக்காவும் ரெட்டைப் பிறவிங்க…” கொடி சொல்லவும், பீஷ்மா திகைத்துப் போனான்.

“என்னது ரெட்டையா?” என்ற கேள்வி அவன் வாயில் இருந்து வராமல் இல்லை.

“ஆமா.. ரெட்டை தான். அவ பிறந்த பத்து நிமிஷம் கழிச்சு நான் பிறந்தேன்.. அதனால அவ எப்பவும் அக்கான்னு தான் தன்னை சொல்லிப்பா… ஊர்லயும் அப்படியே சொல்லுவாங்க…” என்றவள், அடைத்த தொண்டையை எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டு,

“ரெண்டு பேரும் ஒரே நேரத்துல அம்மா வயித்துல இருந்திருந்தாலும், என்னோட குணமும், அவளோட குணமும் வேற வேற தான்…. நான் எங்க அப்பா மாதிரி சுயநலவாதி… அதான் இப்போ தனியா தவிச்சிக்கிட்டு இருக்கேன்…” என்றவள், கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு,

“எங்க அக்கா மலர் இருக்காளே.. அவ ரொம்ப நல்லவ. எங்க அம்மா மாதிரியே குணம் கொண்டவ. ரொம்ப அமைதியும் கூட. கடின உழைப்பாளி. அவளை அந்த குணா பெண் கேட்டு வந்த போது எங்க அம்மா அதை ரொம்ப தீவிரமா எதிர்த்தாங்க. அப்போ ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்த குணா, எங்க அம்மா கழுத்துல கத்தியை வச்சு அவளை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்லச் சொன்னான்.

எங்க அம்மா மறுத்ததுனால அவங்க கழுத்துலயும், என்னோட கழுத்துலயும் கத்தியை வச்சு அழுத்தப் போனதைப் பார்த்து, அவ தன்னோட வாழ்க்கையை தியாகம் பண்ணத் துணிஞ்சவ…” கொடி சொல்லிக் கொண்டே வர,

“என்ன சொல்ற கொடி? தற்கொலை செய்துக்கிட்டாங்களா?” என்று பீஷ்மா வருத்தமாகக் கேட்க,

“இல்ல… நான் அவனையே கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்லிட்டா.. எனக்குத் தெரியும்… அவளுக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது… ஆனாலும், எங்க அம்மா உயிரையும், என்னோட உயிரையும் காப்பாத்த அவனையே கல்யாணம் செய்துக்க துணிஞ்சு நின்னா.

விதின்னு அவ அதை ஏத்துக்க பழகி இருந்த போது தான், அந்த குணா, துரையண்ணாவோட மனைவியோட கிணத்து மோட்டார் ரூம்ல தப்பா இருந்ததை பார்த்தவளுக்கு எப்படி இருந்திருக்கும். அதை எங்க அம்மாகிட்ட சொல்லி எப்படி அழுதா தெரியுமா?” கொடி கேட்க, கொடி அதை அனைத்தையும் நினைத்து வருந்துகிறாள் என்று நினைத்துக் கொண்ட பீஷ்மா,

“ரொம்ப கஷ்டமா இருக்கும் கொடி.. உங்க அக்காவைப் பத்தி நான் கேள்விப்பட்ட வரை அவங்க ரொம்ப நல்ல பொண்ணுன்னு தான் சொன்னாங்க. உங்க அக்கா ரொம்ப பாவம்… இதெல்லாம் கேட்கவே கஷ்டமா இருக்கே. அதை எல்லாம் தாங்கிக்கிட்ட அவ ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்க இல்ல..” என்று தனது மனதை தெரிவிக்க, அவனைப் பார்த்து ஒரு மாதிரி புன்னகைத்த கொடி,

“நீங்க எல்லாம் அவளைப் பத்தி கேட்டு இவ்வளவு வருத்தப்படறீங்க… ஆனா… நான்… அவ எதுக்காக ஒத்துக்கிட்டான்னு தெரிஞ்சிருந்தும், ‘நல்லவேளை அந்த நிலை எனக்கு வரலையேன்னு’ மனசுக்குள்ள எவ்வளவு சந்தோஷப்பட்டு இருக்கேன் தெரியுமா? அதை விட எங்க அம்மா எங்க ரெண்டு பேரையும் ஹாஸ்டல்ல சேர்க்க முடிவு செய்த போது கூட, எனக்கு நல்ல காலேஜ்ல தான் சீட்டு வேணும்ன்னு அவ்வளவு அடம் பிடிச்சேன். அவளோ அம்மாவோட கஷ்டத்தை உணர்ந்துக்கிட்டு சாதாரண காலேஜ் போதும்னு சொல்லிட்டு இருந்தா… ஆனா… நாங்க ஹாஸ்டல் போறதுக்குள்ள எங்க அம்மா ஒரு லாரில மோதி இறந்துட்டாங்க…” கொடி சொல்லிக் கொண்டே வர, பீஷ்மாவிற்கு இதை பலமுறை கேட்டிருந்தாலும், அவளது வாயால் கேட்கும் போது மனம் வலித்தது.

“அப்போ எங்க அம்மாவோட பொறுப்பை அவ தன் கையில எடுத்துக்கிட்டா.. அவ எந்த வேலைக்கும் போகல. நான் காலேஜ் போகணும்ன்னு சொன்ன போது கூட, பணம் இல்லாம எப்படி சேர்க்கறதுன்னு அவ திகைச்சு நின்ன போதும், அவளோட நிலைமையை கொஞ்சம் கூட நான் புரிஞ்சிக்காம, என்னை ஹாஸ்டல்ல சேர்க்கச் சொல்லி நான் அடம் பிடிச்சேன்.

‘எப்படின்னு’ அவ முழிச்சப்ப கூட, அந்த குணாகிட்ட பணம் கேட்டு என்னை படிக்க வைன்னு கொஞ்சம் கூட மனசுல கூடப் பொறந்தவங்கற ஈரம் இல்லாம நான் சொன்னேன்…” என்று தலையில் அடித்துக் கொண்டவள்,

“இப்போ சொல்லுங்க… நான் சுயநலவாதி தானே…” என்று கொடி கேட்க, பீஷ்மா என்ன சொல்வதென்றே புரியாமல் தடுமாறினான்.

13 COMMENTS

 1. nice to read ramya yenna romba work load jasthiya ma. romba nalla irnthathu pa. nan ninethen pei kathithan yendru athu mathiri than pokuthu.

  • thanks sasi … ama ma… konjam athigama iruku ,… laptop utkara mudiyala… athan … ini surusurupa poduvennu nambalamnu ninaikiren 😛

 2. Hai ramya dalu
  This updatela ippothan konjam romantic scene etti pakkuthu appuram kodi senja thappa ninachi feel panra illa appo avalum good girl than this update konjam late than its ok dalu
  Waiting for next update

  • hahahh thanks sulo … 🙂 🙂 ennoda school frienda nan appdi than koopiduven 😛 konjam late than … next update sikiram varum …

 3. Hei Ramya, appo Malar uyiroda irukkala?
  I am so happy to hear this
  appo Bishma yaarai marriage pannippan?
  Malar or avaloda younger sister Kodi>
  ohhhhh……ore suspense thangalai pa
  seekiram sunday ud podunga pa Ramya pl.

 4. Manda kayudhu rams mudiyala evalo suspense kodi inum enna ellam vediya thooki Poda poralo ana story romba nalla iruku na daily site ah check panren update poduringala nu keep it up….

 5. hi ramya….. sema twist la iruku story la padicha varai rmpa vithiyasamana kathai a iruku pei kathaila pei ivlo nalla pei a iruke 😃anywys super story keep rocking. ….

LEAVE A REPLY