SHARE

புரட்டி எடுக்கும்
இந்த அவஸ்தைகளை
ஒதுக்கி தள்ள இயலாத
இரட்டை வேட மனசாட்சி
என்னிடத்தில் இருந்த
எல்லாவற்றிலும் சொல்ல தெரியா
மாற்றம்
இதமான ஒரு
வர்புருத்தலால்
என் நிழலும் இப்போதெல்லாம்
காணமல் போக
உன் வீடு முற்றத்தில்
உலாவுவதை
ஊர் சொல்ல
வெட்கத்தில் ஒளிந்து கொள்ளும்
எனது கோபங்கள்!!

 

 

 

அழகிய சந்தன நிற சில்க் காட்டன் புடவையில், தலை நிறைந்த மல்லிகை சரத்துடன், கண்கள் நிறைய பயத்துடன், காபிகள் நிரம்பிய கப்புகளை ஏந்திக் கொண்டு கண்ணம்மா மாப்பிள்ளை வீட்டினர் முன் வர, அஜய் அவசரமாக மாப்பிள்ளை யார் என்று பார்ப்பதற்குத் ஆவலுடன் தேடினான்.

ஸ்ரீநிவாசன், ராதா தம்பதிகளின் அருகே அனுபமா அமர்ந்திருக்க, விஜயின் அருகே எங்கோ பார்வையை சுழல விட்ட படியும், மொபைலை சுற்றிக் கொண்டும் அஜயே அமர்ந்திருந்தான்.

“ஹையோ மாப்பிள்ளை நானா?” மனதினில் எழுந்த… சொல்ல முடியாத ஒரு உணர்வுடன் சேர்ந்து நிம்மதி தோன்ற, கண்ணம்மாவை அவன் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க, கண்ணம்மா அவனை கவனியாமல், கடந்து சென்றாள்.    

“என்னாச்சு இவளுக்கு… நம்மளைப் பார்க்காம போறா? அவ்வளவு கொழுப்பா போச்சா?” அவன் யோசித்துக் கொண்டிருக்க, மெல்ல சோபாவில் அமர்ந்திருந்த அஜயிடம், கண்ணம்மா ட்ரேயை நீட்டவும், அதில் இருந்த ஒரு கப்பை எடுத்துக் கொண்டவன், அவளது கைகளின் நடுக்கத்தைக் கண்டு அவளது முகத்தைப் பார்க்க, கண்களில் கண்ணீர் இருந்ததோ?? அவன் ஆராய்வதற்கு முன்பே, அவனது முகத்தைக் கூட பார்க்காமல், அவள் நகர்ந்து செல்ல, மனதில் தோன்றிய ஏமாற்றம் அவனை முகம் சுளிக்க வைத்தது.

“ஏன் Mr. அஜய் அவளைப் பார்த்து முகத்தை சுளிக்கறீங்க? அவளுக்கு என்ன குறைச்சல்…” முகத்தை சுளித்தவனிடம் அஜய் கேட்க, மாப்பிள்ளை அஜயோ… இவனை கவனியாமல், கண்ணம்மாவை ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.    

மிகவும் சிறு பிள்ளைப் போல இருந்தவளை பார்த்த மாப்பிள்ளை அஜய்க்கு, அவளைத் தன் மனைவியாக எண்ணத் தான் முடியாமல், “அத்தான்… இந்த பொண்ணு வேண்டாம்… எப்படியாவது அப்பாகிட்ட சொல்லிடுங்க… ரொம்ப சின்னப் பொண்ணா இருக்கா…” என்று முணுமுணுக்க, விஜய் உதட்டைப் பிதுக்கினான்.

“இவ தான் உன்னோட மனைவியா வரணும்ன்னு உங்க அப்பா முடிவு செய்துட்டார்…. இன்னைக்கே… உடனே நிச்சயமும்… நடக்கப் போகுது..” விஜய் சொல்லவும், அஜயின் பி. பி. எகிற,

“ஹையோ… எனக்கு இந்த பொண்ணு வேண்டாம்… வேண்டாம்… சொன்னா கேளுங்களேன்… என்னை விட்டுடுங்க… அவ என்னை பேசியே கொல்லுவா…” வாய் விட்டு கத்தியவனை, கார்த்திக் உலுக்கி எழுப்ப, அஜய் பதட்டத்துடன் எழுந்து அமர்ந்தான்.     

“என்னடா அஜய்… என்னாச்சு?” கார்த்திக் சிரித்துக் கொண்டே அவனுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுக்கவும், அவனது சத்தம் கேட்டு ராதா அறையை விட்டு பதட்டத்துடன் ஓடி வர, அஜய் பேந்த விழித்துக் கொண்டிருந்தான்.

“என்ன மச்சான் நீ… உன்னை யாரோ காலையும் கையையும் கட்டி தூக்கிட்டு கல்யாண மேடைக்கு போற மாதிரி கத்திட்டு இருக்க… என்னடா ஆச்சு?” சிரிப்பை அடக்க முடியாமல் கார்த்திக் கேட்கவும், தண்ணீரை குடித்து முடித்தவன், கார்த்திக்கின் சிரிப்பை கவனியாமல்,

“நான் ஒரு வீட்டுக்குள்ள போறேன்… அந்த வீட்ல பொண்ணு பார்க்கற சடங்கு நடந்துட்டு இருக்குடா கார்த்திக்… மாப்பிள்ளை யாருன்னு நானும் ஆவலா திரும்பிப் பார்த்தா… எங்க அப்பா அம்மா… அத்தான் எல்லாரும் உட்கார்ந்து இருக்காங்க… பொண்ணு வந்து காபி கொடுக்கறா… அவளைப் பார்த்துட்டு நான் வேண்டாம்ன்னு அத்தான்கிட்ட சொல்றேன்… ஆனா… அவர் உடனே நிச்சயம்ன்னு சொல்றார்… யாருமே நான் வேண்டாம்ன்னு சொல்றதை கேட்கவே இல்ல கார்த்திக்… அது தான் அந்த பொண்ணுக்கு கேட்கற மாதிரி கத்தினேன்…” தனது கனவை நிஜமாக நடந்தது போல சொன்னவனை, அதிர்ச்சியுடன் ராதா பார்த்துக் கொண்டிருக்க, கார்த்திக் அஜயைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

“அஜ்ஜூ கண்ணா…” என்று ராதா கண்ணீருடன் அணைத்துக் கொள்ள,  

அப்பொழுது தான் அஜய்க்கு அவர் இருக்கும் நினைவு வந்தவனாக… “ஹையோ அம்மா… நீ வேற ஏன்ம்மா எதையோ நினைச்சு அழுதுக்கிட்டு இருக்க… எங்க இருந்து தான் உடனே டேங்க் ஓபன் ஆகுமோ… எனக்கு ஏன் இப்படி எல்லாம் கனவு வருதுன்னு தெரியல… இன்னைக்கு கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருந்தேன்… நீங்க ஒரு பக்கம் கல்யாணம் செய்துக்கோன்னு பண்ற கூத்து… எல்லாம் சேர்ந்து இப்படி ஒரு காம்ப்ளிகேட்டட் கனவு வந்திருக்கு போல… என்னை எங்க கல்யாணம் செய்து வச்சிருவீங்களோன்னு பயந்து கத்திட்டேன்..” ராதாவைத் தேற்றும் விதமாக அவன் சொல்ல,

“எங்களை மன்னிச்சிரு அஜ்ஜூ… எங்களால தான் நீ இப்போ கல்யாணத்தையே வெறுக்கற அளவுல இருக்க… உங்க அப்பாவுக்கும் உன் மேல பாசம் இல்லாம இல்லடா..” ராதா தன்னிலை விளக்கம் சொல்லத் தொடங்கவும், அஜய் போர்வையை தலை வரை போர்த்திக் கொண்டு படுக்க, அந்த செயலுக்கான காரணம் புரிந்தவராக ராதா அறைக்குச் செல்ல, கார்த்திக், அஜயின் தலையின் அருகே சென்று அமர்ந்தான்.

“நீ இன்னும் போகலையா?” அஜய் போர்வைக்குள் இருந்தே கேட்க,

“அந்த பொண்ணு கண்மணி தானே… அவ தானே நிறைய பேசுவா… ரேடியோல பேசறது போலவே பேசிப் பேசியே கொல்றாளோ?” ஆவலே உருவாக கார்த்திக் வினவவும், போர்வையை விலக்கி அஜய் அவனை முறைத்தான்.

“ஹ்ம்ம்… எல்லாம் காலக் கொடுமைடா சாமி… இவர் கனவுல ஒரு வீட்டுக்கு போவாராம்.. அங்க ஒருத்தன் பொண்ணு பார்த்துட்டு இருப்பானாம்… அந்த மாப்பிள்ளை யாருன்னு பார்த்தா… இவரே மாப்பிள்ளையா உட்கார்ந்து இருப்பாராம்… இப்படி எல்லாம் அசட்டுத்தனமா கனவு காணறது இவர் தப்பில்லையாம்… பொண்ணு யாருன்னு கேட்டா என்னை முறைப்பாராம்…” கார்த்திக் புலம்பிக் கொண்டே, இன்னொரு சோபாவில் விழ, அஜய்யின் மனம் கண்ணம்மாவிடம் தாவியது…

விடிய விடிய கனவையும் நினைவையும் நினைத்துக் கொண்டிருந்தவன், அப்படியே உறங்கியும் போக, அவனது செல்போன் தனது பணியைச் செய்து, அவனை எழுப்பியது…

“எவன்டா அவன் காலையிலயே எழுப்பறது?” கார்த்திக் தூக்கத்தில் புலம்ப, அஜயோ புத்துணர்வுடன் எழுந்து, கண்மணியிடம் பேசிவிட்டு வந்தான்.

“என்னடா அஜய்… காலையிலயே அவ்வளவு அவசரமா எங்க போயிட்டு வர?” ராதா கேட்கவும், அஜய் கார்த்திக்கைத் திரும்பிப் பார்க்க, அவனோ நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

“சப்பா… இந்த கோழி மூட்டி. கண்மணிய பத்தி அம்மாகிட்ட எதுவுமே சொல்லல…” நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டவன்,

“ஆபீஸ் கால்ம்மா… அது தான் இங்க இருந்தா சரியா கேட்காதுன்னு மாடிக்கு போயிட்டு வந்தேன்…” என்று சமாளித்தவன், அவர் சமையலுக்குத் தயாராக வைத்திருந்த காய்களைப் பார்த்து,

“அம்மா… டிபன் பாக்ஸ்ல கொஞ்சம் கூட சேர்த்து வைங்க… உங்க சமையல் என் பிரெண்ட்டுக்கும் ரொம்ப பிடிச்சிருக்காம்… அவங்க வந்து சாப்பிட்டா… எனக்கு இருக்கவே மாட்டேங்குது…” பாவமாகச் சொல்லவும், ராதா புன்னகையுடன் ஒப்புக் கொண்டார்.

“நான் ஜிம்முக்கு போயிட்டு வரேன்…” மீண்டும் அவன் வெளியில் கிளம்ப, அஜயின் சத்தம் கேட்டு முழித்துக் கொண்டிருந்த கார்த்திக், அவன் கண்ணம்மாவிற்கும் சேர்த்து உணவு கேட்டதில் குழம்பினான்.

“அம்மா… எனக்கும் ஒரு கால் இருக்கு… நானும் வரேன்…” என்றவன், நேராக சென்று விஜய்க்கு அழைத்து நடந்தவற்றை சொல்லச் சொல்ல, விஜயோ கேட்டு மனதில் குழம்பினான்.  

“அப்படியா… கண்ணம்மா கிட்ட அஜய் சிரிச்சு பேசறானா?” அதே குழப்பத்துடன், விஜய் கேட்க,

“ஆமா… அத்தான்… அதுவும் அவ வந்து இவன்கிட்ட என்னவோ உரிமையா பேசறதும்… இவன் கோபப்படாம சிரிச்சு பேசறதும்.. பார்க்கற எனக்குத் தான் தலை சுத்துது..”

“கோபமே படலையா?” விஜய் மீண்டும் கேட்கவும்,

“ஆமா அத்தான்…. அவளை இவன் கத்தினது எல்லாம் போன ஜென்மமோங்கற அளவுக்கு இருக்கு… அத்தான்… இவன் கண்மணி ஜஸ்ட் பிரெண்ட்ன்னு சொல்லி எஸ் ஆகிடுவானோ… நம்ம கஷ்டப்பட்டு அவங்களை மீட் பண்ண வச்சது எல்லாம் வேஸ்ட்டா போயிடுமே…” கார்த்திக் வருந்திக் கொண்டிருக்கவும், விஜய் சிரிக்கத் தொடங்கினான்.

“டேய்.. உனக்கு என்ன… தூக்கம் பறி போகக் கூடாது அவ்வளவு தானே… பொண்ணு யாரா இருந்தா என்ன? லவ்ன்னு வந்துட்டா… காலையில கண்ணு முழிச்சதுல இருந்து ராத்திரி தூங்கற வரை போன்… மெசேஜ்ன்னு தானே சுத்திட்டு இருப்பாங்க… சோ… டோன்ட் வர்ரி…” விஜய் நம்பிக்கை கொடுக்கவும், கார்த்திக் பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

“சரிடா… கொஞ்சம் வேலை இருக்கு… இன்னும் ஒரு வாரம் அவனுக்கு டைம்… அதுக்குள்ள என்ன தான் செய்யறான்னு பார்ப்போம்…  இன்னைக்கு என்ன நடக்குதுன்னு சொல்லு…” என்று விஜய் கூறிவிட்டு போனை வைக்கவும்,

“ஹப்பா… நம்ம வேலை முடிஞ்சது நாராயணா…” என்று நினைத்துக் கொண்ட கார்த்திக், அலுவலகம் கிளம்பினான்.

மனதில் ஒரு எதிர்ப்பார்ப்புடனே அலுவலகம் சென்ற அஜய், வண்டியை நிறுத்திவிட்டு, வழக்கமாக நேராக உள்ளே செல்பவன், அன்று ஏனோ உள்ளே செல்ல மனமில்லாமல், கண்ணம்மாவின் வண்டியைத் தேடினான்.

அவள் வந்ததற்கான அறிகுறி தென்படாமல் போகவும், தனது வண்டியில் சாய்ந்துக் கொண்டு, கார்த்திக்கிற்கு அழைத்தவன், “கார்த்திக் நீ எங்க இருக்க?” என்று கேட்டான்.

“நான் தான் அப்போவே ஆபீஸ் வந்துட்டேனே… என்னாச்சுடா… ஏதாவது ப்ரோப்லமா?” சிறிது பதட்டத்துடன் கார்த்திக் மீண்டும் கேட்க,

“சாப்பாடு எடுத்துட்டு வந்தியா?” சம்பந்தமே இல்லாமல் விழுந்த அஜயின் கேள்வியில் திகைத்தவன்,

“என்ன அஜய் புதுசா கேட்கற… நான் தான் எடுத்துட்டு வந்துட்டேனே… அம்மா டைனிங் டேபிள் மேல வச்சிருந்தாங்களே… நான் எதை மறந்தாலும் மறப்பேன்… இதை மறப்பேனா?” குழப்பமாக கார்த்திக் பதில் சொல்ல, அடுத்து கேட்ட அஜய் கேள்வியில் கார்த்திக் கடுப்பானான். 

“கார்த்திக் நீ எங்க இருக்க… நான் ஆபீஸ் வந்துட்டேன்…” மீண்டும் முதலில் இருந்தே அஜய் தொடங்கவும்,

“ஏண்டா ராசா… நான் ஆபீஸ்ல தான் இருக்கேன்… உனக்கு என்ன வேணும்… ஏன் இன்னைக்கு இந்த அலும்பு பண்ணிட்டுத் திரியற… பொழுது போகலையா?” கார்த்திக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, கண்ணம்மா வரவும், அவளைப் பார்த்து புன்னகைத்து, கையசைத்தவன்,

“ஆபீஸ் உள்ள உட்கார்ந்துக்கிட்டு என்னடா பேச்சு வேண்டி இருக்கு… பேசாம வேலைய பாரு… போனைப் போட்டு தொண தொணன்னு..” சத்தமாகவே சலித்துக் கொண்டபடி போனை அணைத்தவன், அப்பொழுது தான் வந்தது போல, ஹெல்மெட்டை வண்டியில் மாட்டிவிட்டு, தலையை கண்ணாடியில் சரி செய்து கொள்ள, கண்ணம்மா அவன் அருகில் வந்து நின்றாள்.

“ஹாய்…” மெல்லிய குரலில் அவள் சொல்லவும், தனது பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டவன்,

“ரொம்ப வெய்யிலா இருக்கு இல்ல.. வா.. உள்ளே போகலாம்… இங்க ரொம்ப புழுங்குது..” என்று சொல்லவும், கண்ணம்மா சுற்றி முற்றி கண்களை சுழற்றி அவனை கேள்வியாகப் பார்க்க, வானமோ மெல்லிய பூந்தூறலாக தூறிக் கொண்டிருந்தது…

“அஜய்… நீங்க நேத்து சரியா தூங்கலையா?” கண்ணம்மா கேட்டவுடன், தூக்கி வாரிப் போட்டு அவளைப் பார்த்தவன்,

“உனக்கு எப்படித் தெரியும்? அதெல்லாம் இல்லையே… நல்ல தூக்கம்…” சமாளித்தவனின், முகத்தைப் பார்த்த கண்ணம்மாவிற்கு சிரிப்பு பொங்கியது.

“அது என்ன பெரிய விஷயமா அஜய்… காலையில இருந்தே மழை தூறிட்டு இருக்கு… அதனால சென்னையே ஊட்டி ரேஞ்சுக்கு சில்லுன்னு இருக்கு.. நீங்க என்னடான்னா… வெயில்ன்னு சொல்றீங்க… வேர்க்குதுன்னு சொல்றீங்க… அதனால தான் கேட்டேன்…” காரண காரியத்தோடு அவள் விளக்கம் சொல்லவும், அஜய்யின் முகத்தில் அசடு வழிய, கண்ணம்மா அவனைப் பார்த்து சிரித்தாள்.

“இன்னைக்கு நாம ஷாப்பிங் போகலாமா?” கண்ணம்மா கேட்கவும்,

“என்ன விளையாடறியா?” அஜய் அவளை முறைக்க,

“எனக்கு வாங்க ஒண்ணும் இல்லைங்க… அதெல்லாம் உள்ள போன உடனே நாம விண்டோ ஷாப்பிங் செய்துக்கலாம்… உங்களுக்கு வாங்க தான் நாம கடைக்குப் போகணும்…. கர்ல் ஆன் பெட் வாங்கினா… எந்த தொல்லையும் இல்லாம தூங்கலாம்ன்னு டி.வி.யில சொல்றான் இல்ல…” சிரிப்பை அடக்கிக் கொண்டு அவள் சொல்ல, அஜய் அவளுக்கு பத்திரம் காட்டினான்.

“உனக்கு ரொம்ப வாயாகி போச்சு… ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டேன்… சொல்லிட்டேன்…” அவனது மிரட்டலை தூசெனத் தட்டிச் சிரித்தாள்.  

“கயல் உங்களை ரொம்ப விசாரிச்சதா சொல்ல சொன்னா…” கண்ணம்மா பேச்சை வளர்க்க,  

“ஓ…. எந்த விசாரிப்பு?” அஜய் போலியான பயத்துடன் கேட்க, கண்ணம்மா சிரிக்க, அவனும் அவளுடன் இணைந்து சிரித்தான்.

ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டே, தங்கள் இடத்திற்கு வந்த கார்த்திக்கைப் பார்த்து அசட்டை செய்த அஜய், தனது இடத்தில் அமர, கார்த்திக் கொலை வெறியுடன் நின்றிருந்தான்.

“ஹாய் கார்த்திக்… எப்போடா ஆபீஸ்க்கு வந்த? எதுக்கு இப்போ இப்படி அனல் மூச்சு விட்டுட்டு இருக்க?” அஜய் கேட்கவும், அவனைப் பார்த்து முறைத்த கார்த்திக்,

“பார்க்கிங்ல நின்னுக்கிட்டு உனக்கு என்னடா போன் பண்ணி நலம் விசாரிக்க வேண்டி இருக்கு…” கார்த்திக் கேட்கவும், கண்ணம்மா அஜயைப் பார்க்க,

“நானா… நான் எங்கடா போன் பேசினேன்…” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்ட அஜயும் அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

“நீ செய்யறது ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்… அப்போ நேத்து கனவுல வந்தது கண்ணம்மாவா?” மெல்லிய குரலில் கார்த்திக் கேட்கவும், அதற்கும் அஜயிடம் இருந்து புன்னகையே பதிலாக வர, தலையில் அடித்துக் கொண்டவன்,

“பெரிய புன்னகை மன்னன்னு நினைப்பு… டேய் கமல் ரசிகா… நீ இப்படி எதுக்கு எடுத்தாலும் சிரிச்சே கொல்லாத… நான் என் வேலைய பார்க்கப் போறேன்…” தனது இடத்திற்குச் செல்ல,

“அது தான் நான் அப்போவே சொன்னேன்…” கார்த்திக்கை எட்டாத குரலில் அஜய் சொல்லவும், அவனது இந்தத் தோழமையும், ஜாலியாக கலாய்க்கும் தன்மையையும் முதன்முதலில் பார்த்த கண்ணம்மா, அதிசயமாக அஜயை பார்க்க, அவனோ, முகத்தில் அத்தனை நேரம் இருந்த புன்னகை மறைய, தனது வேலையைத் தொடங்கி இருந்தான்.

“அஜய்க்கு இவ்வளவு கேலி செய்து சிரிக்கக் கூடத் தெரியுமா?” மனதினில் வண்டாக குடைந்த கேள்வியை அவனிடம் கேட்டு விடலாமா? என்று கண்ணம்மா யோசித்துக் கொண்டிருக்கும் போதே,

“கண்ணம்மா…. இங்க வா…” என்று அஜய் அழைத்தான்.

“என்ன அஜய்..?” தன்னிடமும் ஏதோ வம்பு வளர்க்கப் போகிறான் என்று ஆவலாக அவள் காத்திருக்க, அவனோ,

“உனக்கு மெயில் ஒண்ணு பண்ணி இருக்கேன் பாரு… உனக்கு ப்ரோபேஷன் பீரியட் முடிஞ்சு போச்சு… ஹெச். ஆர். மெயில் பண்ணி இருக்காங்க…” என்றவன், அவளுக்கு வாழ்த்துச் சொல்ல, தனது வேலை நிரந்தரம் ஆன சந்தோசம் ஒருபுறம் இருந்தாலும்… அஜயுடன் வம்பு பேச முடியவில்லையே என்ற எண்ணம் எழுந்தவுடன், அவளுக்கு வருத்தமாக இருந்தது.

“தேங்க்ஸ் அஜய்…” என்றவள், வேலையைத் தொடங்க, நேரம் கடக்கத் தொடங்கியது…

திடீரென்று, “அஜய்… கொஞ்சம் இங்க வாங்களேன்…” கண்ணம்மா அழைக்கவும், அஜய் முறைத்துக் கொண்டே அவள் அருகில் வர, சுவாதி அஜயைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல், திரும்பிக் கொண்டாள்.

“கண்ணம்மா நிறைய வேலை இருக்கு… விளையாடாம என்னன்னு சொல்லு…” அஜய் கொஞ்சம் சீரியாசாகக் கேட்கவும்,

“ஒரு அஞ்சு நிமிஷம்… விண்டோ ஷாப்பிங் பண்ணலாம்ன்னு சொன்னேன் இல்ல…” கண்ணம்மா அவனை அழைக்கவும், அஜய் ஒரு மாதிரி அவளைப் பார்த்துக் கொண்டே அவள் அருகில் சென்றான்.

“கண்ணம்மா… என் பொறுமையா ரொம்ப சோதிக்கிற… இப்போ எதுக்கு ஆபீஸ் நேரத்துல விண்டா ஷாப்பிங்க்கு கூப்பிடற… என்னால எங்கயும் வெளிய வர முடியாது…” கண்டிப்புடன் சொல்லவும், கண்ணம்மா ஒரு மாதிரி சிரித்தாள்.

“நாம எங்கயும் வெளிய போகப் போறது இல்ல… இங்கப் பாருங்க… இது விண்டோ… இதுல ஷாப்பிங் பண்ணினா… அது தான் விண்டோ ஷாப்பிங்…” கண்ணம்மாவின் பதிலைக் கேட்ட அஜய், பல்லைக் கடித்தான்.

“நல்ல ஆராய்ச்சி செய்திருக்க…. இப்போ என்னை எதுக்கு கூப்பிட்ட…”

“நாளைக்கு ஈவெனிங் என்ன டிரஸ் போடறதுன்னு ஒரே குழப்பமா இருக்கு… இதுல எது ஓகேன்னு சொல்லுங்க… அதுக்குத் தகுந்தது நான் செட் நகை வாங்கணும்…” அவள் கேட்கவும், அஜய் அவளை முறைத்தான்.

“என்னைப் பார்த்து முறைக்கிற நேரத்துக்கு நீங்க இதைப் பார்த்து சொல்லலாம் இல்ல… நான் கொஞ்சமாவது பார்க்கற மாதிரி இருக்கணும் இல்ல…” அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனது கோபத்தில் எண்ணெய்யை ஊற்ற, அவளை அறைந்துவிடும் வேகம் அஜய்க்கு எழுந்தது…

அந்த கோபத்தைக் கண்டு தனக்குள் திகைத்தவன், “Mr. அஜய்.. இந்த அறையற வேலை எல்லாம் வேண்டாம்… ஏற்கனவே அதுனால வந்த கெட்ட பேர் எல்லாம் போதும்… உங்க கோபத்தைக் கண்ட்ரோல் பண்ணுங்க…” மனதின் எச்சரிக்கை மணியில், பாக்கெட்டிற்குள் கைகளை நுழைத்துக் கொண்டு, திரையை வெறித்தான்.

“பொண்ணுங்க டிரஸ் பத்தி எனக்கு என்ன தெரியும்? பக்கத்துல சுவாதி இருக்கா… அவங்ககிட்ட கேட்டுக்கோ…” அங்கிருந்து நகர முற்பட,

“நான் ஒரு பத்து செலக்ட் பண்ணி வச்சிருந்தேன்…. அதுல இருந்து இந்த நாலு செலக்ட் பண்ணி இருக்கு… இதுல எனக்கு ஒண்ணு சொல்லுங்க ப்ளீஸ்…” கண்களை சுருக்கி அவள் கெஞ்சவும், அந்த நான்கின் மீதும் அவன் பார்வை திரும்ப, ‘நடத்து’ என்பது போல சுவாதி சைகை செய்ய, கண்ணம்மா அஜயின் முகத்தைப் பார்த்தாள்.

“அந்த கிரீன் கலர் உனக்கு நல்லா இருக்கும்…” என்றவன், சிறிது தூரம் நகர்ந்து, மீண்டும் அவள் அருகில் வந்து,

“இனிமேலாவது கொஞ்சம் வேலையப் பாரு… புரியுதா… என்கிட்டே இந்த விளையாட்டை எல்லாம் வச்சுக்காதே… என்ன நடக்கும்ன்னு எனக்கேத் தெரியாது… ஆபீஸ் நேரத்துல விண்டோ ஷாப்பிங் பண்றது… அது இதுன்னு ஏதாவது செய்துட்டு இருந்த… தொலைச்சிருவேன் தொலைச்சு…” உறுமிவிட்டு சென்றவனைப் பார்த்த கண்ணம்மாவின் கண்கள் கலங்க, சுவாதி அவள் கையை அழுத்தினாள்.

“அவனும் உன்னைத் திட்டக் கூடாதுன்னு தான் கண்ட்ரோல் பண்றான் கண்ணம்மா… நீ விண்டோ ஷாப்பிங்ன்னு சொல்லும் போது, அவன் முகத்துல வந்த கோபத்தையும் பார்த்தேன்… அதை அடக்க, அவன் பேன்ட் பாக்கெட்ல கை விட்டுக்கிட்டதையும் பார்த்தேன்… அவன் முகம் என்னம்மா சிவந்தது தெரியுமா?” சுவாதி அஜயின் நிலையைச் சொல்லவும், கண்ணம்மா உதடு பிதுக்கினாள்.

“உன்னை திட்டக் கூடாதுன்னு அவனும் பார்க்கறான்… அதுவே நல்ல முன்னேற்றம் தானே… ஒரே நாளுல எதுவும் நடக்காது கண்ணம்மா..” அவளது தேறுதல் மொழி ஓரளவு அவளை சமாதானம் செய்யவும், அஜய் தேர்வு செய்ததை எக்ஸ்ப்ரெஸ் ஆர்டர் செய்துவிட்டு, தனது பணியைத் தொடங்கினாள்.

மதிய இடைவேளையும் வந்தது… சுவாதியும் கண்ணம்மாவும் அவசர அவசரமாக உண்டுவிட்டு எங்கோ செல்ல, அஜய் பெரிதும் ஏமாற்றமாக உணர்ந்தான்.

“ச்சே.. காலையில அவ நல்லா தானே பேசினா… நான் தான் திட்டி எல்லாத்தையும் கெடுத்துட்டேன்…” தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தவன், அதிகம் இருந்த உணவை உண்ண முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்த கார்த்திக்கிற்கு சிரிப்பு பொங்க, “கொடு… எனக்கு ரொம்ப பசிக்குது…” என்று வாங்கிக் கொள்ள, அவனிடம் நீட்டினான்.

“சாப்பாடுல ஒவ்வொரு பருக்கைக்கும் யாருக்கு போய் சேரணும்னு அது முளை விடும் போதே ஆண்டவன் எழுதி இருப்பானாம்…” அதை உண்டுக்கொண்டே கார்த்திக் சொல்லவும், திகைப்புடன் பார்த்த அஜய்,

“நேத்து அவ எடுத்ததால எனக்கு போதாம போச்சு… அதனால அம்மாவ வைக்கச் சொன்னேன்… அம்மா சாப்பாடையும் சேர்த்து வச்சிருப்பாங்கன்னு எதிர்ப்பார்க்கல…” விளக்கம் சொன்னவன், கார்த்திக் உண்டு முடித்ததும், தனது சீட்டிற்குச் சென்றான்.

ஒருமணி நேரம் கடந்து, கண்ணம்மாவும் சுவாதியும் வந்த பொழுது, கண்ணம்மாவின் முகம் மேலும் பொலிவாக இருப்பதை பார்த்த அஜய்க்கு தான் கோபம் பொங்கியது..

“இவ என்னை வெறுப்பேத்தவே செய்யறாளா?” என்று நினைத்துக் கொண்டவன், அவளிடம் கவனம் செல்லாமல் இருக்க, மிகவும் போராடிக் கொண்டிருந்தான்.

வேலை முடிந்து, அனைவரும் வீட்டிற்கு கிளம்பவும், அவனிடம் வந்த கண்ணம்மா… “அஜய்… நான் கிளம்பறேன்… என்னோட வேலை முடிஞ்சது..” என்று சொல்லவும், அவளது முகத்தைப் பார்க்காமல், அவனும் தலையசைத்தான்.

“ஏன் வாயைத் திறந்து சரின்னு சொன்னா என்னவாம்…” என்று அவனுக்கு கேட்கும்படியாகவே முணுமுணுத்தவள்,

“லீவ்க்கு அப்ளை செய்துட்டேன்.. நீங்க இன்னும் அப்ரூவ் செய்யல…”

“ஹ்ம்ம்… செய்துடறேன்..” என்றவன், அதை செய்து முடிக்கவும்,

“நீங்க கிளம்பலையா?” அவளது அடுத்த கேள்விக்கு…

“கொஞ்சம் வேலை இருக்கு… போக கொஞ்சம் நேரம் ஆகும்.. நீ கிளம்பு… இன்னும் சொச்சம் மிச்சம் ஷாப்பிங் இருக்குமே…” ஒருமாதிரிக் குரலில் அவன் சொல்ல, ‘ஹ..ய்…’ என்று அவள் வாய் பிளந்தாள்.

“என்ன?” எரிச்சலாக அவன் கேட்கவும்,

“இல்ல… எப்படி நான் ஷாப்பிங் தான் போகப் போறேன்னு சரியா சொல்றீங்க… போயிட்டு தான் போகணும்..” உற்சாகமாக சொன்னவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன்,

“சரி… கிளம்பு..” என்று பேச்சை முடித்துக் கொண்டான்.

“என்னாச்சு இவருக்கு… ஏன் இப்படி முகத்தை திருப்பராரு…” மனம் சுணங்க, எண்ணிக் கொண்டே வந்த கண்ணம்மாவின் வண்டியும் அவளைச் சோதித்து.

பலமுறை முயன்றும், அவளது வண்டி இயங்காமல் போக, அலுவலகம் விட்டு சென்றவர்கள், இரண்டொருவர் வண்டியை கிளப்ப முயல, எதற்கும் அஞ்சாமல், வண்டி அசையாமல் இருந்தது.

வேறு வழியில்லாமல், அஜயைத் தேடிச் சென்றவள், அப்பொழுதும் லோகேஷுடன் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டு, அமர்ந்திருந்தவனைப் பார்த்து கோபம் வர,

“அங்க நான் வண்டி ஸ்டார்ட் ஆகாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்.. நீங்க இங்க உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க… வந்து என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க..” அவனிடம் தைரியமாக அதைச் சொல்ல, ஒத்திகைப் பார்த்துக் கொண்டே சென்றாள்.

அவளைப் பார்த்ததும், “ஹே கண்ணம்மா… என்ன நீ திரும்ப வந்துட்ட… ஏதாவது மறந்து போயிட்டயா?” லோகேஷ் கேட்கவும், அவளைத் திரும்பிப் பார்த்த அஜய் கேள்வியாக புருவம் உயர்த்த,

“வண்டி ரிப்பேர் போல… ஸ்டார்ட் ஆகவே இல்ல… இவ்வளவு நேரம் அதுகூட போராடிட்டு தான் வந்தேன்” பாவமாகச் சொன்னவளைப் பார்த்த அஜயின் மனம் இளகியது.

“நான் வேணா கேப்க்கு கால் பண்ணவா? இல்ல ஆபீஸ் கேப்க்கு சொல்லவா?” லோகேஷ் அவளது உதவிக்கு வர,

“இல்ல லோகேஷ்… நானும் வீட்டுக்கு கிளம்பிட்டேன்.. போற வழியில பஸ்ஸ்டாப்ல விட்டு போறேன்…” என்ற அஜய், தனது சிஸ்ட்டத்தை அமர்த்திவிட்டு, கிளம்பினான்.

“வண்டி இங்கேயே இருக்கட்டும்… காலையில எனக்குத் தெரிஞ்ச மெக்கானிக்கிட்ட சொல்றேன்…” என்றவன், தனது வண்டியைக் கிளப்பி,

“வண்டியில ஏறு… கொண்டு விடறேன்…” என்று வாய்த் திறக்கவும், முதல்முறை அவனுடன் பயணம்… மனதினில் அவனுடன் கழிக்கும் தருணங்களை பதிக்கத் தொடங்கினாள்.      

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்…

12 COMMENTS

 1. Superb ud sis. Aj kanuvu scene padichathum sema siripu???. Payapulla enna ma engala yemathitan. Kalakiringa sis?. Next ud sikirama kudutha nalla irukum??.

  • தேங்க்ஸ் ஹேமா …. ஹஹஹா …. நிஜமாவே மாட்டி விட்டா போச்சு 😛

  • தேங்க்ஸ் ஸ்ரீ…. ஆமா …. நம்ம அஜய் தெளிவு கண்னாரியம் இல்ல 😛

  • தேங்க்ஸ் அருணா … என்ன தெளியல அருணா … சொல்லுங்க தீர்த்துடலாம்

 2. Rammy ena nadakuthu inga thurvasa muni ipidi anthar bulti adikurarau?pesa madanthai over a pesuthu,ithu kathal seyura mayamnu soluvangala?pinna epidi inthe Mataram?epo ivanga loda past veliya theriyum?

 3. sir’ku kalyana kanavu vanthiruchi…
  hahaha

  ramz, enakkoru doubt???
  kannamma vandiyai keduththathu intha PKS sir dhana???
  enakkenamo avar mela dhan konjam doubt varuthu…

LEAVE A REPLY