SHARE

உன் வெறுப்பான
கோப உஷ்ணத்தில்
மெழுகாய் கரைந்தாலும்
மீண்டும் உனக்கென
உருகத் தவிக்கும்
என்னை
எங்கே சென்று
திருத்திக் கொள்ள !!

 

 

விடுப்பு வேண்டி மெசேஜ் அனுப்பி இருந்த கண்ணம்மா, புத்துணர்வுடன் தனது இருக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்த்த அஜயின் முகத்தில், முதலில் ஆச்சரியமும், பின்பு புன்னகையும் அரும்பியது…. அதைக் கண்ட காரத்திக் புரியாமல் அஜயைப் பார்த்தான்…

“ஹே… என்ன லீவ்ன்னு மெசேஜ் பண்ணிட்டு இங்க வந்து உட்கார்ந்து இருக்க… உடம்பு எப்படி இருக்கு?” ஆச்சரியமாக அவன் கேட்க, கார்த்திக் தலையிலேயே அடித்துக் கொண்டான்.

‘கண்மணி கிட்ட நேர்ல பேச சொன்னா… புது பொண்ணு தலைய குனிஞ்சிக்கிட்டு நிக்கற மாதிரி நின்னு தொலைஞ்சான்… இப்போ என்னடான்னா… பார்த்தாலே பிடிக்கலைன்னு சொல்ற கண்ணம்மாகிட்ட, முகத்துல பல்பு வச்சா எரியற மாதிரி பேசறானே… இவனோட கேரக்டர புரிஞ்சிக்கவே முடியலையே…” கார்த்திக் மனதினில் நினைத்துக் கொண்டிருக்க,

“இல்ல சும்மா தான்… உங்க பர்த்டே அதுவுமா கொஞ்சம் டென்ஷன் படுத்திப் பார்க்கலாமேன்னு தான் அப்படி மெசேஜ் அனுப்பினேன்…” கண்களை விரித்து சுருக்கி, அவள் சொன்ன விதத்தில், அஜய்க்கு கோபத்திற்கு பதிலாக புன்னகையே அரும்பியது…

“என்னை டென்ஷன் செய்து பார்க்கறதுல அவ்வளவு பிடித்தம்…. ஹ்ம்ம்.. அப்போ வேலை தெரியாம திட்டு வாங்கறதும் அதுல தான் சேர்த்தியோ?” அவன் கேட்கவும், தலை தானாக கவிழ,

“அது நிஜமாவே தெரியாம தான் கேட்கறேன்…” மெல்லிய குரலில் சொன்னவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு, தன்னுடைய இடத்தில் சென்று அமர, அவனைப் பின்தொடர்ந்து, கண்ணம்மா அவன் அருகே சென்று தயக்கத்துடன் நின்றாள்.

“என்ன விஷயம்.. லொள்ளு பண்ணறது எல்லாம் தைரியமா வருது… இப்போ என்ன? சும்மா தைரியமா சொல்லு… நான் கடிச்சு முழுங்க மாட்டேன்…” அவளை திரும்பிப் பார்க்காமல், தனது சிஸ்டமை இயக்கிக் கொண்டே அவன் கேட்கவும்…

“தப்பா எடுத்துக்காதீங்க… விஷ் யூ எ வெரி ஹாப்பி பர்த்டே…” மீண்டும் அவள் சொல்ல, ‘எதற்காக அவள் திரும்பச் சொல்கிறாள்’ என்று புரியாத அஜய் அவளை நிமிர்ந்துப் பார்த்தான். அவள் கையில் ஒரு சிறு கிஃப்ட் கவர் செய்யப்பட்ட ஒரு பெட்டி இருக்கவும், அஜய் அவளை கேள்வியாக பார்க்க, கண்ணம்மாவின் கண்கள் அந்த டப்பாவின் மேல் பதிந்தது.

“ஒரு சின்ன கிஃப்ட் தான்…. ஷோ பீஸ்… எனக்கு பூவை வாங்கி வீணடிக்கிறது பிடிக்காது…” அவள் வாய் சொன்னாலும், கண்கள் அவன் சிஸ்டம் அருகே இருந்த ரோஜா பொக்கே மீது படிந்து மீள, அஜய் அதை புன்னகையுடன் பார்த்தான்.

“இதுவும் ஒரு அழகான பொண்ணு கொடுத்தது தான்… நல்லா இருக்கு இல்ல…” அஜய் கேட்டுவிட்டு, ‘இதை எதுக்கு இவ கிட்ட சொல்றோம்?’ என்று புரியாமல் யோசிக்க,

‘ஓ’ என்று ஒரு சில வினாடிகள் தயங்கிய கண்ணம்மா, “ப்ளீஸ்…” அவன் வாங்கிக் கொள்ள வேண்டுமே என்று அதை நீட்டிக் கொண்டிருக்க, அஜய் அதை பெற்றுக் கொண்டான்.

“தேங்க்ஸ் கண்ணம்மா… ஆனா… இதெல்லாம் எதுக்கு அனாவசியமான பார்மாலிட்டி…” என்று கூறியவன், அதை தனது பைக்குள் போட்டுக் கொள்ள, எந்த பதிலும் சொல்லாமல், கண்ணம்மா தனது இடத்தில் அமர்ந்தாள். ஓரிரு வினாடிகளிள் மீண்டும் அஜயின் அருகே வந்தவள்,

“நேத்து அலாட் செய்த வேலை எந்த அளவு பாக்கி இருக்கு… நான் என்ன செய்யணும்…” தரையைப் பார்த்துக் கொண்டு அவள் கேட்கவும்,

“எல்லாம் முடிஞ்சது… உனக்கு பிரெஷா வேற அலாட் பண்ணறேன்… செய்து முடிச்சிரு… ஹ்ம்ம்… கேட்க மறந்துட்டேன்… நேத்து அவ்வளவு உடம்பு முடியாம இருந்த… இன்னைக்கு வந்துட்ட… உடம்பு சரியா போச்சா?” ஆச்சரியமாக கேட்டவன், அவளது பதிலுக்கு கூட காத்திறாமல், மெயில்களைப் பார்க்கத் தொடங்க, கண்ணம்மா ஏமாற்றமாக அவனைப் பார்த்தாள்.

இருந்தாலும் அவனுக்கு பதில் சொல்லாமல் திரும்ப முடியாது என்பதை உணர்ந்து, “ஹ்ம்ம்… டாக்டர்கிட்ட போய் ஊசி போட்ட உடனே, நல்லா வேர்த்து விட்டது.. அதுல சரியா போச்சு… கொஞ்சம் டயர்ட்டா இருக்கு.. மத்தபடி சரியா போச்சு…” என்றவள், அவன் தலையசைக்கவும், தனது இடத்திற்குச் சென்று, வேலையைத் தொடர்ந்தாள்.

அன்று மதியம், தனது பிறந்த நாள் ட்ரீட்டிற்காக அருகில் இருந்த ஹோட்டலுக்கு தனது டீமுடன் சென்றவனுக்கு, அங்கேயே டீம்மின் சார்பாக அவனது பிறந்த நாளை டீம் மக்கள் கொண்டாட, மீண்டும் அலுவலகம் வந்த போது மனமும் வயிறும் நிரம்பி இருந்தது…. மற்ற எந்த பிறந்தநாளையும் விட, ஏனோ அந்த பிறந்தநாள் சிறப்பாக சென்றது போல அஜய்க்கு தோன்றத் துவங்கி இருந்தது…. அன்றைய வேலை முடிந்து அஜய் சீக்கிரமே கிளம்பவும், சுவாதி, அவனை ஆச்சரியமாகப் பார்க்க, கண்ணம்மாவோ, எங்கோ மழை பெய்கிறது என்கிற தினுசிலேயே சுற்றிக் கொண்டிருந்தாள்.  

“சார் எதுலயோ புதுசா கமிட் ஆகிட்டார் போல… ரெட் ரோஸ் பொக்கே வேற… அடிக்கடி எதையோ நினைச்சு சிரிச்சிக்கறார்… சம்திங் சம்திங்…” யோகேஷின் குரலைத் தொடர்ந்து…

“நானும் கவனிச்சேன்… திடீர் திடீர்ன்னு யோசனைக்கு வேற போயிடறார்… யோசனையா ட்ரீம் லான்ட்டான்னு தான் தெரியல…” இன்னொருத்தர் தொடரவும், அவர்கள் பேச்சு கண்ணம்மாவிற்கு தலைவலியைக் கொடுத்தது போலும்…

“சுவாதி… ரொம்ப தலை வலிக்குது… வா.. கபேடீரியா போயிட்டு வரலாம்…” சுவாதியை அவள் அழைக்க,

“உடம்பு சரி இல்லன்னா எதுக்கு இன்னைக்கு வரணும்… அப்படி என்ன இன்னைக்கு வந்தே ஆகணும்னு இருக்கு…” என்று அவளிடம் முணுமுணுத்தப் படி, சுவாதியும் அவளுடன் சென்றாள்.

 

 

கண்ணம்மா அமைதியாக வரவும், “என்ன கண்ணம்மா… இன்னைக்கு உன் முகமே சரி இல்ல… இன்னைக்கு அஜய் கூட உன்னை திட்டவே இல்லையே…” அவளது கேள்விக்கு, பதில் சொல்லாமல், கண்ணம்மா அமைதியாக டீயைப் பருக,

“உன்னை திட்டாததுக்கு ரீசன் என்னத் தெரியுமா? எனக்கு என்னவோ அஜய் யார் கிட்டயோ சிக்கிக்கிட்டா மாதிரி தான் இருக்கு… பசங்க சொல்றது ஒருவேளை சரியா இருக்குமோ?” சுவாதி தொடங்கவும், கண்ணம்மா முகத்தை சுளித்தாள்.

“உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா? அவன் சிக்கினா என்ன…. சிக்கலைன்னா என்ன? எப்பப் பாரு இதே தான் பேச்சு… தலை வலிக்குது… அவனைப் பத்தி பேசறதை நிறுத்து சுவாதி… அவன் தான் போயிட்டானே.. அப்பறம் என்ன அவனைப் பத்தின பேச்சு? அவன் என்ன பெரிய ஹீரோவா… அவனைப் பத்தியே பேசிட்டு இருக்க…” படபடவென்று அவள் பொறியவும், சுவாதி அவளைப் புரியாமல் பார்க்க, கண்ணம்மாவோ, கப்பை மும்முரமாக விரல்களில் அளந்துக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சு கண்ணம்மா… அப்போ நான் வரதுக்கு முன்னயே அஜய் திட்டிட்டானா?” சுவாதியின் கேள்விக்கு, ஏன் என்றே புரியாமல், கண்ணம்மா கண்ணீர் உகுத்தாள்.

“என்ன ஆச்சு சொல்லு கண்ணம்மா? உண்மைய மறைக்காம சொல்லு… நீ அஜய விரும்பறியா? அவன் உன் மேல அப்போ அப்போ சாரல் மாதிரி காட்டற அன்புனால உன் மனசு சலனப்படுதா?” நேரிடையாக அவள் கேட்கவும், சிறிது நேரம் மௌனம் காத்த கண்ணம்மா… சுவாதி அவளையே பார்த்துக் கொண்டிருக்கவும், அவளிடம் உண்மையை கூறினால், தன் மனதின் பாரம் இறங்கும் என்பது போலத் தோன்ற, தன்னைப் பற்றிய விவரங்களை சொல்ல வாய்த் திறந்தாள்.

“சலனமா?” என்று விரக்தியாக புன்னகைத்தவள், “நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ சுவாதி… ஆனா… வாழ வழி இல்லாம டிவோர்ஸ் வாங்கிட்டேன்…” என்றவள், சுவாதியின் அதிர்ச்சியை கண்டுகொண்டும், நிறுத்தாமல், தொடர்ந்து நடந்தது அனைத்தையும் சொல்லி முடிக்க, சுவாதி அதிர்ச்சியின் உச்சத்தில் கண்ணம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்…

சுவாதியின் அதிர்ச்சியைக் கண்டவள், அவளது பார்வையை சந்திக்க முடியாமல், “என்னவோ உன்கிட்ட சொல்லணும் போல இருந்துச்சு சுவாதி… எனக்குன்னு என்னோட மனசுல உள்ளதை ஷேர் செய்துக்க எந்த ப்ரெண்டும் இல்ல… அது தான்…. நீ கொஞ்சம் கேட்டதும், உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்….” என்றவள், சிறிது தூரம் சென்றுவிட்டு, திரும்பி அவளிடம் வந்து,

“இப்போ சொல்லு என் ஆசை… சலனம்…. காதல் எல்லாம் என்னோடவே மறைஞ்சு போற விஷயங்கள் தானே… இதைப் போய் நான் அஜய்கிட்ட சொன்னா… அவர் சிரிக்க மாட்டாரா? ஆனா… மனசு நான் சொல்றதைத் தான் கேட்காம, வருத்தப்படுது…” என்றுவிட்டு, அங்கு நில்லாமல், சுவாதி தன்னை தவறான பார்வை பார்த்துவிடுவாளோ என்று அஞ்சியவள் போல, கண்ணம்மா தனது இடத்திற்கு விரைந்து செல்ல, இன்னமும் சுவாதி திகைப்பிலேயே அமர்ந்திருந்தாள்.

வெகுநேரம் ஆகியும் சுவாதி சீட்டிற்கு வராமல் போகவும், கண்ணம்மா தன்னையே நொந்து கொண்டாள்… ‘இத்தனை நாள் தான் யாரிடமும் சொல்ல எண்ணாத இந்த விஷயத்தை, ஏன் உணர்ச்சி வேகத்தில் சுவாதியிடம் கொட்டினேன்? எனக்கு அஜயை பிடித்திருப்பதாலா?’ என்பதிலேயே அவளது எண்ணம் உழன்றுக் கொண்டிருக்க, அதற்கு மேல் வேலை செய்ய முடியாமல், வீட்டிற்குக் கிளம்பினாள்.

அவள் சென்ற பின்னே இடத்திற்கு வந்த சுவாதி, கண்ணம்மா சென்று விட்டதை உணர்ந்து, “ஹையோ நாம வரலன்னா உடனே, நான் அவளை தப்பா நினைச்சு இருப்பேன்னு நினைச்சிட்டாளோ? இருக்கும்… வீட்டுக்கு போய் போன்ல பேசிக்கலாம்..” என்று தனக்குள் சிந்தித்தபடி, அவளும் வீட்டிற்குக் கிளம்பினாள்.

இரவு….

அம்மாவின் கை மணத்தில், வடை, பாயசம், பிரியாணி, என்று வயிறு புடைக்க உண்ட அஜய், எதிரில் அவனையே பார்த்து முறைத்துக் கொண்டிருந்த விஜயிடம், “சாப்பிடற பிள்ளையைப் பார்த்து கண்ணு வைக்கக் கூடாதுன்னு நான் சாப்பிட ஆரம்பிக்கும் போதே சொல்லிட்டேன் அத்தான்…” என்று வம்பைத் தொடங்கவும்,

“நீ பேசுவ ராசா.. பேசுவ… ஏன்னா உள்ள நாலு முட்டை, ரெண்டு லெக் பீஸ்சோட சிக்கன் போயிருக்கு இல்ல… குரல் நல்லா வரும்…” விஜய் பதிலுக்கு மல்லுக் கட்ட, ராதா சிறிது பயத்துடன் விஜயைப் பார்த்தார்.

“அப்போ சரி… நான் வேணா பாடவா?” அஜய் பதிலுக்கு கேட்க,

“ஹ்ம்ம்… நல்லா பாடு… ஆனா… மொட்டை மாடி டேங்க் மேல நின்னு பாடு… அப்போ தான் இருக்கற கொசு எல்லாம் உன் பாட்டுல மயங்கி விழும்… இந்த ஏரியால கொசுத் தொல்லையும் இருக்காது…” விஜய் நக்கலடிக்க,

‘சூப்பர் ஐடியா அத்தான்…’ என்று கார்த்திக் அவனுக்கு கைக் குலுக்கினான்.

“இப்போ என்ன அத்தான்… உங்களுக்கு ட்ரீட் கொடுக்கல அவ்வளவு தானே… வர சண்டே நாம வெளிய போயிட்டு அப்படியே உங்களுக்கு பிடிச்ச ஹோட்டலுக்கு போயிட்டு வரலாம்… சரியா?”

“டீல்… ஆனா ஏதாவது ஏமாத்தின… உன்னை பிச்சுப் போற்றுவேன்… இதுல முக்கியமான விஷயம்…” என்று பேச்சை நிறுத்தியவன், ராதா அடுப்படிக்குள் செல்லவும், “நாம மட்டும் போறோம்…” என்று கிசுகிசுக்க, அஜய் சிரிப்புடன் ஒத்துக் கொண்டான்.

சாப்பிட்டு முடித்தவன், “எனக்கு தூக்கம் வருது அத்தான்… நேத்தும் தூக்கம் இல்ல…” என்று அனுமதி வேண்டிய பார்வையை விஜயிடம் செலுத்திவிட்டு, டைனிங் டேபிளை சுத்தம் செய்துக் கொண்டிருந்த, தன் அன்னையை தோளோடு அணைத்துக் கொண்டான்.

“என்னடா அஜ்ஜூ…” அவர் நெகழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் அழைப்பதைப் போல அழைக்க, சிறு பிள்ளை போல அவரது தோளில் சாய்ந்தவன், தனது கையை முகர்ந்துப் பார்த்தான்.

“செம வாசனைம்மா… யாராலையுமே உன்னைப் போல சமைக்க முடியாது… ஸ்ரீனி ஏன் உன்னை இங்க அனுப்ப மாட்டேங்கிறார்ன்னு இப்போ தான் புரியுது… பாவம் அப்பா உன்னோட சமையல ரொம்ப மிஸ் பண்ணுவார்…” என்று அவரை வம்பு வளர்க்க, ராதா, அவன் தலையில் வலிக்காமல் கொட்டினார்.

“உனக்கு அவரை வம்புக்கு இழுக்கலைன்னா பொழுதே போகாதே… தூக்கம் வருதுன்னு சொன்ன இல்ல… போய்ப் படு…” என்றவரை, மீண்டும் ஒருமுறை அணைத்து விடுவித்தவன், 

“சரிம்மா… நான் போய் தூங்கறேன்…” தனக்கு ஒதுக்கப் பட்டிருந்த அறைக்குள் நுழைய, கார்த்திக்கும் கிளம்பத் தயாராகினான்.

“அவன் சொல்றதும் உண்மை தான்ம்மா… சீக்கிரம் நம்ம வீட்டுக்கு கிளம்பி வந்திருங்க… அவனோட சமையல சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு…” என்ற கிண்டலுடன் கார்த்திக் விடைப்பெற்றுக் கிளம்ப, விஜயும் தனது அறைக்குள் புகுந்துக் கொண்டு, கணினியில் வேலை பார்க்கத் தொடங்கினான்.

படுக்கையில் விழுந்த சில நிமிடங்களிலேயே, அஜயின் கண்கள் உறக்கத்தைத் தழுவ, அதைக் கெடுப்பது போல அவனது செல்போன் ஒலி எழுப்பியது…. கண்களைத் திறந்து, அலுவலகத்தில் இருந்து ஏதேனும் குறுஞ்செய்தியா என்பதை பார்த்தவனது கண்களை நிறைந்தது, கண்மணியின், ‘ஹொவ் வாஸ் யுவர் டே….. வெரி க்ளாட் டு மீட் யூ…’ என்ற செய்தி….

“ஹ்ம்ம்… இவளுக்கு மெசேஜ் அனுப்ப நேரமே கிடைக்கலையா?” உறக்கம் பறிபோன கடுப்பில் நினைத்தவன்,

“நான் என்ன அவளுக்கு அவ்வளவு ஸ்பெஷல்… என்னை பார்த்ததும் இல்லாம… மெசேஜ் வேற செய்யறா?” அஜய் யோசனையுடன், செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“எஸ் பைன்… குட் நைட்…” பதில் அனுப்பிவிட்டு, சைலென்ட் மோடில் போட்டு விட்டு, உறங்கத் துவங்க, கண்மணி, மஞ்சள் நிற ரோஜா பூங்கொத்துடன், ஒரு மாலின் வாயிலில் காத்திருக்க, அவளுக்கு அருகே கண்ணம்மா, ஒரு சிறு பெட்டியுடன், நின்றிருந்தாள்… இருவரையும் மாறி மாறி பார்த்த அஜய், கண்மணியிடம் செல்லவும், கண்ணம்மா ஏக்கமாக அவனைப் பார்த்துவிட்டு, காற்றில் புகை போல கரைந்துவிட, அஜய் அதிர்ச்சியுடன், ‘கண்ணம்மா போகாதே….’ என்று கூவியபடி, அவள் கரைந்து போகும் அந்தக் காட்சியை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

அந்தக் கனவைக் கண்டவுடன், கண் திறக்க முயன்று தோற்றுப் போன அஜய், ‘இது என்ன கனவு? ஏன் கண்ணம்மா மறைஞ்சு போறா?’ என்று மூளையைக் கேள்வி கேட்க, அதற்கான தொடராக, அந்த கண்மணியுடன் கைக் கோர்த்தபடி, அஜய் ஒரு சினிமா ஹாலுக்குள் நுழைவது போலக் கண்டவன், அதற்கு மேல் முடியாமல், கண்களை ஸ்ரமத்துடன் பிரித்து  எழுந்து அமர்ந்தான்.

“என்ன அஜ்ஜூ? ஏன் ஒரு மாதிரி முனகற? உடம்பு முடியலையா?” ராதாவின் கரிசனத்தில்,

“இல்லம்மா ஒரு கெட்ட கனவு… அது தான்…” என்றவன், தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் கண்களை மூட, ராதா அவனது தலையை இதமாக பிடித்து விட, அந்த ஸ்பரிசம் தந்த இதத்தில், அஜய் நன்றாக உறங்கத் துவங்கினான்.

மறுநாள் காலை சோம்பலாக எழுந்தவனுக்கு, ஏனோ கண்மணியின் நிகழ்ச்சியைக் கேட்கும் ஆர்வம் குறைந்து காணப்பட்டது…. ஏழு மணியாகியும், படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்தவன், ‘இப்போ ஆபீஸ்க்கு கிளம்பினாத் தான் ஒன்பது மணிக்கு போக சரியா இருக்கும்…’ என்ற யோசனையுடன் கிளம்பிக் கொண்டிருக்க, சரியாக எட்டு மணிக்கு, கண்மணியின் எண்ணில் இருந்து அவனுக்கு குறுந்தகவல் வந்து குதித்தது….

“ஏன் இன்னைக்கு ப்ரோக்ராம்க்கு கூப்பிடல? மீ ஆங்ரி…” என்று கோப ஸ்மைலியுடன் வந்த மெசேஜைப் பார்த்தவன், தான் எவ்வாறு உணர்கிறோம் என்றே புரியாமல், அந்த நம்பருக்கு அழைக்க, அதுவோ எடுப்பார் இன்றி, ரிங் போய்க் கொண்டே இருந்தது….

“இது என்ன இது? பார்த்து ஒரு நாள் கூட ஆகல… அதுக்குள்ள உரிமைய நிலை நாட்டறது… நைட் மெசேஜ் வந்தா பார்ப்போம்… இல்லைன்னா இப்படியே குட் பை சொல்லிட வேண்டியது தான்… நமக்கு பொண்ணுங்களே செட் ஆகாது…” சலித்தபடி, அலுவலகம் கிளம்பிச் சென்றான்.

உள்ளே சென்றதும் கண்ணம்மாவின் அழுது வீங்கிய முகம் கண்ணில் படவும், ஏற்கனவே இருந்த எரிச்சல் அதிகமாக, “ச்சே… இந்த பொண்ணுங்களே இப்படித் தான்… ஒண்ணு அழுது கரைய வேண்டியது… இல்ல அராஜகம் செய்ய வேண்டியது… நடுநிலையா இருக்கவே தெரியறது இல்ல… இவங்க டிசைனையே புரிஞ்சிக்க முடியல…” மனதினில் சலித்துக் கொண்டு கண்ணம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தவனை,

“Mr. அஜய்… உங்க வேலையைப் பாருங்க… உங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் எட்டாம் பொருத்தம்… தானா போய் வம்புல மாட்டாம பொழப்பைப் பாருங்க…” என்று தனக்குள் அறிவுறுத்திக் கொண்டு, வேலையைத் தொடங்கினான்.

அன்று சுவாதியும் முன்கூட்டியே விடுப்புக்கு விண்ணப்பித்திருக்க, அதை மறந்த கண்ணம்மா, தன்னை பார்க்க விரும்பாமல் தான் சுவாதி விலகிச் செல்வதாக நினைத்து தவித்துப் போனாள்.

அந்த நாளின் முடிவில், “சாரி… நான் உங்க காலைப் பார்க்கல…. இப்போ தான் பார்த்தேன்… குட் நைட்…” என்று கண்மணியிடம் இருந்து மெசேஜ் வரவும், தான் காலையில் நினைத்தது தவறு என்று புரிந்த அஜய், அவளுக்கு பதில் அனுப்ப, சில பல மெசேஜ்களுக்கு பிறகு, குட் நைட்டுடன் இருவரும் விடப்பெற, ஏதோ ஒரு நெருடல் அஜயின் மனதில் எழுந்து, பல கேள்விகளை அடுக்கிக் கொண்டிருக்க, அதை விரட்டியடித்தது, ஸ்ரீஜித்தின் அழுகை சத்தம்…

“என்னாச்சு? ஏன் குட்டிபையன் அழறான்…” கேட்டபடி வெளியில் வந்தவன், விஜய் வெளியில் கிளம்பிக் கொண்டிருக்கவும்,

“அவனும் கூட போகணும்னு அழறான் அஜய்… அத்தானுக்கு கொஞ்சம் வேலை இருக்காம்… ஆயுத பூஜையும் விஜயதசமியும் வருது இல்ல… அதுக்கு ப்ரோக்ராம் எல்லாம் என்ன செய்யலாம்ன்னு டிஸ்கஸ் பண்ண கூப்பிட்டு இருக்காங்க… அதுக்கு கிளம்பிட்டு இருக்கார்… இவன் விடாம அழுகை…” அனுபமா சலித்துக் கொள்ளவும், அவனைத் தூக்கிய அஜய், அவனை சமாதானப்படுத்த முயன்றான்.

“மாமா உனக்கு சாக்லேட் தரவா? இப்போ அப்பா ஆபீஸ் போகட்டும்…” சமாதானப்படுத்த வெளியில் அழைத்துச் செல்ல, விஜய்க்கு ஒரு அழைப்பு வர, அதை எடுத்து பேசியவன்,

“நாளைக்கு காலையில வச்சுக்கலாம்ன்னு எம்.டி. சொல்லிட்டாராம்… அதனால இப்போ போக வேண்டாம்… சப்பா அதுக்குள்ள அழுது ஆர்பாட்டம் பண்ணி… அப்படியே உங்க மாமான போல பிடிவாதம்டா…” என்று அஜய்க்கு லேசாக கொட்டு வைத்து விட்டு, ஸ்ரீஜித்தை வாங்க அவன் கை நீட்ட, சிறுவனோ, அவனிடம் வர மறுத்தான்.

“என்னடா ராஜா?” விஜய் கேட்க,

“மாமா காக்கி… சாப்பு… மாமா கூட ஜோ ஜோ…” மழலை மொழியில் சொன்னவன், அஜய் படுக்கும் அறையை கைக் காட்ட, சிறு சிரிப்புடன், அஜய் அவனை தூக்கிக் கொண்டு சென்றான்.   

ஸ்ரீஜித்துடன் விளையாட்டு, அலுவலக வேலை, அம்மாவையும் தங்கையையும் வம்பிழுப்பது… என்று அன்றாடம் அவனது வழக்கத்தைத் தாண்டியும் மனதில் ஏதோ ஒரு அலைபுருதல் இருப்பது போலவே அஜய் உணர்ந்துக் கொண்டிருந்தான்…  

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்….        

13 COMMENTS

 1. Ramzzz over suspensesuuu udambukku aagathu plzzzzzz next ud nallaikku podunga. Nalla irrukku story ,very interesting

 2. hai ramya sis…update superb……ajay oda birthday supera pochu…..kannama ajaya love panrala?….eppo kannama FB Varum pa….waiting eagerly.

 3. Rammy ithu too much,inthe ajay panrathu,pavam kanama Ava kudutha gift a pirichu kooda parkala ayya,Ana kanmani ku mattum message a?adi vanga poran solli vai,inthe kanama enna ipidi avana love pa renu sollita,avan mela avlo kovama irunthava epidi love,me confused!

 4. hai ramya mam…ungaloda novels elam rmpa supera iruku….intha novel title supera select panirukinga…sekirama update podunga mam……

 5. hi ramz…

  meendum vanthutten…
  yeppothum pola intha update’um super pa…

  intha kannamma yaarunu muthalla naan kandupidikkiren… hehe

LEAVE A REPLY