SHARE

எனது விருப்பங்களில்
மட்டுமே
நிறைந்திருந்த உலகம்
இன்று
உனக்காக எல்லாமே
பார்த்து பார்த்து
செய்யச் சொல்லி
எங்கிருந்து வந்தது
இந்த மாற்றம் !!
இன்னுமும் பிடித்து இருக்கிறது
எனக்கும் !!

 

“என்னங்க மாப்பிள்ளை… நேத்திக்கு தான் கல்யாணம் ஆகி இருக்கு… அதுக்குள்ள நைட் ஷோ போகணும்னு என்ன இருக்கு? அவ அடம் பிடிச்சாளா? அவ இஷ்டத்துக்கு எல்லாம் ஆடாதீங்க மாப்பிள்ளை… உங்க தலையில மிளகா தான் அரைப்பா…” சசி ஷிவானியை முறைத்துக் கொண்டே சொல்ல, மாலை சிற்றுண்டியை உண்டுக் கொண்டிருந்த புகழ், ஷிவானியைப் பார்க்க, அவளோ, சசியை முறைத்துக் கொண்டிருந்தாள்.

“இங்கப் பாரும்மா… நான் ஒண்ணும் அவரை சினிமாவுக்கு கூட்டிட்டு போக சொல்லல… அவரா தான்… டிக்கெட்டை புக் பண்ணி என்கிட்டே காட்டினார்… உனக்கு திட்டணும்னா அவரைத் திட்டு.. என்னைத் திட்டாதே…” ஷிவானி ரோஷம் பொங்க சசியிடம் மல்லுக்கு நிற்க

“கார்ல தான் போகப் போறோம் அத்தை… இங்க பக்கத்துல இருக்கற தியேட்டர் தான்… பயப்பட ஒண்ணும் இல்ல…” புகழ் சொல்லவும், சசி பாஸ்கரைப் பார்க்க,

“சரி… கார்ல போயிட்டு வாங்க புகழ்… ஜாக்கிரதை…” என்று கூறியவர்,

“இருந்தாலும்… இனிமே நைட் ஷோ எல்லாம் வேண்டாம் புகழ்… காலம் கெட்டுக்கிடக்கு…” என்று அவர் சொல்லவும், புகழ் தலையசைத்துக் கேட்டுக் கொண்டான்.

இன்னமும் ஷிவானி உர்ர்ர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு நிற்க, “சிவா… எனக்கு சூடா காபி வேணும்…” புகழ் கேட்க, ஷிவானியின் முகம் உடனே மாறியது.

“நிஜமா காபி வேணுமா… இதோ கொண்டு வரேன்…” என்றவள் வேகமாக அடுக்களைக்குள் நுழைய,

“ஹையோ… இவ காபி போடறேன்னு பாலை மொத்தமும் சூடு செய்திடப் போறா… அதோட வேடிக்கைப் பார்த்துக்கிட்டே பொங்கவும் விட்ருவா…” என்று அவள் பின்னோடு சசியும் ஓட, தனது மனைவியை பார்த்த புகழுக்கு புன்னகை தான் அரும்பியது.

“புகழ்… உங்களுக்கு இருந்தாலும் இவ்வளவு தைரியம் ஆகாது… அவளைப் போய் காபி போட்டுட்டு வரச் சொல்லி இருக்கீங்க… நீங்க குடிங்க… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…” பாஸ்கர் அதோடு தப்பித்துச் செல்ல, மேலும் புன்னகை விரிய, புகழ் அறைக்குச் சென்றான்.

“என்னை காபி கொண்டு வர சொல்லிட்டு இவரு எங்க போனாரு?” ஷிவானி புகழைத் தேடிக் கொண்டே அறைக்கு வர, புகழ் சிஸ்டமின் அருகே அமர்ந்திருந்தான்.

“ஹையோ இனியன்… இந்த சிஸ்டம் எனக்கு வேண்டவே வேண்டாம்… நான் என்னோட லேப்டாப்பையே எடுத்துக்கறேன்… இதை விட்டு நகருங்க… எப்போப் பாரு இதையே கட்டிக்கிட்டு இருக்கீங்க…” என்று காபியை டேபிள் மீது வைத்துக் கொண்டே, பொரிந்துத் தள்ள,

“அப்போ உன்னை கட்டிக்கவா வனி…” கேட்டுக் கொண்டே அவளை பிடித்து இழுத்தவன், அவளது இதழ்களில் தனது இதழ்களைப் பொறுத்த, கண்களை இறுக மூடிக் கொண்டவள், அவனுடன் கரைந்தாள்.

“அம்மாவும் அப்பாவும் நம்ம நல்லதுக்கு தான சொல்றாங்க… அதுக்காக நீ அவங்களை முறைக்கலாமா?” அவளது நெற்றியில் விரலால் கோடு வரைந்துக் கொண்டே புகழ் கேட்கவும்,

“என்னை அவங்க இப்படி அசிங்கப்படுத்தலாமா?” குறையாக அவள் கேட்க,

“என்கிட்டே தானே சொல்றாங்க…” புகழ் பதிலுக்கு கேட்க,

“அதுக்குன்னு… நான் நல்லா பொண்ணா இருப்பேன் இனியன்… நீங்க பயப்பட வேண்டாம்…” ஷிவானி அவனுக்கு கண்களை உருட்டி உறுதியளிக்க, அதில் கிறங்கியவன், மீண்டும் அவளது இதழ்களை நாடினான்.

“ஹையோ காபி ஆரியே போச்சு… சூடா இருந்தாலாவது டேஸ்ட் தெரியாது… இப்படியே எப்படி குடிக்க முடியும்?” ஷிவானி பதற, அதை வாங்கி ஒரே மடக்கில் குடித்து முடித்தவன்,

“போய் சூடா இன்னொரு காபியை எடுத்துட்டு வா… அதை குடிச்சுக்கறேன்…” என்று நக்கல் செய்ய, ஷிவானி அவனை இடுப்பில் கை வைத்துக் கொண்டு முறைத்தாள்.

“என்ன சிவா…” புகழ் புரியாமல் கேட்க,

“ஹ்ம்ம்… நான் காபி சரியா போடற வரை விட மாட்டேன்கறது போல திரும்ப திரும்ப போடுன்னு சொல்றீங்க…. இப்போ வந்து கீழ குடிச்சிட்டு போங்க…” என்று அவள் மிரட்டவும், சிரிப்புடன் அவளது நெற்றியில் இதழ் ஒற்றியவன்,

“காபியை கீழ கொட்டக் கூடாதுன்னு தானே நான் குடிச்சேன்… இப்போ சூடா வேணும் …” என்று கேட்டு வாங்கிக் குடிக்க, ஷிவானிக்கு பெருமை தாளாமல் சுற்றி வந்தாள்.

“என்னங்க… சினிமாவுக்கு அதுவும் நைட் ஷோக்கு கூட்டிட்டு போகணும்னு உங்களுக்கு எப்படி தோணிச்சு?” ஆசையாக ஷிவானி கேட்க,

“இல்ல… நீ நேத்து உங்க அம்மாவை மிரட்டினத விக்ரம் கேட்டு இருக்கான்… ‘சிஸ்டருக்கு சினிமான்னா ரொம்ப பிடிக்கும் போல இருக்கு… நீ கூட்டிட்டு போ’ன்னு சொன்னான்…” புகழ் சொன்னதைக் கேட்ட ஷிவானிக்கு சப்பென்று ஆகியது.

“அப்போ நீங்களே யோசிக்கலையா?” உள்ளே சென்றுவிட்ட குரலில் அவள் கேட்க,

“ஹ்ம்ம்… எனக்கும் உனக்கு ஏதாவது ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு தோணிச்சு… ஆனா… என்ன செய்யறதுன்னு தெரியல… அப்போ தான் விக்ரம் இந்த ஐடியாவைக் கொடுத்தான்…” புகழ் சொல்லவும், அவனை ஓரிரு நிமிடங்கள் பார்த்தவள்

“அட்லீஸ்ட் இது போல சொல்லவாவது ஆள் இருக்கே…” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு, சாலையை வேடிக்கைப் பார்த்தாள்.

அவள் விருப்பப்பட்டு போக நினைத்த படம் என்றதும் மிகவும் சந்தோஷமாகவே உள்ளே சென்று அமர்ந்தவள், படம் தொடங்கிய சிறிது நேரத்தில், புகழ் தூங்கி விழவும், படத்தில் அவளுக்கு இருந்த சுவாரஸ்யம் குறைந்தது.

“என்னங்க… தூக்கம் வந்தா வீட்டுக்கு போகலாமா?” ஷிவானி கேட்க,

“இல்ல சிவா… நீ பாரு… ஏதோ கொஞ்சம் அசந்துட்டேன்…” என்றவன், முகத்தை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமரவும், ஷிவானி மீண்டும் படத்தை ரசிக்கத் தொடங்கினாள்.

மீண்டும் புகழ் சாயவும், ஷிவானிக்கு என்னவோ போல் ஆகியது. “ச்சே… இப்படி தூக்கம் வருதே அவருக்கு… அவ்வளவு டயர்ட்டா இருக்கும் போது எதுக்கு கூட்டிட்டு வரணும்?” அவள் நினைத்துக் கொண்டு,

“இனியன் வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்க

“படம் முடிஞ்சிடுச்சா?” என்று அவன் கேட்ட கேள்வியில், அவனை மேலும் கீழும் பார்த்தவள்,

“உங்களுக்கு ரொம்ப தூக்கம் வருது போலேயேங்க? எனக்கு என்னவோ போல இருக்கு… ப்ளீஸ் வாங்க… வீட்டுக்கே போகலாம்…” என்று சலித்துக் கொண்டாள்.

“இல்ல.. நீ ஆசை பட்டு கேட்டியே சிவா… இரு… ஒரு ரெண்டு நிமிஷம்… இதோ வந்துடறேன்…” என்றவன், வெளியில் சென்று முகத்தை கழுவிக் கொண்டு வந்து அமர்ந்தான்.

அவனைப் பார்க்க அவளுக்கு பாவமாக இருக்க, “இனியன்…” என்று அவள் தொடங்கவும்,

“படத்தைப் பாரு வனி… தெரியாம தூங்கிட்டேன் போதுமா? இந்தா உனக்கு பிடிச்ச பாப்கார்னும்.. கூல் ட்ரிங்க்ஸ்சும்…” என்று புன்னகையுடன் அவளிடம் நீட்ட,

“ஹப்பா… இது இல்லாம தான் எனக்கு படம் சுவாரஸ்யம் இல்லாம இருக்கு போல… இனிமே நீங்க தூங்குங்க புகழ்…” என்று அவள் சொல்லவும், அவளைப் பார்த்து சிரித்தவன், அவளது கையை எடுத்து தனது கைகளுக்குள் கோர்த்துக் கொண்டான்.

“இப்படி வாங்கிக் கொடுக்கறதையும் கொடுத்துட்டு கையை பிடிசிக்கிட்டா என்ன செய்யறது?” அவள் குறும்பாகக் கேட்க, அவளது கையை விட்டவன், “சாப்பிடு” என்று அவன் சொல்லவும், அவனது தோளில் சாய்ந்துக் கொண்டு, பாப்கார்னையும் அவனுக்கு கொடுக்காமல் தின்றுவிட்டு, மீதிப் படத்தையும் பார்த்து முடித்து, வீட்டிற்கு வரவும், சசி அவர்களுக்காக காத்திருந்தார்.

“என்னம்மா… இன்னும் தூங்கலையா?” அவள் ஆச்சரியமாகக் கேட்கவும்,

“ஹ்ம்ம்… நீ வந்தா ரெண்டு அடி கொடுக்கலாம்ன்னு தாண்டி காத்துக்கிட்டு இருக்கேன்…” என்று அவர் சொல்ல, காரை நிறுத்திவிட்டு வந்த புகழ் அதைக் கேட்டு,

“பாவம் அத்தை அவ…” புகழ் சொன்னதைக் கேட்டு, ஷிவானி காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்.

“இவளுக்கு ரொம்ப பாவம் பார்க்காதீங்க… ஏச்சிக்கட்டிடுவா…” என்றவர்,

“குடிக்க பால் வேணுமான்னு மாப்பிள்ளைகிட்ட கேளு… இல்ல பசியா இருந்தா… தோசை மாவு இருக்கு… செய்து தரவான்னு கேளு..” என்று அவளது காதைக் கடிக்க, அது புகழின் காதிலும் விழுந்து,

“பால் மட்டும் போதும் அத்தை… உங்க பொண்ணுக்கு வயிறு ஃபுல்லா தான் இருக்கும்…” என்று புகழ் கேலி பேசவும், 

“ஓ… உங்களுக்கு நான் பாப்கார்னை தராம தின்னுட்டேன்னு கோபமோ…” என்று அவனிடம் கேட்டு,

“பாவம்மா… ரொம்ப பசிக்குது போல… போய் பாலைக் காச்சி வை… நான் எடுத்துட்டு போய் கொடுக்கறேன்…” அவள் கிண்டலாகச் சொல்லவும், இதற்கும் புகழ் சிரித்தான்.         

“போதும்… இரு பாலை காச்சித் தரேன்… எடுத்துட்டு போய் அவருக்கு கொடு… அதிகமா பேசாதே… சொல்றதை செய்..” என்று அவர் சொல்லிவிட்டு அடுக்களைக்குள் சென்று இரண்டு க்ளாசில் பாலைக் கொடுக்கவும், அதை வாங்கிக் கொண்டவள்,   

“கேட்க மாட்டேன்… நான் ராத்திரி சமைக்க போறேன்…” என்று அவள் பதிலுக்கு துடுக்காக சொல்ல,

“ஹ்ம்ம்… இப்போ சமைச்சா… பேய் தான் வந்து டேஸ்ட் பார்க்கும்… போய் சமையல் பண்ணு… ஆனா… எண்ணெய் எங்க இருக்கு… அது எங்க இருக்குன்னு வந்து கேட்காதே…” என்று சசியும் வம்பு பேசவும்,

“வேண்டாம்மா… நான் சமைச்சு அதுங்க ஓடி போயிருச்சுன்னா… நாளைக்கு உன் சமையலை டேஸ்ட் பண்ண ஆள் இருக்காது… எனக்கு தூக்கம் வருது… நான் தூங்க போறேன்…” என்று சொன்னவள், அறைக்குள் செல்ல, சசி திகைத்து நிற்பதைப் பார்த்த புகழும், சிரிப்புடன் அறைக்குச் சென்றான்.

“என்னைப் போய் சமைக்க சொல்றாங்க பாருங்க… என்ன ஒரு வில்லத்தனம்?” என்று புகழிடம் அவள் புலம்ப,

“ஹ்ம்ம்… ஏன் எனக்கு நீ சமைச்சுத் தர மாட்டியா?” அவளை நெருங்கி அவளது கண்களைப் பார்த்துக் கேட்க, ஷிவானி முழி முழி என்று முழித்தாள்.

“என்ன ஷிவா இப்படி முழிக்கற?” அவளைப் பற்றி தெரிந்தும் சிரிக்காமல் இருக்க அவன் பெரும் பாடுபட,  

“இல்ல… சமையலா… இருந்தாலும் உங்களுக்கு நெஞ்சு தைரியம் ஜாஸ்திதாங்க… அதுவும் என் சமையலை சாப்பிடணும்னு சொல்றீங்களே…” முகத்தில் கவலை படர அவள் கேட்க, புகழ் சிரித்துக் கொண்டே, அவளை தன் அருகில் இழுத்துக் கொண்டான்.

“எனக்கு நீயா சமைச்சு உன் கையாள சாப்பிடணும்… உனக்கு வாய் மட்டும் தான் இருக்கா… இல்ல கையும் வேலை செய்யுமான்னு பார்க்கணும்..” அவன் சொல்ல, அவளோ அவனிடம் இருந்து சிறிது நகர்ந்துக் கொண்டு,

“கை எல்லாம் நல்லா தான் வேலை செய்யும்… ஆனா உங்க வயிறு தாங்குமா?” என்று கேட்டவள்,

“இதுக்கு தான் விதி வலியதுன்னு சொல்லுவாங்க போல…” என்று அவனிடம் சொல்லி,

“எவ்வளவோ பார்த்துட்டோம்… இதையும் சமாளி ஷிவா…” என்று தனக்குள் சத்தமாகவே சொல்லிக் கொண்டு, உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் சென்றாள்.

“சப்பா… சரியான குறும்புக்காரி…” என்று பெருமூச்சு விட்டவன், அவள் சொன்ன விதத்தை நினைத்து சிரித்துக் கொண்டான்.

மனம் லேசானது போல ஒரு உணர்வு புகழுக்கு எழவே செய்தது. அவனது தாயுடன் ஏற்பட்ட சண்டையில் வீட்டை விட்டு வெளியில் சென்று, அந்த கோபத்தில் குடித்து, நிலை தடுமாறி ஒரு லாரியில் நசுங்கி இறந்த பொழுதில் இருந்து தொடர்ந்த அவமானங்களும், அதனைத் தொடர்ந்து வீட்டில் ஏற்பட்ட வறுமையும், அவனை ரொம்பவே இறுகச் செய்திருந்தது.

குடும்ப சுமை ஒருபுறம் அழுத்த, என்றும் இல்லாமல் மல்லிகா வாய் திறந்து பேசி, நடந்த சண்டையில் இப்படி ஆனது மல்லிகாவை குற்ற உணர்வில் தள்ள, அவர் ஒரு புறம் பித்து பிடித்தவர் போல புலம்பித் திரிய, அனைத்தையும் சமாளித்து வெளியில் வருவதற்குள் புகழ் பாறையாகவே மாறி இருந்தான்.

இப்பொழுதோ, ஷிவானியின் வரவு அவனுள் புது மாற்றத்தையே உண்டு பண்ணி இருந்தது. பாறையில் இருந்து பூத்த பூவைப் போல… ஏதோ மெல்லிய உணர்வு… அவளை பேச விட்டு வேடிக்கைப் பார்க்கும் ரசிப்பு… அனைத்தும் அவனுக்கு பிடித்து தான் இருந்தது.  

ஏதேதோ யோசனையுடன் அமர்ந்திருந்தவன், ஷிவானி அவன் அருகில் அமர்ந்து, அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை அறியாமல் திரும்ப, “ரொம்ப பலமான யோசனையோ இனியன்…” அவள் அப்பாவியாகக் கேட்க, புகழ் ‘ஆம்’ என்று தலையசைத்தான்.

“இதுக்குத் தான் யோசிக்கிறதுக்கு முன்ன வாயை விடக் கூடாதுன்னு சொல்றது? இப்படி சொல்லிட்டோமே… நாம என்ன செய்யறதுன்னு தானே யோசிக்கறீங்க… பரவால்ல விடுங்க… நான் தான் இன்னமும் சமைக்கவே போகலையே… இதுக்கெல்லாம் நீங்க ஃபீல் பண்ணலாமா? என்னையே துணிஞ்சு கட்டி இருக்கீங்க… உங்களுக்கு அதுக்கே பாராட்டு விழா வைக்கணும்…” ஷிவானி சொல்லிக் கொண்டே இருக்க, அதை கேட்டு இறுகத் தொடங்கி இருந்த அவனது உள்ளம் உல்லாசத்துக்கு மாற, ஷிவானியை தன் அருகே இழுத்துக் கொண்டான்.

“என்னங்க…” அவள் சிணுங்க, அவளது கழுத்து வளைவில் முகம் பதித்தவன்,

“உன்னோட சமையலை சாப்பிட ஆவலாக காத்திருக்கேன்… எப்போ சமைச்சுத் தரப் போற?” அவள் காதில் சொன்னவனது கை அவளை சுற்றி வளைக்க,

“எனக்கு தூக்கம் வருது…” அவள் சிணுங்க… அவளது சிணுங்களை ரசித்துக் கொண்டே, அவளை ரசிக்கத் தொடங்கினான்.

“ஊமை கோட்டான் மாதிரி இருந்துக்கிட்டு செய்யறது எல்லாம் பிராடுத் தனம்… ஆளைப் பாரு…” அவனது மார்பில் தலை சாய்த்திருந்தவள்,  உறங்கும் புகழைப் பார்த்து செல்லமாக சிணுங்கிக் கொண்டிருக்க, உறக்கத்தில் அவளது நெற்றியில் இதழ் பதித்தவன், அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

காலையில் அவசரமாக எழுந்தவள், புகழ் இன்னமும் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, “தூங்கட்டும்… நான் போய் அம்மாகிட்ட கேட்டு டிபன் செய்யறேன்.. எழுந்ததும் ஒரு அசத்து அசத்திட வேண்டியது தான்… என்ன செய்யலாம்?” என்று யோசித்துக் கொண்டு,

‘நம்ம சமைச்சத சாப்பிட்டு ஓடி போகாம இருந்தா சரி தான்… விதி வலியது தான… கேட்டு ஆப்பா வாங்கறார்​’ என்று  மனதினில் நினைத்தவள்,

வேகமாக குளித்து முடித்து உற்சாகத்துடன் சமையல் அறைக்குச் செல்லவும், சசி மயக்கம் போடாத குறையாக அவளைப் பார்த்து விழித்தார்.

“என்னடி என்னாச்சு? பசிக்குதா?” அவர் கேட்க,

“இல்லம்மா… அவருக்கு என் கையாள சாப்பிடணும்னு ரொம்ப ஆசையா இருக்காம்… அதனால தான் எழுந்து வந்தேன்ம்மா… இன்னைக்கு என்ன டிபன் செய்யலாம்? நான் பன்னீர் பட்டர் மசாலா செய்யலாமா? சொல்லுங்க நான் செய்யறேன்…” இதழ்கள் வெட்கத்தால் துடிக்க, தலைகுனிந்தபடி அவள் சொல்லவும், தனது மகளைப் பார்த்த சசிக்கு சிரிப்பை அடக்குவது பெரும் பாடாக இருந்தது.

“ஹ்ம்ம்… மாப்பிள்ளை நல்ல விவரம் தான்… இவ இப்படியே சுத்தக் கூடாதுன்னு எப்படி இவகிட்ட பேசணுமோ அப்படி சொல்லி இருக்கார்… பரவால்ல… நல்ல மனுஷன் தான்…” என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டவர்,

“நான் பன்னீர் பட்டர் மசாலா எல்லாம் இப்போ செய்ய முடியாது செல்லம்… நைட் டிபனுக்கு வேணா சப்பாத்தியும், பன்னீர் பட்டர் மசாலாவும் செய்யலாம்… இப்போ காலையில இட்லியும் சட்னியும், கூடவே பொங்கலும் வடையும் செய்யலாம்ன்னு இருக்கேன்…” சசி சொன்னதைக் கேட்டு,

“எல்லாமே சூப்பர்ம்மா… சரி… எனக்கு என்ன செய்யணும்னு சொல்லு… இட்லிக்கு மாவு அரைக்கணுமா?” அவள் கேட்ட விதத்தில், சசி விழுந்து விழுந்து சிரிக்க, ஷிவானி அவரைப் பார்த்து அசடு வழிந்தாள்.

“இப்போ மாவு போட்டு எப்போ இட்லி ஊத்தப் போற? அதெல்லாம் நான் மாவு அரைச்சு வச்சிருக்கேன்… அதைத் தான் இட்லி தட்டுல ஊத்தணும்… ஏதோ இட்லிக்கு மாவு தான் ஊத்தணும்னுங்கற வரை தெரிஞ்சதே… அதுவே சந்தோஷமா இருக்குடி…” சசி கிண்டலாகச் சொல்ல,

“போம்மா… நான் என்னிக்கு சமையல் அறைக்குள்ள வந்திருக்கேன்… சரி.. சரி… கிண்டல் செய்யாம என்ன செய்யணும்னு சொல்லிக் கொடு… நான் செய்யறேன்…” என்றவளைப் பார்த்த சசி,

“மொதல்ல காபியைக் குடி… நான் எல்லாத்தையும் சொல்றேன்… நீ செய்வியாம்…” என்றவர், அவளை காபியை குடிக்க வைத்து, ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுக்க, ஷிவானியும் கவனமாக கற்றுக் கொண்டு வந்தாள்.

கண் விழித்து எழுந்து வந்த புகழ் அவளது பரபரப்பை பார்த்துக் கொண்டு நிற்க, சூடான பாலுடன், சரியாக அவளது காலுக்கு மேலாக, சமையல் மேடையில் அப்போதுதான் கொதிக்க வைத்து இறக்கிவைத்தப் பாலுடன் இருந்த பாத்திரம் இருக்க,  அவளது பதட்டத்தில் கைத் தட்டி கீழே விழ, அதைப் பார்த்த புகழ் பதறிப் போனான்.

19 COMMENTS

  1. rasummaa. semma ud…..

    hero nalla pugal pesiye pondaitye velai vaangiraru.. loves pesisiye hehehehe…semmaa..

    aanaa.. ippidi avasarama kudukkaiyaa irukak kuudathu………. paaal kottituthuthaaa… kadavule……..

  2. Superb ud sis. Finally move poitanga pola pavam pugal😉. Siva pugal sema pair, ippo siva panna veleiya partha inimel pugal samaika sollave maten. Next ud sikirama kudunga sis plsssss.

LEAVE A REPLY