SHARE

இரண்டு நாட்கள் ஆகியும் ஷாஹிதாவின் நினைவு திரும்பாமல் அனைவரையும் பயமுறுத்திக் கொண்டிருந்தது… அவள் அருகிலேயே, ஊண் உறக்கம் இன்றி, நிஷா அழுதுக் கொண்டிருந்தாள்… ஜாகீரோ தனது தங்கையின் நிலையைப் பார்த்து உள்ளுக்குள் மறுகிக் கொண்டு, கூனிக் குறுகிப் போனான்….

ரஃபியின் நிலையோ கேட்கவே வேண்டாதது போல… எங்கோ வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தான். தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணின் நிலை இப்படியா ஆக வேண்டும்… என்று அனைவரும் கண்ணீரில் கரைந்துக் கொண்டிருக்க, நாராயணனோ, கோபத்தின் உச்சியில் கொதித்துக் கொண்டிருந்தான்.

“எல்லாரும் மனுஷங்க தானே…. எதுக்கு இந்த இனவெறி… சுதந்திரப் போராட்டத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” அவனது மனம் பலமுறை கேள்வி கேட்க, அது போல பெண்களையும் குழந்தைகளையும் தாக்கும் கயவர்களை அடித்து போடும் வேகமும், அவர்களை கடித்தே துப்பும் குரூரமும் எழ, அவன் முகத்தைப் பார்த்த ஷஃபி அவனது எண்ணம் புரிந்தது போல பார்த்துக் கொண்டு நின்றான்…

ஷாஹிதாவை காக்க அவன் எடுத்த முயற்சியை அறிந்திருந்த ஷஃபிக்கு நாராயணன் மீது மிகுந்த அன்பு பெருகியது…. ‘எவ்வளவு சாந்தமானவன் இவன்… அவளைக் காக்க, அவர்களைத் தாக்கி, அவர்களை கடித்து காயப்படுத்தி போராடி இருக்கிறானே… தம்பி போன்ற நண்பன் கிடைத்தது மிகவும் பாக்கியம்…’ அவன் நெழ்ச்சியுடன் நினைத்துக் கொண்டு அவனை நெருங்கும் சமயம், ஷாஹிதாவிற்கு வலிப்பு ஏற்பட்டது.    

அனைவரும் பதறி அவளருகில் செல்ல, அந்த வளாகத்திலேயே  இருந்த டாக்டரை ஷஃபி விரைவாக அழைத்துக் கொண்டு வர, ரஃபியோ ஷாஹிதாவை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். ஆயிரமாவது முறையாக, ‘தான் அவளை தனியே விட்டுச் சென்றது தவறு’ என்று மனதினில் அவளிடம் மன்னிப்பு வேண்டிக் கொண்டிருந்தான்.

வலிப்பால் தலை அசைந்ததில், அவளது தலைக் கட்டையும் மீறி ரத்தம் கசிய, அதைப் பார்த்தவனுக்கும் இதயத்தில் ரத்தம் கசிந்தது… ஒரு ஊசி போட்ட பிறகு, ஷாஹிதா அமைதியாக உறங்கவும், அவளது நிலையைப் பார்த்த அவளது தாய் மயங்கிச் சரிய, இருவரையும் பார்த்த தாகீர் பெருங்குரலெடுத்து கதறத் தொடங்கினார்.

“என் பொண்ணுக்கு ஏன் இந்த நிலைமை… அல்லாஹ் ஏன் அவளை இப்படி சோதிக்கிறார்… அவளுக்கு கல்யாணம் செய்து பார்க்கணும்னு ஆசைப்பட்டு காத்துட்டு இருந்தேனே… இப்ப்போ இவளை எவன் கல்யாணம் செய்துப்பான்… ஒரு நல்லது நடக்காம அவ இப்படியே போய் சேர்ந்திருவா போல இருக்கே… நாங்க குடும்பத்தோட விஷத்தை சாப்பிட்டு போய் தான் சேரப் போறோம்…” மகளின் நிலையம், மனைவியின் நிலையும், பெருமளவு அவரது தைரியத்தைக் குறைத்து இருக்க, தலையில் அடித்துக் கொண்டு அழுதவரை, இக்பால் சமாதானம் செய்ய முயல, எதற்கும் கட்டுப்படாமல், அவர் கதறிக் கொண்டிருந்தார்.

தாயைப் பார்ப்பதா… தந்தையை சமாதானப்படுத்துவதா என்று புரியாமல், ஜாகீர் தவித்துக் கொண்டு நிற்கையிலேயே, “ஜாகீர்… டாக்டர் அய்யாவ கூட்டிட்டு வா… இவ எழுந்திருக்க மாட்டேங்கிறா….” முகத்தில் தண்ணீரைத் தெளித்துப் பார்த்து, எதுவும் பயனளிக்காமல், பேகம் சொல்லவும், மீண்டும் மருத்துவரைத் தேடி ஜாகீர் ஓடினான்.

“எல்லாரும் என்னை விட்டு போயிருவாங்க போல இருக்கே… நான் என்ன செய்வேன்?” தாக்கீரின் கதறல், சாம்புவையும், இக்பாலையும் பதற வைத்தது.

“தாகீர்… போதும்… எழுந்திரு… நம்ம குழந்தைக்கு ஒன்னும் ஆகாது… அவ எழுந்து வருவா… அவளுக்கு நல்லபடியா நிக்காஹ் செய்து தருவோம் பாரேன்… இந்த ஊரே அசந்து போய் நிக்கும்….” இக்பால் தாகீரை சமாதானம் செய்ய, தாகீர் அழுகையை நிறுத்தி, அவரை வெறித்துப் பார்த்தார். 

அவரது பார்வை பயத்தைக் கொடுக்க, “தாகீர்… எந்த தப்பான முடிவும் எடுக்காதே… நம்ம ஷாஹி குட்டிக்கு ஒண்ணும் ஆகல… பயத்துல அவளுக்கு நினைவு வராம இருக்கு… அவ்வளவு தான்… இன்னும் ரெண்டொரு நாளுல அவ நினைவு திரும்பிடும்ன்னு டாக்டர் சொன்னது உனக்கு கேட்கலையா?

நாம அல்லாஹ் மேல பாரத்தைப் போட்டு, எந்த பயமும் இல்லாம இருக்கலாம்… அல்லாஹ் நமக்கு துணை இருப்பார்…” மனதில் ஷாஹிதாவின் நிலை பயத்தைக் கொடுத்தாலும், தாகீரைத் தேற்ற அவர் சமாதான வார்த்தைகள் கூற,

“நான்… அவளோட நிக்காஹ்க்காக என்ன எல்லாம் வாங்கி இருக்கேன்னு உனக்கே தெரியும் இல்ல.. அதெல்லாம் இப்போ நான் என்ன செய்ய? என் பேட்டிக்கா இப்படி ஒரு நிலைமை” என்று விரக்தியாக கூறியவர், உள்ளே சென்று, பெட்டியில் வைத்திருந்த நகைகளை அள்ளிக் கொண்டு வந்து, நடுக் கூடத்தில் கொட்ட, அனைவரும் அவரது செய்கையைக் கண்டு திகைத்தனர்…

அதிர்ச்சியில் இருந்து முதலில் மீண்டது இக்பாலே… “தாகீர்… என்ன இது? உனக்கு மூளை குழம்பிப் போச்சா என்ன? எல்லாத்தையும் எடுத்து உள்ள வை… ஷாஹிதாவுக்கு ஒண்ணும் ஆகல… மொதல்ல மனசுல அதை நிறுத்தி வை… எதுக்கு இப்படி நடந்துக்கற? அங்க பாரு ஜாகீர் எப்படி பயந்து இருக்கான்னு…. நீ தானே அவங்களுக்கு தைரியம் சொல்லணும்… நீயே உடைஞ்சா என்ன ஆகறது?” அவரை சமாதானம் செய்ய, குரலை உயர்த்தியே ஆகவேண்டிய நிலையில், இக்பால் குரலை உயர்த்தவும், தாகீர் அவரது சட்டையைப் பற்றினார்.

“வாப்பா….” ஜாகீர் அவரைப் பார்த்து அதிர, ஷஃபி அவர் அருகில் ஓட, நிஷா திகைத்து விழிக்க, இக்பால், தனது நண்பனை அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டு பெண்களோ, பதட்டத்தில், செய்வது அறியாமல் நின்றிருந்தனர்.         

“நிஷா அங்க இருந்து எழுந்திரு…. உள்ள போய் சமையலை கவனி…” ஷஃபி அவளை அங்கிருந்து அனுப்பி வைக்க, பயத்துடன் நிஷா அவனை பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

“வாப்பா… அவர் மேல இருந்து கையை எடுங்க…” ஜாகீர் சொல்லவும், இக்பாலின் தோளில் சாய்ந்தவர்,

“என் பொண்ணுக்கு எப்படி நல்லது செய்ய முடியும்ன்னு நினைக்கிற? எவனாவது எதுவும் நடக்கலைன்னு சொன்னா நம்புவானா? அவ இனிமே இப்படியே இருந்து செத்துப் போக வேண்டியது தான்… இப்படியே செத்து…” அதற்கு மேல் சொல்ல முடியாமல் அவர் கதற,

“என்ன தாகீர் பேசற? வாய மூடு… ஏதாவது சொல்லி வைக்காதே…” என்று அதட்டியவர்,

ஓரிரு வினாடிகள் அமைதிக்கு பின், “நம்ம ஷாஹிதா குட்டிய நம்ம ரஃபிக்கு நிக்கா செய்து கொடுக்க சம்மதமா?” குரலில் எந்த பிசிரும் இல்லாமல், அவர் கேட்கவும், அழுது கொண்டிருந்த தாகீர், அதைக் கேட்டு, சில வினாடிகள் ஸ்தம்பித்து நின்றார்.

அவரே அந்த நிலை என்றால், மற்றவர்களோ, எழுந்தே நின்று விட்டனர்… ஜாகீர், இந்த நிக்காஹ்வில் சந்தோஷப்படுவதா, இல்லை இந்த நிலையில் இருக்கும் தன் தங்கைக்கு நிக்காஹ் ஏற்பாடாகிறதே என்று அழுவதா என்றே புரியாமல் குழம்பித் தவிக்க….  ரஃபி தன் தந்தையின் அருகே வந்து நின்றான்.

“என்ன ரஃபி உனக்கு சம்மதம் தானே…” அவர் கேட்கவும், அவரைத் கட்டித் தழுவிக்கொண்ட ரஃபி, அத்தனை நேரம் அடக்கி வைத்த அழுகை பீறிட, கதறத் தொடங்கினான்….

“இப்போ எதுக்கு அழற… சம்மதமா இல்லையான்னு சொல்லு…” இக்பால் விடாமல் கேட்கவும்,

“சம்மதம் வாப்பா…” என்று அழுகையினூடே சொன்னவனை, தாகீர் தழுவிக் கொண்டார்.

வார்த்தைகளற்ற மௌனத்தின் வாயிலில் அனைவரும் நின்றிருந்தாலும், ஷாஹிதாவின் நிக்காஹ் சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அவளது நிலை அவர்களை துயரத்தில் கசக்கிப் பிழிந்தது….

ஜாகீர் ரஃபியை கட்டித் தழுவ… “இந்த நிலையிலா…” ஷாஹிதாவின் தாய் தயங்க… இக்பால் அவரை கேள்வியாகப் பார்க்க,

“இந்த நிலையில செய்யத் தான் வேணுமா? அது நல்லா இருக்குமா?” அவர் தயக்கத்துடன் கேட்டார்.

“அவளுக்கு மருத்துவம் செய்யறது படி செய்துட்டே இருப்போம்.. நிக்காஹ்வுக்கும் எல்லா ஏற்பாடும் செய்யலாம்… அதுக்குள்ள குணமாகிருவான்னு நம்புவோம்… இன்ஷா அல்லாஹ்…” என்று இக்பால் நம்பிக்கையுடன் சொல்ல, அதைக் கேட்ட தாகீர், தான் கொண்டு வந்து கொட்டிய அனைத்து நகைகளையும் அவரது கையில் திணித்தார்.

மறுப்பான தலையசைப்புடன், அதை திருப்பிக் கொடுத்தவர், “இதுல இருந்து பொட்டு தங்கம் கூட எனக்கு சீதனமா வேண்டாம்… அப்படி வாங்கினா… என் ஷாஹி குட்டிய இதுக்காகத் தான் என் மகனுக்கு நிக்காஹ் செய்து வைக்கிறதா ஆகிடும்… வேண்டாம்… அவளுக்கு எல்லாமே நானே வாங்கித் தரேன்… ஏற்பாட்டை கவனி..” உறுதியான குரலில் இக்பால் சொல்லவும், நன்றியுடன் தாகீர் அவரைக் கட்டித் தழுவினார்.

அப்பொழுது தாகீரின் கண்ணில், காபியுடன் வந்த நிஷா படவும், அவளையே சில வினாடிகள் பார்த்தவர், ஜாகீரை தன் அருகில் இழுக்க, “என்னாச்சுப்பா…” என்றபடி ஜாகீர் புரியாமல் நின்றான்.

“என் மகன் ஜாகீருக்கு நிஷாவ நிக்காஹ் செய்துத் தரியா? பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்துக்கலாம்… இந்த நகை எல்லாம் நிஷாவுக்கு நான் போடறேன்…” என்றவர், அனைவரும் திகைத்து நிற்கும் பொழுதே, அத்தனை நகையையும் ஜாகீரிடம் கொடுத்து, அவள் கையில் கொடுக்கச் சொல்லி, சைகை காட்ட, நிஷா கண்ணீருடன் ஜாகீரைப் பார்த்தாள்.

“அப்பா… ஷாஹி சரி ஆகட்டும்பா… அப்பறம் எங்க நிக்காஹ்வை நடத்தலாம்..” அவன் சொல்லத் தொடகும் போதே, நிஷாவின் கண்களில் நன்றியைப் பார்த்தவன், அதே பிடியில் நிற்க,

“நன்றிக் கடனா தாகீர்…” இக்பால், சந்தேகமாக இழுத்தார்.

“இல்ல.. என்னை தப்பா எடுத்துக்காதே… என் மகனுக்கு அவளை விட நல்ல பொண்ணு எங்க இருந்து கிடைப்பா… உனக்கு உன் ஷாஹி குட்டி போல தானே என் நிஷா குட்டியும்… வேற எங்கயோ கட்டிக் கொடுக்கறதுக்கு என் மகனுக்கு கொடுத்தா… நம்ம உறவும் எப்பவும் விட்டும் போகாது தானே… அவங்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் எப்பவும் துணையா இருப்பாங்க… அவங்க நட்பும் விடாது…” தனது நிலையைச் சொன்னவர்,

“ரெண்டு நிக்காஹ்வையும் ஒண்ணா ஏற்பாடு செய்யலாம்…” தாகீர் உறுதியாகச் சொல்லவும், சந்தோஷத்திற்கு பதில் அங்கு துக்கமே அனைவரையும் ஆழ்த்தியது.

திருமண ஏற்பாடுகள் ஒரு புறம் ஆண்கள் செய்ய, பெண்கள் ஷாஹிதாவை கவனிக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டனர். மேலும் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஷாஹிதா கண்களைத் திறந்தாலும், எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். சுற்றி நடக்கும் எதுவும் அவள் கண்களை எட்டியும், மனதில் பதிந்ததாகத் தெரியவில்லை…

திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன், ஷாஹிதாவின் அருகே தனது முழு நேரத்தையும் ரஃபி கடத்தினான்… அவளிடம் பேசி, பழைய நினைவுகளை மீட்டெடுக்க அவன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“என்னங்க… இப்போ எதுக்கு நமக்கு அவசரமா நிக்காஹ் ஏற்பாடு? அவ குணமாகட்டும்… அவ இருந்து சந்தோஷமா செய்யணும்…” கண்ணீருடன் நிஷா கேட்க, ஜாகீர் அவள் தலை கோதினான்.

அவனுக்கும் அதே விருப்பம் இருந்த போதும்… இந்த நிக்காஹ் ஷாஹிதாவின் மனதில் ஏதும் மாற்றத்தை விளைவித்து, அவள் குணமாவாளா? என்ற நப்பாசையே அவனுக்கு அதிகமாக இருக்க, அதை அப்படியே மறைக்காமல் அவளிடம் வெளியிட்டான்.

“நம்ம மட்டும் எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?” நிஷாவின் கேள்விக்கு, ஜாகீர் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“அவ நல்லபடியா ஆகாம, நமக்கு ஏது சந்தோஷம்? பொறுத்திருந்து பார்ப்போம் நிஷா… எல்லாம் நல்லபடியா ஆகும்…” என்று அவன் நம்பிக்கையளிக்க, புறாவை போல அவனுடன் ஒண்டிக் கொண்டாள்.

வாரணாசி சென்று, இருவருக்கும் அழகிய திருமணப் புடவையை எடுத்துக் கொண்டு வந்தனர்… அதை கொண்டு வந்து, ஷாஹிதாவின் முன் வைத்த நிஷா, அவளது கையை எடுத்து, அதை தடவி, அதன் மென்மையை அவளுக்கு உணர்த்தி, அதன் அழகை விடாமல் நிஷா சொல்லிக் கொண்டிருக்க, அவளது வெறித்தப்பார்வை நிஷாவின் மீது திரும்பவும், நிஷாவின் உள்ளம் துள்ளியது…

“அத்தை…. மாமா… ஷாஹி என்னைத் திரும்பிப் பார்த்துட்டா…” அன்றைய நாள் முழுவதும் பார்க்கும் அனைவரிடமும், அதையே சொல்லிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள், நிஷா….

“ஷாஹி… நான் உனக்கு கையில மருதாணி வச்சு விடறேன்…” என்று அவளுக்கு கையில் மருதாணி பூசியவள், அதை எடுத்தவுடன், அவளது கையை எடுத்து கண்களுக்கு முன்னால் காட்டி,

“எப்படி சிவந்திருக்கு பாரு… உனக்கு பிடிச்சா மாதிரியே சிவந்து இருக்கு…” கண்ணீருடன் காட்ட, எந்த சலனமும் இல்லாமல், ஷாஹிதா அமர்ந்திருக்க, ஜாகீர் மறுபுறம் அவள் அருகில் அமர்ந்தான். நிஷா ஏக்கமாக ஜாகீரைப் பார்க்க, அங்கு வந்த ரஃபி ஷாஹிதாவின் காலடியில் அமர்ந்தான்.

“நாளைக்கு காலையில நிக்காஹ்… இவ இன்னும் தெளியலையேங்க…” நிஷா ஏக்கமாகக் கேட்கவும், ஜாகீர் ரஃபியைப் பார்க்க, ரஃபி அவளது கையை அழுத்தினான்.

“அவ மெல்ல தெளியட்டும் நிஷா… அவளை நான் குழந்தை போல பார்த்துப்பேன்… என்ன…. அவ நல்ல நிலையில இருந்தா… நாளைக்கு அவளோட சந்தோஷமே வேறயா இருக்கும்… அது தான் எனக்கு ரொம்ப மனசுக்கு வருத்தமா இருக்கு….” ரஃபி ஷாஹிதாவிற்காக வருத்தப்பட, ஜாகீர் அவனைத் தட்டிக் கொடுத்தான்.

“உன்னைப் போல ஒரு கணவர் கிடைக்க அவ கொடுத்து வச்சிருக்கணும் ரஃபி…” நெகிழ்ந்த குரலில் ஜாகீர் கூறவும்,

“அதெல்லாம் இல்ல ஜாகீர்… ஷாஹி போல ஒரு மனைவி கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கணும்… என்னை அவ நல்லா பார்த்துப்பா…” நம்பிக்கையுடன் சொன்னவனை கண்ணீருடன் பார்த்தனர், அவனது பெற்றோர்.

குறிப்பிட்ட தேதியில், இரு ஜோடிகளின் நிக்காஹ்வும் நடைபெற, மனதில் பாரம் குடிகொள்ள பெரியவர்கள், அவர்களை கட்டித் தழுவ, ஷாஹிதா ரஃபியின் கையை இறுகப் பிடிக்க, அதைக் கண்டு கொண்ட, அனைவருமே சந்தோஷத்தில் மிதந்தனர்….

“ரஃபி அவ உன் கையை அவ பிடிக்கறா…” ஜாகீர் சந்தோஷத்துடன் ஆர்ப்பரிக்க,

“ஆமா… ஆமா… அவ என்னை… எங்க நிக்காஹ்வ உணர்ந்து இருக்கா…” ரஃபியும் அதே சந்தோஷத்துடன் சொல்ல, நிஷா அவள் அருகில் ஓடி வந்தாள்.  

காலையில் இருந்து மனதில் குடி கொண்ட பாரம், விலக, அனைவருமே சந்தோஷ கடலில் மிதக்க, விருந்து களைகட்டத் துவங்கியது… மறுநாள் அந்த செய்தி வரும் வரை….   

தொடரும்     

4 COMMENTS

 1. Ud super pavam shahi,but epidi yo avanga rendu perukum prachanai ilama marriage mudinchiruchu,good ini ena nadakumo nu iruku,seekiram rendu Ud poden Rammy please enna rehan,Lucknow poi ena achunu theriyanum,apuram nidha life la enna nadanthathunum theriyanum ila,oru kalula rendu manga va kuden please!

 2. thanks bharathi … thanks a lot ma .. 🙂 🙂 pottudalam ma … sikiram kandipa next weekla poda try panren bharahti …

 3. nice ud rams akka aana kadasiyil oru twist vachuteengale
  shahi oru valiyaa raphiyai pidichitaa
  nisha vum jaagirai pidichitaa
  avanga rendu per aasaiyum niraiveri iruchu
  appuram aduthu enna nadakkum
  waiting eagerly for that

LEAVE A REPLY