SHARE

சலித்துக் கொண்டாலும்

என் நினைவுகள்

உன்னிடமே உன்னைச் சுற்றியே ,

எவ்வளவோ பிரயத்தனம் செய்தும்

தோற்றுப் போகிறேன்

உன்னை மறக்க வக்கில்லாமல்

இன்னுமும் காதலித்துக் கொண்டேதான் இருக்கிறேன்

 

விடியல் பொழுது அழகாக விடிய, மழையின் ஆரவாரத்தோடு அன்றைய பொழுது புலர்ந்தும் புலராமல் சோம்பலாக விடிந்துக் கொண்டிருக்க, ஷிவானி மெல்ல கண் திறந்துப் பார்த்தாள்.

மணி ஏழைக் கடந்துக் கொண்டிருக்க, “இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு அப்பறம் எழுந்துக்கலாம்” என்று மனதினில் நினைத்துக் கொண்டு, புரண்டு படுத்தவளின் மேல் ஊர்ந்த கையை உணர்ந்தவள் , “ஹையோ” என்று தலையில் அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

“இன்னும் என்ன சின்னப் பிள்ளைன்னு நினைப்போ? அத்தை தனியா அங்க வேலை செய்துட்டு இருப்பாங்க… வீட்டுக்கு வந்த முதல் நாளே இப்படியா செய்வ ஷிவானி?” என்று தன்னையே கடிந்துக் கொண்டவள், அவசரமாக குளித்து முடித்து வெளியில் வந்த பிறகும் புகழ் உறங்குவதைப் பார்த்தவளின் முகம் சிவக்க,

“ஊமை கோட்டான்… சரியான ஊமை கோட்டான்… அமைதியா இருக்கற மாதிரி இருந்துக்கிட்டு என்ன வேலை எல்லாம் செய்யறார்?” என்று செல்லமாக அவனை கடிந்துக் கொண்டவள், வேகமாக அறையை விட்டு வெளியேற, பூஜை அறையில் மல்லிகா ஸ்லோகம் சொல்லும் குரல் கேட்டு அங்கே சென்று நின்றாள். அவளது முகத்தில் தெரிந்த  தயக்கத்தைப் புரிந்தவர், கடவுள் படங்களுக்கு தீபாராதனைக் காட்டி, அவளிடம் புன்னகையுடன் நீட்ட, அதை வாங்கிக் கொண்டவள், மல்லிகாவைப் பார்த்து சங்கடமாக புன்னகைத்தாள்.

“நல்லா தூங்கினியா சிவா? புது இடம் கஷ்டமா இல்லையே..” வாஞ்சையாக அவர் கேட்க,

“அத்தை… சாரி அத்தை… நேரம் ஆனது தெரியாம தூங்கிட்டேன்…” அவள் சங்கடமாக தொடர,

“நானும் உன் வயசெல்லாம் தாண்டி தான்மா வந்திருக்கேன்… எனக்கும் எல்லாம் புரியும்…” கேலியாக அவர் முடிக்க, ஷிவானியின் முகம் நாணத்தில் சிவந்தது.

“ரொம்ப அழகா இருக்க சிவா…” அவளது கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தவர்,

“சீக்கிரம் வாம்மா… காலை சமையலைப் பார்க்கலாம்… இல்ல கால்ல சுடு தண்ணிய கொட்டிக் கிட்ட மாதிரி சாப்பிடாம கூட கிளம்பிப் போயிடுவான்… கொஞ்சம் வெண்பொங்கல் செய்து சட்னி அரைக்கலாம்…” என்றவர் சமையல் அறைக்குள் செல்ல, அதே நேரம் புகழும் எழுந்து வந்தான்.

“அத்தை… இதுல இருக்கறது பயத்தம்பருப்பு தானே… அங்க அம்மா வச்சு இருக்கறது கொஞ்சம் லைட் கலரா இருக்கும்… இது கொஞ்சம் டார்க் மஞ்சளா இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே அதை எடுக்க, அதைப் பார்த்து சிரித்துக் கொண்டே சோபாவில் அமர்ந்தவன், தனது முன்னால் இருந்த நியூஸ் பேப்பரை எடுத்து புரட்டத் துவங்கினான்.

“நான் சட்னி அரைக்கிறேன் அத்தை…” அதை ஒரு பெரிய விஷயமாக சொன்னவளைப் பார்த்த புகழ் சிரிக்கத் துவங்க, அவனது சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தவள்,   

“இவர் எப்போ வந்தாரு?” என்று யோசித்துக் கொண்டே, அவனுக்கு காபி கலந்துக் கொண்டு அவன் அருகில் நெருங்கியவள்,

“என்னங்க… நீங்க வந்தீங்கன்னா காபி வேணும்னு கேட்கலாம் இல்ல? நான் உள்ள என்ன செய்யறதுன்னு அத்தை கிட்ட பேசிக்கிட்டு நீங்க வந்ததை கவனிக்கல…” என்று சொல்லவும்,

“ஆமா … ஆமா.. ” என்று புகழ் ராகம் இழுக்க,

“ஆஹா… பயபுள்ள நாம பேசறதை எல்லாம் கேட்டு இருப்பாரு போல…” என்று மனதில் நினைத்துக் கொண்டவள்,

“அத்தைக்கு வேணா சமையல் எல்லாம் ஈசியா இருக்கற மாதிரி இருக்கும்… நாங்க எல்லாம் லேர்னர்ஸ்பா… அப்படித் தான் பிரேக் பிடிச்சாலே ஹாப்பி ஆவோம்… இன்னும் ஆக்சிலேட்டரை அழுத்தினா… கேட்கவா வேணும்?” என்று புகழைப் பார்த்து சொன்னவள், அவன் அவளது முகத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே,

“சிவா… லுக்கே சரி இல்ல… உள்ள ஓடிப் போயிரு…” என்று சமையல் அறைகள் ஓடியவள், மீண்டும் மல்லிகாவிடம் பேசிக் கொண்டே அவருக்கு உதவிக் கொண்டிருக்க, அவளது குரலைக் கேட்டுக் கொண்டே புகழ் நியூஸ் பேப்பரை பார்த்துக் கொண்டிருந்தான்,

மணி ஆனதை உணர்ந்து கிளம்பச் சென்றவன், விரைவில் தயாராகி வர, “ஓ… நீங்க அதுக்குள்ள ரெடியாகிட்டிங்களா? நான் வடை செய்யலாம்ன்னு நினைச்சேன்…” என்று அவள் பெரிதாக கவலைப்பட,

“வடைக்கு ஊரப் போட்டு இருந்தா மதியம் சூடா செய்துத் தா…” என்று புகழ் சொல்லவும்,

“ஓ அதுக்கும் ஊரப் போடணுமா?” என்று ஷிவானி கேட்டதைப் பார்த்த புகழுக்கு அழுவதா சிரிப்பதா என்றே புரியாமல் குழம்பி நிற்க,      

“சரி அதை எல்லாம் நான் அத்தையை கேட்டு செய்துக்கறேன்… நீங்க மத்தியானம் மறக்காம சாப்பிட வாங்க…” என்று சாதாரணமாக சொல்லிவிட்டு, அவனுக்கு சாப்பிட பரிமாறியவளை புகழ் விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன லுக்கு.. பொங்கல் எப்படி இருக்குன்னு சொல்லுங்க… அத்தை சொல்லச் சொல்ல நானே செய்தேன்…” என்று சொன்னவளைப் பார்த்து புன்னகைத்தவன், அதை உண்டு முடித்து, கையை கழுவிக் கொண்டு, அமைதியாக யாரிடமும் சொல்லாமல், வழக்கம் போல தனது லேப்டாப்பை எடுத்துக் கொண்டு கிளம்ப, ஷிவானியின் மலர்ந்த முகம் வாடத் துவங்கியது.

கிளம்பும் நேsரத்தில் அதைப் பார்த்த புகழ் என்ன நினைத்தானோ, “சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்தவளை நோக்கி வந்தவன், “கொஞ்சம் தண்ணி கொடு வணி…” என்று சொல்லவும்,

“என்னங்க சாப்பிட்டுட்டு இப்போ தானே ஒரு சொம்பு தண்ணி குடிச்சீங்க? இன்னும் அதுக்குள்ள தாகம் எடுக்குதா?” என்று கேள்வியாகவும், கவலையாகவும் அவனைப் பார்க்க, பெயருக்கு தண்ணீரைப் பருகியவன், அவளது கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு, அவளைப் பார்த்து நக்கலாக சிரித்து விட்டுச் செல்ல, ஷிவானி ஆச்சரியத்தில் நின்றாள்.

அதைப் பார்த்த மல்லிகா கண்டும் காணாமல் அவள் அருகில் வந்து, “மதியம் என் பையனுக்கு என்ன ஸ்பெஷல் செய்யப் போற?” என்று கேட்க, அவரது முகம் இயல்பாக இருப்பது போல தெரிந்தாலும், அவரது கண்களில் இருந்த சிரிப்பு, அவர் புகழ் செய்ததை பார்த்துவிட்டார் என்பதை சொல்லாமல் சொல்ல,

“போங்க அத்தை…” என்று சிணுங்கியவள்,

“வாங்க சாப்பிடலாம்…” என்று சொல்லி, அவரையும் தன்னுடனே அமர வைத்து உண்ண வைத்தாள்.

“என்ன சமையல் செய்யலாம்மா..” என்று மல்லிகா தொடங்கவும்,

“இப்போ தானே அத்தை தூக்க மாத்திரை சாப்பிட்டு இருக்கோம்… அதுக்குள்ள கேட்கறீங்க?” ஷிவானி சிரித்துக் கொண்டே சொல்லவும்,

“தூக்க மாத்திரையா? அதை எப்போ சாப்பிட்டோம்?” புரியாமல் அவர் கேட்கவும்,  

“அது தான் நம்ம இப்போ சாப்பிட்டோமே பொங்கல்… அதை தான் நாங்க அப்படி சொல்லுவோம்…” என்று சொல்லி கிணுங்கிச் சிரிக்க, ‘வாலு…’ என்று மல்லிகாவும் அவளுடன் இணைந்துக் கொண்டார்.

சிரித்து முடித்தவள், “சொல்லுங்க அத்தை… அவர் சாப்பிட எப்போ வருவார்?” ஷிவானி கேட்க,

“நேரம் கிடைக்கும் போது வருவான்ம்மா… அது எப்போன்னு தான் சொல்ல முடியாது…” மல்லிகாவின் பதிலில்,

“:மொதல்ல இந்த பழக்கத்தை மாத்தணும்… சாப்பிட வர டைம் எல்லாம் கரெக்ட்டா இருக்கணும்… இஷ்டத்துக்கு போக வர இருந்தா மத்தவங்க எப்படி அவருக்கு அட்ஜஸ்ட் பண்ணறது?” என்று நினைத்துக் கொண்டவள், டிவியை இயக்கியவுடன், அதில் வந்த சீரியலைப் பார்த்து அலறி,

“என்ன ஆனாலும் சரி சிவா… இந்த சீரியல் பார்க்கற பழக்கத்தை மட்டும் வச்சுக்கக் கூடாது…” என்று தனக்குள்ளே சூளுரைத்துக் கொண்டவள்,

“அத்தை… ரூம்ல எல்லாம் கொஞ்சம் சரி பண்ணி வைக்கணும் அத்தை… ஒரு மாதிரி கச கசன்னு இருக்குன்னு அவர் சொன்னார்… நான் போய் அதை எல்லாம் அடுக்கி வைக்கிறேன்..” என்று சொல்லி, அவசரமாக அறைக்குச் சென்று முதலில் எப்படி செய்வது என்று ஆராய்ந்து, பின்பு ஒரு முடிவெடுத்தவளாக அறையை மாற்றி அமைக்கத் துவங்கினாள்.

ஒவ்வொன்றையும் அவள் பார்த்துப் பார்த்து அடுக்குவதைப் பார்த்த மல்லிகா, அவளுக்கு உதவ வர, “என் ரூமைக் கூட நான் ஒழுங்கா வச்சுக்க மாட்டேன்… அது அவருக்கும் நல்லா தெரியும்… ஆனா அத்தை உங்க பையன் செம சாமர்த்திய சாலி தான்… நைசா பேசியே என்கிட்டே எல்லா வேலையையும் வாங்கிடறார்..” என்று மகிழ்ச்சி சலிப்புடன் கூறிக் கொண்டவள், ஓரளவு அடுக்கி முடித்தாள்.

“அத்தை… நாம பக்கத்துல இருக்கற கடைக்கு போயிட்டு வரலாமா? ஸ்க்ரீன் துணி கூட மாத்தணும் … இது ரொம்ப வெளிச்சமா இருக்கு..”  ஷிவானி அறையை பார்த்துக் கொண்டே சொல்லவும், மல்லிகா அவளை கவலையுடன் பார்த்தவர்,

“என்கிட்டே அவ்வளவு பணம் இல்லையே சிவா… அப்போவே சொல்லி இருந்தா புகழ் கிட்ட கேட்டு இருக்கலாம் இல்ல…” என்று சொல்லவும்,

“என்கிட்டே இருக்கு அத்தை… அப்பா கொடுத்து வச்ச பாக்கெட் மணியை எல்லாம் சேர்த்து வச்சதே பத்தாயிரத்துக்கும் மேல இருக்கு… அதுவும் தவிர… நான் இங்க கிளம்பும் போது அப்பா, எனக்கு அவர் கிட்ட என் செலவுக்கு உடனே பணம் கேட்க எல்லாம் சங்கடமா இருக்கும்ன்னு சொல்லி என்கிட்டே இன்னொரு பத்தாயிரம் கொடுத்தாரு… அதுல வாங்கலாம்…” என்று சந்தோஷமாக திட்டமிட்டவளை நினைத்து மல்லிகாவிற்கு கவலை பிறந்தது.

‘எப்படி சொல்லி புரிய வைப்பது’ என்று அவர் நினைத்து, நேரடியாகவே சொல்லி விடலாம் என்ற முடிவுடன், “சிவா… உன்கிட்ட பணம் இருக்கறது ஒரு ஆத்திர அவசரம்னா இருக்கட்டும்… கையில வச்சுக்கோ… அதை அவன் கிட்ட சொல்லிடாதே… தெரிஞ்சா ரொம்ப ரோஷப் படுவான்… பண விஷயத்துல அவன் ரொம்ப கறாரா இருப்பான் சிவா… நான் சொல்ல வர்ரது புரியுதா?” தயங்கித் தயங்கி மல்லிகா ஒரு வாறு சொல்ல, ஷிவானி புரியாமல் குழம்பினாள்.

அவளது குழம்பிய முகத்தைப் பார்த்தவர், “பண விஷயத்துல அவன் ரொம்ப மான ரோஷம் பார்ப்பான் ஷிவானி… உங்க அப்பா அவனை நம்பாம தான் உன் கையில பைசா கொடுத்து விட்டதா நினைச்சுப்பான்… அப்பறம் நேரா உங்க அப்பாகிட்ட போய் அந்த பைசாவை கொடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்பான்… அதனால தான் சொல்றேன்… புருஷன் பொண்டாட்டிக்குள்ள எந்த ஒரு தயக்கமும் வேண்டாம்… அவன் மதியம் சாப்பிட வரும் போது நீ ஸ்க்ரீன் வாங்க போகணும்ன்னு சொல்லு… அவன் வந்து கூட்டிட்டு போவான்…” என்று மல்லிகா மறைச்சுப் பேச எதுவும் இல்லை என்பதை போல விளக்க, தனது கணவனின் புதிய முகம் ஷிவானிக்கு பெருமையாக இருந்தது.

“சரிங்க அத்தை… நான் அவர்கிட்டே கேட்கறேன்… அவரோட தன் மானத்துக்கு ஒரு பங்கம்ன்னா நான் அ்தைச் செய்ய மாட்டேன்…” என்று சொன்னவள், 

“மத்தியானம் சாப்பிட வரட்டும் நான் கேட்டுக்கறேன்…” என்று சொல்லிவிட்டு வேலைகளைத் தொடர, மல்லிகா அவளை நிம்மதியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

“தான் சொன்னவுடன் ‘அதை எப்படி நீ சொல்லாம்… என் இஷ்டம்…. எங்க அப்பா கொடுத்த பணம்..’ என்று குதிக்காமல், தான் சொன்னதையும், புகழின் மன நிலையையும் புரிந்து கொண்டு, அமைதியாக வேலையைப் பார்த்த ஷிவானியின் மீது மல்லிகாவிற்கு பாசம் அதிகரித்தது.

“சில விஷயங்கள்ல எல்லாம் புகழ் ரொம்ப அடிப்பட்டதாள அவன் இப்படி இருக்கான்…” மேலும் அவர் விளக்கத் துவங்க,

“அப்பா எல்லாமே சொல்லி இருக்காங்க அத்தை… நான் அவரை நல்லா புரிஞ்சுக்குவேன்…” என்று அவள் சொல்லவும், மல்லிகா நிம்மதியாக உணர்ந்து, அவளுக்கு உதவத் துவங்கினார். ஷிவானியின் புரிதல் எந்த அளவிற்கு அவளை நடத்திச் செல்லும்? காலத்தின் கையில் அதன் பதில்….

அறையை ஒழுங்கு படுத்தி, தூசி தட்டி சுத்தம் செய்தவள், மணியைப் பார்க்க, அதுவோ ஒன்றை தொட்டுக் கொண்டு நின்றது. “இனிமே போய் சமையலைப் பார்க்க வேண்டியது தான்…” என்று அவள் நினைத்துக் கொண்டு வெளியில் வரும் போதே, புளி கொதிக்கும் வாசனை வர, “அத்தை…” என்றபடி சமையல் அறைக்குள் விரைய,

“அவன் வர நேரமாகுது சிவா… அது தான் நீ அடுக்கிக்கிட்டு இருக்கும் போது வந்து நானே சமையலை தொடங்கிட்டேன்… சும்மா உட்கார்ந்து இருக்கறது போர் அடிக்குது…” என்று கூறியவர்,

“வடைக்கு போட்டு இருக்கேன்… அதை அரைச்சுக் கொடு…” என்று சிரித்துக் கொண்டே சொல்ல, ஷிவானிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

“கிண்டல் பண்ணாதீங்க அத்தை…” என்று கைகளை சுத்தமாக கழுவிக் கொண்டு, மல்லிகா சொன்னது போல செய்தவளது செல்போன் இசைக்க, அதை ஆர்வமாக எடுக்க, அதில் அழைத்தது சசி என்றதும், “அம்மா… நான் இங்க சமையல் செய்துட்டு இருக்கேன்… அப்பறம் பேசறேன்… அவர் வர நேரமாச்சு…” என்று சொல்லவும்,

“அடிப்பாவி… உன் அலப்பறைக்கு அளவே இல்லாம போச்சு… சரி சரி… வேலைய முடி… மாப்பிள்ளை பசியோட வருவார்..” என்று சசியின் பதிலைக் கேட்டவள்,

“நான் எப்போ ப்ரீ ஆகறேனோ அப்போ பேசறேன்… இப்போ பை..” என்று இணைப்பைத் துண்டிக்க, சசி உடனே பாஸ்கருக்கு போன் செய்து ஷிவானியின் அலம்பலை சொல்லி புலம்பத் துவங்க, இங்கு ஷிவானியோ அனைத்தையும் எடுத்து வைத்து, புகழுக்காக காத்திருந்தாள்.

மணி இரண்டை கடந்த வேளையில், “நீயும் என் கூட சாப்பிடு சிவா… அவன் எப்போ வருவானோ? அவனுக்கு வேலை ஒழியற நேரம் தான் வருவான்…” என்று மல்லிகா அழைக்க, பசி ஒரு புறம் வயிற்றை கிள்ள, புகழுடன் உண்ணும் ஆவல் ஒரு புறம் இழுக்க, இரண்டிற்கும் நடுவே அல்லாடியவள்,

“பயபுள்ள நேத்து மாதிரி கண்டுக்காம சாப்பிட்டா என்ன செய்வ? பசி தாங்காது சிவா… அத்தை கூடவே சாப்பிடு..” என்று ஒரு வழியாக முடிவெடுத்தவள், உண்ணத் துவங்கினாள். அவள் உண்டு முடிக்கும் வரையும் புகழ் வருவானோ என்று மனதின் ஓரத்தில் இருந்த ஆசை நிராசையாக, புகழ் வரவே இல்லை.

நேரம் ஆக ஆக ஷிவானி இருப்பு கொள்ளாமல் புகழுக்கு அழைக்க, அவளது அழைப்புகள் போய்க் கொண்டே இருந்தது. அவனது புதிய பிசினஸ்சிற்கான வேலைகளும், அதற்கு ஏற்றார் போல இடத்தைத் தேர்வு செய்வதிலும் அவனது பொழுது கழிந்துக் கொண்டிருக்க, ஷிவானியின் அழைப்புகள் அவனுக்கு மறந்தே போயிற்று…    

இரவு டிபனையும் செய்து வைsத்துவிட்டு ஷிவானி அவனது வரவுக்காக காத்திருக்க, வெகுநேரம் வரையிலும் புகழ் வீட்டிற்கு வரவே இல்லை.

“அவனே கதவைத் திறந்து வந்துப்பான்ம்மா… நீ போய்த் தூங்கு…” புகழுக்காக காத்திருந்த ஷிவானியுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்த மல்லிகா, ரத்த அழுத்த மருந்து அவரை உறக்கத்துக்கு தள்ள, அதற்கு மேல் அமர முடியாமல் சொல்லவும்,

“இல்ல அத்தை நான் அவர் வந்த உடனே தூங்கப் போறேன்… சாப்பாடு போடணுமே…” என்று பொறுப்பாக பதில் சொல்லவும்,

“இல்லமா அவனே தான் போட்டு சாப்பிட்டுக்குவான்… எனக்கு எப்பவுமே ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருக்க முடியறது இல்லம்மா… நான் முழிச்சு இருக்கறதைப் பார்த்தாலும் திட்டுவான்…” என்று ஒரு சங்கடமான முகத்துடன் சொன்னவரைப் பார்த்த ஷிவானி ஆதரவாக புன்னகைத்தாள்.

“அந்த மாத்திரை போட்டா அப்படித் தான் அத்தை தூக்கம் வரும்… அதுக்கு எல்லாம் என்ன சொல்றது? நீங்க போய்ப் படுங்க… நான் உட்கார்ந்து இருக்கேன்…” என்று ஷிவானி சொல்லவும், மல்லிகா உறங்கச் சென்றுவிட, பாடல்கள் ஒளிபரப்பும் சேனலை போட்டுக் கொண்டு ஷிவானி அமர்ந்திருக்க, காலையில் இருந்து செய்த வேலைகளின் களைப்பில் அமர்ந்த நிலையிலேயே ஷிவானியும் கண் அயர்ந்தாள்.

அப்பொழுது தன்னிடம் இருந்த ஒரு சாவியைக் கொண்டு உள்ளே வந்த புகழ், டிவி ஓடிக் கொண்டிருக்க, சோபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்து, அவள் அருகில் வந்து நின்றான்.

தான் வந்தது கூட தெரியாத அளவிற்கு உறங்குபளைப் பார்த்து, மணியைப் பார்க்க, அது பதினொன்றை தொட்டுக் கொண்டு நின்றது.

தலையில் அடித்துக் கொண்டவன், செல்லை எடுக்க, அதில் ஷிவானியின் அழைப்புகளைப் பார்த்து, “புது பிசினஸ் பத்தி பேச போன போது சைலென்ட்ல போட்டது… அதை எடுக்கமா மறந்துட்டோமே…” என்று நொந்துக் கொண்டு, அவளது உறக்கம் களையாதவாறு, தூக்கிக் கொண்டு சென்று படுக்கையில் கிடத்திப் போர்த்திவிட, போர்வைக்குள் வாகாக சுருண்டவள், தன்னுடைய தூக்கத்தை சுகமாக தொடர்வதைப் பார்த்தவன், அவளது நெற்றியில் இதழை ஒற்றி, தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள சென்றான்.

முகம் கழுவி வந்தவன், டைனிங் டேபிளில் எடுத்து வைத்திருந்த பதார்த்தங்களைப் பார்த்து, “நிஜமாவே வடை செய்துட்டாளா? கைல ஏதாவது சுட்டுக்கிட்டு இருக்க போறா? விட்டா இன்னைக்கே அவ எல்லாத்தையும் கத்துக்கணும்னு நிப்பா போல இருக்கே…” என்று மனம் முழுவதும் அவளது நினைவினூடே உண்டு முடித்து, காலியான பாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அறைக்கு வர, அப்பொழுது தான் அந்த அறையின் மாற்றம் அவனது கண்களைக் கவர்ந்தது.

“சொன்னது போலவே அழகா மாத்தி வச்சிருக்காளே…” மனதில் சந்தோஷமாக நினைத்தவன், பீரோ மட்டும் அவன் சொன்னபடியே அதே இடத்தில் இருப்பதைப் பார்த்து,

“ரொம்ப நல்ல பிள்ளை தான்…” என்று தனக்குள் சிரித்துக் கொண்டு, தனது லேப்டாப்பில், அவன் செய்யும் சைட் டிசைன் வேலைகளை செய்யத் துவங்கினான்.

பாதி தூக்கத்தில் கண் விழித்தவள், புகழ் அமர்ந்து வேலை செய்துக் கொண்டிருக்கவும், “இனியன் எப்போ வந்தீங்க? இருங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்…” என்று சொல்லவும்,

“எனக்கு எதுக்கும்மா சாப்பாடு?” என்று அவன் கேலி செய்ய,

“மதியமும் சாப்பிடல… இப்போவும் சாப்பிடாம படுக்கக் கூடாது…” என்று அவள் அவசரமாக எழவும்,

“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட போ… நான் சாப்பிட்டு ஒரு மணி நேரம் ஆகுது… இப்போ நீ தூங்கு…” என்று அவன் சொல்லவும், அப்பொழுது தான் தான் படுக்கை அறையில் இருப்பதை உணர்ந்தவள்,

“ஹி.. ஹி… ஹி… நான் தூங்கிட்டேன் போல… தூக்கத்துலையே இங்க வந்தது தெரியல…” என்று அவள் அசடு வழிவதை ரசித்தவன், பார்வையை கணினியின் பக்கம் திருப்பி,

“நீயா வரல… நான் தான் தூக்கிட்டு வந்தேன்…” என்றவன், அவள் முழிக்கவும்,

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… இந்த சைட்டை முடிச்சுக் கொடுக்கணும்… நீ தூங்கு…” என்று சொல்லவும், உறக்கம் கண்களை அழுத்த, ஷிவானி தனது உறக்கத்தைத் தொடர, புகழ் தனது வேலையை தொடர்ந்தான்.

மறுநாள் எப்பொழுதையும் விட விரைவாகவே எழுந்தவள், டைனிங் டேபிளின் மீது புகழ் ஒதுக்கி வைத்திருப்பதை பார்த்து, “ஹ்ம்ம்… பரவால்ல…. நம்ம ஆளு கொஞ்சம் வேலை செய்வார் போல இருக்கே… நமக்கு தான் ஒண்ணும் தெரியாது போல…” என்று கேலியாக நினைத்துக் கொண்டே, சமையல் அறைக்குச் செல்ல, மல்லிகா சூடாக காபியை தயாரித்து வைத்திருந்தார்.

“வாவ்…” என்று மனம் குதூகலிக்க, அதை வாங்கி அவள் குடிக்க,

“நேத்து அவன் எத்தனை மணிக்கு வந்தானம்மா… ஏன் மதியம் வீட்டுக்கு வரலையாம்… கேட்டியா?” என்று மல்லிகா கேள்விகளைத் தொடுக்கவும், அப்பொழுது தான், தான் உறக்கத்தில் எதையுமே ஒழுங்காக கேட்காதது நினைவு வர, முழித்துக் கொண்டு நின்றாள்.  

“என்ன சிவா?” என்று மல்லிகா கேட்கவும்,

“நேத்து தூக்கத்துல தான் எல்லாமே செய்தேன்னு நினைக்கிறேன் அத்தை… எனக்கு சரியா நியாபகம் இல்ல…” தயக்கத்துடன் சொன்னவளைப் பார்த்தவர், புன்னகையுடன்,

“சரி… அவன் எழுந்து வரட்டும்.. கேட்கலாம்..” என்று சொல்லவும், மண்டையை உருட்டி, இரவு நடந்ததை யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவளது யோசனையை கண்டவர், சிரித்துக் கொண்டே அன்றைய வேலைகளை செய்யத் துவங்கினார். அறையில் சத்தம் கேட்டு வேகமாக அங்கே சென்ற ஷிவானி, புகழ் பீரோவை நகர்த்துவதைப் பார்த்து, “இருங்க…. நான் ஒரு கை பிடிக்கறேன்…” என்று சொல்லவும்,

அவளை ஒரு பார்வைப் பார்த்தவன், “எனக்கு காபி மட்டும் கொடு… நான் நகர்த்திக்கறேன்..” என்று சொன்னவன், தனது வேலையைத் தொடர,

“அப்போ நிஜமா என் ஹெல்ப் வேண்டாமா?” ஷிவானி முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு கேட்க,

“அடி பின்னிடுவேன் … ஓடிப் போயிடு…” என்று புகழ் விரட்ட,

“என்னவோ போனா போகுதுன்னு… உதவிக் கரம் நீட்டினா… அதைத் தட்டி விட்டா என்ன செய்யறது?” என்று சலித்துக் கொண்டு நகர்ந்தவளின் முதுகில் புகழ் செல்லமாக தட்ட,

“அத்தை… என்னை அடிக்கிறாங்க… இனியன் என்னை அடிக்கிறாங்க…” என்று கத்திக் கொண்டே ஓட,

“இவளை நான் எங்கே அடிச்சேன்?” என்றபடி புகழ் வெளியில் வர,

“என்னடா பிள்ளையை அடிச்சியாம்…” என்று மல்லிகா வரவும், ஷிவானி அவனுக்கு பழிப்புக் காட்ட, அவளது குறும்பைப் பார்த்த இருவருமே சிரிக்கத் தொடங்கினர்.

அன்றைய பொழுது இனிமையாக கழிய, புகழிடம் கேட்டு, பணம் வாங்கிக் கொண்டு, ஷிவானி திரைச்சீலைகளை வாங்கி வீட்டை அழகுப் படுத்த, மல்லிகாவின் மனம் நிம்மதி அடைந்தது.

ஷிவானி வீட்டில் பொருந்திக் கொண்ட பாங்கும், புகழுக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்வதையும் கண்ட மல்லிகாவின் மனம் நிம்மதியில் நிறைந்தது.

புகழிடம் தென்பட்ட சிறு சிறு மாற்றங்கள் அந்த பேதைத் தாய்க்கு மகழ்ச்சியைக் கொடுக்க, அந்த மகழ்ச்சியின் காரணமான ஷிவானியை மல்லிகாவிற்கு மிகவும் பிடித்துப் போனது..

தன் வீட்டில் இருப்பது போலவே ஷிவானியும் உணர, மல்லிகாவின் செல்லப் பிள்ளையாகவே மாறிப்போன ஷிவானி… மாமியார் மருமகள் என்பதையும் தாண்டி மகள் அன்னையாகவே மாறி தங்கள் நாட்களை கழிக்கத் தொடங்கினர்.

நாட்கள் அதன் பாட்டில் ஓடிக் கொண்டிருக்க, அன்று அதிகாலையே புகழின் வீட்டிற்கு வந்து நின்ற பாஸ்கர் சசி தம்பதியரைப் பார்த்த மல்லிகா குழப்பத்துடன் நின்றார்.

6 COMMENTS

 1. சலித்துக் கொண்டாலும்
  என் நினைவுகள்
  உன்னிடமே உன்னைச் சுற்றியே ,
  எவ்வளவோ பிரயத்தனம் செய்தும்
  தோற்றுப் போகிறேன்
  உன்னை மறக்க வக்கில்லாமல்
  இன்னுமும் காதலித்துக் கொண்டேதான்
  இருக்கிறேன
  nice update sister romba nalaikku piragu big update thanks

 2. rasuuuuuuuuuuuu , so sweet .neenga . semma ud . chance ye illai.. siva oda oovaru seyal super. iniyan innum konjam maaralaamm…………….

LEAVE A REPLY