SHARE

கண்மணி அன்போடு காதலன் நான் நான்

எழுதும் லெட்டர்… சீ… மடல்.. இல்ல கடுதாசி வச்சுக்கலாமா

வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும், ம்…

மொதல்ல கண்மணி சொன்னேல்ல

இங்க பொன்மணி போட்டுக்க….

பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா

நான் இங்க சௌக்கியம்….

 

காலை மணி 6.45…. அஜயின் செல்போன், அவன் எழுவதற்காக இந்த பாடலை, இடையிடையே நடிகர் கமலஹாசனின் வசனங்களோடு ஒலிக்க, ரஜினி ரசிகனான அவனது அறைத் தோழன், கார்த்திக், அதைக் கேட்டு காதை அடைத்துக்கொண்டான்.

“காலைலயே கமல் குரலை கேட்க வச்சு என்னை ஏண்டா கொடுமை படுத்தற… டேய் கமல் ரசிகா… அடேய்… எழுந்துத்தொலடா… இவன் இம்சை தாங்க முடியல சாமி… டேய் நான் வேற பிளாட்டை பார்த்துட்டு போறேண்டா… இந்த மாசத்தோட நம்ம கணக்கை முடிச்சிக்கலாம்…” கண்களை விழிக்காமலே அவன் புலம்பிக்கொண்டிருக்க,

“இப்படி தான் போன மாசமும் சொன்ன…. செய்துட்டியா என்ன? டாங்கி ஹொவ் நோ கேம்ஃபர் செம்ல்? போடா போ… நல்லா இழுத்துப் போத்திக்கிட்டு தூங்கு…” என்றபடி ஒரு தலையணையை எடுத்து அவன் மீது வீசிய அஜய், நேராக குளியல் அறைக்குள் புகுந்து, அரக்க பரக்க, தனது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வந்து, தனது செல்போனை எடுக்க,

“கடவுளே… இவனுக்கு கொஞ்சம் நல்ல புத்தியை தரக் கூடாதா? இப்படி பைத்தியம் பிடிச்சு அலையறானே…” மீண்டும் கார்த்திக் புலம்பவும், அவனை மீண்டும் தட்டியவன், தன்னுடைய ரேடியோவையும், போனையும் ஒன்றாக  இயக்கினான். 

 

 

காலையில் ஒலிக்கும் பக்திப் பாடல்கள் ஓடிக்கொண்டிருக்க, “சப்பா… ஆன் டைம் Mr. அஜய்… இதுல உங்களை அடிச்சிக்க… மறுபடியும் நீங்க தான் பிறந்து வரணும்… சீக்கிரம் ரெடி ஆகுங்க…. அப்பறம் கால் மிஸ் ஆகிடும்…” அவன் தன்னைத் தானே போற்றி புகழ் பாடிக் கொண்டிருக்க,

அவனது ரேடியோவில், ‘தென்றல் பண்பலை 102.3ல் நீங்கள் இதுவரை கேட்டது தெய்வ ராகம்… விளம்பர இடைவேளைக்குப் பிறகு…. தென்றல் ராகங்களில், உங்களுக்கு பிடிச்ச பாட்டை வழங்கி, சுவையான ஃபில்ட்டர் காபியோட சேர்ந்து சுவைக்க நான் உங்க கண்மணி ரெடியா இருக்கேன்… நீங்க ரெடியா? நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்… *********” தென்றல் பண்பலையின் RJவின் குரல் ஒலித்துக் கொண்டிருக்க, அவள் சொல்வதற்கு முன்பே அஜயின் விரல்கள் அந்த எண்ணை அழுத்தி இருந்தது.    

“டேய்… டேய் கார்த்திக் இன்னைக்கும் லைன் கிடைச்சிருச்சுடா… நான் தான் ஃபர்ஸ்ட் காலர்…” வேலை முடிந்து, இரவு வெகுநேரம் கழித்து வந்து, நன்றாக உறங்கிக்கொண்டிருந்தவனை தட்டி எழுப்பிய அஜய் குதூகலிக்க,

“டேய்…. அவனவன் இந்த நேரத்துல படுத்து தூங்கிட்டு இருப்பான்டா… நீ தாண்டா பேய் மாதிரி கால் பண்ணிட்டுத் திரியற… என்னை நிம்மதியா தூங்க விடுறா… மறுபடியும் எனக்கு பத்து மணிக்கு கால் இருக்கு…” என்று தூக்க கலக்கத்தில் திட்டியவனைப் பொருட்படுத்தாமல்,

“வணக்கம்…. குட் மார்னிங்… நமஸ்கார்…. நான் உங்க கண்மணி… தென்றல் ராகத்துல உங்க கூட இன்னைக்கு பேச வந்திருக்கேன்… இன்னைக்கு யார் முதல் காலர்ன்னு பார்ப்போமா?” என்று அந்த RJவின் குரல் ஒலிக்கவும், அஜய் பரபரப்பாக நிமிர்ந்து அமர்ந்தான். 

“ஹாய் கண்மணி… குட் மார்னிங் அண்ட் ஹேவ் எ வண்டர்புல் டே….” முகம் நிறைந்த புன்னகையும், டன் கணக்கில் வழியும் ஜொள்ளுடனும் அவன் சொல்ல, தலையில் அடித்துக் கொண்ட கார்த்திக் எழுந்து அமர்ந்தான்.

“ஹாய் ஜெய்… இன்னைக்கும் நீங்க தான் முதல் காலரா? வாவ்… எப்படி கரக்டா உங்களுக்கு மட்டும் லைன் கிடைக்குது…” RJ கண்மணி கேட்க,

“பொழப்பில்லாதவன்… இதை விட்டா வேற என்ன வேலை? அது தான் லைன் கிடைக்குது…” அவளது கேள்விக்கு இங்கு கார்த்திக் பதில் கொடுக்க,

“அது… நான் ஜஸ்ட் ட்ரை பண்ணலாம்ன்னு நம்பர் போட்டேன்… உடனே கிடைச்சிருச்சு… என்னோட லக் அப்படி… விடா முயற்சி விஸ்வரூப வெற்றி கண்மணி…” ஏதோ பெரிய மலையையே புரட்டியவன் போல, அஜய் பதில் சொல்லவும்,

“இங்க இவ கிட்ட பேசறதுல என்னடா லக்கு வந்தது உனக்கு… உனக்கே இது ஓவரா இல்ல… எதுக்குடா விடா முயற்சி… டேய், போய் அதே முயற்சியோட ப்ராஜெக்ட்டை டெலிவர் பண்ணப் பாருடா… அதை விட்டுட்டு இங்க உட்கார்ந்து மொக்கை போட்டுட்டு இருக்கான்…” கார்த்திக் பதில் கொடுக்க,

“சரி ஜெய்… இன்னைக்கு நீங்க என்ன செய்ய போறீங்க? பாட்டு பாட போறீங்களா? இல்ல மொக்கை தத்துவம் அல்லது ஏதாவது ஜோக் சொல்லப் போறீங்களா?” கண்மணி கேட்கவும்,

கார்த்திக்,  “அவன் இப்போ போடறதே மொக்கை தானே… இதுல அவன் தனியா வேற மொக்கை தத்துவம் எல்லாம் சொல்லணுமோ? எல்லாம் காலக் கொடுமைடா சாமி…” என்று புலம்பவும்

“எப்பவும் தான் பாட்டு பாடுவேனே… ஃபார் அ சேஞ்ச் இன்னைக்கு ஒரு தத்துவம் சொல்றேன்….” என்ற அஜய்,

“ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்
ஆனால்  அவரால் கோமா ஸ்டேஜில் பேச முடியுமா? இது தான் வாழ்க்கைத் தத்துவம்…” பெருமையாக அஜய் சொல்லவும், கார்த்திக் தலையில் அடித்துக் கொண்டான்.  

“ஹாஹஹா ஜெய்… காலையிலேயே இப்படி ஒரு மொக்கைய நான் சுத்தமா எதிர்ப்பார்க்கல… சரி உங்களுக்கு என்ன பாட்டு போடணும்… சொல்லுங்க ப்ளே செய்துடலாம்…” கண்மணி கேட்கவும்,        

“உன்னை பார்த்த பின்பு நான்… நானாக இல்லையே…” அஜய் பாடியே காட்டவும்,

“வாவ்… எங்க இன்னைக்கு நீங்க பாடாம போயிருவீங்களோன்னு நினைச்சிட்டு இருந்தேன்… நல்லவேளை நீங்க பாடிட்டீங்க… ஓகே ஜெய்… அடுத்த காலர் லைன்ல இருக்காங்க… நாம நாளைக்கு பேசலாம்… இப்போ ஜெய் விரும்பிக் கேட்ட இனிமையான பாடலை நாம எல்லாரும் கேட்கலாம்…. நான் காபியோட ரெடி ஆகிட்டேன்…. நீங்க?” என்றதுடன் அலைபேசி இணைப்பு கட் ஆகி விட, கார்த்திக்கின் அருகில் வைத்திருந்த தனது ரேடியோவை சத்தமாக வைத்து, அவன் கேட்ட பாடலை அவனே ரசிக்கத் தொடங்க, கார்த்திக் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

“ஏண்டா கார்த்தி… உனக்கு இந்த பொழப்பு தேவையா? ஒருநாள் கூட, காலையில நிம்மதியா தூங்க விடாம இவன் படுத்தற பாட்டை நீ எதுக்கு பொறுத்து போற? இந்த மாசமாவது வேற பிளாட் பார்த்துட்டு போயிடு…” தனக்குத் தானே அவன் பேசிக் கொண்டிருக்க,

“கார்த்திக்… காலைல டிபனுக்கு உனக்கு இட்லி செஞ்சு வச்சிருக்கேன்… கூடவே தக்காளி சட்டினியும் அரைச்சு வச்சிட்டேன்… மதியத்துக்கு என்ன செய்யட்டும்…” அஜய் கேட்கவும், அத்தனை நேரம் பிளாட் மாறலாமா என்று இருந்த யோசனை முழுவதும், அஜயின் இட்லியிலும், தக்காளி சட்னியிலும் கரைந்து விட,

“போதும் அஜய்… மதியத்துக்கு நான் வெளிய பார்த்துக்கறேன்… நீ சீக்கிரம் ஆபீஸ் கிளம்பு… வேலை இருக்குன்னு நேத்து நைட்டே சொன்னியே…” கார்த்திக் பாத்ரூமில் இருந்தே சொல்லவும், அஜயிடம் இருந்து பதில் வராமல் போனது.

“ஹ்ம்ம்… இது ஒண்ணு இவன்கிட்ட ரொம்ப கெட்ட பழக்கம்… விளம்பரம் வரும் போது நம்மகிட்ட பேச வேண்டியது… கண்மணி குரல் கேட்டா… கரைஞ்சு போக வேண்டியது… அப்படி என்ன தான் இருக்கோ அவ குரலுல?” புலம்பியபடி குளித்துவிட்டு வந்தவனை சூடான இட்லி வரவேற்க, கண்மணியின் குரலைக் கேட்டு கண்மூடிக் கிடந்த அஜயைப் பார்த்துவிட்டு, மற்றதை மறந்து, சாப்பிட அமர்ந்தான்.

அஜய்… ஒரு புகழ்பெற்ற சாப்ட்வேர் கம்பெனியில் டெக்லீடாக பணியாற்றி வரும் நவநாகரீக யுவன்களில் ஒருவன்… தன் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதில் மிகவும் கெட்டி… அவனது அலுவலகத்தில் பல பெண்களுக்கு கனவு நாயகன்… ஒரே ஒரு பெண்ணிற்கு மட்டும், இரவில் பயமுறுத்தும் ‘நைட்மேர்’ என்று செல்லப்பெயரோடு அழைக்கப்படும் கெட்ட கனவு… அது யாரென்று அவன் அலுவலகம் செல்லும்போது பார்ப்போம்…

காலையில் எழுந்ததும் தென்றல் பண்பலையில் கண்மணியின் நிகழ்ச்சியை கேட்பவன், ஜிம்மிற்கு சென்றுவிட்டு, வேகமாக குளித்து கிளம்பி அலுவலகம் சென்று தனது பணியில் தன்னை இணைத்துக் கொள்வான்…. வெளியில் சாப்பிடுவது என்பது, தவிர்க்க முடியாத நேரத்தில் மட்டுமே அவன் செய்யும் ஒன்று…. நன்றாக சமைக்கும் அவன், தனக்கு மட்டுமல்லாது கார்த்திக்கிற்கும் செய்து கொடுப்பதால், தினமும் காலையில் அவன் செய்யும் அலும்பலில், அந்த நேரம் பிளாட் மாற வேண்டும் என்று கார்த்திக்கிற்கு எழும் எண்ணம், அப்படியே அமுங்கி விடும்…

கார்த்திக்… அஜய் பணி புரியும் அதே கம்பெனியில் பணி புரிபவன்… அஜய்யை ஓட்டுவதை மட்டுமே கடமையாக வைத்திருக்கும் அவன்…. அவனது சிறந்த தோழன்….

“ஓகே மக்களே… தென்றல் ராகம் நிகழ்ச்சி இத்துடன் முடிவடைந்தது… மீண்டும் நாளை காலை உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து அப்பீட் ஆகறது உங்க கண்மணி…” என்று ரேடியோவின் வழியாக கேட்ட குரலில், கார்த்திக் நிம்மதி பெருமூச்சு விட, எதையோ பறிகொடுத்தவன் போல் அஜய் எழுந்து அமர்ந்தான்.

“ஏன் மச்சி… மறுபடியும் நாளைக்கு காலையில பேசப் போற…. அதுக்குள்ள உனக்கு ஏண்டா இந்த வெட்டி சீனு… பேசாம ஜிம்முக்கு போயிட்டு வேலைக்கு கிளம்பற வழியைப் பாரு…” நக்கலாக கார்த்திக் சொல்லவும், அப்பொழுது தான் நினைவு வந்தவனாக,

“ஹையோ…. டேய்… இன்னிக்கு காலையில எட்டு மணிக்கு கால் இருக்குடா… மறந்தே போயிட்டேன்…” என்றவன், அவசர அவசரமாக, செல்போனையும், லேப்டாப்பையும் இயக்கி, பேசத் தொடங்க,

“சரியா போச்சு… உருப்பட்ட மாதிரி தான்… ஆபீஸ் கால் எல்லாம் மறந்து போகும்… கண்மணிக்கிட்ட கடலை போடறது மட்டும் மறக்கவே மறக்காது… இந்த உலகம் தாங்குமாடா சாமி…” என்று நினைத்துக் கொண்டே, இட்லிக்களை உள்ளே தள்ளிய கார்த்திக், மீண்டும் படுக்கையில் சென்று விழுந்து, உறங்கத் துவங்கினான்.

“டேய்… ஆபீஸ்க்கு கிளம்பற மாதிரி கிளம்பி தூங்கிட்டு இருக்க…” காலு(call)க்கு செவி மடுத்து இருந்தாலும், கார்த்திக்கை தூங்க விடாமல், அஜய் எழுப்பவும்,

“ஆபீஸ் கால்ன்னு சொன்னாலே எனக்கு தூக்கம் வந்திரும்டா… நீ கால் பேசு… நான் கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கறேன்…” என்றவன், தலையணையை எடுத்து முகத்தின் மீது வைத்துக் கொண்டு உறக்கத்தை தொடர்ந்தான்.

சிறிது நேரம் கால் பேசியவன், “கார்த்தி… நான் கால் முடிச்சிட்டேன்… ஜிம்முக்கு போயிட்டு வரேன்…” என்று சொல்லிவிட்டு, ஜிம்மிற்கு கிளம்ப,

“அப்படியே போற வழியில தண்ணி கேன் சொல்லிட்டு போடா… இன்னிக்கு சாயந்திரம் சமைக்க தண்ணி இல்ல…” தலையணைக்கு அடியில் இருந்து கார்த்திக்கின் குரல் வரவும்,

“ஏண்டா… இப்போ தானே அரை கேன் தண்ணியைப் பார்த்தேன்… அதுக்குள்ள என்னடா செய்த?” அரை மணி நேரத்திற்குள், அரைக் கேன் தண்ணீர் மாயமாய் போன விந்தையில் வியந்து போய் அஜய் கேட்கவும்,

“அது.. ரொம்ப தாகமா இருந்துச்சா… குடிச்சிட்டேன்டா மச்சான்…” நக்கலாக அவன் சொல்லவும்,

“டேய்… வாஷிங் மெஷின் போட்டியா? எத்தனை தரவ சொல்லி இருக்கேன்… கேன் தண்ணியை எடுத்து தோய்க்க யூஸ் பண்ணாதேன்னு… அப்படி உன் சட்டை பாழா போனா… வேற வாங்கிக்க வேண்டியது தானே… குடிக்கிற தண்ணியை எடுத்து எதுக்குடா போட்ட…” அஜய் சத்தம் போடவும்,

“நான் என்ன உன்னைப் போல டெக்லீடா மச்சான்… சாதாரண ப்ரோக்ராமர்… இந்த தண்ணிக்கு, சட்டை எல்லாம் வீணா போகுதுடா… எத்தனை புது சட்டை வாங்கறது?” அப்பாவியாக கார்த்திக் கேட்க, ஷூ பாலிஷை எடுத்து அவன் மீது விட்டெறிந்தவன், கதவை சத்தமாக சாத்திக் கொண்டு சென்றான்.

“இவனை எல்லாம் கூட சேர்த்துக்கிட்டதுக்கு இது ஒண்ணு தான் மிச்சம்… Mr. அஜய்…. உன் நிலைமை இப்படியா போகணும்…” புலம்பிக்கொண்டே, ஜிம்மில் உடற்பயிற்சியை முடித்தவன், சிறிய தண்ணீர் கேனை கையோடு வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு வந்து, அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கார்த்திக்கின் குறட்டைச் சத்தம், அஜயை உசுப்பேற்ற, “டேய் கார்த்தி… உன் ஆளு வந்திருக்கா பாரு….” என்று குரல் கொடுக்கவும், அடித்து பிடித்து கார்த்திக் எழுந்து அமரவும்,

‘ஹாஹஹா’ என்று சத்தமாக சிரித்த அஜய்….

“குடிக்கிற தண்ணியை எடுத்து வாஷிங் மெஷின் போட்ட இல்ல… அதை எடுத்து காயப் போட்டுட்டு கிளம்பு… மணி இப்போவே 9.50…. பத்து மணிக்கு தானே கால் இருக்குன்னு சொன்ன?” நக்கலாக அவன் கேட்கவும், அடித்து பிடித்து சோபாவில் இருந்து எழுந்த கார்த்திக், துணியை அப்படியே விட்டுவிட்டு, ஆபீசிற்கு விரைந்தான்.

வியர்க்க விறுவிறுக்க ஆபிஸுக்கு வந்த கார்த்திக், தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொள்ளும் நேரம் கூட இல்லாமல், கால் பேச அமரவும், அவனைப் பார்த்து சிரித்த அஜய், கிரீன் டீயை உறுஞ்சிக்கொண்டே, தன்னுடைய இடத்திற்கு நகர்ந்தான்.

“ஹாய்… ஹாய் குட் மார்னிங் அஜய்…” அவனது டீமில் இருந்த அனைவரும் அவனுக்கு காலை வாழ்த்தைச் சொல்ல, அனைவருக்கும் பதில் வாழ்த்து சொல்லிக் கொண்டு வந்தவன், “யோகேஷ்… உன் பக்கத்துல இருக்கற அந்த அமைதியின் ஸ்வரூபம் இன்னும் வரலையோ?” என்று கேட்கவும்,

“மத்த யார் லேட்டா வந்தாலும் இவரு கண்டுக்க மாட்டேங்கிறாரு…. அது என்ன அவ வரலைன்னா மட்டும் இப்படி தாளிக்கிறது…. பாவம் அவளே… இவருக்கு பயந்து அவசர அவசரமா வந்துடுவா… இன்னைக்கு என்னாச்சோ?” அந்த அமைதியின் ஸ்வரூபம் என்று அஜயினால் கேலி செய்யப்படும் அந்த பெண்ணின் தோழி சுவாதி, அவளுக்காக பரிதாபப்படவும், அந்த பெண் வரவும் சரியாக இருந்தது.

“ஹாய்… பிரெண்ட்ஸ்…. ஹாய் ஹாய்…” என்று அவசரமாக வந்தவள், அனைவரையும் பார்த்து கையசைத்துக் கொண்டே தனது இருக்கையில் வந்து அமரவும்,

 

 

 

“இது தான் நீ ஆபீஸுக்கு வர டைமா? எல்லாரும் வந்தாச்சு… நீ என்னவோ ஆடி அசைஞ்சு வந்து நிக்கற… நேத்து கொடுத்த வேலை எல்லாம் முடிச்சியா இல்ல… அதுவும் அந்தரத்துல தொங்குதா?” அஜய் அவளைப் பார்த்து கடுப்படிக்க,

“நேத்து முடிச்சிட்டு போகும் போதே மணி பதினொண்ணு அஜய்… அது தான்… சீக்கிரம் எழ முடியாம கொஞ்சம் தூங்கிட்டேன்…. உங்களுக்கு ஸ்டேடஸ் மெயில் அனுப்பி இருந்தேனே…” அவள் சந்தேகமாக இழுக்கவும்,  

“நான் இப்போ தான் உன் மெயிலையே பார்க்கறேன்… எனக்கிருக்கற வேலையில நீ எப்போ அனுப்பின அப்படிங்கறதை எல்லாம் ஆராய்ச்சி செய்ய முடியாது… போய் இன்னைக்கு வேலையை முடி… வெட்டி பேச்சு பேசிட்டு நிக்கற?” அவன் தொடர்ந்து, அவளிடம் இப்படியாகவே பேசவும், அந்த பெண், ஒரு பெருமூச்சுடன், தனது இருக்கையில் அமர்ந்தாள்.

“என்ன கண்ணம்மா… உன் ஆளு இப்படி எரிஞ்சு விழறாரு… போன ஜென்மத்துல நீங்க ரெண்டு பேரும் எலியும் பூனையுமா இருந்தீங்களோ?” அவளது தோழி, சுவாதி கேட்கவும்,

“எலியும் பூனையுமா கூட இல்ல போல… அதுக்கும் மேல இருந்திருப்போமோ என்னவோ? என்னைப் பார்த்தாலே அவருக்கு எப்படி இருக்கோ தெரியல…? வேண்டாத மருமக கைப் பட்டா குத்தம்… கால் பட்டா குத்தம்ங்கற பழமொழி இவருக்குத் தான் பொருந்தும்…” கசந்த குரலில் அவள் சொல்ல,

“அப்போ நீ பேசாம வேற கம்பெனிய பார்த்துட்டு போக வேண்டியது தானே… இந்த ஆளுகிட்ட எதுக்கு வாங்கி கட்டிக்கிட்டு இருக்க?” சுவாதியின் கேள்விக்கு, வெறும் பெருமூச்சில் பதில் சொன்னவள்,

“ஹிட்லர் பார்த்துட்டு இருக்கார் சுவாதி… அப்பறம் பேசலாம்..” என்று கோடிங் அடிக்கத் தொடங்கினாள்.

மதிய இடைவேளையின் போது, தான் கொண்டு வந்த புளிசாதத்தை அஜய் ரசித்து ருசித்து சாப்பிடவும், அவனுடன் உணவருந்த வந்த கார்த்திக், “அடப்பாவி… புளிசாதம் செய்யப் போறேன்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல… எனக்கும் சேர்த்து செய்ன்னு சொல்லி, நானும் கொண்டு வந்திருப்பேனே…” என்றபடி, அஜயின் டிபன் பாக்ஸில் கை வைக்கப் போக,

“நீ தான் பிரியாணி வாங்கிட்டு வந்திருக்கயே… அதையே சாப்பிடு கார்த்தி… என் டிபன் பாக்ஸ்ல கை வைக்காதே… அது எனக்கு பிடிக்காதுன்னு உனக்குத் தான் தெரியுமே…” என்றவன், சுவாதி, மற்றும் வேறு சில தோழிகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கண்ணம்மாவைப் பார்த்தான்.

ஸ்பூனால் எதையோ வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்த கண்ணம்மா, “ஹய்யோ சுவாதி… போதும் நீ ஜோக் சொன்னது… என்னால சிரிக்க முடியல..” என்று சிரிக்கவும், அஜயின் கண்கள் அவளை ரௌத்திரமாக எரித்தது.

“ஏன் அஜய்… அந்த கண்ணம்மாவை எப்போ பார்த்தாலும் இந்த காய் காயற? அவங்க என்ன தப்பு செய்தாங்க?” அவன் முறைப்பதைப் பார்த்த கார்த்திக் கேட்கவும்,

“அவளைப் பார்த்தாலே நல்லா பிடிச்சு கடிச்சு வைக்கணும் போல இருக்கு… என்னன்னு தெரியல… அவளும் அவ டிரெஸ்ஸிங் சென்சும்….” கண்ணம்மாவைப் பார்த்துக் கொண்டே அவன் சொல்லவும்,                          

“என்னவோ போ… ஆனா… எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு அஜய்… ரொம்ப சாஃப்ட்… ரொம்ப லவ்லி… அங்கிதா மாதிரி இவங்க இல்ல…” கண்ணம்மாவைப் பார்த்துக் கொண்டே கார்த்திக் சொல்லவும்,

“என் டீம் பொண்ணை சைட் அடிக்கிற வேலை எல்லாம் வேண்டாம் கார்த்தி… அது உனக்கு நல்லது இல்ல சொல்லிட்டேன்… என் டீம்ல வொர்க் பண்ணற பொண்ணுங்களோட பாதுகாப்பு எனக்கு ரொம்ப முக்கியம்…” அஜய் ஒரு மாதிரிக் குரலில் சொல்ல, கார்த்திக் அவனைப் பார்த்து பல்லைக் கடித்தான்.

“இவரு பெரிய இவரு… பாதுகாப்பு தரார்… மொதல்ல இவரு அவங்க மனசை காயப்படுத்தாம இருக்கணும்…” கார்த்திக் மனதினில் பொரும.

“நீ வீட்டுக்கு வா… ராத்திரிக்கு உனக்கு பச்சை மிளகாய் சட்னியை அரைச்சு வைச்சு… தக்காளி சட்டினியை உன் முகத்துல வர வைக்கிறேன்….” அஜய், மனதினில் கறுவிக் கொண்டிருக்க, இது எதையும் அறியாத கண்ணம்மா, சுவாதியுடன் பேசுவதில் மும்முரமாயிருந்தாள்.

 

மீண்டும் அடுத்த ஒலிபரப்பில் சந்திப்போம்….

11 COMMENTS

 1. Hits my kanama pere super ila,athilum kamal fan ha enoda favourite ithuke unakku thanks solanum ,apuram prithvi raj photo athuku than unakku already umma parcel pannitenla,penmaila thanks darling

 2. hi ramya sis…superb start……characters name Elam super….ajay oda day starting with thendral panbalai….first update – ye romba interestinga irukkey….Eagerly waiting for next ud ?☺️

 3. Hi Ramz…

  Just read ur 1st update…
  adutha adutha update padikka romba romba aarvama irukken…

  appadi yenna Ajaikku Kannamma mela imbuttu kobam???
  Karthik – u r great… hehe

  *** ramz, readers’aagiya engalai, unga kathaiyala yeppadi eerkkanumnu unggalukku solliya tharanum>>> unga job’a rombavey nalla seithuttinga… congratz…
  1st update’laiye ennoda aarvathai increase pannittinga… thanks…

  Keep rocking my dearest, ramz…

LEAVE A REPLY