SHARE

இது வரையிலான
என் எல்லா எதிர்பார்ப்புகளின்
வரலாற்றை
மொத்தமாய் முழுங்கி விட்டு
உன் பதிலுக்கான எதிர்பார்ப்பில்
என் நேரங்களை
கஷ்டப்பட்டு
நகர்த்திக்கொண்டு இருக்கிறேன் !!

 

 

 

கி. பி. 1946…..

 

நாட்கள் விரைந்தோடிச் செல்ல, நிஷாவின் பார்வைக்காக ஜாகீர் ஏங்கிக் தவிக்கத் தொடங்கி இருந்தான். ரஃபியை பார்க்க வருவது போல வீட்டிற்கு வருபவனின் கண்கள் என்னவோ நிஷாவையே தேடிக் களைத்துப் போகும்… காதல் வந்த பின்னர் நிஷாவிற்குத் தான் இயல்பாக இருப்பது என்பது மிகவும் கடினமாகப் போயிற்று… அவனுடன் இயல்பாக பேசுவதும் பழகுவதும் கூட பெரிய காரியமாக இருந்தது அவளுக்கு.  

 

“ரஃபி நிஷா எங்க?” இயல்பாக கேட்பது போல ஜாகீர் கேட்டால்,

 

“எங்க ஜாகீர்… என் கூடவும் அவ சரியா பேச மாட்டேங்கிறா… இப்போ எல்லாம் ரொம்ப அமைதியா ஆகிட்டான்னு அம்மியும் சொன்னாங்க… பெரிய பொண்ணு ஆகிட்டா இல்ல…” ரஃபிக்கின் பதிலில் திருப்தியுறாத ஜாகீர்,

 

“அவளோட தானே ஷாஹிதாவும் வளர்ரா? ஆனா… அவ அப்படி இல்லயே… எப்பவும் போல தானே இங்க வந்து போயிட்டு இருக்கா?” யோசனையுடன் ஜாகீர் கேட்க, அவனது மூளையோ,

 

“அவளுக்கும் உன்னை பிடிச்சிருக்கு.. அதனால தான் அவ உன்னைப் பார்க்க தயங்கி, வெட்கப்பட்டுக்கிட்டு நிக்கறா… வேற ஒண்ணும் இல்ல…” அவனது ஆசை கொண்ட மனம் இப்படி சொல்லவும், அவனது உள்ளம் குதூகலித்தது. அவளை தனியே சந்திக்கும் நாளுக்காக அவன் காத்திருக்கத் தொடங்கினான்.          

 

ஒருநாள் நிஷா வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தை அறிந்து, வீட்டிற்குள் வந்த ஜாகீர்… தனது பாவாடையில் அழகிய பூ எம்பராய்டரி வேலை செய்வதில் மும்முரமாக இருந்தவளை பார்த்து, அவள் அறியாத வண்ணம், மெல்ல அவளை நெருங்கினான்.

 

பூனை போல வந்தவனை உணராத நிஷா… தனது வேலையிலேயே கவனமாக இருக்க, அவள் அருகில் மெல்ல அமர்ந்தவன், அவள் ஏதோ பாட்டை முணுமுணுக்கவும், அதை உன்னிப்பாக கவனிக்க, அப்படியும் எதுவும் புரியாமல் குழம்பிப் போனவன்,

 

“என்ன பாட்டு பாடற நிஷா… நான் கேட்டா மாதிரியே இல்லையே…” என்று தெரிந்துக் கொள்ள வேண்டி, ஆர்வத்தில், தாமதிக்க முடியாமல் ஜாகீர் கேட்க, அவனது குரலை அவ்வளவு அருகில் கேட்டவள், பயந்து, கையில் இருந்த ஊசியால், விரலில் குத்திக் கொண்டாள்.

 

“ஆ…. ஆ….” என்று கையை உதறியவளின் கையைப் பார்த்தவன், அதில் ரத்தம் கசிவதைக் கண்டு, 

 

“என்ன நிஷா… பார்த்து செய்யறது இல்ல.. இப்படியா கைய குத்திப்ப?” அவன் கேட்கவும்,

 

“நீங்க… நீங்க எப்போ வந்தீங்க? என்ன இது பக்கத்துல உட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க? விலகிப் போங்க… எனக்கு பயமா இருக்கு…” ஊசி குத்தியதில் கை வலித்தாலும், அவனிடம் இருந்து விலகுவதிலேயே அவள் குறியாக இருக்க,

 

“நான் உன்னை என்ன கடிச்சா திங்கப் போறேன்… பேசாம கையக் கொடு… ரத்தம் வருது பாரு…” அந்த மெல்லிய விரலை எடுத்து, அவன் வாயில் வைத்து, ரத்தத்தை நிறுத்த, அவனது இதழ்கள் பட்டதும், நிஷாவின் உடல் நடுங்கத் தொடங்கியது.

 

அவளது உடலும், அவனது கைப் பிடியில் இருந்த கரமும் நடுங்குவதை உணர்ந்தவன், அவளது விரல்களை விடுவித்து, “ஏன் நிஷா? உனக்கு என்னைப் பார்த்தா பயமா இருக்கா?” அவளது நடுக்கத்தைப் போக்கவென்று அவன் கேட்க,

 

“இல்ல… உங்களை பார்த்தாலே நெஞ்சு படபடன்னு அடிச்சுக்கிது… எனக்கு அது ஒரு மாதிரி இருக்கு… எனக்கு சொல்லத் தெரியல…” ஒருவாறு திக்கித் திணறி, அவள் சொல்லி முடிக்க, ஜாகீர் அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவனது பார்வையின் தாக்கமும், அவன் அருகே அமர்ந்திருந்த விதமும், அவளை இம்சிக்க, கண்களை தாழ்த்திக் கொண்டவள், போட்டுக் கொண்டிருந்த பூவை வருடிக் கொண்டிருக்க, அவளை விட்டு பார்வையை அகற்றாமல், ஜாகீரும் அமர்ந்திருந்தான்.

 

அவன் கல்லூரி முடித்து திரும்பி வந்த நாட்களில் இருந்தே, அவள் ஆடிய கண்ணாமூச்சியும், பருவப்பெண்ணாய் அன்றலர்ந்த மலர் போல, இதழில் சிரிப்பும், கண்கள் முழுதும் ததும்பிய நேசமும், முகம் முழுவதும் சிவக்கும் நாணமுமாக, புரியாத உணர்வை அவன் மனதில் விளைவித்து இருந்தவள், நாளாக ஆக, மனதில் சிம்மாசனமேயிட்டு அமர்ந்து கொண்டு, கனவிலும் நனவிலும், அவனை சித்ரவதை செய்யத் தொடங்கி இருந்தாள்.

 

ஜாகீரின் தந்தையும், நிஷாவின் தந்தையும், மாலை வேலை முடிந்து வந்து திண்ணையில் அமர்ந்து பேசும்போது, அவர்களது பேச்சில், நிஷா, ஷாஹிதாவின் திருமணம் பற்றிய பேச்சு கண்டிப்பாக இடம் பெறும்… அப்பொழுதெல்லாம் மனதில் எழுந்த ஒரு ஏமாற்ற உணர்வு, அது எதனால் என்று புரிந்துக் கொண்டவன், இன்று இது தான் சரியான நேரம், தனது காதலை அவளிடம் எப்படியாவது சொல்லி விட வேண்டும் என்று தீர்மானித்தான்.

 

“நிஷா… உனக்கு ஏன் அந்த மாதிரி படபடப்பா இருக்குன்னு புரியுதா? எனக்கும் உன்னை பார்க்கும் போது எல்லாம் அப்படித் தான் இருக்கு… மனசு முழுக்க நீ தான் இருக்க நிஷா… நான் உன்னை விரும்பறேன்னு நினைக்கிறேன்… அப்படித் தான் எனக்குத் தோணுது… உனக்கு அப்படி ஏதாவது தோணுதா?” ஏக்கம், பாசம் எல்லாம் நிறைந்த குரலில் அவன் கேட்கவும்,

 

“ஆமாம்…” என்று ஒற்றைச் சொல்லை சொல்ல அவள் நினைத்தாலும், ஏதோ ஒன்று அவளை சொல்ல விடாமல் செய்தது.

 

அவள் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்தவன், “என்னை உனக்கு பிடிக்கலையா? அதனால தான் என்னை பார்த்து ஓடிப் போறியா?” வலி நிறைந்த குரலில் அவன் மீண்டும் கேட்கவும்,

 

“என்ன இது? இப்படி எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கீங்க? நான்…. எனக்கு… எப்படி சொல்றதுன்னே தெரியல… எனக்கு கொஞ்சம் யோசிக்கணும்…” அவள் பயத்துடன் சொல்லவும், ஜாகீர் அவளது கைகளை விடாமல் பற்றிக் கொண்டான்.

 

“இங்கப் பாரு நிஷா… என்னை உனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்… அதே போல தான் எனக்கும்… என்கிட்டே உனக்கு பேச என்ன தயக்கம்… உனக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையான்னு எனக்கு தெரியணும் அவ்வளவு தான்… நீ என்ன சொல்லுவியோ ஏது சொல்லுவியோன்னு அந்த குழப்பம்…. பயத்துலயே என்னால இருக்க முடியாது… பிடிச்சிருக்குன்னா பிடிச்சிருக்கு… இல்லன்னா இல்ல… ரெண்டுல ஒண்ணு எனக்கு இப்போவே தெரியணும்… சொல்லு…. மண்டைக்குள்ள புழு அரிக்கிற மாதிரி இந்த நினைவே என்னை கொல்லுது… எனக்கு நீ இப்போவே சொல்லி ஆகணும்…” ஜாகீர் வற்புறுத்தவும், சிறிது நேரம் நிஷா மெளனமாக அமர்ந்திருந்தாள்.  

 

அவளது யோசனைக்கு சிறிது நேரம் இடைவெளி விட்டவன், “சொல்லு நிஷா… என்னைப் பிடிக்கலையா? இல்ல… வேற ஏதாவது யோசிக்கறியா?” என்று மீண்டும் ஜாகீர் கேட்கவும்,

 

“ஆமாங்க… ரஃபி அண்ணனும் நீங்களும் சிநேகிதங்க இல்லையா? நம்ம நேசத்துனால உங்க சிநேகிதம் பாதிக்க கூடாதுங்க… அதே போல தான் எங்க வாப்பாவும், தாகீர் வாப்பாவும்… அவங்களுக்குள்ள இதுனால பிரச்சனை வந்துச்சுன்னா… என்னாலயும், ஷாஹிதாவாலயும் தாங்க முடியாது… எங்களுக்கு நம்ம ரெண்டு குடும்பம் சேர்ந்து தான் இருக்கணும்…” தனது நேசத்தையும், தனது கவலையையும் ஒன்றாக சொன்னவள், கேள்வியாக ஜாகீரைப் பார்க்க,

 

ஒரு பெருமூச்சை வெளியிட்டவன், “இவ்வளவு தானா? என்னம்மா நீ? கொஞ்ச நேரத்துல என்னை ரொம்ப பயமுறுத்திட்ட… உங்க வாப்பாவுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்… அதே போல தான் எங்க வாப்பாவுக்கும்… அதனால நம்ம காதலுக்கு அவங்க எதிர்ப்பு சொல்ல மாட்டாங்க… நீ பயப்படாதே…” என்று பலவாறு தைரியம் சொன்னவன், அவளது விரல்களில், தன்னுடைய விரல்களை கோர்த்துக் கொண்டு,

 

“இப்போ சொல்லு… என்னை பிடிச்சிருக்கா?” அவன் கேட்கவும்,

 

“ம்ம்…” என்று நாணத்துடன் தலை குனிய, அவளிடம் மெல்ல நெருங்கியவன், அவளது முகத்தை நிமிர்த்தினான்.

 

“நீ ரொம்ப அழகா இருக்க நிஷா…” அவன் சொல்லவும், வெறும் ‘ம்ம்’ என்ற பதிலைத் தந்தவள்,

 

“நீ போட்டு இருக்கற பூவும் உன்னைப் போலவே அழகா இருக்கு…” மீண்டும் அவன் சொல்லவும்,

 

“இன்னும் வேற என்ன என்ன அழகா இருக்குன்னு சேர்த்து சொன்னன்னா… அவ ‘உம்’ கொட்ட சரியா இருக்கும்…” என்று கேட்ட குரலில், ஜாகீர் அடித்துப் பிடித்து நகர, நிஷாவோ, வேகமாக எழுந்து உள்ளே ஓடிச் சென்றாள்.

 

“ஹாஹா… என்னைப் பார்த்து பயந்துட்டீங்களா…” சிரித்துக் கொண்டே ஷாஹிதா கேட்கவும், தனது தங்கை பார்த்துவிட்ட சங்கடத்தில் ஜாகீர் நிற்க, அதை கண்டுகொள்ளாத ஷாஹிதாவோ,

 

“நிஷா… அடியேய் நிஷா… எல்லாம் நான் பார்த்துட்டேன் வெளிய வா… இது எத்தனை நாளா நடக்குதுன்னு சொல்லு…” அவள் சத்தமிடவும்,

 

“ஏய்… பேசாம போ… எதுக்கு இப்படி கத்திக்கிட்டு கிடக்க… இதே நிஷாவும் இருக்காளே… எவ்வளவு அமைதியா இருக்கா…” ஜாகீர் சொல்லவும், ஷாஹிதா அவனை முறைத்தாள்.

 

“அண்ணா… இங்கப் பாரு… இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்… நிஷா அமைதியா… அவளோட அமைதியப் பத்தி உனக்கு தெரியுமா தெரியாதா?” விடாமல் அவள் கேட்கவும்,

 

“ஏய்… பேசாம இரு ஷாஹிதா… நான் இப்போ எல்லாம் அமைதியா தானே இருக்கேன்..” கதவுக்கு பின்னால் இருந்து அவள் சொல்லவும், நிஷாவைப் பார்த்த ஜாகீரும் சிரிக்கத் தொடங்கினான்.

 

“தெரியாம சொல்லிட்டேன் தாயே… ஆளை விடு… இதை யாருக்கும் சொல்லாதே ஷாஹி… உனக்கு நான் பானி பூரி வாங்கித் தரேன்… கைக்கு கண்ணாடி வளையல், ஒரு புது டிரஸ் எல்லாம் வாங்கித் தரேன்…” ஜாகீர் பேரம் பேசவும்,

 

“இதெல்லாம் நீ அவளுக்கும் வாங்கித் தரேன்னு சொல்லத் தானே இப்படி பட்டியல் போடற… சரி சரி… விடு… யாருக்கும் சொல்லல… போனா போகுது… பொழைச்சுப் போங்க…” என்று ஜாகீரை மிரட்டியவள்,

 

“இங்க பாருண்ணே… உங்க ரெண்டு பேருக்குமே சொல்லிக்கறேன்… நீங்க காதலிக்கறீங்க சரி… ஆனா… அதுக்காக…” அவள் இழுக்கவும்,

 

“இல்ல ஷாஹி… தப்பு எல்லாம் செய்ய மாட்டேன்…” ஜாகீர் வேக வேகமாக சொல்லவும், சிரித்த ஷாஹிதா…

 

“அதுக்கு மொதல்ல அவ வெளிய வரணும்… உன்கிட்ட தைரியமா பேசணும்…. அதெல்லாம் இப்போதைக்கு நடக்காது… நான் அதை சொல்ல வரல… என்னை விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் தனியா எங்கயும் போகக் கூடாது… வெளிய போய் எதுவும் சாப்பிடக் கூடாது… புரியுதா…” அவள் கேட்ட தினுசில் இருவரும் சிரிக்க, ஜாகீர் ஷாஹிதாவை தலையில் திட்டினான். நிஷா மெல்ல ஷாஹிதாவின் அருகே வரவும், ஜாகீர் நிஷாவைத் தன் அருகே இழுத்துக் கொள்ள, அதே நேரம், அவர்களைப் பார்த்துக் கொண்டே ரஃபியும், ஷஃபியும் உள்ளே வந்தனர். அவர்கள் இருவரைப் பார்த்த அனைவரின் சிரிப்பும் உதட்டிலேயே உறைந்தது.

 

தொடரும்….

 

 

SHARE
Previous articleTamarind Chutney for chatts
Next articlesample

10 COMMENTS

 1. hi ramya

  unga stories ellam ellam romba romba super

  i read ur china poovae mella peasu a week before it was really super i love the character mukilan and sunantha. it was really amazing. and sunantha character is very natural. nice start and nice end i like it very much

  i don’t know where to post this so i post it here
  bye

  • thank u mythili …. thank u so much ma… 🙂 🙂 neenga ithai antha threadlaye post pannungama … ::) 🙂 thank u

 2. Rammy enaku Ud mail la varala da,viliora kanavugalum final Ud varala,penmai la un reply parthu than inthe Ud padichen,sari vidu,regular a ini check panren.ayo ipidi rendu perum love sonna udane matitangale,ena nadaka pogutho?so eager for next Ud ,hi hi please rehan a parthu remba nal ache?anthe story ka busy agita nala,ithe Ud kuduka mufiyaliya Rammy,ini ok thana?

  • hahah thanks bharathy … nan enna achunu check panren ma … 🙂 🙂 hmm ini weekly 2-3 uds kodukalamnu iruken ma … 🙂 🙂 sikiram tharen…. 🙂 🙂

 3. hi ramya…
  nice update…

  jaheer kitta nisha avana virumbradha othukitta..
  shahidha avangla nalla kindal pannitu irukka..

  jaheer-nisha va parthu avaloda anna enna solla poraan ?

LEAVE A REPLY