SHARE
“உன்னக்குன்னே கொடுக்கறாங்க பாரு ஏழரைய இழுத்து வைக்கிற ப்ராஜெக்ட்…” என்று கடுப்பானவன்,
“நீ இப்போ என்ன செய்யப் போற தெரியுமா? தேவ் சொன்னது, விஸ் சொன்னது எல்லாத்தையும் தூக்கி ஒரு மூலையில போட்டுட்டு, பேசாம ஒரு ஸ்கூலுக்கு போய் அங்க இருக்கற மிஸ்ங்க கிட்ட, அப்பறம் பிள்ளைங்களை எல்லாம் சந்திச்சு, இப்போ இருக்கற சிலபஸ் பத்தி அவங்களோட மனநிலை பத்தி எல்லாம் கேட்கலாம்…” ராம் ஐடியா கொடுக்க, ப்ரியாவோ அவனை ஒரு மார்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன ஒரு மாதிரியா லுக்கு விட்டுட்டு இருக்க?” ராம் சந்தேகமாகக் கேட்க,
“இல்ல.. நம்ம படிக்கிற காலத்துல நம்மளை இந்த கேள்வி கேட்டா நாம என்ன சொல்லி இருப்போம்? புக்கை பார்த்து எக்ஸாம் எழுதணும்… கஷ்டமான கேள்வி எல்லாம் கேட்கக் கூடாதுன்னு சொல்லி இருப்போம்… அதுவும் இல்லாம நாம என்னிக்காவது நம்ம பாடம் சூப்பர் பாடம்ன்னு சொல்லி இருக்கோமா?” அவள் கேட்கவும் உதட்டைப் பிதுக்கியவன்,
“இல்லையே” என்று பதில் சொல்ல,
“அப்போ அது சரி வராது…” ப்ரியா முடித்து விடவும், ராம் அவளை ஒரு மாதிரிப் பார்த்தான்.
“தேவ் சொன்னது தான் விஸ் கொடுத்த ப்ராஜெக்ட்க்கும் சரியா வரும்…” என்று சொன்ன ப்ரியாவைப் பார்த்த ராம் அதிர்ந்தான்.
“வேண்டாம் ப்ரியா… அதெல்லாம் ரொம்ப ரிஸ்க்கான வேலை. நீ அந்த வேலை செய்யறத்துக்கு நான் விட மாட்டேன்..” ராம் சொல்வதைக் கேட்டவள்,
“உன்கிட்ட நான் எந்த பெர்மிஷனும் கேட்கல ராம்… விஸ் சொன்னதை நான் செய்யத் தான் போறேன். இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட்டா நான் மாறப் போறேன். என்னோட ஜர்னலிஸ்ட் கேரியருக்கும் அது தான் சரியா இருக்கும். அந்த தேவ் விட்ட சேலஞ்ஜூக்கும் சரியான வேலையா இருக்கும். நான் ஏதோ கிறுக்கற ஆள் கிடையாதுன்னு அவருக்கு நிரூபிக்கணும் இல்ல ராம்…” அவள் சொல்வதைக் கேட்ட ராம், அவளை முறைக்க,
“எங்க அம்மாக்கு இதைப் பத்தி சொல்ல வேண்டாம் ராம். ஏற்கனவே தேவ் வந்து மிரட்டினதுலையே அவங்க ரொம்ப பயந்து போய் இருக்காங்க. இதைச் சொன்னேன்னு வை.. அப்பறம் அவங்க என்னையும் வேலைக்குப் போக விடமாட்டாங்க.. அவங்களும் போகாம என்னையே காவல் காத்துட்டு இருப்பாங்க. இப்போ எல்லாம் கல்யாண செலவு எக்கச்சக்கமா ஆகுது ராம்… எனக்கு அவங்க சீரும் சிறப்புமா கல்யாணம் செய்துக் கொடுக்க சம்பாதிக்கறது ரொம்ப முக்கியமாச்சே…” போலியான வருத்தத்துடன் அவள் சொல்ல, அதைக் கேட்ட ராம் பயத்துடன் அவளைப் பார்த்தான்.
“அதெல்லாம் ரொம்ப ரிஸ்க் ப்ரியா. நீ தனியா போக வேண்டாம். நானும் உன்கூட வரே     ன்… எப்படியும் போட்டோ எடுக்க உனக்கு ஆள் வேணும் இல்ல…” என்று அவன் சொல்லவும், ஒருவாறு சமாதானமானவள், சரி என்று யோசனையோடு தலையாட்டினாள்.
அலுவலகத்திற்கு வந்த தேவ்வின் மனம், ப்ரியாவையே சுற்றி வந்தது. அவளது அழகான கண்கள் அவனைக் கண்டதும் விரிந்ததும், அவன் சொன்னதன் உட்கருத்து புரிந்தார் போல இதழ்கள் விரிந்ததையும் நினைத்தவனின் மனதில் மெல்லிய சாரல் அடித்தது.
அவளது புன்னகை பூசிய முகம் அவனை இம்சை செய்ய, அந்த இம்சையை அனுபவித்துக் கொண்டே கனவு லோகத்தில் அமர்ந்திருந்தவனை அவனது நண்பன் விஷால் கலைத்தான்.
“ஹலோ சார்…” என்று சொல்லிக் கொண்டே அவன் சல்யூட் அடிக்க, ப்ரியாவின் நினைவில் மூழ்கி இருந்தவன், பட்டென்று எழுந்து சல்யூட் அடித்த பின்பே, எதிரில் நிற்கும் விஷாலைப் பார்த்து, முழிக்கத் தொடங்கினான்.
“கியா ஹுவா? (என்ன ஆச்சு?)” ஹிந்தியில் விஷால் குறும்பாகக் கேட்க,
“ஒண்ணும் இல்ல விஷால்.. சும்மா ஏதோ யோசனை செய்துட்டு இருந்தேன்…” தேவ் சமாளிக்க, விஷால் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான்.
“எதுக்கு இப்போ சிரிக்கிற?” புரியாமல் தேவ் கேட்க,
“இல்ல… இன்னைக்கு கொட்டும்முரசு பத்திரிக்கை ஆபீஸ் வாசல்ல உன்னைப் பார்த்தேன்… அது தான் உனக்கு என்னாச்சுன்னு கேட்டேன்… ஏதாவது பிரச்சனையா? குச் குச் ஹோதா ஹை?” என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்கவும், தேவ் மேலும் முழித்து,
“ஒண்ணும் இல்ல… சும்மா தான்…” சமாளிக்க முயல,
“உங்க மாமியாரும் கூட இருந்தாங்க போல. அவங்க என்ன சொன்னாங்க? பொண்ணு கொடுக்க சம்மதம்ன்னு சொல்லிட்டாங்களா?” ஆவலுடன் அவன் கேட்க, ‘உளறாதே…’ என்று தேவ் கண்டித்தான்.
“ஹ்ம்ம்… உளரறேனா… நானா உளறறேன்? சரி அப்படியே வச்சிக்கோ. ஆனா… என்னோட சந்தேகத்தை தீர்த்து வை. இன்னைக்கு எதுக்கு அங்க போன? ப்ரியாகிட்ட என்ன பேசின?” விஷால் கிண்டலைத் தொடரவும்,
“இல்ல விஷால்… அது அன்னிக்கு அவ போட்ட டிட்பிட் நியூசை பார்த்து நீ என்னை கிண்டல் செய்தியா. கோபத்துல போய் அவளைப் பிடிச்சு கத்திட்டேன்…” என்று நடந்ததைச் சொல்லிக் கொண்டே வந்தவன், தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தான்.
“என்னடா… என்னாச்சு?” என்று விஷால் கேட்க,
“இல்ல விஷால்… நான் அவளைப் பிடிச்சுத் தள்ளின போது அவ கையில ரொட்டி கல்லுல சூடு பட்டுடுச்சுடா. அது அப்போ கோபத்துல கண்டுக்காம வந்துட்டேன்… ஆனா… இன்னைக்கு கூட அது எப்படி இருக்குன்னு நான் கேட்கல பாரேன்…” வருத்தமாக அவன் சொல்வதைக் கேட்டவன், மனதினில் சிரித்துக் கொண்டு, “ஓ…” என்று ராகம் இழுத்தான்.
“சரி ரொம்ப ராகம் பாடாதே… அவளை விடு…” என்று சொன்ன தேவ்வைப் பார்த்து சிரித்தவன்,
“நான் அவளை பிடிச்சு வைக்கலையே. உன் மனசு தான் அவளை விடாம பிடிச்சு வச்சு படுத்துது போல இருக்கே. காதல் நோயின் அறிகுறி பலமா தெரியுதே” விஷாலின் கிண்டலை கவனிக்காமல்,
“அந்த காண்ட்ராக்டர் பொண்ணு காணாம போன கேஸ்ல எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு…” தனது முன்பிருந்த ஃபைலை எடுத்து ஒவ்வொரு பக்கமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தவன், தனது சந்தேகத்தை கேட்க, விஷாலும் விளையாட்டுத்தனம் மாறி, அந்த கேசில் மூளையை செலுத்தினான்.  
“ஹ்ம்ம்… ப்ரியாகிட்ட நான் இந்த வேலை விஷயமா கொஞ்சம் க்ளூ கொடுத்திருக்கேன். அவ சும்மா இருக்க மாட்டா. நான் சொன்னதுக்காகவே அந்த ராமையும் கூட்டிக்கிட்டு திரிவா. அது நமக்கு கொஞ்சம் ஹெல்ப்புல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்…” ஏதோ யோசனையோடு சொன்ன தேவ்வைப் பார்த்த விஷால்,
“உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?” என்று சாடினான்.
“இல்ல… எனக்கு பைத்தியம் இல்ல. நமக்கு இந்த கேஸ் விஷயத்துல பிரஸ்சோட ஹெல்ப் நமக்கு ரொம்ப முக்கியம். அதைப் பத்தி அவ ஆர்டிக்கள் எழுத ஆரம்பிச்சான்னா… குற்றவாளிங்க எப்படியும் வெளிய வருவாங்க…” தேவ் சொல்லிக் கொண்டே வர, அவனை இடைவெட்டிய விஷால்,
“அவளுக்கு இதுல எவ்வளவு ஆபத்து இருக்குன்னு புரிஞ்சு தான் இதைச் செய்யறியா? அறிவு இருக்கா உனக்கு?” கோபமாகக் கத்த,
“நான் ப்ரியாவோட போனை ட்ரேஸ் பண்ண சொல்லிட்டேன். அதனால அவளுக்கு எந்த மிரட்டல் வந்தாலும் நமக்கு உடனே தெரிஞ்சிடும். பேமிலி கால்ஸ் இல்லாம மத்த கால்ஸ் எல்லாமே நான் ரெகார்ட் பண்ண சொல்லி இருக்கேன். அவளோட ஸ்கூட்டிலையும் ட்ராக்கர் வைக்க சொல்லி இருக்கேன். இதுனால அவளுக்கு எந்த ஆபத்தும் வராது… வரவும் நான் விடமாட்டேன்” தேவ் உறுதி கூற, அவன் செய்து வைத்திருக்கும் ஏற்பாடுகளை ஏற்றுக் கொண்ட விஷால்
“எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கறது நல்லது தேவ்… அவனுங்களைப் பத்தி கேட்டது எதுவுமே சரியா இல்ல. அவளையும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கச் சொல்லு. பின்னால ஃபீல் பண்ணி ஒண்ணும் ஆகப் போறது இல்ல” அவனை எச்சரிக்கை செய்த விஷால்…
“ஆமா… அவளோட வீட்டு அட்ரஸ் அப்பறம் போன் நம்பர் எல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” என்று சந்தேமாக இழுக்க, அவன் சரியான இடத்திற்கு வந்ததை எண்ணி இப்பொழுது மனதில் நொந்து கொண்ட தேவ்,
“அதை தெரிஞ்சிக்கணும்னு நினைச்சா… தெரிஞ்சிக்க வழியா இல்ல விஷால்…” விளையாட்டாகவே முடிக்க எண்ணியவன், விஷாலின் கூர்மையான பார்வையில்,
“ஒரு க்யூரியாசிட்டி தான் விஷால்… ஒவ்வொரு பிரஸ் மீட்லையும் நம்ம கண்ணுல விரலை விட்டு ஆட்டற அவ யாருன்னு நான் தெரிஞ்சிக்க வேண்டாமா? அப்படி தெரிஞ்சிக்கிட்டது தான் ப்ரியாவைப் பத்தி… பாவம்டா… அவ அவங்க அம்மா வயித்துல இருக்கும்போதே அவங்க அப்பா உடம்பு சரி இல்லாம இறந்துட்டாங்க போல…
அவங்க அம்மா எந்த ஒரு வெறுப்பையும் அவ மேல காட்டாம நல்லா வளர்த்திருக்காங்க. அதுவும் இல்லாம அவளோட அண்ணனுக்கும் ரொம்ப செல்லம்… அண்ட் போல்ட் பொண்ணும் கூட விஷால்…” ப்ரியாவின் விவரங்களை அவன் அடுக்கிக் கொண்டிருக்க, விஷால் தனக்குள் சிரித்துக் கொண்டு வெளியில் விறைப்பாக நின்றுக் கொண்டிருந்தான்.  
“அப்படியா தேவ்…” கண்ணில் சிரிப்புடனும், முகத்தை சீரியசாகவும் வைத்துக் கொண்டு விஷால் கேட்க, தன்னை நினைத்தே கூச்சம் கொண்ட தேவ், அவன் மீது ஒரு ஃபைலால் அடித்துவிட்டு,
“போதும்… வா… நாம போய் நம்ம வேலையைப் பார்ப்போம்” என்றவன், தனது பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்ப, விஷாலும் அவனுடன் இணைந்து கொண்டான்.
அதே நேரம் கொட்டும்முரசு அலுவலகத்தில் அன்றைய செய்திகளை சரி பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவின் மனதில், தான் ரிப்போர்ட் சேகரிக்க முடிவெடுத்திருக்கும் செய்தியைப் பற்றியே எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. எதில் இருந்து தொடங்குவது?? எங்கிருந்து தொடங்குவது? என்று புரியாத குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள்.
இணைய தளத்தில் அன்றைய முக்கியச் செய்திகளைப் தேடிப் படித்துக் கொண்டிருந்தவளின் செல்போனில் வந்த ‘ப்ரைவேட்’ என்ற எண்ணைப் பார்த்தவள் யோசனையுடன் அதை எடுத்து காதுக்கு கொடுக்க, “ஹலோ ப்ரியா… நான் காலையில சொன்னதை யோசிச்சு பார்த்தியா?” தன்னை யார் என்று கூறாமல் அவளை கேள்வி மட்டுமே கேட்ட குரலைக் கேட்டவளின் உள்ளம் சிலிர்த்து அடங்கியது.  
வேண்டுமென்றே அவனது குரலை அடையாளம் தெரியாதது போல், “ஹலோ… நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?” யார் என்று அவன் வாயாலேயே வர வைக்கும் எண்ணத்தில் கேட்கவும், அந்தப் பக்கம் ஓரிரு வினாடிகள் அமைதியாக இருந்த அந்த குரலுக்கு சொந்தக்காரனான தேவ்,
“ஓ… உங்க ஜாப் மேல உங்களுக்கு அவ்வளவு தான் பேஷன் போல இருக்கு… சரி விடுங்க பார்த்துக்கலாம்…” என்று விட்டேற்றியாகச் சொல்ல, ப்ரியா சிலிர்த்து எழுந்தாள்.
“ஹலோ எங்க ஜாப் மேல நாங்க வச்சிருக்கற பேஷனைப்பத்தி எல்லாம் இங்க யாரும் கமெண்ட் அடிக்க வேண்டாம். அந்த சின்னப் பொண்ணுங்க கடத்தல் கேஸ் பத்தி இதுவரை வெளிய வந்த நியூஸ்களைத் தான் படிச்சிட்டு இருக்கேன்.
அதோட டீட்டெயல்ஸ் ஓரளவுக்கு கலெக்ட் பண்ணிட்டு இருக்கேன். இனிமே தான் ஆரம்பிக்கணும். ஒரு குட்டி இன்ட்ரோ போட்டு ஆரம்பிக்கலாம். ஆனா… நீங்க சொல்றது போல உண்மையான கேசை எங்க இருந்து ஆரம்பிக்கறதுன்னு தெரியாம தான் குழம்பிட்டு இருக்கேன்..” அவள் சொல்லவும், அதைக் கேட்டவன்,
“ஹ்ம்ம்… சரி நீ கலக்ட் பண்ணி இருக்கறதை போடு. அப்பறம் எங்க இருந்து தொடங்கணும்னு நான் சொல்லறேன்…” என்றவன் இணைப்பைத் துண்டிக்க ப்ரியாவிற்கு கோபம் எழுந்தது.
“இவன் பெரிய இவன்… அறிமுகம் போட்டா இவர் சொல்றாராம்…” என்று நினைத்துக் கொண்டவள், அதைப் பற்றிய முன்னுரையை பதிவு செய்த பின்னரே மதிய உணவிற்கு கிளம்ப, அப்பொழுது தான், தான் சாப்பாடு  கொண்டு வராதது நினைவிற்கு வர, தலையில் அடித்துக் கொண்டவள், ராமைத் தேடினாள்.
அவன் எங்கோ சென்றிருப்பதை உணர்ந்து, “ஒரு பிரெண்ட் சாப்பிடாம இருக்காளேன்னு கொஞ்சமாவது கவலை இருக்கா… நல்லா கொட்டிக்கிட்டு கிளம்பிட வேண்டியது…” என்று முணுமுணுக்க, அவள் எதிரில் வந்த ராம்,
“ப்ரியா சாப்பிட போகலாமா?” என்று கேட்க, அவனைப் பார்த்தவள், அசடு வழிந்தாள்.

15 COMMENTS

 1. Hei Ramya, superb ud pa
  yen pa intha Dev, thannoda love=yai Priya-vidam solli develop agida vendiyathuthanae pa
  athai vittu vittu avalai ippidiyellama enemies-kitta korthu viduvathu?
  it is very too bad pa,
  I am angry with Dev pa
  Priya=vukku yeathavathu drouble vanthaal naanga parthukkittu summa irukkamaattoam pa
  solli vaiyangappa and sincere sigamani Dev kitta
  waiting for your next lovely ud Ramya dear

 2. hi mam indha blog epa again activate achu enaku theriyavea illa ipadha kadhalagi story padichen indha storium nalla start but priyavuku endha aabadhum vandhida kudadhu…next update epo but at a time la 2 story ah unga fans ku orea treat dhan ponga and new blog nalla iruku mam

  All The Best mam…

LEAVE A REPLY