SHARE
“என்ன உன்னோட முகமே சரி இல்ல… உன்னை விட்டுட்டு சாப்பிட போயிட்டேன்னு திட்டிட்டு இருந்தியோ?” ராம் சந்தேகமாகக் கேட்க, அவன் பேசிய நொடிகளில் தன்னை சமாளித்துக் கொண்டவள், ‘நண்பன்டா..” என்று அவனது தோளைத் தட்ட, அவளை முறைத்துக் கொண்டிருந்தவன்,
“சரிவா போகலாம்… நல்லவனை என்னைக்கு இந்த உலகம் நம்பி இருக்கு?” சலித்துக் கொண்டே அவளை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்குச் சென்றான்.
“ரொம்ப பசிக்குது ராம்… சீக்கிரம் மீல்ஸ் ஆர்டர் பண்ணு…” அவள் அவசரப்படுத்தவும்,
“இந்த அளவுக்கு பசிக்கிற வரை என்ன செய்த?” ராம் கடியவும்,     
“அந்த சின்ன பொண்ணுங்க கடத்தல் கேஸ் பத்தி ஒரு இன்ட்ரோ எழுதிட்டு இருந்தேன்..” வந்த உணவை வேகமாக வாயில் திணித்துக் கொண்டே சொன்னவளை வெறித்துப் பார்த்தவன், எதுவும் பேசாமல் தனது உணவை உண்ணத் துவங்கினான்.
“என்ன ராம்? எதுவுமே பேச மாட்டேங்கிற?” சிறிது உணவு உள்ளே சென்ற பிறகு மெதுவாக அவள் கேட்க,
“நீங்க தான் பெரிய மனுஷி ஆகிட்டீங்க. நான் பேச என்ன இருக்கு?” என்று ஒருமாதிரிக் குரலில் கேட்டவனின் அருகே யாரோ அமரவும்,
“சார்.. வேற டேபிள் பாருங்க…” கூறிக் கொண்டே ராம் அவனைத் திரும்பிப் பார்த்து திகைக்க, ப்ரியாவின் கண்களோ கோலி குண்டின் வடிவத்தை எடுத்தது.
ராம் தேவ்வை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்க, ப்ரியாவின் அருகே அமர்ந்த விஷால், “ஹாய் ப்ரியா…” என்று முகமன் சொல்லவும், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பார்த்து பரிச்சயம் ஆகி இருந்தபடியால், அவனைப் பார்த்து புன்னகை செய்து பதிலுக்கு ‘ஹாய்’ என்று கூறிக் கொண்டே, அவளது எதிரில் அமர்ந்திருந்த தேவ்வைப் பார்க்க, அவனோ அவளைக் கண்டு கொள்ளாதவன் போல, உணவு மேஜையில் இருந்த மெனு கார்டை ஆராய்ந்துக் கொண்டிருந்தான்.
‘ஏதாவது பேசு..’ என்பது போல ப்ரியா ராமைப் பார்க்க, அவனும் என்ன பேசுவது என்று புரியாமல், “சாப்பிட வந்தீங்களா சார்?” ஏதாவது கேட்டு வைக்க வேண்டுமே என்று கேட்க,
“இல்ல ராம்… இந்த ஹோட்டல்ல மீல்ஸ்க்கு தர சாப்பாட்டுல எத்தனை அரிசி இருக்குன்னு எண்ணி ரிப்போர்ட் தரச் சொல்லி இருக்காங்க. அதுக்காகத் தான் வந்தோம்…” சிரிக்காமல் சொன்ன தேவ்வைப் பார்த்த ராம் ‘ஞே’ என்று முழிக்க, தேவ் சொன்னதைக் கேட்ட ப்ரியாவோ, ‘தொப்பி… தொப்பி…’ என்று அவனை கேலி செய்து கலகலவென்று சிரிக்கத் தொடங்கினாள்.
அவள் அவ்வாறு அவனை கிண்டல் செய்யவும், ப்ரியாவை ராம் முறைக்க, “ஹோட்டலுக்கு சாப்பிட வந்தவரைப் பார்த்து, இந்த கேள்வி கேட்டா… அவர் உன்னை கலாய்க்காம என்ன செய்வாரு? பெரிய அறிவு ஜீவின்னு நினைப்பு…” அவள் மேலும் தொடரவும்,
“போதும் நிறுத்து… நீ தான் உலகத்துல இருக்கிற மொத்த அறிவையும் குத்தகைக்கு எடுத்து இருக்கப் பாரு. போவியா…” ராம் பதிலுக்கு சண்டையிட, ப்ரியாவும் தொடர்ந்து பேச, இருவருக்கும் இடையில், உணவு மேஜைப் போர் தொடங்கி வாக்குவாதம் ஹய் ஸ்பீடில் போய்க் கொண்டிருக்க, இவை அனைத்தையும், தாடையில் கை வைத்துக் கொண்டு, முகத்தில் இருந்த இரும்புத் தன்மை குறையாமல் தேவ் ப்ரியாவை ரசித்துக் கொண்டிருக்க, அவனது கண்களில் இருந்த காதலைப் பார்த்த விஷால் வேண்டுமென்றே,
“எனக்கு பசிக்குதுடா…” என்று அவனது கையை சுரண்டினான்.
அவனை ஒருமாதிரி பார்த்த தேவ், சலிப்புடன் உணவை ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்திருக்க, ஒருவழியாக சண்டையை நிறுத்திய இருவரும், அப்பொழுது தான் அருகில் இருந்தவர்களை உணர்ந்து, இருவரையும் பார்த்து முழித்தனர்.
“சோ… ப்ரியா நீங்க பெரிய ரிப்போர்ட்டர்ன்னு இதுலிருந்து ப்ரூவ் பண்ணறீங்க…” தேவ் படுநக்கலாகக் கேட்கவும், அவன் சொல்ல வருவது புரியாமல் ராம் திரு திருக்க,
“ஹ்ம்ம்… அப்படி உங்ககிட்ட ப்ரூவ் பண்ணனும்னு எனக்கு ஒண்ணும் இல்ல தேவா… இது போல சண்டை எங்களுக்குள்ள அடிக்கடி வர்ரது தான். நீங்க வரதுக்கு முன்ன கூட நாங்க சண்டை போட்டுட்டு தான் இருந்தோம்…” ப்ரியா ரோஷமாகச் சொல்லவும், அவளது அந்த ரோஷத்தையும், அவள் ‘தேவா’ என்று தன்னை அழைத்ததையும் தவறாமல் மனதினில் குறித்துக் கொண்டவன், விஷாலைப் பார்க்க தேவ்வை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன், நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.
“சரி… உங்க லஞ்ச்சை சாப்பிட்டா கிளம்பலாமே… உங்களுக்கு அடுத்து வேலை நிறைய இருக்குமே…” தேவ் மேலும் அவளைச் சீண்ட..
“நாங்க இன்னும் சாப்பிடவே தொடங்கள. ஆமா.. எங்களை விரட்ட நீங்க யாரு? இந்த டேபிள்ல நாங்க தான் மொதல்ல உட்கார்ந்தோம். என்னவோ எங்களுக்கு அப்பறம் வந்து உட்கார்ந்துக்கிட்டு எங்களை கிளம்பச் சொல்றீங்க?” ப்ரியா தேவ்விடம் பாய, விஷால் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
“வேலை இல்லாதவங்க இப்படித் தான் உட்கார்ந்துட்டு இருப்பாங்க.. எங்க? உங்களுக்கு தான் வேலை செய்யற நினைப்பே இல்லையே. ஜாலியா ஊர் சுத்தறதும், இப்படி ஹோட்டல்ல உட்கார்ந்து சண்டைப் போடறதும் தானே உங்க வேலை. உங்களை நம்பி எப்படித் தான் பத்திரிக்கை நடக்குதோ?” மேலும் தேவ்வின் சீண்டலுக்கு,
“எங்களுக்கும் நிறைய வேலை இருக்கு சார். என்னவோ நாங்க மட்டும் தான் இங்க உட்கார்ந்து இருக்கற மாதிரி சீனப் போட்டுட்டு இருக்கீங்க? நீங்க கூடத் தான் உட்கார்ந்து இருக்கீங்க. அப்போ உங்களுக்கும் வேலை இல்லைன்னு அர்த்தமா?” ப்ரியா சீரவும்,
“நாங்க சாப்பிட வந்தோம்..” தேவ் பதில் கூற,
“நாங்க என்ன டென்னிஸ் ஆடவா வந்தோம்? காலையில வந்த ஒரு ப்ரைவேட் கால் சொன்ன வேலையை முடிச்சு எடிட்டருக்கு அனுப்பிட்டு, அதை போன உடனே பப்ளிஷ் பண்ற அளவுக்கு வேலைகளை ரெடியா வச்சிட்டு வந்திருக்கேன். அவரு பார்த்த உடனே… அதை போஸ்ட் பண்ணி டேக் பண்ணி விடணும்.
மொதல்ல அதைப் பத்தின சோஷியல் மீடியா அவார்நெஸ்சை கொண்டு வரணும். அப்போ தான் குழந்தைங்க பாதுகாப்பைப் பத்தி பேரென்ட்ஸ்சும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் எடுத்துப்பாங்க… இனியாவது கடத்தல்களை கொஞ்சம் அவாய்ட் பண்ணலாமே!” அவள் சொல்லவும், தேவ் உண்பதை நிறுத்திவிட்டு விஷாலைப் பார்க்க, அவன் புன்னகையுடன்,
“வெல் செட் சிஸ்டர்… அது தான் இப்போ ரொம்ப தேவை. சரியான மூவ்” என்று ஊக்குவிக்க, இருவரின் பார்வை பரிமாற்றத்தையும் கண்ட ராம் யோசனையாக தேவ்வைப் பார்த்தான்.
“ராம்… எனக்கு ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் சொல்லிடு… அப்பறம் வயித்துல இடம் இருந்தா எனக்கு பிடிச்ச ஐஸ்கிரீம்மையும் சாப்பிடலாம்…” தேவ்வை பார்த்துக் கொண்டே கூறியபடி, கைக் கழுவச் சென்றவளுக்கு தலையசைத்துவிட்டு, தேவ்வின் பக்கம் திரும்பிய ராம், ப்ரியாவை அவன் பார்த்த பார்வையைக் கண்டு குழம்பிப் போனான்.
‘இப்போ அது முக்கியமில்ல’ மனதினில் அதை ஒதுக்கியவன்,
“தேவ்… இப்போ நீங்க இந்த கேஸ்ல இவளை எதுக்கு இழுத்து விடறீங்கன்னு எனக்கு புரியவே இல்ல. அந்த ஆளுங்க ரொம்ப மோசமானவங்க மாதிரி இருக்கு. அதுவும் பொண்ணுங்க விஷயத்துல படுமோசம். எந்த வயசா இருந்தாலும்.. அவனுங்க அந்தப் பொண்ணை பாரீன்ல விக்கறவங்கன்னு கேள்விப்பட்டேன்” ராம் சொல்லிக் கொண்டே வர, தேவ் அவன் புறம் திரும்பி அமர்ந்தான்.
“இங்கப் பாருங்க ராம். நான் தேவை இல்லாத விஷயத்துல அவளை இழுத்து விடல. இது அவளோட கேரியருக்கும் ரொம்ப சாலெஞ்ஜிங்கா இருக்கும். அதுவும் தவிர, உங்களோட ஹெல்ப் எனக்கு இந்த விஷயத்துல ரொம்ப தேவை. இது ஒருவகையான டைவேர்ஷன். நான் சொல்ல வர்ரது புரியுதா?” தேவ் கேட்டு நிறுத்த,
ராம் ஒரு மாதிரிக் குரலில், “இதுல என்ன டைவேர்ஷன் இருக்கு? அவளுக்கு ஆபத்தா முடியற விஷயமா தான் அது இருக்கப் போகுது. அவ்வளவு தான் நான் சொல்லுவேன்.” எடக்காக முடித்தான்.
“கண்டிப்பா இல்ல ராம். அவளுக்கு எந்த ஒரு ஆபத்தும் வர நான் விட மாட்டேன். என்னை நம்புங்க. அவளோட போன், அவ வண்டி, அவ எங்க போறா வராங்கறது எல்லாமே நான் என்னோட கண்காணிப்புல வச்சிருக்கேன். அவங்க அம்மா ஆபீஸ்ல நிக்கற அவளோட வண்டியில ஏற்கனவே ட்ராக்கர் வச்சாச்சு. இப்போ அவளோட ஹேன்ட்பேக்லையும், மொபைல்லையும் ஒரு குட்டி மைக்ரோ போன் வைக்கிறேன்…” சொல்லிக் கொண்டே அவனது முன்னிலையிலேயே மெல்லிய மைக்ரோ போன் ஒன்றை எடுத்து அவளது பையினுள் வைத்தவன்,
“இதை பெர்சனலா நான் தான் ட்ராக் பண்ணப் போறேன். அதனால அவளுக்கு எதுவும் ஆகாது ராம். என்னை நம்புங்க.. ப்ரியாவுக்கு நான் எதுவுமே ஆக விடமாட்டேன்.” என்று மேலும் உறுதியாகக் கூறினான்.
“இதெல்லாம் போதும்ன்னு நீங்க நினைக்கறீங்களா?” கூர்மையாக ராம் கேட்க,
“ஹ்ம்ம்… போதாது தான்..” ஒப்புக்கொண்டவன், “மீதியையும் சொல்லி முடிச்சிடறேன். கம்மிங் டு தி பாயிண்ட். நீங்க எப்படியும் அவளை தனியா விட மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். இந்த மாதிரி விஷயங்கள் மெய்னா நடக்கறது சிட்டிலையே பிசியா இருக்கற ஏரியால தான் ராம். அதனால அந்த ஏரியாவ நீங்க க்லோஸா வாட்ச் பண்ணினீங்கன்னா உங்களுக்கு க்ளூ கிடைக்கும்.
அண்ட்… இதுவரை நாங்க இதை வெளிய தெரியாம சீக்ரெட்டா தான் இன்வெஸ்ட்டிகேட் செய்துட்டு வரோம். இன்னும் போலீஸ் கிட்ட இருந்து சிபிஐ கைக்கு மாறின விஷயமே வெளிய விடல. அதனால தான் சொல்றேன்.. இப்போ ப்ரியா இந்த ஆர்டிக்களை எழுதத் தொடங்கினா.. தாங்க சிக்கப் போறோம்ங்கற பயத்துல, கண்டிப்பா இதுல தொடர்புடையவங்க வெளிய வருவாங்க. நமக்கு அது போதாதா… ஒருத்தன் சிக்கினா கூட போதும். அவங்களை கூண்டோட பிடிச்சிடலாம்.” என்று சொன்னவன், ராம் யோசனையுடன் பார்க்கவும்,
“நீங்க எடுக்கற ஒவ்வொரு போட்டோசும், சின்னப் பொண்ணுங்களோட உயிர் ராம். அப்படி நினைச்சிக்கோங்க. ப்ரியா வெறும் ரிப்போர்ட்டரா இருக்கறதை நான் விரும்பல… அவ அந்த பீல்ட்ல நல்ல சாலஞ்ஜிங் டாஸ்க்ஸ் எடுத்து செய்யணும்… அதுல அவ அச்சீவ் பண்ணனும்… அது தான் என் ஆசை” என்று தேவ் முடிக்க, இன்னமும் இந்த விஷயத்தில் மனம் ஒப்ப முடியாமல், ராம் அமர்ந்திருந்தான்.
“இதை நீங்க உங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்களையும், போலீசையும் வச்சிட்டே செய்யலாமே… ப்ரியாவை ஏன்?” ராம் இழுக்க,
“இது எனக்கும் விஷாலுக்கும் கொடுக்கப்பட்டிருக்கற கேஸ். எங்க ஆளுங்களை கேட்கலாம் தான்… ஆனா, எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு… அதனால நான் இதுல நிறைய பேரை இன்வால்வ் பண்ண முடியாது. விஷயம் வெளிய தெரிஞ்சா ரொம்ப சிக்கலாகிடும். இதை ரொம்ப ரகசியமா தான் செய்யணும்.
ப்ரியா ரொம்ப டேலன்ட்டட்… அவ நியூஸ் கண்டிப்பா சென்சேஷனலா இருக்கும். எங்களால யாரையும் நம்ப முடியாது ராம். இதுல கோட்டை விட்டா… இன்னும் எத்தனை சின்னப் பிள்ளைங்க, கிழவனுங்களுக்கு மனைவி ஆகறாங்களோ? இல்ல வேற மாதிரி தொழிலுக்கு அனுப்பப்படறாங்களோ? ப்ரியா பெண்ணா இருக்கறதுனால அவங்களுக்கு அந்த வலியும் வேதனையும் புரியும்.” தேவ், ராமிடம் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க ராமின் பார்வை கூர்மையாகியது.
“நீங்க ப்ரியாவை யூஸ் பண்ணிக்க பார்க்கறீங்க…” ராம் கண்டிக்க, அத்தனை நேரம் சொன்ன விளக்கம் மொத்தத்தையும் மறந்து அவன் பேசுவதைக் கேட்ட தேவ்விற்கு கோபமாக வந்தது.
தேவ் ஏதோ பேசத் தொடங்க, அவனது முக மாறுதல்களை பார்த்துக் கொண்டிருந்த விஷால் “தேவ்… நீ போய் கை கழுவிட்டு வா. நான் பேசிக்கறேன்.” என்று சொல்லவும், தேவ் நகர்ந்து சென்றுவிட, ‘நீ என்ன புது கதை சொல்லப் போகிறாய்’ என்ற கேள்வி கண்களில் தொக்கி நிற்க, விஷாலைப் பார்த்துக் கொண்டிருந்த ராமைப் பார்த்து சிரித்தவன்,
“அவன் இவ்வளவு எக்ஸ்ப்ளைன் செய்ததுக்கு பதிலா… ஒரே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் ராம்…” என்று கிண்டலாகச் சொல்ல,
“என்ன வார்த்தை?” இன்னமும் சந்தேகம் தீராமல் ராம் கேட்க,
“நான் ப்ரியாவை லவ் பண்றேன்னு சொல்லி இருக்கலாம்…” சிரித்துக் கொண்டே சொன்ன விஷாலை நம்பாமல் பார்த்தவன்,
“என்ன உளறல்?” என்று கேட்கவும்,
“உளறல் இல்ல… காதல் ராம்… காதல்…” என்று கண்ணடித்தவன்,
“தேவ் ப்ரியாவை லவ் பண்ண தொடங்கி ரொம்ப நாளாச்சு… அதை உணரவோ, ஒத்துக்கவோ மனமில்லாம தான் திண்டாடிட்டு இருக்கான். உங்களுக்கு புரியுதா இல்லையான்னு எனக்கு தெரியல. ப்ரியாவோட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துட்டு தான் அவன் இதை செய்யச் சொல்லி ப்ரியாவை தூண்டி விட்டதே. அவளோட டேலன்ட்டை சும்மா துணுக்கு செய்தி போடறதுல போகாம, வேற எதுலயாவது பெருசா ப்ரூவ் பண்ணனும்ன்னும் அவன் ஒரு முடிவோட இருக்கான்.
நீங்க இந்த ஹோட்டல்ல சாப்பிட வர்ரது எங்களுக்கு எப்படித் தெரியும்? உங்களை நாங்க கண்காணிக்கறதுனால தானே. அப்படித் தான் நாங்களும் சாப்பிடற மாதிரி அவளோட பேக்ல மைக்ரோபோன் வைக்க வந்தோம்.” விஷால் விளக்கம் சொல்லவும், ராமிற்கு பெரும் ஆறுதலாக இருந்தது.
அதே நேரம், கையை கழுவிக் கொண்டு, அந்த ஹோட்டலின் ஸ்வீட் ஸ்டாலில், ஒவ்வொரு ஸ்வீட்டாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவைப் பார்த்த தேவ், அவள் அருகில் சென்று, “என்ன ப்ரியா… ஸ்வீட் வாங்கப் போறியா?” என்று கேட்க,
“இல்ல… சும்மா பார்த்துட்டு இருக்கேன்… புதுசா எதையாவது ட்ரை பண்ணலாம்ன்னு பார்க்கறேன்…” என்று அவள் சொல்லவும்,
“இந்த ஸ்வீட் நல்லா இருக்கும் ப்ரியா…” என்றபடி நெருங்கியவனின் நெருக்கம் ப்ரியாவை அவன் முகம் பார்க்கத் தூண்டியது.  
ஒவ்வொரு ஸ்வீட்டாக அவன் சுட்டிக்காட்டிக் கொண்டே வர, ப்ரியாவின் மொத்த கவனம் முழுவதும் தேவ்வின் முகத்தை ரசிப்பதில் நிலைத்திருக்க, அவளிடம் இருந்து பதில் இல்லாமல் போகவும், அவன் பேசுவதை நிறுத்திவிட்டு, அவளை கேள்வியாகப் பார்க்க, “உங்களுக்கு எந்த ஸ்வீட் பிடிக்குமோ அதையே வாங்குங்க தேவா..” ஒரே வார்த்தையில், அவனது கண்களைப் பார்த்துக் கொண்டே சொன்னவளின் குரலும், கண்களின் வழியே ஒலிபரப்பான செய்தியும், தேவ்விற்கு ஒரு சில வினாடிகள் மூச்சை நிறுத்தியது.
“ப்ரி… ப்ரியா…” தொண்டையை சரி செய்து கொண்டு, அவள் கேட்ட ஸ்வீட்டை வாங்கி அவள் கையில் கொடுத்தவன்,
“இது… நீ ஜெயிக்கப் போற காரியத்துக்கு அட்வான்ஸ்சா நான் கொடுத்த ஸ்வீட்டா வச்சிக்கோ. நாம போகலாம்.” என்று கூறிவிட்டு முன்னே நடக்க, புன்னகையுடன் ப்ரியா அவனைப் பின் தொடர்ந்தாள்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் நடந்து வந்தாலும், இருவரின் நடையிலும், சீக்கிரம் இடத்திற்கு சென்று விடக் கூடாதே என்ற எச்சரிக்கைத் தெரிவதை ராமும் உணர்ந்தே இருந்தான்.
“ப்ரியாவுக்கு எந்த ஆபத்தும் இல்லன்னா எனக்கு எந்த அப்ஜெக்க்ஷனும் இல்ல…” ராம் சொல்லிவிடவும், விஷால் தேவ்வைப் பார்த்து கட்டை விரலைக் காட்டினான்.
“கேட்க மறந்துட்டேன் ப்ரியா… உன் கை எப்படி இருக்கு?” தேவ் கேட்க,
“ஹ்ம்ம்… என் கைக்கு என்ன? நல்லா தானே இருக்கு?” அவளும் பதில் கேள்வி கேட்க, ராம் புன்னகையுடன் தேவ்வைப் பார்க்க, தேவ் சீரியசான முகத்துடன்,
“பார்ப்போம் உன் நல்லா இருக்கற கை என்ன செய்யுதுன்னு?” நக்கலுடன், 
“போகலாமா விஷால்…” என்று தேவ் கேட்கவும், விஷாலும் ‘டைம் ஆச்சு.. போகலாம்…” என்று கிளம்பி விட, ப்ரியா தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தாள்.

13 COMMENTS

 1. Hei Ramya dear, very nice ud pa
  ha ha, Dev-kku pidicha sweet-yeh than venumaa Priya unakku?
  ivvalavu love pannukira ivanga 2 perum eppo pa love-yai sollikolluvaargal?
  ennavao, intha Dev, ivalai high level-ukku kondu pogunum endru sollikkittu Priya-vai entha aabathilum maatti vidaamal irunthaal sari
  Priya, aval edutha intha kaariyathil jeiyithu viduvaal endru theriyum
  but Dev, eppovum Priya-vai protect panna mudiyumaa?
  waiting for your next lovely ud Ramya dear

LEAVE A REPLY