SHARE

“இவங்க இப்படி ஒரு கண்டிஷனை போடறதுக்கு பேசாம ‘எனக்கு இஷ்டம் இல்ல’ன்னு சொல்லி இருக்கலாம்… இவங்களை நாம டைரக்ட்டா டீல் பண்றது சரி வராது… நம்ம சூர்யா தான் சாவித்திரிக்கு லாயக்கு… அவன் பேசிக்குவான்…” என்று முடிவெடுத்தவள், குளித்துவிட்டு, இரவு உடையை மாற்றிக் கொண்டு, கண்ணாடியின் முன்பு நின்று தன்னை அழகு பார்த்துக் கொண்டாள்.            

தேவ்வை முதன்முதல் பார்த்த நியாபகம் மனதினில் வந்து போக, கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தையே பார்த்து சிரித்துக் கொண்டு, “இருந்தாலும்… அந்த சண்டையில இவரைப் பார்த்து அப்படி நினைச்சிருக்கக் கூடாது..” என்று நினைத்துக் கொண்டு, சிஸ்டமில் சென்று அமர்ந்தாள்.

ராமை மிரட்டி உருட்டி வாங்கி இருந்த தேவின் போட்டோக்கள் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டு வந்தவள், வெள்ளை பைஜாமாவில் வாய் நிறைய வெற்றிலையை போட்டு குதப்பிக் கொண்டு, நெற்றியில் நீளமாக குங்குமத்தையும் வைத்துக் கொண்டு, ஒரு டான் போல நின்றிருந்தவனின் போட்டோ அதில் வந்து நிற்க, மீண்டும் முதன்முதலில் அவனைப் பார்த்த நினைவு வந்தது.

அன்று ஒரு கடை வீதியில், அடிதடி சண்டை நடந்துக் கொண்டிருந்தது. கடைகளைத் திறக்க விடாமல், ஒரு சாரார் கலவரம் செய்ய முயன்றுக் கொண்டிருக்க, அவர்களை மீறி கடையைத் திறந்திருந்தவர்களின் பொருட்கள் வீதியில் உடைப்பட்டுக் கொண்டிருந்தது.

அங்கு நடக்கும் நிகழ்வுகளையும், அங்கிருந்த மக்களின் மனநிலையை பதிவு செய்வதற்காக ராமுடன் ப்ரியா அந்த இடத்திற்கு சென்றிருந்த நேரத்தில், திடீரென்று அங்கு ஒரு புல்லெட் வந்து நின்றது.

அந்த புல்லெட்டில் அலங்காரத் தோரணங்களைப் போல தொங்கிக் கொண்டிருந்த துப்பாக்கிகளும், கத்திகளும், ப்ரியாவின் கவனத்தை கவர்ந்தது. “ராம்… அங்க போகஸ் பண்ணு… புது ஆளு என்ட்ரி கொடுக்கறான்…” என்று ப்ரியா சொல்லவும், ராமும் அதை செய்யத் தொடங்கினான்.

அந்த புல்லெட்டில் இருந்து எடுத்துக் கொண்டு வந்த ஒரு கத்தியை, அந்த கலவரக்காரர்களிள் ஒருவன் மீது வைத்து கோடு கிழிக்க, அவன் அலறிய அலறல், மற்ற கலவரக்காரர்களை அவன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

அதோடு அல்லாமல், அந்த கலவரக்காரர்கள் அவன் மீது பாயவும், அவனது புல்லெட் சீட்டை தூக்கியவன், அதன் அடியில் இருந்து சோடா பாட்டில்களையும், கற்களையும் எடுத்து அவர்கள் மீது எரிய,

“வாவ்… யாரு ராம் இது? அப்படியே ஹிந்திக்கார டான் மாதிரி இருக்கான். அது என்ன வண்டியா? இல்ல ஆயுதக் கிடங்கா? விட்டா பெட்ரோல் டேங்க்ல இருந்து பெட்ரோல் குண்டை எடுத்து வீசுவான் போல இருக்கே…” அவள் ராமிடம் வியந்துக் கொண்டிருக்க, அவர்கள் எதிர்ப்பார்க்காத நேரம், ஒரு கடைக்குள் புகுந்தவன், ஒருவரை இழுத்துக்கொண்டு வர, அங்கு கலவரம் செய்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் திகைத்து நின்றனர்.

“என்னடா…. இங்க வந்து ஒளிஞ்சிக்கிட்டு எங்க கண்ணுல விரலை விட்டு ஆட்டலாம்ன்னு நினைக்கறியோ? கொள்ளையடிச்சிட்டு… அரசியல்வாதி செல்வாக்குல நீ இங்க வந்து ஒளிஞ்சிக்கிட்டு, எங்களை திசை திருப்ப கலவரம் செய்தா எங்க கவனம் திசை திரும்பிடுமா என்ன? எல்லாம் கண் காணிச்சுக்கிட்டு தான் இருக்கோம்… யாருக்கும் தெரியாம நான் வந்தேன் பாரு அப்படி..” என்று அவனது கன்னத்தில் நாலு அரை விட்டவன், அங்கு வந்த ஜீப்பில் அந்த கொள்ளையனை ஏற்றினான்.

“ப்ரியா… இவன் மக்கள் கிட்ட பைசா வாங்கிக்கிட்டு, கவர்மென்ட்ல வேலை வாங்கித்தரேன்னு சொன்ன ஊழல் பேர்வழி இல்ல… இவனுக்கு கட்சியில நல்ல செல்வாக்குன்னு கேள்விப்பட்டேன்… அதனால போலீஸ் சரியா விசாரிக்க மாட்டேங்குதுன்னு கேஸ்சை சிபிஐக்கு மாத்தினாங்க… இவர் சிபிஐ ஆபீசரா?” ராம் ஆச்சரியமாக சொல்லிக் கொண்டிருக்க, ப்ரியா அந்த அதிகாரியை நோக்கிச் சென்றாள்.

அவனிடம் பல கேள்விகளை அவள் சரமாரியாக கேட்டு துளைத்தெடுக்க, “ப்ளீஸ் மிஸ்… இப்போ எனக்கு அதுக்கு எல்லாம் நேரம் இல்ல… பிறகு ஒரு நாள் சொல்றேன்… எங்களை எங்க வேலையை செய்ய விடுங்க…” என்று பட்டென்று சொல்லியவன்,

“ஒரே ஒரு கேள்வி…” அவள் தொடங்கவும்,

“இப்படித் தான் ஆரம்பிப்பீங்க.. அப்பறம் ஒரு நாள் முழுசும் கேள்வி கேட்பீங்க.. உங்களுக்கு வேற வேலையே இல்லையா?” கடுப்படித்தவன், நொடியும் தாமதிக்காமல் புல்லெட்டில் ஏறிப் புறப்பட்டான்.

மறுநாள் அந்த நபரை கோர்ட்டில் ஒப்படைத்துவிட்டு வெளியில் வந்த பொழுது, அந்த மோசடி நபர் கைதான செய்தியை அறிந்துக் கொண்டு, அங்கு கூடியிருந்த பத்திரிக்கை அன்பர்களைப் பார்த்தவன், அங்கு நின்றிருந்த ப்ரியாவை நோக்கி, “நேத்து நீங்க கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில்…” என்று அந்த பரபரப்பிலும், அவள் பட்டியலிட்டு கேட்ட அனைத்து கேள்விகளின் பதில்களையும் அவன் சொல்லிக் கொண்டே வர, ப்ரியா பேச்சற்று நின்றாள்.

அவள் அவ்வாறு நிற்பதைப் பார்த்தவன், “சாரி… நேத்து அங்க கலவரக்காரங்க அசந்து நிற்கும் போதே அவனை அங்க இருந்து அப்புறப்படுத்த நினைச்சேன்… அதனால தான் கிளம்பிப் போயிட்டேன்… கொஞ்சம் தாமதிச்சு இருந்தாலும் மீண்டும் வேற கலவரம் வெடிச்சிருக்கும்…” என்று அவன் சொல்லவும், ப்ரியா ஆமோதிப்பாக தலையசைக்க, அவளைப் பார்த்து புன்னகை புரிந்தவன், மற்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்களுக்கு பதில் சொல்ல, அவனது ஆளுமை ப்ரியாவின் மனதில் பதிந்தது.

மறுநாள் அலுவலகம் சென்றவளின் காதுகளில் அவனைப் பற்றிய பேச்சுக்களே விழ, ப்ரியாவின் மனதில் அவளையும் அறியாமல், தேவ் ஆழப்பதிந்து போனான்.

தன்னுடைய ஆர்வக்கோளாறு காரணமாக, அவனைப் பற்றிய செய்திகளை சேகரித்தவள், அவனைப் பற்றி அறிந்து பிரமித்துப் போனாள். “இவ்வளவு நேர்மையா ஒருத்தர் இருக்காரா?” தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவள், அவன் கையாளும் வழக்குகளையும், அதை அவன் கையாளும் விதத்தையும் அறிந்து, அசந்து போனாள்.

‘ட்ரீம் ஹீரோ’ என்பார்களே, அதே போல அவனது ஒவ்வொரு செயல்களும் இருக்கவும், ப்ரியாவிற்கு அவன் மீது ஆர்வம் துளிர்க்க ஆரம்பித்தது. அதற்கு பிறகு, அவனை எந்த பத்திரிக்கை சந்திப்பிலாவது சந்திக்க நேர்ந்தால், அவனிடம் கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்து, அவனது நிமிர்வையும், கோபத்தையும், நேர்மையையும் ரசிப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டாள்.

தேவின் நினைவுகளில் மூழ்கி இருந்தவள், அறையின் வாயிலில் நிழலாடுவதைக் கண்டு, நிமிர்ந்துப் பார்த்தாள்.

“என்னம்மா?” ப்ரியா சாவித்திரி நிற்பதைக் கண்டு கேள்வி கேட்க,

“காபியை குடிச்சிட்டு உன் வேலையைப் பாரு…” அவளது அருகில் காபியை கொண்டு வந்து வைத்தவர், சிஸ்டம்மில் தெரிந்த தேவின் படத்தைப் பார்த்து முகத்தை சுளிக்க,

“இது அவரு வேற வேஷத்துல வந்து ஒருத்தனை பிடிச்ச போது…” என்று அவள் விளக்கம் சொல்ல, அதை காதில் வாங்காமல்,

“கொஞ்சம் எனக்கு வந்து சாப்பத்தியை போட்டு எடு… உன்னைப் பத்தி நினைச்சு நினைச்சே எனக்கு ரொம்ப தலை வலிக்குது…” என்று சாவித்திரி சொன்னதைக் கேட்ட ப்ரியா பதறி எழுந்தாள்.

“என்னம்மா? உடம்பு ஏதாவது சரி இல்லையா?” அவரது நெற்றியில் தொட்டுப் பார்க்க,

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல… உன்னைப் பத்தின கவலை தான்..” என்றவர், சமையல் அறைக்குள் செல்ல, ப்ரியாவும் அவரது பின்னோடு சென்றாள்.

என்றும் இல்லாமல் அன்றைய கலகலப்பு குறைந்து காணப்பட்டது போல ப்ரியாவிற்குத் தோன்ற, “இங்கப் பாருங்கம்மா… நானா எப்பவுமே அவன் பின்னால அலைஞ்சது இல்லம்மா… நான் என்ன அவ்வளவு சீப்பான பொண்ணுன்னு நினைச்சிட்டீங்களா? அப்படி எல்லாம் இல்லம்மா… சும்மா உங்களை வெறுப்பேத்த அப்படி சொன்னேன்.. புரிஞ்சிக்கோங்க…

நான் உங்களை வம்பு செய்ய ஐடியா கேட்கறேனே தவிர… அப்படி நிஜமாவே செய்ய இல்ல… என்னை பத்தி தவறா நினைச்சு நீங்க வருத்தப்பட்டு தலைவலி வர வச்சிக்க வேண்டாம்… உங்க பேரைக் கெடுக்கற மாதிரி நான் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்மா.. இது ப்ராமிஸ்… இன்னும் ஒரு ஆறு மாசம்.. அதுக்குள்ள தேவ் வரலைன்னா நீங்க சொல்ற பையனையே நான் கல்யாணம் செய்துக்கறேன்.. ஆனா.. அவரா என்னைத் தேடி வருவார்… அது நிச்சயம்.” அவள் சொல்லி முடிக்கும் போதே, வாசலில் க்ரீச்சிட்டு கார் நிற்கும் சத்தம் கேட்க, சாவித்திரி வாயிலில் எட்டிப்பார்த்தார்.

அதில் இருந்து படபடவென்று இறங்கியவனைப் பார்த்த சாவித்திரி ஆச்சரியமாக முழிக்க, மூடிய கதவிற்கு வெளியே நின்றவன், “ப்ரியம்பதா இருக்காங்களா?” சத்தமாகக் கேட்கவும், என்னவோ ஏதோவென்ற ‘ம்ம்’ என்ற பதிலுடன் சாவித்திரி கதவைத் திறக்க, உள்ளே நுழைந்தவன், அவரது பதிலுக்காக காத்திருக்காமல், ‘ப்ரியம்பதா…’ என்று அழைக்க, திடீரென்று தேவின் குரல் தனது வீட்டில் கேட்கவும், பதட்டத்துடன் உள்ளிருந்தே எட்டிப்பார்க்க, சமையல் அறையில் அவளைக் கண்டவன், வேகமாக அவள் அருகே செல்ல, அவனை அங்கு எதிர்ப்பார்க்காத ப்ரியாவோ விழி விரிய நின்றுக் கொண்டிருந்தாள்.

அவன் வந்த வேகமும், முகம் சிவந்திருந்த கோலமும், ப்ரியாவிற்கு எதுவோ அபாயமென்று மனம் எச்சரிக்கை செய்ய, “தேவ்… என்னை என்ன செய்துடப் போறான்…” என்ற அவளது மூளையின் அறிவுறுத்தலில் அசையாமல் அவள் நிற்க, அவளது கன்னத்தை ஒரு கையால் பிடித்து அழுத்தியவன்,

“உனக்கு என்ன திமிரு இருந்தா என்னைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் எழுதி இருப்ப?” என்று உறுமினான்.

“நான்… நான்… என்ன எழுதினேன்?” ப்ரியா புரியாமல் தவிக்க,

“ஹ்ம்ம்… என்னைப் பார்த்தா ட்ரிங்க்ஸ் சாப்பிடறவன் போல இருக்கா? என்னோட குடும்பத்தைப் பத்தி உனக்குத் தெரியுமா? அப்படி ஒரு குடும்பத்துல இருந்து வந்த என்னைப் பத்தி எப்படி நீ அப்படி எழுதலாம்… அந்த நியூஸ் பார்த்து எனக்கு எவ்வளவு பெரிய அவமானம்ன்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டே, கோபம் கண்களை மறைக்க, அவளைப் பிடித்து பின்னால் தள்ள,  அடுப்பில் இருந்த சப்பாத்திக் கல்லில் அவளது கை அழுந்தி எரியத் தொடங்கியது.

கோபம் இன்னமும் அடங்காமல், “எதுக்கு அப்படி எழுதின?” என்று அவன் மீண்டும் அவளது கன்னத்தை அழுத்தி உறும,

“தம்பி… தம்பி… அவ என்ன எழுதி இருந்தாலும்… ஏதோ தெரியாம எழுதிட்டா தம்பி… அவளை விட்டுடுங்க… அவளுக்கு உங்க மேல நிறைய அன்பு இருக்கு தம்பி… தப்பா எதுவும் எழுதி இருக்க மாட்டா….” அவனது பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தனது மகளைக் காப்பாற்ற, சாவித்திரி தேவ்விடம் கெஞ்சினார்.

“உங்களுக்கு அவ என்ன எழுதி இருந்தான்னு தெரியுமா? எதை வச்சு அவ தப்பா எழுதி இருக்க மாட்டான்னு சொல்றீங்க?” என்று அவரிடம் கேட்டவன்,

“என்…ன்…ன்…ன? என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது? இன்னைக்கு காலையில உன் வண்டி டயரை பஞ்சர் செய்துட்டேன்னு இப்படி ஒரு நியூசைப் போடுவியா? என் டிபார்ட்மெண்ட் ஆளு அதைப் படிச்சிட்டு எனக்கு போன் பண்ணி சொல்றான்… என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?” என்று அவன் மேலும் அவளது கன்னத்தை அழுத்த,

வலியால் முகம் சுருங்கினாலும், “நான் ஒண்ணும் சும்மா எழுதல… நீங்க மாறுவேஷத்துல அந்த கடைக்குள்ள போறதை நான் பார்த்தேன்…” ப்ரியம்பதா பதில் சொல்லவும், தேவ் அவளைப் பிடித்து மீண்டும் தள்ளினான்.

“என்ன பார்த்த? கடைக்குள்ள போறதை தானே பார்த்த… திரும்ப வரும்போது பார்த்தியா?” கோபமாக அவன் கேட்கவும்,

“ஆமா… ஒரு மாதிரி நடந்து வந்ததைப் பார்த்தேன்…” ப்ரியா தைரியமாக பதில் சொல்ல,

“நீ எல்லாம் ஒரு பத்திரிக்கைக்காரி… போலீசும் சரி, எங்களை மாதிரி ஆபீசரும் வைன் ஷாப், ரெட்லைட் ஏரியான்னு போறது எல்லாம் அங்க ஜாலியா இருக்கத் தான்னா??? எவனுமே யோகியன் இல்லையா? நான் போனேன்னா ஆயிரம் காரணம் இருக்கும்…. வெளிய இருந்து பார்த்துட்டு அதை அப்படியே எழுதிடுவியா? ஒரு விஷயத்தை போடறதுக்கு முன்ன அது உண்மையா பொய்யான்னு ஆராயாம போடற நீ எல்லாம் என்ன ரிப்போர்ட்டர்… பேசாம கிசு கிசு பக்கம் எழுத போயிடு… உனக்கு அது தான் சரியா வரும்..” என்று அவளிடம் சத்தமிட்டவன்,

“உடனே அந்த நியூஸ்சை ரிமூவ் பண்ணு… இல்ல… உங்க ஆபீஸ் மேல நான் மான நஷ்ட வழக்கு போடுவேன்… என்னைப் பார்த்தா குடிகாரன் மாதிரி தெரியுதா? இங்கப் பாரு…” என்று அவள் முகத்தின் அருகே சென்று உதடு குவித்து ஊதியவன்,

“லிக்கர் ஸ்மெல் வருதா?” என்று கேட்க, ப்ரியாவோ அவனை அவ்வளவு அருகில் பார்த்ததிலும் அவனது செயலிலும் விழித்துக் கொண்டு நின்றாள்.

“வருதான்னு கேட்டேன்…” மீண்டும் அவன் உறும, மறுப்பாக தலையசைத்தவள் அவனைப் பார்த்துக் கொண்டே நிற்க,

“எனக்கு அந்த போஸ்ட்டை அதுல இருந்து தூக்கணும்… எப்படி தூக்கறது?” அவன் கேட்க,

“இங்க என் சிஸ்டம்ல இருந்தே எடுக்கலாம்…” என்று சொன்னவளை, கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, சமையல் அறையில் இருந்து வெளியே வர, சாவித்திரி மிரட்சியுடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றார்.

“உன் ரூம் எங்க?” தேவின் கேள்விக்கு,

“தம்பி… ரெண்டு பொம்பளைங்க மட்டும் தனியா இருக்கற வீடு… இப்படி வந்து கோபப்பட்டா எப்படி? அவளை விடுங்க… அவ இப்போ அந்த நியூசை எடுத்திடுவா…” என்று சாவித்திரியின் கெஞ்சலில், மனம் இறங்கியவன், ப்ரியாவின் கையை விட, அவன் பிடித்த பிடியில், தோசைக் கல்லில் சுட்டதில், இப்பொழுது தேவ் பிடித்து அழுத்தியது எல்லாம் சேர்ந்து கை கன்றி சிவந்திருக்க, அவன் விட்டதும், தனது கையை எடுத்து தேய்த்துக் கொண்டவள், தனது அறைக்குள் நுழைந்து, அவன் முன்னிலையிலேயே அந்த செய்தியை டெலீட் செய்து, அந்த இடத்தில், வேறு ஒரு செய்தியை போட்டு விட்டு தேவைப் பார்க்க,

“ஒரு நியூஸ் போடறதுக்கு முன்னால யோசிக்காம போட்டா இப்படித் தான் நடக்கும்..” என்றவன், கோபம் தனிய முகத்தை துடைத்துக் கொண்டான்.

அப்பொழுது தான் தன் அருகே கண்ணீர் தளும்ப நின்றுக் கொண்டிருந்த சாவித்ரியைப் பார்த்தவன், தான் செய்த காரியம் புரிய, “சாரி ஆன்ட்டி… இவ போட்ட நியூசைப் பார்த்து என்னோட கலீக்ஸ் எல்லாம் போன் செய்து கிண்டல் செய்யத் தொடங்கிட்டாங்க… எங்க வீட்ல எங்க அப்பா பார்த்தா அவ்வளவு தான்… சின்னப் பிள்ளையாட்டம் போட்டு வச்சிருக்கா… அது தான் எனக்கு ரொம்ப கோபம் வந்திருச்சு… என்னை மன்னிச்சிடுங்க…” என்று குனிந்து அவரது காலைத் தொடவும், சாவித்திரி பதறி விலகினார்.

“எங்க வீட்ல பெரியவங்க வந்தா காலைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்குவோம் ஆன்ட்டி…” என்றவன், சாவித்திரி திகைத்து விழித்துக் கொண்டிருக்கும் போதே,

“அகைன் சாரி… ரொம்ப முரட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்.. சாரி ஆன்ட்டி…. நான் வரேன்…” என்று சொல்லிவிட்டு, வந்த வேகத்திலேயே வெளியில் செல்லத் திரும்ப, அப்பொழுது மெல்ல வெளியில் வந்த ப்ரியம்பதா, சூடு பட்டிருந்த இடத்தை ஊதிக் கொண்டு அவனைப் பார்க்க,

“உனக்கு இந்த வேலையே வேண்டாம்… மொதல்ல விட்டுடு” என்று பயத்துடன் சாவித்திரி கூற, ப்ரியா திகைத்து நின்றாள்.

12 COMMENTS

 1. Hei Ramya, superb ud paa
  hayyo Priya, unakku ithu thevaiyaa?
  naan than sonnen-lae,
  Dev drink panna maattaan endru
  avanga appa-vukku payanthukkittu than paya pullai unnai intha paadu paduthi irukku, ha ha, you dont’ worry
  Savithiri amma, Dev eppadi, evvalavu nalla paiyyan, evvalavu mariyathai therinthavan endru neengalae paartheerkal thanae
  waiting for your next lovely ud Ramya chellam

 2. Hei Ramya, naan ungaloda “ENAKKUL ORUVAN” noval-yai vaangi padithu vitten paa
  hayyo, evvalavu superb aga irunthathu theriyumaa?
  intha novel-yil varum Mithran, Mithuna, Bharat, Adhiraa and Midhuna-vin appa Raajan, and others elloraiyum enakku romba pidithathu paa
  tharpothaiya soozhnilaiyil intha mathiri stories avasiyuam ellaorum padikka vendum paa
  ithu ennuduyaiy thazhmaiyana opinion
  my heartiest wishes to you Ramya dear

  • wow … thank u … thank u so much banu …. neenga than first comment …. intha comment padikum pothu en face EEEEEEE antha mathiri irunthathu … romba romba happya iruku … thank u so much 😀 😀

LEAVE A REPLY