SHARE

தேவையான பொருட்கள்

அரிசிமாவு – 1 கப்,

வெல்லம் – 2 கப்,

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,

உப்பு – 1/4 டீஸ்பூன்,

துருவிய தேங்காய் – 1/2 கப்,

துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்,

வறுத்த முந்திரி – 15,

ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்,

உலர் திராட்சை – 10,

நெய் – 1 டேபிள்ஸ்பூன்.

 

அரிசியை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். நீரை வடித்து, துணியில் பரத்தி, 15 நிமிடங்கள் உலர விடவும். மாவாக அரைத்துக் கொள்ளவும். ஊற வைக்காமல் பச்சரிசிமாவிலும் செய்யலாம். ஊற வைத்துக் களைந்து செய்தால் நன்றாக வரும். துவரம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி மாவை நன்கு சலித்து, கடாயில் சற்றே சிவப்பாக வறுத்து ஆற விடவும். ஒரு கப் தண்ணீரில் மஞ்சள்தூளும் உப்பும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். முந்திரி, வேர்க்கடலை, திராட்சையை நெய்யில் வறுத்துத் தனியே வைக்கவும். மாவு ஆறியதும், இந்தத் தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்து மெதுவாகப் பிசிறவும். மாவைக் கையில் அழுத்திப் பிடிக்கும் படியும், கையிலிருந்து பாத்திரத்தில் போட்டால் உதிரும் படியும் இருக்க வேண்டும். வேக விடுவதற்கு நீர்ப்பசையும் இருக்க வேண்டும். இதுதான் பதம். ஊறவைத்த துவரம் பருப்பை நன்கு வடித்து மாவில் சேர்க்கவும். மாவை துணியில் முடிந்து, பாத்திரத்தில் வைத்து, குக்கரில் ஒரு விசில் வந்ததும் எடுத்து ஆற விடவும். கட்டியில்லாமல் கையால் மெதுவாகக் கலக்கவும். வெல்லத்தைப் பொடித்து ஒரு கரண்டி நீரில் கரையவிடவும். கடாயில் வெல்ல நீரை விட்டுக் கொதித்ததும் வடிகட்டிக் கொள்ளவும். மீண்டும் வெல்ல நீரை விட்டு கொதிக்க விட்டு பாகு வைக்கவும். வெல்லப் பாகை நீரில் விட்டால் உருண்டை எடுக்கும் பதத்தில் வரவேண்டும். இதில் தேங்காய், ஏலப்பொடி, ஆறிய மாவு, முந்திரி, வேர்க்கடலை, திராட்சையைப் போட்டு நன்கு கலக்கவும். 5 நிமிடம் கிளறி இறக்கி வைக்கவும்.  ஆறியதும் பொல பொலவென்று ஆகி விடும்.

LEAVE A REPLY