SHARE

கலைத்துப் போட நீயின்றி
வீட்டின்
அனைத்து பொருட்களும்
அசிங்கமாய்
அங்கங்கே !!

அதட்டுவதற்கும்
யாருமின்றி
தனிமையுடன்
பேசிக்கொண்டு இருக்கிறேன் !

அடிக்கடி அழைப்பதாய்
கேட்கும்
அம்மா எனும் வார்த்தையில்
திடுக்கென
திரும்புகிறேன்

உன் பிஞ்சுப் பாதம்
பதித்த இடமெல்லாம்
உன் உருவத்தின் இருட்டு நிழலாய்
எனக்கு மட்டும் தெரிகிறது !!

உனது முதல் பிரிவை
ஜீரணிக்க தயாராக இல்லாததால்
உடனே கிளம்ப சொல்லும்
எனது எதிர்பார்ப்புகள் !!

ஆசைப் பேரனை
அள்ளிக் கொஞ்ச
அழைத்து சென்றிருக்கும்
அம்மாவின் ஆசையை
கருக்கவும் மனதில்லை !!

பழகிக்கொள்கிறேன்
இன்று ஒரு நாள் மட்டும்
நாளை வருகிறேன்
உன்னை அழைத்து செல்ல !!

2 COMMENTS

LEAVE A REPLY