காத்திருந்த கனவே!!

காத்திருந்த கனவே!!

 

thumb

உன் கருவிழியசைவில் ….
உள்ளம் தடுமாறி ….

காதோடு பேசும் ஜிமிக்கில் ..
என் நெஞ்சம் கைதாகி ….

குரலாகக் கூறும் குயில் பேச்சில்
எனது சிந்தை சிதறி விழ…

நின் மதிமுகத்தை கண்ட விநாடி…
உயிர் பூக்கும் பறவையாய் நான்…

என் உறவைக் கூறும் உயிரே ….
கண் விழித்து நான் கண்ட கனவே ….

நிஜத்திலும் காட்சி தருவாயா….
நேசம் நிறைந்த என் நெஞ்சுடரே!